– 2016 – December | தன்னம்பிக்கை

Home » 2016 » December (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  வெற்றி உங்கள் கையில்

  என்னால் முடியுமா?

  மற்றவர்களை நல்லவர்களாக்க முயற்சி செய்வர்கள்,

  முதலில் தங்களை நல்லவர்களாக மாற்றிக் கொள்ள

  முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.

  வாழ்க்கையில் பெரிய வெற்றி என்பது ஒரேநாளில் ஒருவருக்குக் கிடைப்பதில்லை. ஒருவர் செய்கின்ற சின்னஞ்சிறிய செயல்களில் கிடைக்கும் வெற்றிதான் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தருகிறது.

  “இதுவெல்லாம் என் சக்திக்கு மிகச்சிறியது” என்று எண்ணி எந்தவொரு நல்ல செயலையும் ஒதுக்கிவிட முடியாது. மிக கவனமாக நல்ல செயல்களைத் தேர்தெடுத்து, நாள்தோறும் செய்வதன் மூலம்தான் வெற்றி ஒருவருக்கு உறுதியாக் கிடைக்கிறது.

  ஒரு செய்கின்றசெயல் மற்றவருக்கு வீணான செயலாகத் தோன்றலாம். ஆனால், அந்த செயல் மற்றவர்களின் உயிரைக் காக்கவும், அவர்களின் வாழ்க்கைக்கு மனமகிழ்ச்சியும் கிடைக்கிறது. இதனால், “மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?” என்று நினைத்து நல்ல செயலில் ஈடுபடாமல் ஒதுங்கி நிற்க  இயலாது அல்லவா.

  இந்த நாட்டில் லஞ்சம் அதிகமாகி விட்டது. ஊழல் பெருகிவிட்டது. அநியாயம் அதிகமாகிவிட்டது. ஏமாற்று வித்தைகள் ஏராளமாகி விட்டது  என்றசிலரின் கூக்குரல் நமக்குக் கேட்கத்தான் செய்கிறது. அது சரியில்லை. இது சரியில்லை என்று சொல்லி ஒவ்வொன்றையும் தரக்குறைவாக விமர்சித்தும் நேரம் கழிக்கிறார்கள்.

  புதிதாக யாராவது பிறந்து வந்தால்தான் இந்த நாட்டை திருத்த முடியும் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொள்கிறார்கள். நான் மட்டும் நல்லவனாக இருந்தால் போதுமா? இந்த நாட்டு மக்கள் அனைவரும் எப்போது திருந்துவார்கள் என்று சொல்லியும் தேனைப்படுகிறார்கள்.

  மற்றவர்களை நல்லவர்களாக்க முயற்சி செய்வர்கள், முதலில் தங்களை நல்லவர்களாக மாற்றிக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. வாழ்க்கைக்கு உதவும் நல்ல செயல்களை அடையாளம் கண்டு, அதனை நடைமுறைப்படுத்த இளமைக் காலம் முதல் ஒவ்வொருவரும் முயற்சிகளை மேற்கொள்வது சிறந்ததாகும்.

  அது ஒரு காலை நேரம்.

  கடற்கரையின் மணற்பரப்பில் ஒருவர் நடந்து கொண்டிருந்தார். கடலின் அலைகள் வேகமாக வந்து அவரது கால்களை நனைத்தன. அதிகாலை வேளையில் அந்த அலைகள் அவருக்குள் மேலும் மகிழ்வை அள்ளித் தந்தன. அப்போது அந்த அலைகளோடு கரை ஒதுங்கிய சில நட்சத்திர மீன்கள் (Star Fish) அவர் கண்களில் பட்டன. கூர்ந்து கவனித்தார்.

  கடல் அலைகள் வேகமாக கரைக்கு வரும்போது, அந்த அலைகளோடு சேர்ந்து சில நட்சத்திர மீன்கள் கடற்கறையில் ஒதுங்கின. கடலை நோக்கி அலை உள்செல்லும் போது ஒரு சில மீன்கள் கடலுக்குள் அலை இழுத்துச்சென்றன. ஆனால் நட்சத்திர மீன்களில் சில கடலுக்குள் செல்ல இயலாமல் கரையில் ஒதுங்கி சூரிய ஒளியில் தவித்தன. உயிருக்குப் போராடிய நட்சத்திர மீன்களைப் பர்ôத்த அவர், அந்த மீன்களில் சிலவற்றைஎடுத்து கடலுக்குள் விட்டார்.

  மீண்டும் அலைகள் கரைக்கு வரும்போதெல்லாம், சில நட்சத்திர மீன்கள் கரையில் ஒதுங்கத் தொடங்கின. பொறுமையாக அந்த மீன்களை மீண்டும் எடுத்து கடல் நீரில் விட்டார் அந்த மனிதர். இவரின் விநோத செயலை அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்.  “நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? கடலில் இருந்து நூற்றுக்கணக்கான நட்சத்திர மீன்கள் பெரிய அலையால் கரையில் ஒதுங்குகின்றன. அந்த நட்சத்திர மீன்கள் அனைத்திற்கும் உங்களால் உதவ முடியுமா? ஒரு சில நட்சத்திர மீன்களை மட்டும் காப்பாற்றுவதால் உங்களுக்கு என்ன இலாபம் என்று கேட்டார் அவரைக் கவனித்த வழிபோக்கன்.

