Home » Articles » விட்டு விடுதலையாவோம்

 
விட்டு விடுதலையாவோம்


admin
Author:

(27-05-2001 அன்று தன்னம்பிக்கை மாத இதழும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சும் இணைந்து நடத்திய “விட்டு விடுதலையாஓம்” நிகழ்ச்சியில் பிரபல மனவியல் நிபுணர் டாக்டர்ருத்ரன் பங்கேற்றார். அவரது உரையின் சில பகுதிகள் இவை.

கூட்டத்தில் நடந்த கேள்வி பதில் பகுதிகள் “தன்னம்பிக்கை”யில் தொடர்ந்து வெளிவரும்.)

“விட்டு விடுதலையாவோம்” என்று இந்த நிகழ்ச்சிக்குப் பெயர் வைத்திருக்கிறீர்கள். சுருங்கச் சொன்னால் சுதந்திரம். எது சுதந்திரம்? இந்தக் கேள்விகளுக்க என்னிடமுள்ள ஒரே பதில் “எது சௌகரியமோ, அது சுதந்திரம்”. “ஜென்” என்கிற வாழ்க்கை முறை அதைத்தான் சொல்கிறது. எனக்கு வசதியாகவும் உண்மையாகவும் தெரிகின்ற ஒன்றை செய்வதுதான் என் சுதந்திரம்.

உதாரணத்துக்கு, இது போன்ற மேடைகளில் நின்று கொண்டு பேசுவதுதான் மரபு என்பதாக ஒரு நம்பிக்கை – அல்லது மூடநம்பிக்கை இருக்கிறது. ஆனால், எனக்கு உட்கார்ந்து கொண்டு பேசுவது தான் சௌகரியமாக இருகிறது. எனவே மரபு பார்த்து, நின்று கொண்டு பேசினேன் என்றால், உங்களுக்குப் பயன்படும் விஷயங்களைப் பேச என்னால் முடியாது. ஏனெனில் நான் எனக்கு சௌகரியமான, சுதந்திரமான நிலையில் இல்லை. நான் பேசுகிறேன். பேசும்போது இடையில் உங்களுக்கு ஏதாவது சொல்லத் தோன்றினால் சொல்லலாம்.

இப்போது, “விட்டு விடுதலையாவோம்” என்றால், எதிலிருந்து விடுதலையாவது? எப்படி விடுதலையாது? என்று தெரிந்து கொள்ள வேண்டும். நாம் எதிலிருந்து விட்டு விடுதலையாக வேண்டும்? (ஒரு வாசகர் – “மனத்தடைகளிலிருந்து”) மனத்தடைகளை நாமே உருவாக்கிக் கொள்கிறோம். சில சௌகரியங்களை செய்து கொள்ள முற்படும்போது, ஏதோ ஒரு பயம் காரணமாக, அந்த சௌகரியம் வேண்டாம் என்று நினைக்கிறோம்.

உதாரணமாக, ஒரு பெண்ணுக்கு தன் கணவனிடம் விருப்போ, பிடித்தமோ இல்லை. சேர்ந்து வாழப் பிடிக்கவில்லை. ஆனால் தான் விவாகரத்து வாங்க வந்துவிட்டால் தனக்கோ தன் குடும்பத்திற்கோ அவப்பெயர் வருமோ என்று பயந்து, அதே வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்கிறாள். தன்னைப் பற்றிய பயம்தான் எல்லாவிதமான மனத்தடைகளுக்குக் காரணம்.

நமக்கு இருக்கும் பயமெல்லாம் ஒரு காரியத்தை செய்தால் இருக்கும் சௌகரியத்தை இழந்து விடுவோமோ என்பதுதான். சில சௌகரிய்களை நாம் பழகிக் கொண்டிருக்கிறோம். தேவகள், ஆசைகள், என்று இரண்டு விதமான சௌகரியங்கள் உண்டு.

நியாயமான தேவைகள் இறைவேறிய பின்னால்தான் ஆசைகளை நோக்கி நாம நகர முடியும். நம்மில் பலர் அதைச் செய்வதில்லை. ஆசைகளைமட்டுமே வளர்த்துக் கொள்பவர்கள் தங்கள் தேவைகளை நோக்கி நகர்கிற தகுதியை இழக்கிறார்கள். என் அறைக்கு ஏ.சி. மாட்டவேண்டும் என்பது என் ஆசை. அது இயல்கிறதோ இல்லையோ, ஒரு மின் விசிறி மாட்டுவது என் தேவை. ஏ.சி. பற்றிய ஆசையிலேயே மின் விசிறி என்கிற தேவையையும் நிறைவேற்றிக் கொள்ளாமல் வெறும் ஆசையிலேயே காலம் கழிந்து விடும்.

