Home » Articles » உறவுகள் உணர்வுகள்…

 
உறவுகள் உணர்வுகள்…


செலின் சி.ஆர்
Author:

உறவுகள் மாறும், ஆனால் உணர்வுகள் தொடரும் என்பதைக் கடந்த இதழில் பார்த்ததால் உறவுகளின் ஆணிவேர் என்ன? இவை எங்கே எப்படி துவங்குகின்றன? மனிதன் மண்ணில் பிறந்தவுடன்தானா? இல்லை அதற்கும் முன்னே தாயின் கருவறையில் இருக்கும் போதா? இது வரையில் நாம் யோசித்திருப்போம். இதற்கும் மேல் ஒரு படி உள்ளதே!

தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கும் போதோ அல்லது கோவில் வாசலிலோ முன்பின் தெரியாத ஒருவரை சந்திக்கும்போது, ‘சட்’டென மின்னல் வெட்டியது போல் ஒரு உணர்வு கடந்து செலும் ஏதோ ஒன்று அரிடம்பிடித்துப் போகும். பக்கத்தில் போய் பேசவேண்டும் போல் தோன்றும்.

நாமும் யோசித்துப் பார்ப்போம். இவர் அப்படி ஒன்றும் அழகில்லையே, பிரபலமான வரும் இல்லையே,பிறகு ஏன் இப்படி ஈர்க்கப்படுகிறோம்? இந்தக் கேளவிகளுக்கு விடை ஏதும் கிடைக்காது. ஏதோ ஒரு உந்துதலில் அருகில் போய்ப் பேச ஆரம்பித்தால், பல வருடங்கள் பழகியதைப்போல் பேசிக் கொண்டேயிருப்போம்.

இதற்கு நேர்மாறாக சிலரை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விடும். எல்லோரும் மதிக்கக்கூடிய நிலையில் கூட அவர் இருக்கலாம். ஆனாலும் ஏதோ ஒன்று நம்மை வெறுப்படையச் செய்யும். அவர் வலிய வந்து பேசினால் கூட, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நாம் ஒதுங்கிப் போய்விடுவோம்.

இத்தகைய நிகழ்ச்சிகள், உணர்வுகள் அனேகமாக நம் எல்லோர் வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்கும். தினமும் நாம் சாலையில் பார்க்கும் மனிதர்களுக்கும், நமக்கும் கூட பூர்வ ஜென்மத் தொடர்பு இருப்பதாக பல ஞானிகளும் வரையறுத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது ஒரு குழ்ந்தைக்கும் அதன் பெற்றோருக்கும் இடையேயான உறவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது! எவ்வளவு நுட்பங்களை உள்ளடக்கியிருப்பது!

மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு குழந்தை தன் பெற்றரைத் தேர்ந்தெடுப்பது இல்லை. பெற்றோரும் தங்கள் குழந்தைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை. அது ஒரு வாய்ப்பு, நிகழ்வு. இந்த உலகிற்குள் குழ்ந்தை நுழைய பெற்றோர் ஒரு கருவி, அவ்வளவுதான் என்றும் தோன்றும். ஒரு குழந்தை தன் பெற்றோரை அறிவப்பூர்வமாகத் தேர்ந்தெடுப்பதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

முந்தைய பிறப்பில் தன்மனம் கவர்ந்தவர்களை, தன்மேல் அன்பைப் பொழிந்தவர்களை, இவர்கள் தன் பெற்றோராயிருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்று நினைத்திருந்தால், அடுத்த பிறவியில் அவர்கள் தன் பெற்றோராய்க் கொள்கிறது என்று சொல்லக் காரணங்கள் உண்டு.

மனவியல் சிகிச்சைக்காக எங்களிடம் வரும் சில நோயாளிகளை ஆழ்நிலை உறக்கத்கத்திற்குக் கொண்டு சென்று பழைய நினைவுகளைத் தூண்டுவோம். சில சமயங்களில் முற்பிறவி நினைவுகள் தோன்றி புதிய மொழிகளில் அவர்கள் பேசுவைத்ப் பார்த்திருக்கிறோம். இந்தப் பிறவிக்கும் முந்தையபிறிக்கும் ஆழ் மனதில் ஒரு ஞாபகச் சங்கிலி இழையோடுகிறது என்று சொல்லலாம்.

கருவிற்குள் நுழைந்ததிலிருந்து, கிட்டதட்ட ஒரு வயது வரை குழந்தைகளுக்கு முற்பிறவி ஞாபகங்கள் தான் இருக்கும். அதனால்தான் யாருக்குமே ஒரு வயதுவரை நடந்த விஷயங்கள் எதுவுமே ஞாபகத்தில் இருப்பதில்லை.

