Home » Articles » மனக்கிளர்ச்சி – வெற்றிக்கு முதல்படி…

 
மனக்கிளர்ச்சி – வெற்றிக்கு முதல்படி…


ராமசாமி R.K
Author:

Flow means joy, creativity, and the process of total

involvement with life.  – Mihaly Csikszenthmihalyi

இவ்வுலகில் நல்ல பண்பு என்பது மகிழ்ச்சியாய் இருப்பது ஒன்றேயாகும்.

அவ்வாறு மகிழ்ச்சியாக இருக்குமிடம்

நீங்கள் இப்போது இருக்குமிடமேயாகும்.

அப்படி மகிழ்ச்சியாய் இருக்கும் நேரம்  இந்த நிமிடமேயாகும்

நாம் மகிழ்ச்சியாய் இருக்க ஒரே வழி

மற்றவர்களை மகிழ்ச்சியாய் இருக்கச் செய்வதாகும்

இதுவே, எனது தீர்க்கமான கொள்கை.

                   – ராபர்ட் ஜி. இங்கர்சால்.

சிக்கலோ சிக்கல்

ஒரு தொழிலதிபருக்கு தீர்க்க முடியாத சிக்கல். நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர் மனதிற்கு எந்த முடிவும் சரியாகப்படவில்லை. தொடர்ந்து சில நாட்கள் சிந்தித்தும் சிக்கலுக்கு வழி கிடைக்கவில்லை.

தொழிலதிபர் ஒரு ஆலோசகரிடம் சென்றார். “இந்தச் சிக்கலைத் தீர்க்க இதுவரை என்னென்ன முயற்சிகள் எடுத்தீர்கள்?” என்று கேட்டார் ஆலோசகர்.

“என்ன முயற்சி எடுப்பது என்று தான் இரவும், பகலும் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார் தொழிலதிபர்.

ஆலோசகர் “உங்களுக்கு எந்த பொழுதுபோக்கு மனதிற்கு மகிழ்ச்சியைத்தரும்” என்று கேட்டார்.

தொழிலதிபர் “இசை எனக்கு ரெம்பப் பிடிக்கும். ஒரு இசை நிகழ்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும்” என்று சொன்னார்.

உடனே ஆலோசகர் அவரை பிரபலமான இசை நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். இசை நிகழ்ச்சிக்கு இடையிடையே ஒரு நகைச்சுவைத் துணுக்குகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தார்.

தொழிலதிபர் இந்த நிகழ்ச்சியில் முழ்கி தமது சிக்கல்களை மறந்து பலமுறை கைதட்டி மகிழ்ந்து, வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார். அவர் மனம் இப்போது தெளிவாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது ஆலோசகர் இன்று இரவு தூங்கி விழித்த பின்பு இந்த சிக்கலைப் பற்றி யோசியுங்கள். ஒரு முடிவு வரும், என்று சொன்னார்.

தொழிலதிபரும் இசை நிகழ்ச்சியின் இதமான நினைவுகளோடு தூங்கப்போனார். மனம் ஓய்வுற்றிருந்த போது மின்னல் போன்று ஒரு யோசனை உதயமாயிற்று. அந்த யோசனை சிக்கலைத் தீர்த்து வைத்தது.

இப்படித்தான்மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபட்டால் மனதில் தெளிவு பிறக்கும். தெளிவான மனம் புதிது புதிதாக சிந்திக்கும். இதனால், சிக்கல்களுக்கு சீரான தீர்வு எளிதாக கிடைக்கும்.

மனகிளர்ச்சி என்றால்

தொடர்ந்து ஓய்வில்லாமல் மனதைக் கசக்கிப் பிழிந்து சிந்தித்துக் கொண்டிருந்தால் சோர்வு உண்டாக்கி மன அமைதியும், மாற்றி யோசிக்கிற சிந்தனையும் குறைந்து விடும் என்பது அனுபவசாலிகளுடைய பாடமாகும்.

எந்தச் செயல்கள் உங்கள் இதயத்திற்கு மகிழ்ச்சியையும், மனதிற்குள் ஒரு மலர்ச்சியையும் உள்ளுக்குள் ஒரு ஆனந்த உணர்ச்சியையும் மிக்க ஆனந்தத்தையும், ஒட்டுமொத்தமான குதூகலத்தையும் தருகின்றனவோ, அந்தச் செயல்கள் எல்லாம் மனதிற்குக் கிளர்ச்சியூட்டும் செயல்களாக கருதப்படுகின்றன. (Flow Activity).

இந்த மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சி மன நிம்மதியையும், மனநிறைவையும் தருகின்றன. இரண்டு மணிநேரம் நடக்கும் நிகழ்ச்சி 15 நிமிடங்களில் முடிந்து விட்டது போன்று நமக்குத் தோன்றும். நிகழ்ச்சிகளில் நாம் ஒன்றி கலந்து விடும் போது நமக்கு நேரம் போவதும் தெரிவதில்லை. மனம் ஏதோ ஒன்றின் பிடியிலிருந்து விடுதலை ஆனது போன்ற உணர்வைப் பெறுகிறது. மனதிற்கு ஓய்வு ஆரம்பிக்கின்றன.மனம் தெளிவடைகிறது. ஆக்கபூர்வமான தீர்வுகள் சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் ஆரோக்கியமான தீர்வுகள் தென்படுகின்றன. விடை தெரியாத கேள்விகளுக்கும் விடைகள் புலப்படுகின்றன.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2016

இங்கு இவர் இப்படி
உழவுத் தொழிலுக்கு வாருங்கள்
குழந்தை உணவு
ஓடுவது கடிகார முள் அல்ல, உன்னுடைய வாழ்க்கை
கலைவரிசை
கறுப்புப் பணத்திற்குக் கடிவாளம்
திசைமாறிய பயணம்
வாழ்வாங்கு வாழ மனவளம் வேண்டும்
சிகரமே சிம்மாசனம்
என் பள்ளி
வெற்றி உங்கள் கையில்
தலைமை கொள்
வாணிகத்தில் வளர்ச்சியைப் பெற தனி மனிதனின் பங்கு
ஸ்ரீலங்கா சுற்றுலா
மனக்கிளர்ச்சி – வெற்றிக்கு முதல்படி…
தன்னம்பிக்கை மேடை
திறமையை எருவாக்கு! வெற்றியை உருவாக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்