ஒரு மனிதனுக்குகென்று அடிப்படைத் தேவைகள் சில உண்டு. உணவு, உடை போன்றவை. வருமானம், வருமானத்துக்கேற்ற குடும்பம், சமூக அங்கீகாரம், இறுதியாக சுய பரிசீனை மூலம் தானும் தெய்வமாதல். இதில் உணவு -உடை போன்றவை வருமானம், இவையெல்லாம் நியாயமானவை. பணம் – குடும்பம் ன்தெல்லாம் ஒரு மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்கி பாதுகாப்பு நடவடிக்கை. இதுவரை எந்த சிக்கலும் இல்லை.

மனிதனின் சௌகரியத்திற்கு சிக்கல் வருகிற இடம், அவன் சமூக அங்கீகாரம் தேடும்போதுதான். சமூக அங்கீகாரம் என்பது நம்மீது சில பிம்பங்களை நாமும், மற்றவர்களும் ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். புத்தகங்களைத் தேடிப் படிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் Allen Watts எழுதிய புத்தகங்களைப் படியுங்கள்.

அவர் சொல்கிறார் “அமெரிக்காவின் அன்றாட வாழ்க்கைக்குத் தேஐயானதை செய்கிற டிராஃபிக் இன்ஸ்பெக்டர், மின்சாரத்துறை என்ஜினியர், தொலைபேசி பொறியாளர் இவர்களை எல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால் அமெரிக்க அதிபரை அனைவருக்குமே தெரியும். ஏனென்றால், அமரிக்க அதிபரின் ஒவ்வொரு பணிநாளிலும் 4 மணி நேரம் விழாக்களில் வீணாகிறது”. சமூக அங்கீகாரம் ஒரு சந்தோஷம்தான் “மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்” என்கிற ஆசைக்கு நாம் தருகிற விலை. நம் மீது நாமும் பிறரும் ஏற்படுத்துகிற பிம்பங்கள்.

இந்த பிம்பங்கள், பல நேரங்களில் அவஸ்தையை ஏற்படுத்தும். உதாரணமாக, ஒருமாலைப் பொழுதில், ஒரு ரெஸ்டாரெண்டில் உங்கள் காதலியுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது, சமூகம் உங்களை “அறிஞர்” என்று அடையாளம் கண்டு கொண்டதால், யாராவது ஒருவர் வந்து, “அய்யா! உபநிடத்தில் இந்த இடத்துக்கு என்ன அர்த்தம்? என்று கேட்டால் நீங்கள் நொந்து போய்விடுவீர்கள்.

குழாயைத் திறந்தால் தண்ணீர் வருவதுபோல நாங்கள் வாயைத் திறந்தாலே த்த்துவங்களாக்க் கொட்டும் என்கிற பிம்பம் ஏற்பட்டு விட்டது. அதறகு உங்கள் சந்தோஷத்தை நீங்கள் விலையாகத் தர வேண்டியுள்ளது.

இந்த பிம்பங்களை முதலில் உடைத்தாலே, நாம் சௌகரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்க முடியும். எதிலிருந்தும் விடுதலையாக வேண்டிய அவசியமில்லை.

இந்த பிம்பங்கள் ஏன் நமக்குத் தேவையில்லை? முதலில், நம் பிம்பங்கள் எதுவும் நமக்காக ஏற்பட்டதில்லை.

ஒரு மனிதன் பல் துலக்குவது மட்டும்தான் தனக்காக. மற்றபடி ஷேவ் செய்வது, உடை உடுத்துவது எல்லாமே மற்றவர்களுக்காக, மற்றவர்கள் மனதில் சில பிம்பங்களை ஏற்படுத்துவதற்காக.

இந்த பிம்பங்களை “இதுதான் நான்” என்று நினைக்கும் போது சிறைப்பட்டுப் போகிறோம். “இது இல்லை நான்” என்று உணரும்போது விடுதலையாகிறோம்.

“என் வீட்டில் நான், சமுதாய வீதிதகளில் நான், பணிபுரியும் இடத்தில் நான், பொது இடங்களில் நான்” என்று சில பிம்பிங்களை நாம் ஏற்படுத்துகிறோம். நாம் “யோக்கியன்” என்று ஏற்படுத்துகிற பிம்பம். கடன் வாங்க உதவும் என்று நீங்கள் நினைக்கலாம். அதே பிம்பம், சில நேரங்களில், கடன் கொடுக்கவும் உங்களை நிர்பந்திக்கும். எனவே, பிம்பங்களை வளர்க்காதீர்கள்.

இப்போது, நான் ஆரம்பித்த இடத்திலிருந்து என் பேச்சு வேறெங்கோ போகிறது. இதை ஏன் நீங்கள் யாரும் சுட்டிக் காட்டவில்லை?

