– 2015 – November | தன்னம்பிக்கை

Home » 2015 » November (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    கன்னத்தின் அழியாத அழகு மச்சங்களே பேச்சுக்கலை

    பேச்சுக்கலை …..

    பெருங்கலை. “மனிதனை மனிதனாக்கிய அருங்கலைகளில் ஒன்று சொல்லாடல்; எனவே தான் பேசுபவரை ‘சொற்செல்வர் என்றும், கேட்கிறவரை ‘செவிச்செல்வர்’ என்றும் தமிழ்மரபு பேசுகிறது” என்பார் பேராசிரியர், முனைவர் தொ.பரமசிவன்.

    மனம் ஒரு மாயக்குழந்தை. அது இசைக்க இசைக்க இதயம் சுரக்கிறது. கவிதையாய் அது பாரதிக்குள் வந்து கொட்டுகிறது. “கானப்பறவை கலகலெனும் ஓசையிலும்; காட்டு மரங்களிடை காட்டும் இசைகளிலும், ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும், நீலப் பெருங்கலந் நேரமுமே தானிசைக்கும் ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும், மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால் ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும், ஏற்றநீர்ப்பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங் கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும், சுண்ணமிடிப்பார்தஞ் சுவை மிகுந்த பண்களிலும், பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும், வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும், வேயின் குழலோடு வீணை முதலாமனிதர் வாயினிலும், கையாலும் வாசிக்கும் பல்கருவி நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன்”.

    இயற்கையோடு இசையை ரசிக்கும்போது அவர் கவிதைக்குள் நெஞ்சை பறிகொடுத்தார். கவிதையை ரசிக்கும்போது ஒருவன் கவிஞனாகிறான்; பாட்டை ரசிக்கும்போது பாடாகனாகிறான்; பேச்சை ரசிக்கும்போது அவன் பேச்சாளனாகிறான். உள்ளத்தில் ஊற்று இருந்தால் மட்டுமே போதுமானது.

    உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி நூறுபேரில் ஒருவருக்கு வாய்க்கும். ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராய்த் திகழ்வார். ஆனால் பேச்சாளராய் இருப்பவர் பதினாயிரம் பேரில் ஒருவரே என்பார் நம் ஒளைவைப் பிராட்டி. “தோன்றிற்புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்றஇக்குறட்பா மேடைப் பேச்சாளர்களுக்கும் சேர்த்தே கூறியதுபோல் தோன்றுகிறது.

    ‘எனக்கொரு கனவு இருக்கிறது’ என்று மார்ட்டின் லூதர் கிங் சொல்லியவை நூற்றாண்டைக் கடந்தாலும் காலத்தின் கன்னத்தில் அழியாத அழகு மச்சங்களாக நின்றுவிடுகின்றன. அவை சொல்வெட்டுகள் அல்ல; கல்வெட்டுகள் என்பார் இறையன்பு. அப்படியொரு சொற்பொழிவை ஆற்றும் உரிமை மனித உரிமை போராளி மார்ட்டின் லூதருக்கு மட்டுமே கிடைத்தது.

    அடிப்படை உயிர்க்காப்பு வழிமுறைகள் (Basic Life Support)

    மருத்துவ உதவி வந்தவுடன் இ.சி.ஜி. பார்த்து ஷாக் கொடுக்க முடியுமானால் அஉஈ கருவி கொண்டு ஷாக் கொடுத்து மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைத் தொடர வேண்டும்.

    இந்த வழிமுறைகளைக் குழந்தை அசைய ஆரம்பிக்கும் வரை அல்லது மருத்துவமனையைச் சென்று அடையும் வரை தொடர வேண்டும்.