  இந்த இதழை மேலும்

  தலைமை கொள்

  மண்ணில் விழும் மற்றபொருட்கள் எல்லாம் மக்கி உரமாக மாறும் பொழுது, விதை மட்டும் தான் மண்ணைப்பிளந்து விருட்சமாய் எழுகிறது என்று மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் கூறுவார். வீழ்வது எல்லாம் ஒரே இடத்தில் தான். ஆனால் வளர்வது என்னவோ விதை மட்டும் தான். நாமும் அது போலவே இம்மண்ணில் மனிதராய்ப் பிறக்கையில் ஒன்று போலத் தான் பிறக்கிறோம். ஆனால் வளரும் போது தான் தெரிகிறது நாம் விதையா? வீண் பொருளா? என்று.

  மகா அலெக்சாண்டர்

  அப்படித் தான், விதையாக வேண்டும், நாட்டை ஆண்டு வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும்; என்று பலர் இம்மண்ணில் பிறந்தார்கள். அதில் முதன்மையானவர் மாவீரன் அலெக்ஸாண்டர். மாசிடோனியா மன்னர். இவரின் தந்தைப் போரில் கொல்லப்பட்ட போது இவரின் வயது 20. இந்த வயதில் ஒரு நாட்டுக்கு மன்னாக நியமிக்கப்பட்டார்.

  24 வயதில் போரிடச் சென்றார். போர் செய்வதில் வல்லவர், தான் எடுக்கும் முடிவில் சற்றும் பின் வாங்காதவர், இவருடைய ஒரே இலக்கு, வெல்ல நினைக்கும் நாட்டை தன்னுடைய ஆட்சிக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்பதாகவே இருந்தது. இதனால் இவர் கொன்று குவித்த உயிர்கள்  ஏராளம். 10 ஆண்டுகள் போர்க்களத்திலேயே தன்னுடைய வாழ்க்கையை செலவிட்டவார்.

  இப்படி நாட்டைப் பிடிக்க வேண்டும் என்றதீராத வெறியோடு, மக்ரான் பாலைவனத்தைக் கடக்கும் போது, அதன் தட்ப வெட்ப நிலையை தாங்கிக் கொள்ள முடியாமல் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலால் மரணமும் அடைந்தார். நாட்டையே தன்னுடைய ஆட்சிக்குக் கீழ்  கொண்டு வர வேண்டும் நினைத்தவர் சாதாரண காய்ச்சலால் இறந்து போனார். இறக்கிறார். அவர் நினைத்தது அவருக்கு முழுவதுமாகக் கிடைக்கவில்லை.

  மாவீரன் நெப்போலியன்

  இவரைப் போலவே மற்றொரு மன்னர் நெப்போலியன், இவரும் மிகச்சிறந்த போர் வீரர், குதிரையின் மீது படுத்துத் தூங்கும் ஆற்றல் பெற்றவர். களம் பல கண்டவர். தனது போர் வலிமையால் குருதி கொட்ட சாய்ந்தவர்கள் எண்ணிலடங்கா. எத்தனையோ எதிரி நாடுகள் போரிடாமலேயே நாட்டை விட்டு ஓடியிருக்கிறார்கள். இவ்வுலகில் காலத்தை வென்றவர்கள் எவருமில்லை. வாட்டர்லூ என்ற இடத்தில் நடைபெற்றபோரில் நெப்போலியன் தோல்வி அடைந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

  ஏழ ஆண்டுகள் சிறைத் தண்டனை அடைந்தார். அப்போது அவருக்குத் தீராத வயிற்று வலி ஏற்பட்டு இறந்தும் போகிறார். இறக்கும் தருவாயில் தன்னுடைய மகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக்கடிதத்தில் ‘மகனே! போரில் வென்று நாட்டை ஆள்வதை விட, வயிற்று வலி வரமால் பார்த்துக் கொள், என்று எழுதுகிறார். போரில் புலியாக இருந்தாலும் வயிற்று வலி அவரைக் கொன்று விடுகிறது. இவர் நினைத்தும் முழுமையாக நடக்கவில்லை.

  இந்த இதழை மேலும்

  வாணிகத்தில் வளர்ச்சியைப் பெற தனி மனிதனின் பங்கு

  “திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு

  என்று ஒளவைப் பிராட்டியும்”.

