Home » Articles » வாணிகத்தில் வளர்ச்சியைப் பெற தனி மனிதனின் பங்கு

 
வாணிகத்தில் வளர்ச்சியைப் பெற தனி மனிதனின் பங்கு


கிரிஜா இராசாராம்
Author:

“திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு

என்று ஒளவைப் பிராட்டியும்”.

“அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகியாங்கு”

என்று வள்ளூவரும்பொருளீட்டுவதின் அவசியம் பற்றிக் கூறியுள்ளனர். வாணிகத்தின் மூலம்தான் மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றையும் அடைய முடிகின்றது. அப்படிப்பட்ட வாணிகத்தில் ஒரு தனி மனிதனின் பங்கு பற்றியும், அதில் உள்ள சில சுவாரஸ்யமன நிகழ்வுகளை பற்றியும் இக்கட்டுரை விவரிக்கின்றது.

ஒரு தொழில் தொடங்க வேண்டுமென்றால் ஊக்கம் வேண்டும்.

உடையர் எனப்படுவது ஊக்கம்; அஃது இல்லார்

உடையது உடையரோ மற்று. (குறள்: 591)

என்றகுறளில் தனி மனிதனின் ஊக்கம் வலியுறுத்தப்படுகிறது. ஒருவனது ஊக்கம் எண்ணம், மூலதனம், வணிகஞ்செய்யுமிடம் மற்றும் உழைப்பு இவை அனைத்தும் சேர்ந்து வர 24 மணி நேரம் ஆகின்றது. பூமியின் ஓட்டம் போல், இப்பூமியில் வாழும் வணிகர்களின் ஓட்டத்தின் அடிப்படையில் தான், அன்றாடம் எல்லா ஜீவராசிகளும் உயிர் வாழ்கின்றன. உதாரணமாக, இந்த உண்மை ஒரு கப் காப்பி அருந்தும் போது அதில் எத்தனை வணிகர்களின் உழைப்பு மறைந்திருக்கின்றது என்பது தெரியவரும்.

பண்டமாற்று முறையிலிருந்து, இன்றைய on  line (e-commerce) வரை உலகச்சந்தை வளர்ந்துள்ளதற்குக் காரணம், தனி மனிதனாய் இருந்து, தனது நிறுவனம் என்றவாகனத்தை, வெற்றிப்பாதையில் செலுத்துகின்றதலைவர்களே ஆவார்கள். வாணிகளம் என்றசக்கரம் சுழல அச்சாணியாக இருக்கும் அவர்கள், தங்களுடைய நேர்மையான உழைப்பால் சேர்க்கப்படும் செல்வம்.

“அறன் ஈனும் இன்பழும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்”. (குறள்: 754)

என்றவள்ளூவரின் குறளுக்குகினங்க இன்பத்தைத் தரும். நேர்மையான வணிகர்கள், தங்கள் வாணிகம் சிறப்புறநடைபெறநான்கு விதமான விதிமுறைகளைக் கையாளுகிறார்கள்.

முதலாம் விதிமுறை:

வாடிக்கையாளர்கள் இடத்திலிருந்து அவர்களுடைய விருப்பம், வருமானம், வாழும் சூழ்நிலை இவற்றைத் தெரிந்து கொண்டு அவற்றைப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் வணிகத்தை நடத்துவது (Trade the minds of the customers)

ஒருவர், ஒரு மொத்த வியாபார துணிக்கடையில் பணம் வசூலிக்கும் உதவி மேனேஜராகப் பணியில் சேர்ந்தார். அவர் பழைய கணக்குகளை ஆராய்ந்தபோது, துணி வாங்கிக் கொண்டு பணம் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததைப் பார்த்தார். அவர்களிடம் பணம் வழலிப்பதற்காக அனுப்பபட்ட  கடிதங்களைப் படித்துப்பார்த்தார். அந்தக்கடிதங்களில் பயன்படுத்தப் பட்டிருந்த வார்த்தைகள் கடுமையாகவும், மனம் வருத்த மடையச் செய்யும் விதமாகவும், விரட்டும் பாணியிலும் எழுதப்பட்டிருந்தன.

அவர் அந்தக் கடிதம் தனக்கு வந்திருந்தால் தான் நிச்சயமாக பணத்தை கட்டியிருக்க மாட்டோம் என்று உணர்ந்தார். உடனே, கடிதத்தின் பழைய வார்த்தைகளை மாற்றி, புதிதாக மென்மையாக அவர்கள் மனம் மாறும்படியான வார்த்தைகளைப் போட்டு, கடிதம் எழுதி அனுப்பினார். அந்தக் கடிதங்களைப் படித்த வாடிக்கையாளர்கள் தங்கள் மனம் மாறி, பல மாதங்களாகச் செலுத்தாமல் வைத்திருந்த பாக்கிப் பணத்தை தாமாக முன் வந்து செலுத்தினார்கள். என்ன ஆச்சரியம்! எந்த ஆண்டிலும் இல்லாத அதிகமான வருமானம் அந்த ஆண்டில் கிடைத்தது. இதைத்தான் தமது பொருளாகவே நுகர்வோர்களின் பொருளையும் மதித்ததால் வாணிகம் பெருகும் என்பதை வள்ளூவப் பெருந்தகை

“வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்.”  (குறள்: 120)

என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2016

இங்கு இவர் இப்படி
உழவுத் தொழிலுக்கு வாருங்கள்
குழந்தை உணவு
ஓடுவது கடிகார முள் அல்ல, உன்னுடைய வாழ்க்கை
கலைவரிசை
கறுப்புப் பணத்திற்குக் கடிவாளம்
திசைமாறிய பயணம்
வாழ்வாங்கு வாழ மனவளம் வேண்டும்
சிகரமே சிம்மாசனம்
என் பள்ளி
வெற்றி உங்கள் கையில்
தலைமை கொள்
வாணிகத்தில் வளர்ச்சியைப் பெற தனி மனிதனின் பங்கு
ஸ்ரீலங்கா சுற்றுலா
மனக்கிளர்ச்சி – வெற்றிக்கு முதல்படி…
தன்னம்பிக்கை மேடை
திறமையை எருவாக்கு! வெற்றியை உருவாக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்