    செயற்கை சுவாசம் கொடுக்கும் முறை

    • குழந்தையின் தலையை நேராக்கி நாடியைச் சிறிது மேல்தூக்கி சுவாசக்குழாயைத் திறக்க வேண்டும்.
    • உதவி கொடுப்பவர் அவரது வாயை குழந்தையின் முகத்தில் வாய் மற்றும் மூக்கு முழுவதும் மூடுமாறு வைக்க வேண்டும்.
    • அவர் வைத்தபின் குழந்தையின் நெஞ்சு உயரும் அளவுக்கு காற்றினை ஊத வேண்டும்.
    • நெஞ்சு உயரவில்லையெனில் குழந்தையின் தலையின் நிலையைச் சரிசெய்ய வேண்டியிருக்கும். மற்றும் வாயை நெருக்கமாக வைக்க வேண்டியிருக்கும்.

    நெஞ்சழுத்தம் கொடுக்கும் முறை

    • குழந்தையின் இரண்டு மார்பு காம்புகளுக்கும் நடுவில் நெஞ்செலும்பில் உள்ளங்கையை ஒன்றின் மேல் ஒன்று வைத்து அழுத்த வேண்டும்.

    எல்லை தாண்டு

    பொதுவாக நாம் வளர்க்கப்பட்ட விதம் எல்லை தாண்டாதே என்பது தான். ஆனால், இப்போது எல்லை தாண்டுவது ஏன்? எங்கே? எதற்கு? என சிந்திப்போம்.

    ‘வேலி தாண்டிய வெள்ளாடு’  நாம் கேள்விப்பட்டுள்ள வாக்கியம், வேலிக்குள், விளைநிலத்தில் பயிர் இருக்கும். அதைக் காப்பதற்கு வேலி அமைத்துள்ளனர். வெளியில் உள்ள வெள்ளாடு வேலியிலுள்ள இலை தழைகளைச் சாப்பிடலாம்.  ஆனால், வேலியைத் தாண்டி, விளைநிலத்துக்குள் சென்று விட்டால், பயிர்களையல்லவா உண்டு விடும். இதற்குச் சொன்னதுதான் மேலுள்ள மொழி.

    உலகிலேயே மிக ரம்மியமான பாரத நாட்டில் சரியான தட்பவெப்ப நிலையுள்ள தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்து வருபவர்கள் பாக்கியசாலிகள்தான். பண்பாடு இங்கு தான் வேரூன்றியுள்ளது.

    சிறுவயதிலேயே நல்ல பண்புகளைத் தாத்தா  பாட்டி சொல்லும் கதைகள் மூலம் அறியும் வாய்ப்பு அன்றிருந்தது. இன்றும் கொஞ்சம் உள்ளது.

    இராமாயணத்தில், வனத்திலிருந்த சீதையின் வேண்டுகோளை நிறைவேற்ற, லட்சுமணன் வெளியே செல்லும்போது, பர்ணசாலையின் முன் ஒரு கோடு போட்டு, அதைத் தாண்டி வராதீர்கள் எனத் தன் அண்ணியிடம் கூறிச் சென்றதையும், ஆனால், உருவம் மாறி சீதையைத் தூக்கிச் செல்ல வந்த இராவணனைப் பார்த்து, அந்த எல்லைக் கோட்டைத் தாண்டியதால், சீதை சிறைப்பட்டதையும் அறிவோம்.

    சிறு குழந்தைகளைத் தாய்மார்கள் தம் பார்வையின் எல்லைக்குள்ளேயே வைத்திருப்பார்கள். அந்த எல்லையைத் தாண்டாமல் பார்த்து வளர்ப்பதையும் அறிவோம்.

    சிறுவர் சிறுமியரை வீட்டை விட்டு வெளியில் சென்று சாலையில் விளையாடக்கூடாது, தேவையெனில் மைதானத்துக்குச் சென்று விளையாடலாம் எனக் கட்டுபடுத்துவதையும் நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

    சமீபகாலமாக பெண்கள், சிறுமியர் வீட்டைவிட்டு வெளியில் வந்தாலே பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை உணர்வுடன் நடமாடும் சூழல் உருவாகிவிட்டதால், கதவைச் சாத்திக் கொண்டு, வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், யாராவது வந்தாலும் தெரியாதவர்களென்றால் திறக்காதிருக்கு மாறும் சொல்லிச் செல்வதையும் அறிவோம்.