  “அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு

  இவ்வுலகம் இல்லாகியாங்கு”

  என்று வள்ளூவரும்பொருளீட்டுவதின் அவசியம் பற்றிக் கூறியுள்ளனர். வாணிகத்தின் மூலம்தான் மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றையும் அடைய முடிகின்றது. அப்படிப்பட்ட வாணிகத்தில் ஒரு தனி மனிதனின் பங்கு பற்றியும், அதில் உள்ள சில சுவாரஸ்யமன நிகழ்வுகளை பற்றியும் இக்கட்டுரை விவரிக்கின்றது.

  ஒரு தொழில் தொடங்க வேண்டுமென்றால் ஊக்கம் வேண்டும்.

  உடையர் எனப்படுவது ஊக்கம்; அஃது இல்லார்

  உடையது உடையரோ மற்று. (குறள்: 591)

  என்றகுறளில் தனி மனிதனின் ஊக்கம் வலியுறுத்தப்படுகிறது. ஒருவனது ஊக்கம் எண்ணம், மூலதனம், வணிகஞ்செய்யுமிடம் மற்றும் உழைப்பு இவை அனைத்தும் சேர்ந்து வர 24 மணி நேரம் ஆகின்றது. பூமியின் ஓட்டம் போல், இப்பூமியில் வாழும் வணிகர்களின் ஓட்டத்தின் அடிப்படையில் தான், அன்றாடம் எல்லா ஜீவராசிகளும் உயிர் வாழ்கின்றன. உதாரணமாக, இந்த உண்மை ஒரு கப் காப்பி அருந்தும் போது அதில் எத்தனை வணிகர்களின் உழைப்பு மறைந்திருக்கின்றது என்பது தெரியவரும்.

  பண்டமாற்று முறையிலிருந்து, இன்றைய on  line (e-commerce) வரை உலகச்சந்தை வளர்ந்துள்ளதற்குக் காரணம், தனி மனிதனாய் இருந்து, தனது நிறுவனம் என்றவாகனத்தை, வெற்றிப்பாதையில் செலுத்துகின்றதலைவர்களே ஆவார்கள். வாணிகளம் என்றசக்கரம் சுழல அச்சாணியாக இருக்கும் அவர்கள், தங்களுடைய நேர்மையான உழைப்பால் சேர்க்கப்படும் செல்வம்.

  “அறன் ஈனும் இன்பழும் ஈனும் திறனறிந்து

  தீதின்றி வந்த பொருள்”. (குறள்: 754)

  என்றவள்ளூவரின் குறளுக்குகினங்க இன்பத்தைத் தரும். நேர்மையான வணிகர்கள், தங்கள் வாணிகம் சிறப்புறநடைபெறநான்கு விதமான விதிமுறைகளைக் கையாளுகிறார்கள்.

  முதலாம் விதிமுறை:

  வாடிக்கையாளர்கள் இடத்திலிருந்து அவர்களுடைய விருப்பம், வருமானம், வாழும் சூழ்நிலை இவற்றைத் தெரிந்து கொண்டு அவற்றைப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் வணிகத்தை நடத்துவது (Trade the minds of the customers)

  ஒருவர், ஒரு மொத்த வியாபார துணிக்கடையில் பணம் வசூலிக்கும் உதவி மேனேஜராகப் பணியில் சேர்ந்தார். அவர் பழைய கணக்குகளை ஆராய்ந்தபோது, துணி வாங்கிக் கொண்டு பணம் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததைப் பார்த்தார். அவர்களிடம் பணம் வழலிப்பதற்காக அனுப்பபட்ட  கடிதங்களைப் படித்துப்பார்த்தார். அந்தக்கடிதங்களில் பயன்படுத்தப் பட்டிருந்த வார்த்தைகள் கடுமையாகவும், மனம் வருத்த மடையச் செய்யும் விதமாகவும், விரட்டும் பாணியிலும் எழுதப்பட்டிருந்தன.

  அவர் அந்தக் கடிதம் தனக்கு வந்திருந்தால் தான் நிச்சயமாக பணத்தை கட்டியிருக்க மாட்டோம் என்று உணர்ந்தார். உடனே, கடிதத்தின் பழைய வார்த்தைகளை மாற்றி, புதிதாக மென்மையாக அவர்கள் மனம் மாறும்படியான வார்த்தைகளைப் போட்டு, கடிதம் எழுதி அனுப்பினார். அந்தக் கடிதங்களைப் படித்த வாடிக்கையாளர்கள் தங்கள் மனம் மாறி, பல மாதங்களாகச் செலுத்தாமல் வைத்திருந்த பாக்கிப் பணத்தை தாமாக முன் வந்து செலுத்தினார்கள். என்ன ஆச்சரியம்! எந்த ஆண்டிலும் இல்லாத அதிகமான வருமானம் அந்த ஆண்டில் கிடைத்தது. இதைத்தான் தமது பொருளாகவே நுகர்வோர்களின் பொருளையும் மதித்ததால் வாணிகம் பெருகும் என்பதை வள்ளூவப் பெருந்தகை

  “வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

  பிறவும் தமபோல் செயின்.”  (குறள்: 120)

  என்று வலியுறுத்தியுள்ளார்.