பிறந்தகுழைந்த சிலர் முகத்தைப் பார்த்ததும் சிநேகமாக, பல நாட்கள் பழகியவரைப் பார்த்து சிரிப்பது போல் சிரிக்கும். ஒரு சிலர் வந்து தூக்கினாலே அழும். இந்த உணர்வுகள் அந்த கணத்தில் ஏதேச்சையாய் தோன்றுபவை அல்ல. இப்படி ஒரு வயதுவரை முற்பிறவியின் நினைவிலேயே இருக்கும் குழந்தை. அதற்குப் பிறகுதான் படிப்படியாக நிகழ்காலத்தை உணர்கிறது.

பிறந்த குழந்தையின் மன உணர்வுகள் அப்பழுக்கில்லாமலிருக்கும். மற்றவர்களையும் தன்னில் ஒரு பாதியாய் உணரும். இரண்டு குழந்தைகளை அருகருகே படுக்கவைத்துப் பாருங்கள். பக்கத்திலிருக்கும் குழந்தை அழும்போது, இந்தக் குழந்தையும் சேர்ந்து அழும். அடுத்தவர்களின் வலியை, மகிழ்ச்சியைத் தன்னுடைய வலியாய், மகிழ்ச்சியாய் குழந்தை உணர்கிறது.

அதற்கு “நான்” என்ற சிந்தனையில்லை. அதனால்தான் ஒரு வயதுவரை குழந்தைக்கு முகக் கண்ணாடியைகாட்டக்கூடாது என்று சொல்கிறார்கள். அப்படிக் காட்டினால் அதன்று “நான் வேறும “நான் தனி” என்ற உணர்வுகள் ஏற்பட்டுவிடும் என்றே பெரியவர்கள் இப்படி சொல்லி வைத்துள்ளனர்.

அதே போல் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு மற்றவர்களின் உணர்வுகளை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை அதிகம். ஞானிகளுக்கு எப்படி மற்றவர்களின் லியை அவர்கள் சொல்லாமலேயே புரிந்து கொள்ளும் தன்மையிருக்கிறதோ அதே போல் குழந்தைகளும் புரிந்து கொள்ளும். அதனால் தான் நமக்கு உடம்பு சரியில்லாமலிருக்கும் போது குழந்தைகளின் பக்கத்தில் போகக்கூடாது என்பார்கள்.

தலைவலியோடு நாம் அதன் அருகில்போய் அமர்ந்தால், சில நிமிடங்ளில் நமக்கு தலைலி சரியாகிவிடும். ஆனால்,குழந்தை சோர்வாகி அழ ஆரம்பித்துவிடும். நம் தலைவலியை குழந்தை ஏற்றுக்கொள்வதுதான் காரணம். மற்றவர் அழுதால், தானும் அழுது, மற்றவர் சிரித்தால் தானும் சிரிக்கும் குழந்தையின் மனநிலை வாழ் நாள் முழுதும் தொடர்ந்தால் உலகமே இனிமையாகிவிடும் இல்லையா?

தன் பெற்றோரைத் தேர்ந்தெடுத்து, கருவிற்குள் கலந்தாகி விட்டாயிற்று. வெளியுலகைப் பார்ப்பதற்கு முன் கிட்டதட்ட பத்து மாதங்களுக்கு தாயின் கருவறைதான் கழந்தைக்கு எல்லாமே. அந்த் கால கட்டத்தில் அதன் உணர்வுகள் எப்படியிருக்கும், தாயின் மனநிலை, பெற்றோரின் நடவடிக்கைகளெல்லாம் குழந்தையின் மனத்தில் எப்படிப் பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்…?

இவற்றைப்பற்றி அடுத்த இதழில்…


Share

Comments are closed

Sorry, but you cannot leave a comment for this post.

 


July 2001

பொதுவாச் சொல்றேன்
உறவுகள் உணர்வுகள்…
வணக்கம் தலைவரே
விட்டு விடுதலையாவோம்
உள்ளத்தோடு உள்ளம்
உள்ளத்தோடு உள்ளம்
அடையாள அட்டை
சிரிப்போம் சிந்திப்போம்
சத்குரு பதில்கள்
மனித சக்தி மகத்தான சக்தி
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
வெற்றியின் மனமே…
தஞ்சையில் பாய்ந்த தன்னம்பிக்கை வெள்ளம்
நம்பிக்கையும் நானும்
மனசுவிட்டுப் பேசுங்க…