    கபடி என்ற விளையாட்டில் வெற்றி பெற எதிரணியின் எல்லைக்குள் துணிச்சலுடன், பலத்துடன் செல்வதைப் பார்த்துள்ளோம். வெற்றியும் வரும், சிலசமயம் தோல்வியும் வரும், புத்திசாலித்தனமாய் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

    நுனிப்புல்

    கதிரேசன் சமீப காலமாக இ.ஆ.ப. முதன்மை தேர்வில் ‘தர்மம்’ எனும் பாடத்திட்டத்தில் வகுப்பெடுத்து வருகின்றார்.  நான்கு வகுப்புகள் எடுத்த அனுபவம் அலாதியானது.  தர்மம் என்று  ‘எதிக்ஸ்’ ஐ மொழி பெயர்ப்பதே ஆழ்ந்த சிந்தனைக்கு உரிய விஷயம்.  பணியிலே நியாயம் இருப்பதை விதிமுறைகள் உறுதி செய்யக்கூடும்.  ஆனால் அதில் ஒரு தர்மம் இருக்க வேண்டும். நாலு நல்லது கெட்டது தெரிஞ்சு செயல்பட வேண்டும் என்று சொல்வதை சுருக்கமாக தத்துவ ஞானிகள் கூறும் தகவல்களோடு சேர்த்து எழுதுகின்றமாதிரியான பாடத் திட்டம், இந்த நான்காம் தாளுக்குரியது.

    சாக்ரடீஸ் முதல் இராபின் சர்மா வரை சரமாரியாக வகுப்பில் வந்து போகின்றார்கள். அரிஸ்டாடில் மாணவர்களுடன் நடந்து கொண்டே பாடங்களை விவாதிப்பாராம். பிளேட்டோ தனது ரிபப்ளிக் என்கின்றபுத்தகத்தில் சாக்ரடீஸ் உடன் விவாதித்த பொருட்களை  ‘டயலாக்’ என்கின்ற இருவர் பேசுகின்ற உத்தியிலேயே எழுதி இருப்பார்.  இவ்வாறு அவர்கள் கூறியது எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் மேற்கோள் காட்டி பழைய கேள்விகளுக்கான பதில்களாக கூறிச் சென்றார்.  வகுப்புக்கள் முடிந்த பிறகு அதனை கேட்டுக் கொண்டும், கவனித்துக் கொண்டும் (இரண்டுக்கும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது) புரிந்து கொண்டும் (மூன்றும் வேறு, வேறு) இருந்த போட்டித் தேர்வர்கள் கலவையான பின்னூட்டம் (Feed back) கொடுத்திருந்தனர்.

    சிலபேர் பாராட்டினர். சிலருக்கு புரியவில்லை.  சிலருக்கு உச்சரிப்பு எட்டவில்லை.  சிலருக்கு குரலே எட்டவில்லை. ஆனால் வகுப்பெடுத்தவருக்கோ? மிகுந்த உற்சாகம்.  சொல்லித் தருவது போல சந்தோஷம் வேறெதிலும் இல்லை.  கச்சிதமாகப் புரிந்து கொள்ளும் ஒரே ஒரு மாணவன் கிடைத்தாலும் அது எதிர்கால இந்தியாவிற்கான ஏராள சேவையாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதை புரிந்து கொண்டோம்.  பாட மேற்கோள்கள்  ‘கியாஸ்’ ‘chaos’ தியரியைப் போல ஒன்றுக்கொன்று தொடர்பின்றி தோரணம் போல தொங்க விடப்பட்டு இருப்பதாக கணிசமானவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.  அதைத்தான் ‘நுனிப்புல்’ என்று வகைப்படுத்துகின்றோம். ஒரு மணி நேர வகுப்பில் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் முழுமையாக சொல்லிவிட முடியாது.  ஆனால் சொன்ன எல்லாவற்றையும் முழுமையாக சொல்லி விடலாம்.  கடந்த வாக்கியம் இரண்டு முறைபடிக்கப்பட வேண்டிய பஞ்ச் டயலாக்.  ஒரு கேள்வியை எடுத்துக்கொண்டு அதனோடு மல்லுக்கட்டி வெல்லும் மனோதத்துவ மல்யுத்தத்தை கண் முன்னர் நடத்திக் காட்டிய வகுப்பு கதிரேசனுடையது.  வகுப்பறைக்குள் தேர்வு நாளை வரவழைத்து ஒரு கேள்வியை சந்திக்கும்பொழுது கலவரமடையாமல் வரவேற்று . . . அதனை பகுதி பகுதியாக கழற்றி மேய்ந்து விளக்கம் கொடுத்து விடையை அடைகின்ற வித்தையை விந்தையான முறையில் நிகழ்த்திக் காட்டியபொழுது ஆச்சரியக் குறியால் உயர்ந்த புருவங்கள் நிறைய.