  இந்த இதழை மேலும்

  ஸ்ரீலங்கா சுற்றுலா

  நம்மூர் ATM கார்டுகளை  உபயோகித்தும் சில வங்கிகளில் பணம் பெறமுடியும்.

  நாங்கள் கோவை P.N. புதூர் மனவளக்கலை அன்பர்கள் மற்றும் குடும்பத்தினர்

  20 பேர் குழுவாக 8 நாட்கள் சென்று வந்த இலங்கை சுற்றுலாவை இனி பார்ப்போம்.

  இலங்கை, சிலோன், ஸ்ரீலங்கா எனப்பல பெயர்களால் அழைக்கப்படும் குட்டித்தீவுதான் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள சின்னநாடு.

  பேச்சு வழக்கில் இலங்கை என்பது அனைவருக்கும் தெரியும். இதோடு விடுதலைப்புலிகள் என்றபெயரும், சுமார் 30 ஆண்டுகளாக அங்கு நடந்து வந்த உள்நாட்டுப் யுத்தமும் நினைவுக்கு வரும்.

  2009ல் விடுதலைப்புலிகளை ஒடுக்கி, தற்போது ஒரே நாடு என்ற நிலைப்பாட்டில் உள்ளது ஸ்ரீலங்கா. இந்நாட்டின் மொத்தப்பரப்பளவே 66,600 ச.கி.மீ., தான். தமிழ்நாட்டின் பரப்பளவு 1,30,000 ச.கி.மீ., இலங்கையின் மக்கள் தொகை சுமார் 2 கோடி, ஆனால் தமிழ்நாட்டின் மக்கள் தொகை சுமார் 8 கோடி. தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டால் 25 மாவட்டங்கள்தான். ஆனால், 9 மாகாணங்கள். தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன.

  இலங்கையில் சிங்களர்கள், தமிழர்கள் எனக் கலந்தே உள்ளனர். வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திரிகோணமலை, முல்லைத்தீவு என்ற 5 மாவட்டங்களில் தமிழ்தான் ஆட்சி மொழி மற்றும் கல்வி மொழி.

  தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வுதான் உண்டானது. ஆலயங்கள், கடைவீதிகள் அனைத்தும் ஒரே மாதிரிதான். தமிழ்நாட்டின் பண்டைய மன்னர்கள் ஆட்சிபுரிந்துள்ளது வரலாற்றுக் குறிப்பாக உள்ளது. இந்நாட்டில் சுமார் ஒரு லட்சம் கி.மீ., நீளத்திற்குள் நல்ல தரமான சாலைகள் உள்ளன. சாலைகளை A,B,C,D எனத் தரம்பிரித்துள்ளனர். நாங்கள் சுமார் 4000 கி.மீ., தூரம் பயணித்ததில் எந்த இடத்திலும் சுங்கச்சாவடியைக் காணவில்லை.

  உணவு நம் உணவைப் போன்றுதான் இட்லி, தோசை, வடை, சப்பாத்தி, பரோட்டா இத்துடன் கூடுதலாக இடியாப்பம்  பால் சொதி மற்றும் ஆப்பம்  சம்பல் என எந்நேரமும் கிடைக்கிறது. மதியம் வெள்ளை அரிசி சாதம், சிவப்பு அரிசி சாதம், பருப்பு, காய், பொறியல், கூட்டு அப்பளம், ரசம், மோர், ஊறுகாய் என்றபட்டியல் தான்.

  தங்குமிடங்களும் பரவாயில்லை. நமது பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு பல நிலைகளில் உள்ளன. பாஸ்போர்ட்  மற்றும் கையில் ரூ. 30000 ஆயிரம் இருந்தால் குழுவாகவோ, தனியாகவோ சென்று வரலாம். தமிழ் மொழியே போதும். விசா கட்டணமும் 15 டாலருக்குள் தான். இங்கேயும் எடுத்துக் கொள்ளலாம். கொழும்பு விமான நிலையத்திலும் பெறலாம். விமானக்கட்டணமும் சென்று வர சுமார் ரூ. 8000தான்.

  மதுரை, திருச்சி, சென்னையிலிருந்து பல விமான சேவைகள் உள்ளன. பயண நேரம்  முக்கால் மணி நேரம். முதல் ஒரு மணி நேரம்தான் நாங்கள் மதுரையில் ஏறி கொழும்பில் இறங்கினோம். ஸ்பைஸ்ஜெட் என்ற குட்டி விமானத்தில்  (80 பேர் அமரக்கூடியது)  பயணித்தோம். மாத்தளை என்றஊரில் இன்னொரு விமான நிலையமும் உள்ளது.

  நமது ரூபாய்க்கு இலங்கை ரூபாய் இரண்டு. இங்கிருந்து டாலராகக் கொண்டு சென்று அங்கு இலங்கை ரூபாயாக மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபிட் /கிரிடிட் கார்டுகள் மூலமும் வாங்கலாம்.

