உள்ளத்தோடு உள்ளம்
புதிய யுகம் புலர இருப்பதன் அறிகுறியாய் அடுத்த குடியரசுத்தலைவர் தேர்தல் அமைந்திருக்கிறது. உழைப்பின் உருவமாய், தன்னம்பிக்கையின் வார்ப்பாய், விளங்கும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் குடியரசுத் தலைவராகிறார்.
அரசியலில் அவருகு அனுபவம் இல்லை என்றுசிலர் அங்கலாய்க்கிறார்கள். இது குறித்த தனி கட்டுரை இந்த இதழில் வெளியாகியுள்ளது.
எதிர்கால இந்தியா குறித்து உள்மன வரைபடம் ஒன்றை உருவாக்கி,அதற்கு Visison india 2020 என்ற பெயர்சூட்டினார். அவரது கரங்களில் இன்று இந்தியா அளிக்கப்படுகிறது.
அப்துல்கலாம், இந்தியாவின் அடையாளங்களில் ஒருவராகவே அறியப்படுகிறார். இராமேஸ்வரத்தின் கரையோர மனிதர்கள் தொடங்கி, செங்கோட்டையின் செல்வாக்கு நிறைந்த மனிதர்கள் வரை அனைவரும் அவருக்கு சமம்தான்.
தேச விடுதலைக்குத் தியாகம் செய்த மதிப்பிற்குரிய பெண்மணி ஒருவரை, அவர்தோற்பார் என்று அறிந்தே எதிர்வேட்பாளராக நிறுத்தியிருப்பது அந்தப் பெண்மணிக்கு உரிய பெரும் மரியாதைக்கு பங்கம் விளைவிக்கக் கூடுமோ என்கிற கவலை நமக்குள் எழுகிறது.
எனினும் திரு. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் குடியரசுத் தலைவராய் பொறுப்பேற்பது.. நிச்சயம் நடக்கும்!
எல்லோரும் அமரநிலை ஏய்துகிற நன்னாளை
இந்தியா உலகிற்கு அளிக்கும்! ஆம்
Continue Reading »