    தன்னம்பிக்கை மேடை

    பெற்றோர்களின் எதிர்பார்ப்பு என்ன? அதை பூர்த்தி செய்ய ஆசிரியரான நான் என்ன செய்ய வேண்டும்?    

    -சாந்தி,  திருவள்ளுர்

    தங்களது பிள்ளைகளுக்கு கல்வியும், ஒழுக்கமும், வித்தைகளும் கற்றுத்தரும், உயர்ந்த மனிதராகவே ஆசிரியர்களைப் பார்க்கிறார்கள் பெற்றோர்கள். இதை எல்லாம் ஒவ்வொரு ஆசிரியரிடமும் எடுத்துச் சொல்ல அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டாலும், இந்த எதிர்பார்ப்பு அவர்களிடம் நிச்சயமாக உள்ளது. இது ஒவ்வொரு ஆசிரியருக்கும் தெரியும். அன்று அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன், தமது மகன் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம் இன்றைய ஆசிரியர்கள் மட்டுமல்ல, அது பெற்றோர்களும், தெரிந்திருக்க வேண்டிய செய்திகள் கொண்ட ஒரு கடிதம். இதோ ஆபிரகாம் லிங்கன் எழுதிய அந்தக் கடிதத்தை நீங்களும் படியுங்களேன்.

    “எல்லா மனிதர்களும் நேர்மையானவர்கள் அல்லர். எல்லா மனிதர்களும் உண்மையானவர்கள் அல்லர் என்பதை நான் அறிவேன். ஆயினும், ஒவ்வொரு கெட்டவனுக்கும் ஈடாக ஓர் நல்லவன் இருக்கிறான். ஒவ்வொரு சுயநலமிக்க அரசியல்வாதிக்கும் ஈடாக ஓர் அர்பணிப்புத் தன்மை கொண்ட தலைவன் இருக்கிறான் என்பதை அவனுக்குக் கற்பியுங்கள். உழைத்து ஈட்டிய ஒரு டாலர், தானாகக் கிடைத்த ஐந்து டாலர்களை விட மிகவும் மதிப்பனாது என்பதைக் கற்பியுங்கள். இதனைக் கற்பிக்க ரொம்பக் காலம் பிடிக்கும் என்பதை நான் அறிவேன்.

    தோல்வி அடையக் கற்பியுங்கள். வெற்றி பெறின், அதில் சந்தோஷம் அடையவும் கற்பியுங்கள். பொறாமை கொள்ளாமல் இருக்கவும், அமைதியான சிரிப்பின் ரகசியத்தை கற்பியுங்கள். வியத்தகு புத்தக உலகை அவனுக்கு அறிவிக்கும் நீங்கள், வானத்தில் வட்டமிடும் பறவைகள், தேனீக்கள், பசுமையான மலைப் பகுதிகளில் காணும் மலர்கள் ஆகியவற்றின் ரம்மியத்தையும் கற்பியுங்கள்.