  நம்மூர் ATM கார்டுகளை  உபயோகித்தும் சில வங்கிகளில் பணம் பெறமுடியும். நாங்கள் கோவை P.N. புதூர் மனவளக்கலை அன்பர்கள் மற்றும் குடும்பத்தினர் 20 பேர் குழுவாக 8 நாட்கள் சென்று வந்த இலங்கை சுற்றுலாவை இனி பார்ப்போம்.

  அனுராதாபுரம்:

  20.09.2016 அன்று காலை மூன்றரை மணியளவில் கோவையிலிருந்து ஒரு மினி பஸ் மூலம் மதுரை விமான நிலையம் சென்று, அங்கு அறிமுகப்படலம் முடித்து, சுற்றுலா வழிகாட்டியாக வந்த பாண்டிச்சேரி ஜெயக்குமார் என்பவருடன் பயணத்தைத் துவக்கினோம்.

  இந்த இதழை மேலும்

  மனக்கிளர்ச்சி – வெற்றிக்கு முதல்படி…

  Flow means joy, creativity, and the process of total

  involvement with life.  – Mihaly Csikszenthmihalyi

  இவ்வுலகில் நல்ல பண்பு என்பது மகிழ்ச்சியாய் இருப்பது ஒன்றேயாகும்.

  அவ்வாறு மகிழ்ச்சியாக இருக்குமிடம்

  நீங்கள் இப்போது இருக்குமிடமேயாகும்.

  அப்படி மகிழ்ச்சியாய் இருக்கும் நேரம்  இந்த நிமிடமேயாகும்

  நாம் மகிழ்ச்சியாய் இருக்க ஒரே வழி

  மற்றவர்களை மகிழ்ச்சியாய் இருக்கச் செய்வதாகும்

  இதுவே, எனது தீர்க்கமான கொள்கை.

                     – ராபர்ட் ஜி. இங்கர்சால்.

  சிக்கலோ சிக்கல்

  ஒரு தொழிலதிபருக்கு தீர்க்க முடியாத சிக்கல். நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர் மனதிற்கு எந்த முடிவும் சரியாகப்படவில்லை. தொடர்ந்து சில நாட்கள் சிந்தித்தும் சிக்கலுக்கு வழி கிடைக்கவில்லை.

  தொழிலதிபர் ஒரு ஆலோசகரிடம் சென்றார். “இந்தச் சிக்கலைத் தீர்க்க இதுவரை என்னென்ன முயற்சிகள் எடுத்தீர்கள்?” என்று கேட்டார் ஆலோசகர்.

  “என்ன முயற்சி எடுப்பது என்று தான் இரவும், பகலும் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார் தொழிலதிபர்.

  ஆலோசகர் “உங்களுக்கு எந்த பொழுதுபோக்கு மனதிற்கு மகிழ்ச்சியைத்தரும்” என்று கேட்டார்.

  தொழிலதிபர் “இசை எனக்கு ரெம்பப் பிடிக்கும். ஒரு இசை நிகழ்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும்” என்று சொன்னார்.

  உடனே ஆலோசகர் அவரை பிரபலமான இசை நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். இசை நிகழ்ச்சிக்கு இடையிடையே ஒரு நகைச்சுவைத் துணுக்குகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தார்.

  தொழிலதிபர் இந்த நிகழ்ச்சியில் முழ்கி தமது சிக்கல்களை மறந்து பலமுறை கைதட்டி மகிழ்ந்து, வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார். அவர் மனம் இப்போது தெளிவாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது ஆலோசகர் இன்று இரவு தூங்கி விழித்த பின்பு இந்த சிக்கலைப் பற்றி யோசியுங்கள். ஒரு முடிவு வரும், என்று சொன்னார்.

  தொழிலதிபரும் இசை நிகழ்ச்சியின் இதமான நினைவுகளோடு தூங்கப்போனார். மனம் ஓய்வுற்றிருந்த போது மின்னல் போன்று ஒரு யோசனை உதயமாயிற்று. அந்த யோசனை சிக்கலைத் தீர்த்து வைத்தது.

  இப்படித்தான்மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபட்டால் மனதில் தெளிவு பிறக்கும். தெளிவான மனம் புதிது புதிதாக சிந்திக்கும். இதனால், சிக்கல்களுக்கு சீரான தீர்வு எளிதாக கிடைக்கும்.

  மனகிளர்ச்சி என்றால்

  தொடர்ந்து ஓய்வில்லாமல் மனதைக் கசக்கிப் பிழிந்து சிந்தித்துக் கொண்டிருந்தால் சோர்வு உண்டாக்கி மன அமைதியும், மாற்றி யோசிக்கிற சிந்தனையும் குறைந்து விடும் என்பது அனுபவசாலிகளுடைய பாடமாகும்.

