– 2013 – October | தன்னம்பிக்கை

Home » 2013 » October

 
 • Categories


 • Archives


  Follow us on

  சுக பிரசவ சூச்சமங்கள்-கரு வளர்ச்சி நிலைகள்

             அன்புத் தோழ தோழியர்களே! ஆதியிலே, நடுக்கடலிலே உயிர் உருவான போது நீர் தன்மையை (Juice) கிரகித்து வாழும் கடற்பாசிகள் (Phyto Planktons) உருவாகின. பின்னர் இரத்தம் (Blood) கொண்ட கடற் சிற்றினங்கள் (Zoo Planktons) வந்தன.

  Continue Reading »

  தீரன் சின்னமலை-அந்த சிறுவன் சின்னமலையை அடித்து – உதைத்து – கட்டி இழுத்து வாருங்கள் ஹைதர் அலி உத்தரவு

            பல ஆண்டுகள் மைசூர் அரண்மனைக்குப் போய்க்கொண்டிருந்த வரிப்பணத்தையும், பொருள்களையும் வழிமறித்து பலமுறை பல இடங்களில் தடுத்துப் பிடிங்கிக் கொண்டான். இச்செய்தி கேட்ட மைசூர் மன்னரின் உயர் அதிகாரி சங்ககிரி திவான் மீராசாகிப் சின்னமலையைச் சிறைப்பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

  மைசூர் மன்னர் உத்திரவுப்படி சின்னமலையைக் கைது செய்து கொண்டு வர மைசூர்படையை உடனே அனுப்பினார். மைசூர் குதிரைப்படை வீரர்களை சின்னமலையின் இருப்பிடமான மேலப்பாளையத்திற்கு ஏவினான். அதைப்பார்த்த சின்னமலையின் ஆதரவாளர்கள் ஓடிவந்து வடக்கேயிருந்து குதிரை வீரர்கள் வந்து கொண்டிருப்பதைத் தெரிவித்தனர். அந்த படையை நொய்யலாற்றின் கரையில் சந்தித்தான் சின்னமலை. தீரன் சின்னமலைக்கும், சங்ககிரி திவானுக்கும் கடுமையான போர் நடைபெற்றது. தனது சிலம்புப் படை வீரர்களை வைத்தும், மற்றும் தனது சகோதரர்களும், நண்பர்களும் சொட்டை முனை ஆயுதம் மூலம் போரிட்டு மைசூர் மன்னர் ஹைதர் அலியின் வீரர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர். வெற்றி கண்டனர். குதிரைப் படைவீரர்களுக்கு தாங்கள் ஒருபோதும் எதிர்பார்த்திராத விதமாக கடும் தாக்குதல் நடைபெற்றது. சின்னமலையின் சிலம்பக்கூட வீரர்கள் அற்புதமாகப் போரிட்டுத் தாக்குதல் நடத்தி எதிரிப்படைக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தினர். குதிரைப்படைகள் சண்டையை தாக்குப்பிடிக்க முடியாமல் கட்டுக்கடங்காது, நிலைகுலைந்து, சத்தத்துடன் பின்வாங்கி வேகமாக ஒவ்வொன்றாக ஓடியது. பலத்த காயத்துடனும், ரத்தம் சொட்டச் சொட்டவும் புறப்பட்ட இடமான சங்ககிரிக் கோட்டைக்கே படைவீரர்கள் திரும்பி புறமுதுகுகாட்டி ஓடினர். பின்பு சின்னமலையின் கொங்கு நாட்டு எல்லைக்குள் எங்கும் மைசூர் அரசுக்கு வரி வசூல் செய்ய முடியவில்லை.

  கொங்கு தேசத்திற்கு ஏற்பட்டிருந்த அடிமை விலங்கை உடைத்து எறிந்து மைசூர் அரசாங்கத்திடம் இருந்து கொங்கு மண்ணிற்கு முழு விடுதலை பெற்றுத்தந்தார். தாய் மண்ணிற்கு முழு சுதந்திரம் கிடைக்கக் காரணமாகத் திகழ்ந்தார்.