(ஒரு வாசகர்: நீங்கள் பெரிய ஆள் எது சொன்னாலும் சரியாகத்தான் சொல்வீர்கள்)

இது நம்பிக்கை அல்ல எதிர்பார்ப்பு. எந்த எதிர்பார்ப்பையும் மற்றவர்கள் கொள்வது நியாமில்லை. அதுபோல் மற்றவர்கள் மீது நாமும் சில எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் கூடாத. மூச்சுவிடுவது போல இயல்பான விஷயம் விடுதலையாய் இருப்பது. அதற்கத் தடை நாமாகப்படுகிற விலங்குள்ள் தானே தவிர வேறல்ல.

மூன்றாவது, நாம் நமக்கென்று கொள்கிற முன் மாதிரிகள் “அவர் மாதிரி ஆக வேண்டும். இவர் மாதிரி ஆக வேண்டும்” என்று நாம் நினைக்கிறோம். யாரும் யார் மாதிரியும் ஆக முடியாது. இதை தினமும் நினைத்துக்கொள்ளுங்கள்.

முன் மாதிரிகள் எப்படி உருவானார்கள்? அவர்களுக்கு முன் அது மாதிரி யாருமே இல்லை என்பதால் அவர்கள் முன் மாதிரிகள் ஆனார்கள். அதற்காக அவர்கள் மாதிரி ஆக முயற்சித்தால் வெறும் Xerox copy ஆகத்தான் முடியம்.

சிலரது வாழ்க்கையை ஆதர்சனமாக வகுத்துக் கொள்ளலாம். ஆனால் அது ஒரு வெறியாகிக் கூடாது பாரதிதான் அன்றும் என் ஆதர்ச புருஷன். அதற்கு பாரதயின் சொல்லில் இருக்கிற சுவை – நேர்மை போன்ற தன்மைகளை நான் உள்வாங்கிக் கொண்டால் போதும். அதற்காக நானும் தலைப்பாகை மீசையுடன் திரிய வேண்டியதில்லை.

இதில் இன்னொன்று, பாரதியை நான் என் ஆதர்சனமாக்க் கொண்டாலும், அவன் சொன்னது எல்லாவற்றையும் சரி என்று ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது எனக்கு புரிய 40 வருடங்கள் ஆயின. எனவே முன் மாதிரிகள் பற்றியும் கூட நமக்குள் சில பிம்பங்களை நாம் ஏற்படுத்திக் கொண்டால் அவஸ்தைதான்.

ஏனெனில், அவர் சொல்வது எல்லாமே சரி, அல்லது நான் சொல்வது எல்லாமே சரி என்பது போல ஒரு பிம்பம் எனக்குள் ஏற்பட்டால், அதனை நாம் நியாயப்படுத்தத் தொடங்குவோம். நியாயப் படுத்தும் விதமாய், நமக்கு நாமே பொய்களையும் நொண்டிச் சமாதானங்களையும் சொல்வது என்று ஆரம்பித்தால், அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது.

முழுமையான விடுதலைக்காக ஒரு மனிதன் செய்ய வேண்டியது, தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்வதுதான். தன் கோணங்களை , குறைகளைதானே அறிந்து கொள்வதற்கான வழியைத்தான் நான் மற்றவர்களுக்கு சொல்லித்தர விரும்புகிறேன். அது எப்படி?

உங்கள் வாழ்க்கையை ஒரு கதையாக எழுதிப் பாருங்கள். அதை பிரசுரிக்கவோ, பிறருக்குச் சொல்லவோ வேண்டாம். வாரா வாரம், அதனை ஒரு அத்தியாயமாக எழுதுங்கள். அந்தக் கதையின் முக்கியப் பாத்திரம் நீங்கள் அந்தப் பாத்திரம். 100% நல்லவனாக இருந்தால், அது கதையே கிடையாது.

நீங்கள் வாழ விரும்புகிற வாழ்க்கையவிட நீங்கள், வாழ்ந்த – வாழ்கிற வாழ்க்கையை எழுதுங்கள். இதன் மூலம் நம் கோணங்கள் – குறைகள் தெரியும்.

ஒரு சினிமா எப்படி வெற்றி ப எறுகிறது? வாழ விரும்புகிற வாழ்க்கையை அது படமாக்க் காட்டுவதால் வெற்றி பெறுகிறது. அந்தக் காலத்தில் ‘பாசமலர்” பெரிய வெற்றி. ஏனெனில் அப்படியொரு அன்பான அண்ணன் வேண்டும் என்று தங்கைகளும், அப்படியொரு பாசமான தங்கை வேண்டும் என்று அண்ணன்களும் ஏங்கினார்கள். ஆனால், யதார்த்ததில் அண்ணன்கள் – தங்கைகள் அப்படியில்லை.