  எந்தச் செயல்கள் உங்கள் இதயத்திற்கு மகிழ்ச்சியையும், மனதிற்குள் ஒரு மலர்ச்சியையும் உள்ளுக்குள் ஒரு ஆனந்த உணர்ச்சியையும் மிக்க ஆனந்தத்தையும், ஒட்டுமொத்தமான குதூகலத்தையும் தருகின்றனவோ, அந்தச் செயல்கள் எல்லாம் மனதிற்குக் கிளர்ச்சியூட்டும் செயல்களாக கருதப்படுகின்றன. (Flow Activity).

  இந்த மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சி மன நிம்மதியையும், மனநிறைவையும் தருகின்றன. இரண்டு மணிநேரம் நடக்கும் நிகழ்ச்சி 15 நிமிடங்களில் முடிந்து விட்டது போன்று நமக்குத் தோன்றும். நிகழ்ச்சிகளில் நாம் ஒன்றி கலந்து விடும் போது நமக்கு நேரம் போவதும் தெரிவதில்லை. மனம் ஏதோ ஒன்றின் பிடியிலிருந்து விடுதலை ஆனது போன்ற உணர்வைப் பெறுகிறது. மனதிற்கு ஓய்வு ஆரம்பிக்கின்றன.மனம் தெளிவடைகிறது. ஆக்கபூர்வமான தீர்வுகள் சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் ஆரோக்கியமான தீர்வுகள் தென்படுகின்றன. விடை தெரியாத கேள்விகளுக்கும் விடைகள் புலப்படுகின்றன.

  இந்த இதழை மேலும்

  தன்னம்பிக்கை மேடை

  எழுத்தால் இவ்வுலகை வெல்ல முடியுமா?

  கவிஞர் அறிவுமதி, சேலம்

  12 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மனித இனம் சைகைக் காட்டியது, பின்னர் குரல் தொடர்பு மூலம் மற்ற மனிதர்களைத் தொடர்புக் கொண்டது. அதற்குப் பின் நம் போன்ற மனிதர்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய போது பேசியிருக்கிறார்கள். எழுத்து வடிவத் தொடர்பு கி.மு 1500 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிருக்க வேண்டும், என்று தொல்பொருள் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்த எழுத்து வடிவம் தான் தொலைதொடர்பு புரட்சி ஏற்பட ஏதுவாக இருந்திருக்கிறது எழுத்து வடிவமான  மொழிகள் மனித நாகரீகத்தை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றது.

  கிரேக்கம், சீனம் (மாண்டரீன்),லத்தின், சமஸ்கிருதம் போன்ற மொழிகளை முதன்மை மொழிகளாகவும், இன்று உலகில் எழுத்து வடிவிலான 6,500 மொழிகளும் இவைகளிலிருந்து வந்தவை என்று கருதப்பட்டது. ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்த பிஷப் ராபர்ட் கால்டுவெல் என்ற தமிழ் ஆராய்ச்சியளர், தமிழ் மொழி கூட ஒரு தொன்மையான மொழி என்றும், தென்னிந்திய மொழிகள் அனைத்தும் அதிலிருந்து வந்தவை என்றும் கண்டுபிடித்துக் கூறினார்.இக்கருத்தில் ஆதாரம் இருப்பதால் இது உண்மை என்றே தோன்றுகிறது. எனவே தான் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. தமிழ் மொழியிலுள்ள இலக்கணம் மற்றும், இலக்கியங்களின் சிறப்பு வேறு எந்த மொழியிலும் இவ்வுலகில் இல்லை என்று பல அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

  பல மொழிகளைக் கற்றறிந்த சுப்பிரமணிய பாரதி அவர்கள் தனது பாடலில் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழ்மொழிப் பற்றிக் கூறுகிறார்.  இது நமக்குப் பெருமையல்லவா? தமிழ்மொழி பேசிய நமது முன்னோர்கள் அவர்களுக்கென்ற ஒரு எழுத்து மொழி ஏற்படுத்திய பழங்குடிப் பெருமக்கள் ஆவார்கள்.

  இனி உங்களது கேள்விக்கு வருவோம், “வெள்ளையனே வெளியேறு” என்றார் காந்தி. இரண்டு வார்த்தைகள். ஆனால் சக்தி வாய்ந்த போர்க்குரல் அது. “செய் அல்லது செத்துமடி” என்றார், அவரது ஆற்றல் மிக்க ஆணை அது. அதன் மூலம் பூரண சுதந்திரம் தான் முடிவு என்றநிலைமைக்கு வந்தது. இந்திய சரித்திரம் மாறியது.

  1963 ஆம் ஆண்டு “வேலையும் சுதந்திரமும்” வேண்டி வாஷிங்டனுக்குப் பேரணி என்றமிகப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்து சுமார் 5 லட்சம், கறுப்பின மக்கள் கூடியிருந்த வாஷிங்டன் தலைநகரில் “எனக்கொரு கனவு” என்றபுகழ் பெற்ற சொற்பொழிவினை ஆற்றினார். அதில் கறுப்பினப் பிள்ளைகளும் வெள்ளை இனப் பிள்ளைகளும் ஒரே மேசையில் அமர்ந்து உணவருந்த வேண்டும். அதை நான் பார்க்க வேண்டும், என்றார் மார்டின் லூதர் கிங் ஜூனியர் ( ஜனவரி 15, 1929- ஏப்ரல் 4, 1968). இது அமெரிக்க கறுப்பின மக்களின் சுதந்திரத்திற்கு வழிவகுத்தது.

