– 2015 – August | தன்னம்பிக்கை

Home » 2015 » August

 
  • Categories


  • Archives


    Follow us on

    நம் உணவே நமக்கு மருந்து

    சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் பதஞ்சலி யோகா சமிதி, சென்னை

    இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்  : 9.8.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை

    இடம் : ஸ்ரீ காமகோடி தியான மண்டபம்,

    காமகோடி நகர், வளசரவாக்கம்,

    சென்னை-87 (ஆஞ்சநேயர்கோவில் பின்புறம்)

    தலைப்பு: ‘நம் உணவே நமக்கு மருந்து’

    சிறப்புப் பயிற்சியாளர்:

    டாக்டர் சத்தியவாணி M.B.B.S.,M.D.,Ph.D.,(Herbal)

    சென்னை.

    தினமும் காலை 8 மணி முதல் 8.15 டி.வியில் கேப்டன் டி.வியில்  தொடர் மூலிகை” நிகழ்ச்சிகளை அளித்து வருகிறார்.

     

    தொடர்புக்கு: தலைவர்R. பாலன் – 94442 37917

    செயலாளர்  L. கருணாகரன் – 98419 71107

    PRO – யமுனா கிருஷ்ணன் – 94440 29827

    நீரின்றி அமையாது உலகு!

    தஞ்சாவூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், சோழமண்டல சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ஆனந்த் சுகமான உள்ளாடையுடன் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 16.8.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : மாலை 5-00 மணி முதல் 8.00 மணி வரை

    இடம் : பெசன்ட் அரங்கம் AC ஹால், தஞ்சாவூர்

    தலைப்பு: நீரின்றி அமையாது உலகு!

    சிறப்புப் பயிற்சியாளர்:

    பேராசிரியர். முனைவர்.வீரசிகாமணி CBM.A.,B.Bd.,M.Phil.,Ph.D.,

    தொடர்புக்கு:

    திரு. அப்துல்சலாம் (எ) பள்ளியூர் பாபா  93453 53113

    திரு. டோமினிக் சேகர்  94870 29494

    கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம்

    கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம்

    வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    சிறப்புப் பயிற்சியாளர்:

    முனைவர் A. முகம்மது முஸ்தஃபா, M.Sc., Ph.D.

    பேராசிரியர், அல்ஜøபைல் பல்கலைக்கழக கல்லூரி, K.S.A.

    நாள், நேரம், இடம், தலைப்பு முதலிய விபரங்களுக்கு:

    திரு. பள்ளியூர் பாபா  95972 85160

    திரு. தர்மர்  97880 41089

    வாழ்வின் விதிமுறைகள்

    சேலம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் ஒஇஐ சேலம் மெட்ரோ இணைந்து வழங்கும்

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 23.8.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : லட்சுமி அரங்கு, சாமுண்டி காம்ப்ளெக்ஸ்4 ரோடு,

    சேலம்-7.

    தலைப்பு:’வாழ்வின் விதிமுறைகள்’

    சிறப்புப் பயிற்சியாளர்:

    Jc.R.K. விஜயகுப்தா

    மண்டல பயிற்சியாளர்,

    சேலம்.

    7871779997

    தொடர்புக்கு:

    Jc.G. தாமோதரன், M.Com., M.Phil. – 93601 22377

    எண்ணித்துணிக

    பள்ளிபாளையம் கிளை (ஈரோடு), தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 14.8.2015; வெள்ளிக்கிழமை

    நேரம் : மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை

    இடம் : M.G.V. மெட்ரிக்பள்ளி (G.V. மஹால் அருகில்)

    திருச்செங்கோடு ரோடு,

    பள்ளிபாளையம்.