  மைசூர் வல்லரசு உழவர்கள், குடிமக்கள் பணமாகவே வரி செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டது. வரி செலுத்தாதவர்கள் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்டனர். இதனையும் தீரன் சின்னமலை கடுமையாகக் கண்டித்தார். அதிரடியாகத் தடுத்து நிறுத்தினார். தாய்நாட்டு மக்களுக்கு கடும்பாதுகாப்பாக விளங்கினான்.

  மைசூர் மன்னர் – ஹைதர் அலியின் வீர மரணம்

  1760ஆம் ஆண்டு மைசூர் அரசர் கிருஷ்ணராஜ் மரணம் அடைந்தார். அப்பொழுது அவரின் படைத்தளபதியாக இருந்த ஹைதர் அலி அரசரானார். ஹைதர் அலி மீது 1767-ல் வெள்ளையர்கள் போர் தொடுத்தனர். இப்போரில் ஆங்கிலேயர்கள் தோல்வியடைந்தனர். 1780-ல் மீண்டும் போர் நடந்தது. 4 ஆண்டுகள் தொடர்ந்து இப்போர் நடைபெற்றது.
  மைசூர் மன்னர் ஹைதர் அலி வெள்ளைப் படையை எதிர்த்துப் போரிட்டதில் 7.12.1782 ஆம் ஆண்டு போரில் வீரமரணமடைந்தார். அதற்குப் பின்னர் ஹைதர் அலியின் மகன் திப்புசுல்தான் மைசூர் மன்னராகப் பதவியேற்றார். அப்பொழுது நான்காம் மைசூர் போர் பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது 19 வயதான அவரது மகன் திப்பு சுல்தான் அரசனாகப் பொறுப்பேற்றார். போரை தொடர்ந்து நடத்தி வெள்ளையரை வென்றார்.

  To buy this book click below.

  theeranbuy now

  புதிய விடியல்-வெற்றி அறிவியல்

  பாஸ்பரஸ்…
  உடனே தீ
  பற்றிக் கொள்ளுமாம்
  வாய்ப்புகளைப் பற்றிக் கொள்வதில் நீ
  பாஸ்பரஸாய் இரு

  நியூட்ரான்
  பிளக்கும் ஆற்றல் வாய்ந்தவையாம்
  தாழ்வு மனப்பான்மையை தகர்ப்பதில் நீ
  நியூட்ரானாக இரு

  சோம்பல் அழுக்கை நீக்குவதில் நீ
  சுறுசுறுப்பு அமிலமாக இரு

  உழைப்பை ஆக்சிஜனாக சுவாசி
  விடாமுயற்சியை இரத்தமாகக் கொள்
  நம்பிக்கையை இயக்கமாகக் கொள்
  வெற்றி அறிவியலின்
  சூத்திரம் இதுதான்

  To buy this book click below….

