Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

பெற்றோர்களின் எதிர்பார்ப்பு என்ன? அதை பூர்த்தி செய்ய ஆசிரியரான நான் என்ன செய்ய வேண்டும்?    

-சாந்தி,  திருவள்ளுர்

தங்களது பிள்ளைகளுக்கு கல்வியும், ஒழுக்கமும், வித்தைகளும் கற்றுத்தரும், உயர்ந்த மனிதராகவே ஆசிரியர்களைப் பார்க்கிறார்கள் பெற்றோர்கள். இதை எல்லாம் ஒவ்வொரு ஆசிரியரிடமும் எடுத்துச் சொல்ல அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டாலும், இந்த எதிர்பார்ப்பு அவர்களிடம் நிச்சயமாக உள்ளது. இது ஒவ்வொரு ஆசிரியருக்கும் தெரியும். அன்று அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன், தமது மகன் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம் இன்றைய ஆசிரியர்கள் மட்டுமல்ல, அது பெற்றோர்களும், தெரிந்திருக்க வேண்டிய செய்திகள் கொண்ட ஒரு கடிதம். இதோ ஆபிரகாம் லிங்கன் எழுதிய அந்தக் கடிதத்தை நீங்களும் படியுங்களேன்.

“எல்லா மனிதர்களும் நேர்மையானவர்கள் அல்லர். எல்லா மனிதர்களும் உண்மையானவர்கள் அல்லர் என்பதை நான் அறிவேன். ஆயினும், ஒவ்வொரு கெட்டவனுக்கும் ஈடாக ஓர் நல்லவன் இருக்கிறான். ஒவ்வொரு சுயநலமிக்க அரசியல்வாதிக்கும் ஈடாக ஓர் அர்பணிப்புத் தன்மை கொண்ட தலைவன் இருக்கிறான் என்பதை அவனுக்குக் கற்பியுங்கள். உழைத்து ஈட்டிய ஒரு டாலர், தானாகக் கிடைத்த ஐந்து டாலர்களை விட மிகவும் மதிப்பனாது என்பதைக் கற்பியுங்கள். இதனைக் கற்பிக்க ரொம்பக் காலம் பிடிக்கும் என்பதை நான் அறிவேன்.

தோல்வி அடையக் கற்பியுங்கள். வெற்றி பெறின், அதில் சந்தோஷம் அடையவும் கற்பியுங்கள். பொறாமை கொள்ளாமல் இருக்கவும், அமைதியான சிரிப்பின் ரகசியத்தை கற்பியுங்கள். வியத்தகு புத்தக உலகை அவனுக்கு அறிவிக்கும் நீங்கள், வானத்தில் வட்டமிடும் பறவைகள், தேனீக்கள், பசுமையான மலைப் பகுதிகளில் காணும் மலர்கள் ஆகியவற்றின் ரம்மியத்தையும் கற்பியுங்கள்.

ஏமாற்றுவதை விட, வீழ்ச்சி அடைவது மிகவும் பெருந்தன்மையானது என்பதை அவனுக்குக் கற்பியுங்கள். பிறர் அவற்றைத் தவறானவை என்று சொன்னால் கூட தனது சுய எண்ணங்களின் மீது நம்பிக்கை கொள்ள கற்பியுங்கள். நல்லவர்களோடு இதமாகவும், முரடர்களோடு முரட்டுத் தன்மையுடனும் நடந்து கொள்ளக் கற்பியுங்கள். எல்லோரும் ஆட்டு மந்தைகளாய் செல்ல, அவனும் அதில் சேராமல் தனித்து இருக்க அவனுக்கு பலம் அளியுங்கள்.

மற்றவர்கள் சொல்வதைக் கேட்கும்படி அவனுக்குக் கற்பியுங்கள். ஆனால் அவர்கள் பேச்சில் நல்லவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ளவும் கற்பியுங்கள்” – ஆபிரகாம் லிங்கன், ஒரு மாணவனின் தந்தை.

ஆக, கல்வி என்பது மதிப்பெண்கள் பெறுவதற்கு மட்டும் அல்ல, அது மாணவன் வாழ்விற்கு எடுக்கும் பயிற்சி என்கிறேன் நான். இப்படி தனது பிள்ளைகளை சகலகலா வல்லவனாகவும், ஒழுக்கமான ஒரு மனிதனாகவும் உருவாக்குவார் ஆசிரியர் என்றஎதிர்பார்ப்புடன் பல குழந்தைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அந்த நிலையில், ஆசிரியரின் கடமை பெரியதாகவும், உன்னதமானதாகவும் மாறிவிடுகிறது. எனவே தான் ‘ஆசிரியர் பணி அறப்பணி’ என்று எல்லோரும் கூறுகிறார்கள்.

அறப்பணி புரியும் ஆசிரியர் அந்த உயர் நிலையை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்வோம்.

அ) தான் கற்பிக்கும் பாடத்தில் ஓர் வல்லுனராக ஆசிரியர் நிச்சயம் இருத்தல் வேண்டும். உயிரியல் கற்பிக்கும் ஆசிரியர் ‘சார்ஸ் டார்வின்’ எழுதிய ‘உயிரியல் பரிணாம வளர்ச்சி’ நூலை பலமுறைபடித்து உயிரினங்கள் எப்படி தோன்றியது என்பதை அவரே கண்டுபிடித்திருக்க வேண்டும். லாமார்க், கார்ல் லினேயரிஸ், வாலஸ், கிரிகர்மெண்டல், ரிசசர் டாகினஸ் போன்றஉயிரியல் வல்லுனர்களின் நூல்களை கற்று தெளிவு பெற்றபின்னர்தான் அவர் உயிரியல் பாடங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அப்படி இந்த உலக மகாநூல்களைக் கற்காத உயிரியல் ஆசிரியர் அறியாமையைத்தான் போதிக்க முடியும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2015

என் பள்ளி
விவேகம் விடியலைத் தருகிறது
திட்டமிட்டு
கல்வியும் கலையும்
உங்களுக்காக சில உண்மைகள்
நட்பின் நெருக்கத்தை பேணி காப்பது எப்படி?
எதிர் மறை மனிதர்கள்
தூக்கமும் ஊக்கமும்
வாழ்வாதாரத்தைப் பெருக்கு…! வாழ்க்கைத் தரத்தை உயர்த்து…!!
இளைய தலைமுறை பற்றி இது விமர்சனமல்ல, ஆதங்கம்..
கன்னத்தின் அழியாத அழகு மச்சங்களே பேச்சுக்கலை
அடிப்படை உயிர்க்காப்பு வழிமுறைகள் (Basic Life Support)
எல்லை தாண்டு
நுனிப்புல்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்