    தலைப்பு: ‘எண்ணித்துணிக’

    சிறப்புப் பயிற்சியாளர்:

    Jc.S. பாலசுப்பிரமணியன்

    JCI மண்டல பயிற்சியாளர்,

    போன்: 9965313469

    தொடர்புக்கு:

    தலைவர் – திரு. D.S. ஜெயசீலன்: 94432 44850

    PRO – திரு. M. ராதா கிருஷ்ணன்: 99657 95856

    ஒருங்கிணைப்பாளர் – திரு. சீனிவாசன்: 98435 45986

    வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப்போகும்

    திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்,திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்  : 9.8.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : அரிமா சங்க அரங்கம்

    குமரன் சாலை, திருப்பூர்

    தலைப்பு: ‘வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப்போகும்’

    சிறப்புப் பயிற்சியாளர்:

    திருமதி. விக்டரி விஷ்வநாதன்

    PRO – தன்னம்பிக்கை மாத இதழ்,

    கோவை.

    97877 44533

    தொடர்புக்கு:

    திரு. அ. மகாதேவன் 94420 04254

    திரு. ந. வெங்கடேஸ்வரன் 94423 74220

    திரு. ந. மாரப்பன் 95242 73667

    கனவு காணுங்கள்!

    ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 23.8.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை,

    இடம்: மாயாபஜார் A/C  ஹால்,

    Opp.E.B. அலுவலகம் எதிரில், E.V.N ரோடு,

    ஈரோடு.

    தலைப்பு: ’கனவு காணுங்கள்!’

    சிறப்புப் பயிற்சியாளர்:

    Jc.R. நாகராஜ்,

    ஜோன் (Zone) பயிற்சியாளர் JCI.Excel,

    ஈரோடு

    9943366333

    தொடர்புக்கு:

    Prof.P. பூபதி – 99446 99196

    Jc.S. சையது ஜைனுலாபுதீன் – 99942 29080

    வாழ்க்கை வாழ்வதற்கே

    திருச்செங்கோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI திருச்செங்கோடு டெம்பிள்

    இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்: 16.8.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை,

    இடம்: ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால்

    ஜோதி தியேட்டர் அருகில்,

    திருச்செங்கோடு.

    தலைப்பு: ‘வாழ்க்கை வாழ்வதற்கே’

    சிறப்புப் பயிற்சியாளர்:

    JSM.K. வினோத் பரத்வாஜ்

    மனிதவளமேம்பாட்டு பயிற்சியாளர்,

    மண்டல பயிற்சியாளர்,

    கோபி 9790385305

    தொடர்புக்கு:

    தலைவர்: JCI.Sen.G. கோவிந்தசாமி  98427 96868

    செயலாளர்: JC.A. திருநாவுக்கரசு – 99429 66554

    PRO Jc.HDF.K. பூபதி – 98651 94904

    மாணவன் நினைத்தால்

    கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் A1 –  சிப்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் & இந்தியா ப்ரைவேட் லிமிடேட், வாசவிக்கிளப் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ – கோவை. இணைந்து வழங்கும் 320 – வது சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 23.8.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : கன்னிகா காம்பளக்ஸ் மீட்டிங் ஹால்

    (நியூ வாசவி & கோ)

    ராஜவீதி சார்பதிவாளர் அலுவலகம் எதிரில்,

    தேர்முட்டி, கோவை  1.

    தலைப்பு: ‘மாணவன் நினைத்தால்’

    (சிறப்பு நினைவாற்றல் பயிற்சி)

    சிறப்புப் பயிற்சியாளர் : திரு R. விஜய்

    Memory, Speed Maths and Motivational Trainer

    மேட்டுப்பாளையம்.

    98426 16790.

    தொடர்புக்கு:

    தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் 98422 59335

    செயலாளர்  திரு. E. விஜயகுமார்  94426 10230

    பொருளாளர் திரு. AD. A.  ஆனந்தன்  74026 10108

    PRO விக்டரி விஸ்வநாதன்  97877 44533

    என் பள்ளி

    திரு.ராம்சங்கர்

    பி.டெக் தேசிய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன்

    ஈரோடு

    ஒருவனின் எதிர் காலத்தை ஏற்றமிகு ஏணிப்படிகளாக மாற்றும் மிகப்பெரிய சக்தி கல்விக்கு உண்டு. கல்வி கற்கும் ஓவ்வொருவரும் ஏதேனும் ஒரு வழியில் சாதிப்பைப் பெறுகிறார்கள்.