  b3    buy now

  முன்னேற்றத்திற்கு மூன்று சொற்கள்-இதோ ஓர் அனுபவம் பேசுகிறது

  ஓரு நண்பரின் சிக்கல்கள் தீர்ந்தவிதம்.
  ஒரு அரசு அலுவலர் நல்லவர். ஆனால், யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடுவார். பிறர் சொல்வதைக் கேட்கக்கூடியவர். அவருக்கும் கீழ் பணியாற்றுகின்ற, அவரது அலுவலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரிடம் சென்று, உங்களைப் பற்றி “அவர் அப்படிச் சொல்கிறார். இவர் இப்படிச் சொல்கிறார்ணி உங்களுக்குத் திறமையே இல்லை என்று இவர் சொல்கிறார் என்று சொல்லி அலுவலரிடம் அனுதாபத்தைப் பெற்று அவரிடம் அன்புடையவர் போல நடந்து கொள்வார்கள்.
  அவரும் அதைப் பெரிதாக மனதில் போட்டுக் கொண்டு ஒவ்வொருவரையும் ஏன் அநேகமாக அலுவலகத்தில் உள்ள எல்லோரையும் எதிரிகள் போலவே கருதிவந்தார்.
  ஒவ்வொருவரைப் பற்றியும் நினைக்கும் போதெல்லாம் அந்த அலுவலருக்கு இரத்தம் கொதிக்கும். அலுவலர் தமது வீட்டிலும்கூட, வந்தவர் போனவர் எல்லோரிடத்திலும் இந்த வேண்டாத செய்திகளை எல்லாம் சொல்லி, வீட்டையும் தன்னைச் சூழ்ந்துள்ளவர்களையும் அமைதியை இழக்கும்படிச் செய்து விடுவார்.
  வாழ்க்கையே வெறுத்த நிலையில் அலுவலர் என்னிடம் வந்தார். நிலைமைகளை விளக்கினார். நிம்மதியே போய்விட்டது ஐயா என்று புலம்பினார். அவரது முகம் கலவரமடைந்து காணப்பட்டது. தேவையில்லாதவற்றிற்கெல்லாம் கோபப்பட்டு அலுவலகம், வீடு, நண்பர்கள் சுற்றுப்புறம் எல்லாம் எதிர்ப்பான சூழ்நிலையாகிவிட்டது.
  இவருக்குச் சொன்ன அறிவுரை
  இன்றுமுதல் இரண்டு காரியம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
  ஒன்று, அலுவலக நடைமுறைகள் தவிர வேறு செய்திகளை அலுவலகத்தில் பேசுவதில்லை என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்.
  இரண்டாவது, மற்றவர்களைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ யாரேனும் உங்களிடம் பேச்சு எடுத்தால் அதை ஒருபோதும் அனுமதிக்காமல் இருக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.
  இந்த இரண்டு கொள்கைகளையும் அவர் நடைமுறையில் கடைபிடிக்கத் தொடங்கினார்.
  அலுவலகப் பணிகள் தவிர, யார் எதைச் சொல்ல வாய் எடுத்தாலும் அவர் அதை ஒத்துக் கொள்வதில்லை, பேசுவதும் இல்லை. இரண்டாவது பிறரைப்பற்றிக் கோள் சொல்லவும் அவர் அனுமதிப்பதில்லை.
  மேலும் தன்னைப் பற்றி எது சொன்னாலும் அவர் கவலைப்படுவதில்லை. இப்படி முழுமையாக ஒரு மாதம்கூட இவர் கடைப்பிடித்திருக்க மாட்டார். அதற்குள் அலுவலகமே அமைதி அடைந்துவிட்டது.
  மீண்டும் அந்த அலுவலர் நண்பர் வந்தார்.
  சற்றே மனந்திறந்து பேசினார். இதுநாள் வரை நடந்த குழப்பங்களுக்கு நான்தான் காரணம் என்பதை உணர்ந்து கொண்டேன் என்றார். காரணம் ஒவ்வொருவர் சொல்வதையும் மனதில் வைத்துக்கொண்டு, தவறான கண்கொண்டே ஒவ்வொருவரையும் பார்ப்பது. அதனால், ஒவ்வொருவரிடத்திலும் குற்றம் காண்பது. அதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் வெறுப்பை மட்டும் உமிழ்வது. இப்படி நடந்த நிலை மாறி இன்று எல்லோரும் நல்லவர்களாகவே தெரிகிறார்கள். இதுவரை தவறு என்மேல்தான், இப்போது திருந்திவிட்டேன். நன்றி என்று சொன்னவர் சற்றே தயங்கினார்.