  காரல் மார்க்ஸ், தாமஸ் மால்தஸ் போன்றவர்கள் எழுதிய நூல்கள் பொருளாதார மாற்றம் கொண்டு வர பெரிதும் உதவியது.

  நிக்கோலஸ் கோபர் நிக்ஸ், என்பவர் எழுதிய “தி ரெவலியூசன் ஆப் கெவன்லி ஆர்ப்ஸ்” என்ற ஆராய்ச்சி நூலின் அடிப்படையில் தான் உலகம் உருண்டை என்பதும், அது சுற்றுகிறது என்பதும், அது சூரியனைச்சுற்றி வருகிறது என்பதும் உறுதியானது.

  இந்த இதழை மேலும்

  திறமையை எருவாக்கு! வெற்றியை உருவாக்கு!!

  திரு. K. பாபு,

  ECO GREEN UNIT, கோயமுத்தூர்.

  உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்…?

  பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தில், பாரம்பரியமான விவசாயக்குடும்பத்தில் பிறந்தேன். எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் நம்மாழ்வார் வழியில் இயற்கை விவசாயம் மட்டும் செய்து இருக்கிறேன்.

  பத்தாம் வகுப்பை முடிக்காததுதான் என்னுடைய கல்வித் தகுதி. சின்ன வயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஈடுபாடு இருந்ததால் விவசாயத்தையே தொழிலாக அமைத்துக் கொண்டேன்.

  கே: பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய பின்னர், உங்களின் எண்ணம் வேறு என்னவாக இருந்தது? 

  நான் படிப்பை நிறுத்தியது பெற்றோருக்கு மனவருத்தத்தை தந்தது. என் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுவார்கள் என்பதை என்னால் அந்த வயதிலேயே புரிந்து கொள்ள முடிந்தது. அப்போது என்னுள் சில செயல்பாடுகள் உதயமாகியது.

  எதாவது சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. தெரியாத பணியைத் தொடங்கி தோல்வியைப் பெறுவதை விட தெரிந்ததைச் செய்து தவறுகள் ஏற்பட்டாலும் அது ஒரு அனுபவமாக தான் அமையும் என்பதைப் புரிந்து இயற்கை விவசாயம் செய்யலாம் என்றமுடிவுக்கு வந்தேன். அதன் பிறகு வேலையும் விவசாயமும் என்று என்னை வடிவமைத்துக்கொண்டேன்.

  கே: விவசாயத் தொழிலில் உங்களின் முதல் அடி என்ன?

  விவசாயத் தொழில் மிகவும் மகத்தானது. மரியாதைக்குரியது. அந்தத் தொழிலை செய்கிறேன் என்று நான் எப்பொழுதும் கர்வமாகத் தான் இருப்பேன். அந்த அளவிற்கு விவசாயம் என்னுள் நகமும், சதையுமாகி விட்டது.

  மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அடிக்கடி அய்யா அவர்கள் எங்கள் தோட்டத்திற்கு வருகைத் தருவார்.

  ஒருமுறைபாண்டிச்சேரியில் சுற்றுப்புறசூழல் என்றபயிற்சிப் பட்டறைஒன்று நடைபெற்றது. அந்தத் திட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். அங்கு அவரின் பேச்சு என்னைப் பெரிதும் கவர்ந்தது.

  எங்களுக்குச் சொந்தமாக 8 ஏக்கர் பரப்பளவில் பாக்குத் தோட்டம் இருந்தது. வெறும் விவசாயம் அவற்றால் வரும் விளைச்சல் என்று இல்லாமல் என்னுடைய யோசனை முற்றிலும் மாறுபட்டதாகத் தோன்றியது. அவ்வாறு தோன்றிய எண்ணம்தான் பாக்கு மட்டையால் செய்யப்படும் தட்டுத் தயாரிக்கும் தொழிலைத் தொடங்க வேண்டும் என்ற நிலைப்பாடு என்பது கொஞ்ச நாட்களில் இந்தத்தட்டு தயாரிப்பதற்கான கருவியை நானே சொந்தமாகத் தயாரித்தேன். இதுதான் நான் விவசாயத்துறையில் செய்த முதல் தொழில்.

  கே: அந்த இயந்திரம் நன்றாக வேலை செய்ததா? நிறைய உற்பத்தி செய்யமுடிந்ததா?

  சொந்த நிலத்தில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட இயந்திரம் கொண்டு ஒரு தொழிலைத் தொடங்குகிறேன் என்பது மனதிற்கு சற்று மனநிறைவாக இருந்தது.

  அப்போது பாக்கு மட்டை தயாரித்த பின்னதர்தான் மக்களின் தேவையை என்னால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடிந்தது. தொடக்கத்தில் ஒரு சின்ன இயந்திரம் கொண்டு அதிக தயாரிப்பைக் கொடுக்க முடியவில்லை. பின்னர் அதிக உற்பத்தித்திறன் கொண்ட ஹெயிட்ராலிக் இயந்திரத்தைத் தயாரித்தேன்.

  கே. முதன் முதலில் பாக்கு மட்டைத் தட்டுவிற்ற அனுபவத்தைச் சொல்லுங்கள்?

  ஒரு பொருளைத் தயாரிப்பது மிகவும் சுலபம். அதை சந்தைப்படுத்துவதில்தான்  மிகப்பெரிய சவாலே அடங்கி இருக்கிறது.

  ஒருமுறை நானும் என் நண்பரும் பாக்கு மட்டைத் தட்டை விற்பனை செய்வதற்காக டெல்லி சென்றிருந்தோம். எங்களுக்கு இடம் புதிது. ஆட்கள் புதியவர்கள். மொழி புதிது இப்படியான நிலை இருந்தது. எனினும்  கொண்டு வந்த பொருட்களைத் திரும்பவும் கொண்டு செல்லக்கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருந்தோம். இதனால், சாலையோரத்தில் ஒரு கடையை நிறுவி கூவிக்கூவி விற்பனை செய்தோம். இதன் நன்மையை அறிந்து அனைவருமே வாங்கிச் சென்றார்கள். அப்போதுதான் நாங்கள் வெற்றி பெற்றவர்களாக உணர்ந்தோம்.

  கே: கூட்டு முயற்சியின் சாதிப்பில் இன்று உங்கள் தொழில் நிறுவனம் குறித்து?

  எங்களின் நிறுவனம் இந்தியளவில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெங்களூர், ஹைதராபாத் போன்றஇடங்களிலும் இத்தொழிலை செய்து வருகிறார்கள். மேலும், இந்தியாவில் பல இடங்களில் எங்களின் பொருளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்றால் அதுதான் எங்கள் நிறுவனத்தின் தரம்.

  கே: வேறு ஏதாவது உற்பத்தி செய்கிறீர்களா?

  பாக்குத் தட்டுக்களைப் போலவே வாழைநார் தொழிலுக்கும் எங்களிடம் இயந்திரம் இருக்கிறது. அறுவடைக்குப் பின் வீணாக இருக்கும் வாழை மரத்தின் நாரைக் கொண்டு பல தயாரிப்புகள் செய்யப்படுகிறது.

  வாழை நார் மூலம் கைவினைப் பொருட்கள் நிறைய செய்யப்படுகிறது. இந்தத் தொழிலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் செய்து வருகிறார்கள்.

  இந்த இதழை மேலும்

  உள்ளத்தோடு உள்ளம்

   

  மற்றவர்களைக் குறித்து குறை கூறிப் பேசுவதில் அலாதி ஆனந்தம் காணும் இளம் பெண் அவள்.

  நாளடைவில் அவள் நல்லவர்களின் மீதான அபிப்பிராயத்தை இழந்தவள் ஆகிறாள்.

  ஒருநாள் அவள் தன் செய்த செயல்களை எண்ணிப்பார்த்தாள்.தான் செய்த செயல் எவ்வளவு மோசமானது என்று நினைத்து வெட்கப்பட்டாள்.

  தனது செயலினைப் பாவ அறிக்கையாகத் தயாரித்து பாதிரியாரிடம் வருத்ததுடன் கொடுத்தாள்.

  ஐயா நான் பலரைப் புண்படுத்திருக்கிறேன். அவர்கள் குறித்துப் பேசியதை நான் எப்படித் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும் என்று கேட்டாள்.

  நீங்கள் போய் ஒரு பை நிறைய கோழி இறக்கைகளைச் சேகரித்து உன் வீட்டிலிருந்து ஆலயம் வரும் வழியில் வரை சிதற விட்டுக் கொண்டே வாருங்கள் என்றார்.

  அவளும் அப்படியே செய்தால். இப்பொழுது உன் வீட்டிற்கு திரும்பிச் செல்லும் வழியில் நீ சிந்திய இறக்கைகளை பொறுக்கி பையில் எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றார் பாதிரியார்.

  காற்றில் அடித்து செல்லப்பட்ட இறக்கைகளை ஒன்றைக் கூட அவளால் சேமிக்க முடியவில்லை.

  வருத்ததுடன் வந்தவளிடம் பாதிரியார் சொன்னார். உன் வார்த்தைகளும் அப்படித் தான் வார்த்தைகளைச் சிந்தி விட்டால் அதைப் பொறுக்கவே முடியாது. இதனால் இனிமேல் பேசும் போது சிந்தித்துப் பேசு என்றார்.

  வீணான வார்த்தைகளைத் தவிர்த்தலே பெரும்பான்மையான பிரச்சனைகளைத் தீர்த்து விடலாம். உணர்வோம் உயர்வோம்…