    அந்த சாதிப்பு அவர் பயின்ற பள்ளிக்கும் கல்லூரிக்கும் மிகப்பெரிய அங்கீகாரதை கொடுக்கும் என்றால் அது மிகை ஆகாது. அந்த வகையில் இந்த ஆண்டு நடந்து முடிந்த தேசிய அளவிலான ஜெஎன்யு (JNU) நுழைவுத் தேர்வில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர் திரு.ராம்சங்கர் முதலிடம் பிடித்து அவர் பயின்ற பள்ளிக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

    ஆண்டுத்தோறும் பயோடெக் துறையில் முதுகலை பட்டப்படிப்பு பயில்வதற்கென டெல்லியில் உள்ள ஜெஎன்யு பல்கலைக்கழகம் சார்பில் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு நாடு முழுவதிலும் உள்ள 12 வேளாண் பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் முதுகலைப் பட்டம் பயிலும் வாய்ப்பும் மாதத்தோறும் 4500 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

    “நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பாளையம் என்ற சிறிய கிராமத்தில் தான். தந்தை சந்திரசேகர் அரசு சுகாதாரத் துறையில் நிர்வாக அதிகாரியாக(AO) பணிபுரிகிறார். தாய் மீனாட்சி ஓய்வுப் பெற்ற தபால் துறைஅலுவலர். என் சகோதரி ஜெயந்திஸ்ரீ ஓர் வீணை இசைக்கலைஞர் ஆவார்.

    சிறு வயதில் இருந்தே என் தாய் செய்தித்தாள்களில் இடம் பெற்றிருக்கும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றிக் கூறி என்னை வியப்பில் ஆழ்த்துவார். நானும் ஓர் விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற ஆசை அப்போதுதான் முளைத்தது. எனவே என் இல்லமே என் முதல் பள்ளியாகும்.

    என்னுடைய ஆரம்பக்கல்வியை ஈரோட்டில் இருக்கும் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன். கல்வியை மதிப்பெண்களுக்காக அல்லாமல் அறிவிற்காக போதனை செய்யும் பள்ளி அது. அங்கே நான் பயின்ற அறிவியல் பாடங்கள் இன்றும் என் கண் முன்னே நிற்பவை. அறிவியல் உண்மைகளைப் பற்றியும் அறிவியல் சாதனங்கள் இயங்கும் முறை பற்றியும் மிக எளிய முறையில் போதித்தார்கள். அதுவே என் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டியது. புத்தகப் பாடத்தோடு நின்று விடாமல் விளையாட்டு மற்றும் இசையையும் பயில ஊக்குவித்தார்கள். பேட்மிண்டன், செஸ், மிருதங்கம், கீபோர்ட் போன்றவற்றில் ஆர்வம் காட்டி வந்தேன். மாணவர்களின் முன்னேற்றங்களை மேடை மேல் அறிவித்து பாராட்டுவார்கள். அந்த கரகோசங்களே மேலும் பல சாதனைகலைப் புரியத் தூண்டும்.

    அதன் பின் என் பெற்றோர்களின் அலுவலக இடமாற்றம் காரணமாக என் படிப்பை திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர் (KSR) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்தேன். ஆங்கிலத்தில் வல்லமை பெற உதவியதோடு எனது வாழ்க்கையின் இலக்கைத் தேர்வு செய்ய வைத்ததும் இப்பள்ளிதான். அப்பள்ளியே உயிரியலின் பால் நான் பெற்ற ஈடுபாட்டை உணரவைத்தது.