  தனக்கும் கீழ் பணியாற்றுகின்றவர்கள் சொல்வதை இவரால் தடுத்து நிறுத்த முடிந்தது நிம்மதி அடைந்தார். ஆனால், தனக்கும் மேல் உள்ள அலுவலர்கள் இதே குறையைச் செய்தால்? ஒவ்வொருவரைப் பற்றியும் குறைசொல்லிக் கொண்டே இருந்தால் # இப்படி ஒரு சூழ்நிலை அவருக்கு நேர்ந்தது. இப்படிப் பல அதிகாரிகள், குடும்பத் தலைவர்கள், தலைவிகள் இருக்கிறார்கள்.
  அத்தகைய நேரங்களில் நாம் அவர் அறைக்குச் செல்வதைக் கூடுமானவரை தவிர்த்துவிட வேண்டும், அல்லது நீங்கள் சென்றபிறகுதான் அவர் பேசத் தொடங்கினார் என்றால்? அவர் சொல்வதில் ஆர்வம் காட்டாதீர்கள். குறைந்தது அவர் சொல்லும் தவறான கருத்துக்கு நீங்கள் ‘ஆமாம்’ போடாதீர்கள். சிரித்து மழுப்பிவிடுங்கள். இப்படிச் செய்தால் # நீங்கள் இருக்கும் போது பிறரைப் பற்றிக் குறையாகப் பேச மாட்டார் என்று சொன்னேன்.
  இவற்றை முழுமையாகத் தீர்த்துக்கொள்ள ஒரே ஒரு வழி. பிறரைப் பற்றி நாம் குறைசொல்லாமல் இருப்பது. நம்மைப் பற்றி பிறர் என்ன சொன்னாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் நம் கடமையைச் செய்வது. இதுதான் நாம் செய்ய வேண்டியது.
  இந்த ‘ஆமாம்’ போடுகின்றவர்கள் பற்றியும் ஒரு கருத்துச் சொல்ல வேண்டும். நம்மைப் பொறுத்தவரையில் இவர்கள் மனிதர்களே அல்ல. அநியாயத்துக்குத் துணை போகின்றவர் களை எப்படி மனிதர்களாகக் கருதமுடியும். அநியாயமாகப் பேசுகின்றவர்களுக்கு, அப்படி ஆமாம் போடுகின்றவர்களை அப்போதைக்கு யாரும் ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் மனத்தளவில் ஒவ்வொருவரும் அத்தகையவர்களை வெறுக்கவே செய்வார்கள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நிலைமை மாறும்போது அவரை எல்லோரும் கைவிட்டு விடுவார்கள். நண்பர்கள், உடன் பணியாற்றுவோர், ஏன் குடும்பத்திலுள்ள பெண்டு பிள்ளைகள்கூட அவர்களை மதிக்கமாட்டார்கள்.
  அந்தக் குறிப்பிட்ட அலுவலர் இருக்கும்வரை இந்த நண்பரின் காலம் ஓடும். அவர் போய் விட்டால் இந்த ஆமாம் போடுபவர் பாடு இரண்டு மடங்கு துன்பமாக இருக்கும்
  ஆதலின் நாம் மனிதர்களாக நல்லவர்களாக இருந்தால் ‘வல்லமை’ தானே வரும்.
  ஆக ஒருவரின் நிம்மதிக்கும் திறமையான செயல் பாட்டிற்கும் சிறந்த வழி, பிறரைப் பற்றிப் பேசாமல் # பிறரைப் பற்றிக் குறைசொல்லாமல் இருப்பதுதான் என்று என் அனுபவத்தை அவரிடம் சொல்லிக் கடைப்பிடிக்க வைத்து இப்போது அவர் சிறப்பாக பணி புரிகின்றார். மகிழ்ச்சியாக இருக்கின்றார்.
  இந்த அணுகுமுறையால் குடும்பச் சிக்கல்கள் முதற் கொண்டு நாட்டுச் சிக்கல்கள் வரை எதை வேண்டுமானாலும் முடிந்த அளவிற்குத் தீர்த்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் நாம் ஒருபோதும் முன்னேற்றம் காண முடியாது. நமது மனக் குழப்பங்களே நம்மைத் துன்பத்தில் ஆழ்த்தும். அதனால் முன்னோக்கியும் செல்ல முடியாது.
  முன்னேற விரும்புகின்றவர்களுக்குப் பழைய நிகழ்ச்சிகள் பாடங்களாக அமையவேண்டுமே தவிர பெரும் பாரமாக அழுத்தக்கூடாது. இதை எழுத வாய்ப்பாக இருந்த அந்த அலுவலர் நண்பர்க்கு என் நன்றி.