அண்ணன் – தங்கை பற்றிய நம் மன பிம்பங்களுக்கும் யதார்த்த்தில் உள்ள நிலைக்கும் உள்ள இடைவெளியை இட்டு நிரப்பியதால் “பாசமலர்” வெற்றி பெற்றது.

இன்று அப்படி ஒரு படம் வந்தால் வெற்றி பெற வாய்ப்பில்லை. அண்ணன் – தங்களை அன்பாக இல்லாவிட்டால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது என்பது போன்ற மனநிலை இப்போது அதிகம்.

சிலபேர் சில பழக்கங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் விடமுடியவில்லை என்கிறார்கள். இதுபொய். பிடித்ததாதான் செய்கிறோம். மொத்தமாகப் பிடிப்பது, மொத்தமாகப்பிடிக்காது என்று எதுவும் இல்லை.

இன்று தியானம்,மன சுதந்திரத்திற்கான மார்க்கமாக அனைவராலும் அறியப்பட்டுள்ளது. ஏதோ ஒரு நேரத்தில் செய்வு மட்டும்தான் தியானம் எறு இல்லை. முழு டுபாட்டுடன் ஒன்றிச்சய்தால், ஒவ்வொரு செயலையும் இயானமாக செய்ய முடியும். சாப்படுவது என்றால், உணவில் சாம்பார் கலப்பது, பிசைவது, வாயில் போட்டு சுவ உணர்வது, துளி உப்பு தேவையென்றால் சேர்த்துக் கொள்வது, எல்லாவற்றையுமே ஒரு தியானமாக செய்ய முடியும். அந்த நேரத்தில் கோபம், பயம், குழப்பம் போன்றவை ஏற்பட வாய்ப்பில்லை.

நம்மைப் பற்றி பொய்யை பிறரை நம்ப் வைத்தால் அவர்களை முட்டாள் ஆக்குகிறோம். நாமே நம்பினால் முட்டாளாகிறோம். பழய நினைவுகள் பலரை சுமையாக அழுத்தும். சிகிச்சைக்கு வரும் சிலர், “பழைய நினைவுகளே இல்லாமல் செய்யுங்கள்ம என்கிறார்கள். அப்படியெல்லாம் செய்ய முடியாது பழைய காயங்களைக் காடங்களாக்கி நிகழ்காலத்தல் நம்வாழ்வை பலப்படுத்த வேண்டும்.

உங்உகு உங்கள் மீது நம்பிக்கை வர வழி, உங்களை நீங்களே நன்கு ஆராய்ந்து உங்களால் என்ன முடியும் என்று தெரிந்து, அதனை செய்வது. நாளொன்றுக்கு 40 நோயாளிகளை நான் பார்க்கிறேன். நாளன்றுக்கு 1000 பேரைப் பார்த்து கின்னஸில் பெயர் இடம் பெறச் செய்வதே என் இலட்சியம் என்று வெளியே சொல்ல்லாம். ஆனால், ஒரு நாளைக்கு 1000 பேரைப் பார்க்க முடியாது என்பதே உண்மை.

வாழ்க்கையை சுலபமாக வாழ வழி, முடிந்த வரை உண்மைகள் சொல்வதுதான். தீமையில்லாத சின்னப் பொய்கள் சொல்ல்லாம். நான் மனவியல் படித்தாலும் அது என் துறை. எனக்கு வேண்டியதை யெல்லாம் கற்றுக்கொடுத்து வாழ்க்கைதான். வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்கள் தான் அதிகம்.

பெரிய பரிய சாதனைகயாளர்கள் நமக்கு வழி காட்டும் பலகைகள். அவர்களே வழிகள் அல்ல. நம்மை நாமே சுயபரிசீலனை செய்து, தேவையில்லாதவற்றை செய்யாமல் இருந்தால் நல்லது.

கதைகளைப் படித்து வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயல்கிறோம். நம்முடைய வாழ்க்கைய விட நல்ல கதை வேறேது?


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2001

பொதுவாச் சொல்றேன்
உறவுகள் உணர்வுகள்…
வணக்கம் தலைவரே
விட்டு விடுதலையாவோம்
உள்ளத்தோடு உள்ளம்
உள்ளத்தோடு உள்ளம்
அடையாள அட்டை
சிரிப்போம் சிந்திப்போம்
சத்குரு பதில்கள்
மனித சக்தி மகத்தான சக்தி
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
வெற்றியின் மனமே…
தஞ்சையில் பாய்ந்த தன்னம்பிக்கை வெள்ளம்
நம்பிக்கையும் நானும்
மனசுவிட்டுப் பேசுங்க…