உலகம் முழுவதையும் தன் ஆளுமைக் கீழே கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றவர் மாவீரன் நெப்போலியன். அந்த மாவீரனிடம் உயரம் சார்ந்து குறை இருந்தது. அது நமக்குத்தான் குறையே தவிர அவனுக்கு இல்லை. ஆம், ஒருமுறை மாவீரனின் நெருங்கிய நண்பரும் மன்னருமான ஒருவர் “நீ உலகையெல்லாம் வெல்ல வேண்டும் என்று விருப்பப்பட்டு உலகம் முழுக்க செல்வதற்கு உனது உயரம் குறித்து வெட்கமாக இல்லையா?” என்று ஏளனமாகக் கேட்டார். அதற்கு நெப்போலியன் ”எனது உயரம் குறித்து நான் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது. மாறாக கர்வம்  கொண்டிருந்தேன் ஆம்! என்னிடம் யார் பேசினாலும் தலைகுனிந்து தான் பேச வேண்டும். ஆனால் நான் இதுவரை யாரிடமும் தலை குனிந்தது கிடையாது”.