    ஏமாற்றுவதை விட, வீழ்ச்சி அடைவது மிகவும் பெருந்தன்மையானது என்பதை அவனுக்குக் கற்பியுங்கள். பிறர் அவற்றைத் தவறானவை என்று சொன்னால் கூட தனது சுய எண்ணங்களின் மீது நம்பிக்கை கொள்ள கற்பியுங்கள். நல்லவர்களோடு இதமாகவும், முரடர்களோடு முரட்டுத் தன்மையுடனும் நடந்து கொள்ளக் கற்பியுங்கள். எல்லோரும் ஆட்டு மந்தைகளாய் செல்ல, அவனும் அதில் சேராமல் தனித்து இருக்க அவனுக்கு பலம் அளியுங்கள்.

    மற்றவர்கள் சொல்வதைக் கேட்கும்படி அவனுக்குக் கற்பியுங்கள். ஆனால் அவர்கள் பேச்சில் நல்லவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ளவும் கற்பியுங்கள்” – ஆபிரகாம் லிங்கன், ஒரு மாணவனின் தந்தை.

    ஆக, கல்வி என்பது மதிப்பெண்கள் பெறுவதற்கு மட்டும் அல்ல, அது மாணவன் வாழ்விற்கு எடுக்கும் பயிற்சி என்கிறேன் நான். இப்படி தனது பிள்ளைகளை சகலகலா வல்லவனாகவும், ஒழுக்கமான ஒரு மனிதனாகவும் உருவாக்குவார் ஆசிரியர் என்றஎதிர்பார்ப்புடன் பல குழந்தைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அந்த நிலையில், ஆசிரியரின் கடமை பெரியதாகவும், உன்னதமானதாகவும் மாறிவிடுகிறது. எனவே தான் ‘ஆசிரியர் பணி அறப்பணி’ என்று எல்லோரும் கூறுகிறார்கள்.

    அறப்பணி புரியும் ஆசிரியர் அந்த உயர் நிலையை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்வோம்.

    அ) தான் கற்பிக்கும் பாடத்தில் ஓர் வல்லுனராக ஆசிரியர் நிச்சயம் இருத்தல் வேண்டும். உயிரியல் கற்பிக்கும் ஆசிரியர் ‘சார்ஸ் டார்வின்’ எழுதிய ‘உயிரியல் பரிணாம வளர்ச்சி’ நூலை பலமுறைபடித்து உயிரினங்கள் எப்படி தோன்றியது என்பதை அவரே கண்டுபிடித்திருக்க வேண்டும். லாமார்க், கார்ல் லினேயரிஸ், வாலஸ், கிரிகர்மெண்டல், ரிசசர் டாகினஸ் போன்றஉயிரியல் வல்லுனர்களின் நூல்களை கற்று தெளிவு பெற்றபின்னர்தான் அவர் உயிரியல் பாடங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அப்படி இந்த உலக மகாநூல்களைக் கற்காத உயிரியல் ஆசிரியர் அறியாமையைத்தான் போதிக்க முடியும்.

    உள்ளத்தோடு உள்ளம்

    ஓர் அறையில் அமைதி, அறிவு, அன்பு என்கிற மெழுகுவர்த்திகளுடன் நான்காவதாக ஒரு மெழுகுவர்த்தியும் எரிந்து கொண்டிருந்தது. அந்நேரத்தில் காற்று மெலிதாய் அந்த அறைக்குள் புகுந்தது. காற்றைக் கண்டதும்  ‘அமைதி’ என்கிற மெழுகுவர்த்தி காற்றை எதிர்த்து எரிவது சிரமம் என அணைந்து விட்டது.

    ‘அறிவு’ என்கிறமெழுகுவர்த்தியும் காற்றை எதிர்த்துப் போராட முடியாது என அணைந்தது.

    ‘அன்பு’ என்கிறமெழுகுவர்த்தியும் காற்றை எதிர்ப்பது கடினம் என்று கருதி அதுவும் அணைந்து விட்டது.

    நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்றைஎதிர்த்துப் போராடி எரிந்து கொண்டிருந்தது. அப்போது அந்த அறைக்குள் நுழைந்த சிறுவன் மூன்று மெழுகுவர்த்திகள் அணைந்து கிடப்பதைப் பார்த்து கவலைப்பட்டான். எரிந்து கொண்டிருந்த நான்காவது மெழுகுவர்த்தி சிறுவனைப் பாôத்து கவலைப்படாதே என்னைக் கொண்டு மற்றமூன்று மெழுகுவர்த்திகளையும் எரிய வை என்று சொன்னது.

