இங்கு இவர் இப்படி
உழவர் இரா. கதிர்வேல்
உழவன் இல்லம், வலையபாளையம்.
“பல நாள் பலரும் என்னைப் பார்த்து பொறாமைப்பட்டுள்ளார்கள்.
ஏன் என்று கேட்கும்போதெல்லாம், அவர்கள் கூறும் பதில்,
நாங்களும் படிக்காமலேயே இருந்திருக்கலாம்.
விவசாயம் பார்த்து நிம்மதியாக
வசப்படுத்தியிருக்கலாம்”
அழகு நகர் உண்டாக்கி சிற்றூரும்.
வரப்பெடுத்த வயலும் ஆறு தேக்கிய நல் வாய்க்காலும்
வகைப்படுத்தி நெல் சேர உழுது பயன்விளைவிக்கும்
நிறைஉழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள்கள்?
இவ்வரிகளை எழுதிய பாரதிதாசன், உழவனின் தோள்கள்தான் இவ்வையத்தை வாழ வைக்கிறது உழவுக்குத் தோள்தட்டி தோழமையோடு பறைசாற்றுகிறார். ஆனால், அத்தோழமையுடன் தோள் கொடுக்க இன்றையவர்களில் எத்தனை பேர் தயராக உள்ளார்கள்?
“ஒரு கூடை உமியில் ஒரு நெல் கூட கிடைக்காதா”? என்று திருமூலர் கேட்டார். ஆனால் நான் தேடிய ஒரு கூடை உம்மியில் ஒரு நெல் கிடைத்தது. ஆம், பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்து விட்டு, இனி படிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தேன், எனது பாட்டன் தொழிலே மேம்பட்ட தொழில் என்பதனை மனதில் கொண்டு, மனமார உழவுத்தொழிலைத் தொடங்கினேன்.
எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிப்பாளைத்தை அடுத்த வலையப்பாளையம் ஆகும். சிறுவயது முதலே படிப்பில் எனக்கு ஆர்வம் கிடையாது. மாறாக ஊருக்கே சோறு போடும் ஒரு உழவனாக உருவெடுக்க வேண்டும் என்பதே வருங்கால கனவாக இருந்தது. அதுவும் நான் கண்ட பகல் கனவு தான்.
“பகல் கனவு பலித்துவிடும்” என்று என் ஆத்தா சொன்னது மெய்யாகி விட்டது. எனக்கு சாப்பாடு ஊட்டிய ஆத்தா இன்று நான் ஒரு உழவனக இருந்து வருகிறேன்.
மேலும், நான் சிறியவனாய் இருக்கும் போதே என் தந்தை காலமாகி விட்டார். அக்காலம் தொட்டு இக்காலம் வரை சொந்த மகனாய் எனது சித்தப்பா என்னை வளர்த்து இச்சமூகத்தில் நற்பெயருடன் வாழவைத்தார் என்பதனை அளவு கடந்த பாசத்துடனும், நேசத்துடனும் கூறிக்கொள்கிறேன்.
பல நாள் பலரும் என்னைப் பார்த்து பொறாமைப்பட்டுள்ளார்கள். ஏன் என்று கேட்கும்போதெல்லாம், அவர்கள் கூறும் பதில், நாங்களும் படிக்காமலேயே இருந்திருக்கலாம். விவசாயம் பார்த்து நிம்மதியாக வசப்படுத்தியிருக்கலாம்அதை விட்டுவிட்டு, படித்து, வேலைக்கு அலைந்து திரிந்து, ஒரு வேலையைக் கண்டுபிடித்து சம்பளம் வாங்கி, வரவு வைத்து, செலவு பார்த்து வாழ்க்கை வாழ்வதற்குள் பாதி வாலிபம் கரைசேர்ந்து விட்டது, என்பார்கள்.
இதைக்கேட்கும் போதெல்லாம், நான் விவசாயம் செய்தவரை எண்ணி மகிழ்ச்சியடைந்தது உண்டு. ஆனால் எனது தோழன் ஒரு குண்டைப் போட்டான். நண்பா, விவசாயம் செய்வர்களுக்கு எல்லாம் மணப்பெண் கிடைப்பதில்லை. பார்த்துக்கோடா! என்றான்,திகைத்துப் போனேன். ஆனால் என் திகைப்பைத் தீர்த்து வைக்க ஒரு நற்செய்தி வந்தது, பெண் பார்த்துவிட்டார்கள் என்று.
அதுவும் அவர் ஒரு ஒரு கல்லூரி உதவிப்பேராசிரியை என்றும். கணிதத்துறையில் M.Sc.., M.Phil., பட்டம் பெற்றவர் என்றும் சொன்னார்கள் .நம்பமுடியவில்லை இதுவெல்லாம் நடக்கக்கூடிய செயலா? வேண்டாம் என்று எண்ணினேன். அதற்குள், பெண்ணுக்கு உன்னைப் பிடிவிட்டது. இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம்,என்றார்கள்.
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles