Home » Articles » சத்குரு பதில்கள்

 
சத்குரு பதில்கள்


ஜக்கி வாசுதேவ்
Author:

“விட்டு விடுதலையாவோம்” நிகழ்ச்சியில் வாசகர்களின் கேள்விகளுக்கு சத்குரு வாசுதேவ் அவர்கள் தந்த விடைகளின் தொடர்ச்சி)

ஒரு மனிதனின் வெற்றிக்கும், தோல்விக்கும், ஜாதகம் காரணமாக அமையுமா? எண் கணிதப்படி பெயர்களை மாற்றி வைத்துக்கொள்வது பலன் தருமா?

ஒரு மனிதனை உமையிலேயே அறிவாளியாக இருந்தால், அடுத்த நிமிடம் அவன் என்ன செய்வான் என்று யாராலும் கணிக்கமுடியாத நிலையிலிருப்பான். ஆனால், ஒரு முட்டாளைப் பார்த்தாலே, அவன் இப்படித்தான் பேசுவான், இப்படித்தான் செயல்படுவான் என்று எளிதாக சொல்லிவிட முடியும்.

ஜோதிடரிடம் போனால், அடுத்த ஐந்து வருடங்கள் பத்து வருடங்கள் இப்படித்தான் இருப்பீர்கள் என்று உங்களுக்கு எழுதியே தந்து விடுகிறார். அதற்காக நான் உங்களை “முட்டாள்” என்று சொல்லவில்லை(அவையில் பலத்த சிரிப்பு).

ஜோதிடம் என்பது கிரகங்களின் அசைவை அடிப்படையாகக் கொண்டது. ஒரு திடப்பொருள் அசையும்போது அதற்கென்று சில அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அவை ஜடப்பொருட்கள்.

மனிதன் உயிருள்ளவன். ஜடப்பொருள் மீது மனிதன் ஆதிக்கம் செலுத்த வேண்டுமே தவிர மனிதன் மீது ஜடப்பொருட்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. மனிதனின் உடல், உயிர், மனம் ஆகியவை வலிமையோடும் தெளிவோடும் இருந்தால், எந்த கிரகமும் எதுவும் செய்ய இயலாது.

மனநிலை சரியில்லாதவர்கள் அமாவாசை – பௌர்ணமி நாட்களில் மிகவும் பதட்டமடைவார்கள் அவர்களை அறையில் போட்டுப் பூட்ட வேண்டிவரும். உங்களையும் அப்படிப் பூட்ட வேண்டியிருக்கிறதா? இல்லை.

அப்படியானால் ஏற்கெனவே ஓரளவு உறுதியாக இருக்கிறீர்கள். உங்களை மேலும் உறுதியாக வைத்துக் கொண்டால் போதும். கிரக மாற்றங்கள் எதுவும் உங்களைப் பாதிக்காது.

எண் கணிதத்தால் பெயர் மாற்றம் செய்வது பற்றிக் கேட்கிறாகள். மனிதன் தன் வசதிக்காக உருவாக்கியவைதான் எண்கள். அவற்றை “பத்து” என்கிற எண்ணிக்கையில் முதலில் நிர்ணயித்ததற்குக் காரணமே மனிதனுக்குப் பத்து விரல்கள் இருப்பதால்தான். எனவே, மனிதன் தனது வசதிக்காக ஏற்படுத்திய எண்கள் மனிதனின் விதியை எப்படி நிர்ணயிக்க முடியும்.?

இது போன்ற நம்பிக்கைகள் உங்கள் வளர்ச்சிக்குத தடையாகத்தான் இருக்கும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2001

பொதுவாச் சொல்றேன்
உறவுகள் உணர்வுகள்…
வணக்கம் தலைவரே
விட்டு விடுதலையாவோம்
உள்ளத்தோடு உள்ளம்
உள்ளத்தோடு உள்ளம்
அடையாள அட்டை
சிரிப்போம் சிந்திப்போம்
சத்குரு பதில்கள்
மனித சக்தி மகத்தான சக்தி
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
வெற்றியின் மனமே…
தஞ்சையில் பாய்ந்த தன்னம்பிக்கை வெள்ளம்
நம்பிக்கையும் நானும்
மனசுவிட்டுப் பேசுங்க…