    சிறுவன் அந்த மெழுகுவர்த்தியைப் பார்த்து உன் பெயர் என்ன என்று கேட்டான்.

    நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது எனது பெயர் ‘நம்பிக்கை’ என்று.

    எந்தச் சூழலிலும் நாம், நம் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழப் பழகிக் கொண்டால் நாமும் வாழலாம், பிறரையும் வாழ வைக்கலாம்.

    தான் வாழ்ந்து பிறரையும் வாழவைக்கின்ற பண்பு ஒவ்வொருவருக்குள்ளும் மலரட்டும். அது எங்கும் பரவட்டும் என்று புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி ‘தீபஒளி’ஏற்றி தீபாவளியைக் கொண்டாடுவோம்!

    ஆசைகளை நிறைவேற்றும் அற்புத பயிற்சிகள்

    தஞ்சாவூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், சோழமண்டல சாரிட்டபிள் டிரஸ்ட்

    மற்றும் ஆனந்த் சுகமான உள்ளாடையுடன் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 22.11.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : மாலை 5-00 மணி முதல் 8.00 மணி வரை

    இடம் : பெசன்ட் அரங்கம் AC ஹால், தஞ்சாவூர்

    தலைப்பு          :”ஆசைகளை நிறைவேற்றும் அற்புத பயிற்சிகள்”

    சிறப்பு பயிற்சியாளர் : அருள்நிதி Jc. SM. பன்னீர் செல்வம் சுயமுன்னேற்ற பயிற்சியாளர்,  கோவை-41

    போன்: 9566665327

    தொடர்புக்கு: திரு. பள்ளியூர் பாபா  9597285160

    திரு. டோமினிக் சேகர்  9845353113

    கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம்

    கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம்

    வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள், நேரம், இடம், தலைப்பு, முதலிய விபரங்களுக்கு:

    திரு. அப்துல்சலாம் (எ) பள்ளியூர் பாபா  95972 85160

    திரு. தர்மர்  97880 41089

    சிறப்புப் பயிற்சியாளர் :

    முனைவர் A. முகம்மது முஸ்தஃபா, M.Sc., Ph.D.

    பேராசிரியர், அல்ஜூபைல் பல்கலைக்கழக கல்லூரி, K.S.A.

    தொலைந்த முகங்கள்

    சேலம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் ஒஇஐ சேலம் மெட்ரோ இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 22.11.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : லட்சுமி அரங்கு, சாமுண்டி காம்ப்ளெக்ஸ்

    4 ரோடு, சேலம்-7.

    தலைப்பு          :”தொலைந்த முகங்கள்”

    சிறப்புப் பயிற்சியாளர்: அருள்நிதி Jc. M. கோமதி B.Tech

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், சேலம்.

    போன் : 8870165626.

    தொடர்புக்கு:

    Jc. G. தாமோதரன், M.Com., M.Phil. – 93601 22377

    எல்லோரும் தலைவரே

    பள்ளிபாளையம் கிளை (ஈரோடு), தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 13.11.2015; வெள்ளிக்கிழமை

    நேரம் : மாலை 6 மணி

    இடம் : M.G.V. மெட்ரிக்பள்ளி (G.V. மஹால் அருகில்)

    திருச்செங்கோடு ரோடு, பள்ளிபாளையம்

    தலைப்பு          : “எல்லோரும் தலைவரே”

    சிறப்புப் பயிற்சியாளர்: அருள்நிதி Jc. A.J. சரவணன் BE., MBA., JCI மண்டல பயிற்சியாளர், ஈரோடு.

    செல்: 9842691113.

    தொடர்புக்கு:

    ஒருங்கிணைப்பாளர் – திரு. சீனிவாசன்: 98435 45986

    இணைச் செயலாளர் : திரு. M ராதாகிருஷ்ணன்: 99657 95856

    PRO : JC வைரவேல்: 73733 33777