    டாக்டர் இஞ்சீனியர் தவிர உலகத்தில் வேறு மதிப்புக்குரிய தொழில்களே கிடையாது என்ற பொய்யான மாயையைக் கலைத்தார் எனது உயிரியல் ஆசிரியர் திரு. கார்த்திக் ராமலிங்கம் அவர்கள். பயோடெக் பட்டதாரியான அவர் பள்ளி ஆசிரியராக பணியில் சேருவதற்கு முன் லக்னோவில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சிக் கழகத்திலே (CDRI) ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்தார். அதன் காரணமாக அவர் நடத்தும் பாடங்கள் தனிச்சுவையை பெற்றிருக்கும். பாடத்தோடு சேர்த்து அவரின் ஆராய்ச்சி அனுபவங்களையும் பகிர்வார். அதுவே என்னை பயோடெக் துறையில் பட்டபடிப்பு படிக்கத் தூண்டியது. வேளாண் பல்கலைக் கழகத்திலே தாவரம் சார்ந்த பயோடெக் படிப்பு உள்ளதெனவும் அது மருத்துவ படிப்பிற்கு நிகரானது எனவும் எடுத்துக் கூறி என்னை அங்கே சேர வைத்தார்.

    இப்பல்கலைக்கழகத்தின் பாடங்கள் அனைத்தும் செயல்முறை(project) படிப்பாகவே நடத்துவார்கள் துறைத்தலைவர் டாக்டர் சுதாகர் அவர்கள் எங்களுக்கு பாடம் சார்ந்த அன்றாடம் நடக்கக்கூடிய நிகழ்வுகளை எங்களுக்கு சொல்லி விளக்குவார். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் பயோடெக்னாலஜியின் தாக்கம் எந்தளவிற்கு இருக்கிறது என்று விவாதமாக விளக்குவார். பேராசிரியர் டாக்டர் செந்தில் அவர்கள் கல்லூரியில் பயிலும் போது ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு புராஜெக்ட் கொடுத்தார். நான் மகரந்த சேர்க்கை பற்றிய தலைப்புகளில் ஆய்வு செய்தேன். இது எல்லா விதத்திலும் புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது. இவ்வாறு இங்கு பயில்வித்த ஒவ்வொரு பேராசிரியர்களும் ஒரு நல்ல அனுபவத்தை கற்றுக் கொடுத்தார்கள்.

    சிறுவயதில் இருந்து விவசாயத்தில் நான் கொண்ட ஈடுபாடும் மக்களுக்குதவும் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகமும் என்னை பயோடெக் படிப்பை உணர்ந்து படிக்க வைத்தது. பயோடெக் துறையில் டாக்டர் பட்டம் பெறவேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்தது. எனவே மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வுகளைப் பற்றி என் மூத்த மாணவர்களிடம் கேட்டறிந்தேன். அவற்றிற்கு முதலாம் ஆண்டு முதலே தயார் செய்து கொள்ள எத்தனித்தேன்.

    மிகுந்த ஆர்வத்துடன் நடத்தப்படும் தினசரி வகுப்புகளும் நுழைவுத் தேர்வுக்கான விடுமுறை நாட்களில் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்புக்களும் ஆசிரியர்கள் பரிந்துரைந்த சிறந்த புத்தகங்களும் எனக்கு வெற்றிக்கான பாதையை அமைத்தது. நண்பர்களுடன் நேர்ந்த பாடம் சம்பந்தமான காரசாரமான விவாதங்களும், கலந்துரையாடல்களும் பாடத்தில் உள்ள சந்தேகங்களைப் போக்கி ஆழமான புரிதலை ஏற்படுத்தியது. ஆசிரியர்கள் சேகரித்துத் தந்த வினாத்தாள்களும் அவர்கள் கற்பித்த செயல் முறைக்கல்வியும் தேர்வை எதிர் கொள்ள அரிய பொக்கிசமாய் அமைந்தன.

    ஜெஎன்யு நுழைவுத் தேர்வில் நான் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்ததைக் காட்டிலும் இத்தேர்வின் மூலம் பயோடெக் படிப்பின் மேல் எழுந்த ஆர்வமும் புரிதலுமே என்னைப் பெருமைப் பட வைக்கிறது.

    “கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு” ஆகையால் மேற்படிப்புகளின் மூலம் மேலும் இத்துறைசார்ந்த அறிவைப்பெற்று மக்களுக்குதவும் கண்டுபிடிப்புகள் செய்து விவசாயத்திற்கு தொண்டாற்றுவதே என் லட்சியம்’.