  To buy this book click below……

  b16   buy now

  குழந்தை நலம்-எடை குறைந்த குழந்தை

  பிறந்த குழந்தையின் எடை 2500 கிராமிற்குக் குறைவாக இருத்தல்

  எடை குறைந்த குழந்தையின் உணவு முறை

  எடை குறைந்த குழந்தைகளுக்கு உணவு என்பது தாய்ப்பால், பால் பீய்ச்சி கொடுப்பது, தாய்ப்பால் கொடுப்பவர்களிடமிருந்து வாங்குதல், அதிக சத்து நிறைந்த பால் ஆகியவற்றுள் ஒன்றாக இருக்கலாம்.

  தாய்ப்பால்

  குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்குத் தாய்ப்பால் மிகவும் அவசியம். இது குழந்தையைப் பலவிதமான தொற்று நோய்களிலிலிருந்து பாதுகாக்கிறது.

  பிற தாய்மார்களின் தாய்ப்பால்

  பிற தாய்மார்களிடமிருந்து குழந்தைக்குக் கொடுக்கப்படும் பால் டோனர் பால் எனப்படும். டோனர் பால் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி தடைபடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  அதிக சத்து நிறைந்த பால் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால்

  கொழுப்பு நீக்கப்பட்ட பால் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குக் கொடுப்பதன் மூலம் குழந்தையின் எடை அதிகரிக்கிறது.

  மாட்டுப்பால்

  எந்த ஆராய்ச்சிகளும் மாட்டின்பால் நல்லது என்று கூறவில்லை.

  பரிந்துரைகள்

  • குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் சிறந்த பால்
  • தாய்ப்பால் இல்லாத நேரத்தில் பால்பொடி மூலம் பால் கொடுக்கலாம்.
  • கொழுப்பு நீக்கப்பட்ட பால் கொடுப்பதைத் தடுக்கவும்

  முன் பால்

  முன் பால் என்பது குழந்தை பிறந்த நான்கு நாட்களுக்குள் தாய்ப்பால் தவிர வேறு ஏதேனும் பால் மற்றும் சர்க்கரை தண்ணீர் கொடுப்பது.

  பரிந்துரைகள்

   முன்பால் கொடுப்பது தவிர்க்க வேண்டும்.

  குழாய் மூலம் பால் ஊட்டுதல்

  32 வாரத்திற்கு மேல் குழந்தை பிறந்தால் தாய்ப்பால் கொடுக்கலாம். 32 வாரங்களுக்குக் கீழ் இருந்தால் குழாய் மூலம் தாய்ப்பால் பீய்ச்சி எடுத்து கொடுக்கலாம்.

  பரிந்துரைகள்

  குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குக் குழாய் மூலம் பால் கொடுப்பது மிகவும் நல்லது.

  குறைந்தபட்ச முறையில் பால் கொடுத்தல்

  32 வாரத்திற்கு கீழ் பிறந்த குழந்தைகளுக்கு பிறந்த ஒரு வாரத்திற்குக் குறைந்த அளவு பால் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதனால் குழந்தையின் குடல் வளர்ச்சி அடையும்.

  பரிந்துரைகள்

  குறைந்த அளவு பால் கொடுப்பதன் மூலம் குடல் சுழற்சி போன்ற நோய்கள் தடுக்கலாம்.

  பாலின் அளவு அதிகரிக்கும் முறைகள்

  பரிந்துரைகள்

  பாலின் அளவு குழந்தையின் எடையைப் பொருத்தும், கருதாங்கல் வயதைப் பொருத்தும் அதிகரிக்கலாம். அதிகபட்சமாக 180 லிலிருந்து 200 மி. லிலிட்டர் / கி.கி / நாள்.

  கஇடமஊஅ மற்றும் ஈஏஅ யின் முக்கியத்துவம்

  கஇடமஊஅ மற்றும் ஈஏஅ தாய் பாலில் இருப்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மற்றும் கண்பார்வைக்கு மிகவும் உதவுகிறது என்பது ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  ஊட்டச்சத்து அல்லாத உறிஞ்சும் பொருட்களின் முக்கியத்துவம்

  பரிந்துரைகள்

  ஊட்டச்சத்து அல்லாத உறிஞ்சும் பொருட்களை சப்ப வைப்பதன் மூலம் எடைகுறைந்த குழந்தையின் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும்.

