Home » Articles » மழை

 
மழை


அனந்தகுமார் இரா
Author:

கதிரவனுக்கு மழை என்றால் மிகவும் பிடிக்கும். எந்த ஒரு கூற்றையும் ஒரு காலம் சார்ந்த பொருள் உள்ள வாக்கியமாகப் பார்க்க வேண்டி உள்ளது. இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டின் வடகிழக்கு பருவமழைக்குப் பின் கதிரவனுக்கு மழை என்றால் ‘பயம் பிடிக்கும்’ என்று சொற்றொடரை மாற்றிக் கொள்ளலாம். “அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். அதாவது அச்சப்படுவதற்கு அச்சப்படாமல் இருப்பது அறிவு உள்ளவர் செய்கின்ற செய்கை இல்லையாம். அதனை தொடர்ந்து அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்று முடித்திருப்பார். அஞ்சல் துறை குறித்து ஏதோ சொல்ல வருகிறார் என்று நகைச்சுவையாக நாம் நினைத்து விடக்கூடாது. அச்சத்தைக் குறித்து அறிந்து கொண்டே அச்சப்படுதலில் பட்டப்படிப்பு படித்திருக்கின்ற திறமை வாய்ந்தவர்கள் தேவையான தருணங்கள் அச்சம் முறைப்படி அனுபவிப்பார்கள் என்று பொய்யா மொழியார் பொருள் கூறியுள்ளார். ஆங்கில பொன்மொழி, மழை அச்சம் உருவாக்குவதற்குப் பதிலாக, அதில் இருந்து நமக்கும் நமது உடமைகளுக்கும் முக்கியமாக உள்ளத்திற்கும் சேதம் விளைவித்து விடாமல் பாதுகாத்துக் கொள்வதற்கான காரியம் குறித்த ஞானத்தை ஏற்படுத்த வேண்டும்.

அப்படி ஏற்படுத்தியது என்றால் அத்தகைய நபர் தைரியசாலி என்று கூறலாம். கதிரேசன் கடும் மழைபொழிவில் தன் வங்கியில் அகப்பட்டுக் கொண்ட பொழுது அவர் குடும்பத்தினர் தொலைதூரத்தில் தொடர்பின்றி அகப்பட்டு இருந்தனர். முதலில் வங்கிக்கு வெளியே முழங்கால் அளவு தண்ணீர் ஓடிக்கொண்டு இருப்பதாக அலுவலர் ஒருவர் கூறினார். அந்தக் கிராமம் மூழ்கடிக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகளால் பத்திரிக்கைகளில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று. இந்த முறை கதிரேசன்,

தானே இங்கே அகப்பட்டுக்கொள்வோம் என கணப்பொழுதும் எதிர்நோக்கவில்லை உடனிருந்த அலுவலர்களில் ஒரு இளம் அதிகாரியும் இருந்தார். வழக்கத்திற்கு மாறாக அந்த திருமணமாகாதா இளைஞர் படபடப்புடனும், கலவரம் வரலாமா…? என்று அனுமதி கோரும் முகத்துடனும் இருந்தார்.

ஐயா, எப்படியாவது ஹெலிகாப்டரோ…? படகோ…? பிடிச்சு வெளியே போயிடனும் என்றார். உடனடியாக அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மெதுவாக தெரிய வந்த பொழுது கொஞ்சம் அவநம்பிக்கை எட்டிப் பார்க்கத் தொடங்கியது.

வங்கியின் சுவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மழைநீரோடு சாவகாசம் வைத்துக் கொண்டு உள்ளே சுவர்ப்பரப்பில் வியர்வை முத்துக்களைப் போல நீர் பூக்க ஆரம்பித்தது. அவை, ஒன்றாக சேர்ந்து கீழே வழிய ஆரம்பித்தன. வெளியே மழை கொட்டு கொட்டென கொட்டித் தீர்த்துக் கொண்டு இருந்தது. கதிரேசனின் நெற்றியிலும் கவலை வியர்வைத் துளிகள் அரும்பியிருக்க வேண்டும். அங்கே இருந்த ஈரமான சூழ்நிலையால் அவர் அதை மழைத்துளிகளில் இருந்து வித்தியாசப்படுத்திப் பார்க்க வில்லை.

ஒரு வாரமாக தினந்தோறும் மழையில் நனைவதும் உடைமாற்றிக்  கொள்வதுமாக பழக்கப்பட்டு போயிருந்தது. கையோட ஒரு பையில் மாற்றுடை, உள்ளாடைகள் என எடுத்து வந்தும் காலில் இரப்பர் செருப்பு அணிந்து வந்தும் கதிரேசனின் அன்றாட பழக்க வழக்கத்துக்குள் வரத்துவங்கியிருந்தது. மடிப்புக் கலையாத சட்டைகளுக்குப் பதில் விளையாட்டு மைதானத்தில் அணியும் எளிதில் நனைந்து உலரும் உடைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. சூழ்நிலைக்கேற்ப தகவலைமைத்துக் கொள்வது நல்லது தானே.

அந்த ஊரை அணுகும் போதும் எல்லா சாலைகளிலும் வெள்ளம் அதிகரித்து நான்கிலிருந்து ஏழு அடிவரை ஏறியிருப்பதாக ஆழமான செய்தியை கொண்டு வந்தார் மாலா என்ற உதவியாளர். கதிரேசன் தனது கைபேசியில் ஒரு தகவலைப் படித்தார். மனித சக்தியால் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளும் ஆற்றல் அளவையும் தாண்டி மழை ஏற்படுத்திய தாக்கம் பரவி வருவதாக அது கூறியது. தெய்வம் உள்ளதா…? இல்லையா…? என்கிறகேள்வி மிகவும் பிரபலமானது. ஆனால், அச்சப்படுவதால் பலன் அதிகமாக இருப்பதாக தோன்றவில்லை.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2016

என் பள்ளி
நம்மை நகர்த்தும் நம்பிக்கை
வந்தோரை வாழவைக்கும் வாழ்வியல் பூங்கா
இளமையின் அவசியம்
இள வயதில் உடல் பருமன்
ஆன்மீகம் அறிவோம்
பயன்பட வாழ உறுதி எடு! பாரதம் போற்றப் பெயர் எடு!!
பிரச்சனைகள் தரும் பாதிப்புகள்
பாரிஸ் பருவநிலை மாநாடு-2015
சின்னச் சின்ன விசயங்களில் நாம் கவனம் செலுத்துகிறோமா?
ஒரு பானை சோற்றுக்கு
மழை
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்