  முறைகள்

   குழாய் மூலம் பால் கொடுப்பது
   கப், ஸ்பூன், பாலாடை, குப்பி மூலம் பால் கொடுத்தல்

  பரிந்துரைகள்

  • குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு உறிஞ்சும் தன்மை அதிகமாக இருந்தால் நேரடியாக தாய்ப்பால் கொடுக்கலாம்.
  • உறிஞ்சும் தன்மை குறைவாக இருந்தால் கப், ஸ்பூன், பாலாடை மூலம் பால் கொடுக்கலாம்.

  குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எத்தனை முறை பால் கொடுக்கலாம்?

  குழந்தையின் எடையைப் பொருத்தும், கருதாங்கல் வாரங்களைப் பொருத்தும் எத்தனை முறை பால் கொடுக்கலாம் என்பதை நிர்ணயிக்கலாம். பொதுவாக இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பால் கொடுக்கலாம்.

  பால் கொடுத்த பின் குழந்தையைப் படுக்க வைக்கும் நிலை

  குழந்தையை மல்லாந்து, குப்புற மற்றும் ஒரு பக்கமாக படுக்க வைக்கலாம்.

  குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தையின் ஊட்டச்சத்து

  வைட்டமின் டி

  தாய்ப்பாலில் குழந்தைக்கு போதுமான அளவு வைட்டமின் டி ஊட்டச்சத்து இல்லை. இதனால் குழந்தைகளுக்கு வைட்டமின் ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு வைட்டமின் டி 400 கொடுக்க வேண்டும்.

  கால்சியம், பாஸ்பரஸ்

  குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு எலும்பில் கால்சியம், பாஸ்பரஸ் அளவு குறைவாக இருக்கும். எனவே கால்சியம் 120 – 140 மி.கி./கி.கி/நாள் மற்றும் பாஸ்பரஸ் 60-90மி.கி./கி.கி./நாள் கொடுக்க வேண்டும்.

  இரும்புச்சத்து

  குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு 2-3 மி.கி./கி.கி/நாள் இரும்புச்சத்து 6- 8 வாரத்திற்கு மேல் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

  குறைப்பிரசவம் குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் முறை

  குழந்தையின் எடை, தலைச்சுற்றளவு, நீளம் மற்றும் மார்பகச் சுற்றளவு பார்க்க வேண்டும். அதன் மூலம் வளர்ச்சி குன்றிய குழந்தைகளை எளிதில் கண்டுபிடிக்கலாம்.

  To buy this book click below ….

  kl   buy now

  இடை குறைப்பு ரகசியங்கள்-எடை குறைக்கும் உணவுகள்

       உள்ளத்தால் சிறப்பாக வாழ நினைக்கும் குண்டுடம்புகாரர்களே! நீங்கள் உடலாலும் சுகமாக வாழ செய்ய வேண்டியதெல்லாம் சரியான உணவுத் தெரிவே ஆகும். கெட்டக் கொழுப்பை உண்டாக்கும் உணவுகளை தவிர்த்து நல்லக் கொழுப்பைத் தரும் உணவுகளைத் தெரிவு செய்தால் உடல் எடை கூடாமல், குறைவதை நாம் கண்கூடாக பார்க்க முடியும். இப்பொழுது நல்லக் கொழுப்பைத் தரும் நல்ல உணவுகள் பற்றி பார்ப்போம்.
  உடல் எடையைக் குறைக்கும் நல்லக் கொழுப்பு உணவுகள்:
  1. ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை: ஆறு மணி நேரம் நீரில் ஊறிய நிலக்கடலையானது நச்சுத் தன்மை நீக்கப்பட்டு, உயிர்ப்புத் தன்மை அதிகரிக்கப்பட்டு முழுமைத் தன்மை அடைகிறது. இதை அப்படியே பச்சையாக எடுத்துக் கொள்ளும் போது இதில் உள்ள கொழுப்பு செரிக்கத் தேவையான உயிர்ச் சத்துக்களும் (Vitamins), நொதிகள் (Enzymes) உருவாகத் தேவையான புரதமும் (Protein) கொண்டுள்ளது. நிலக்கடலையை வறுத்து அல்லது சமைத்து உண்டால் கண்டிப்பாக கெட்டக்கொழுப்புச் சேரும்.
  2. இயற்கை இனிப்பு உணவுகள்: இயற்கை இனிப்புகளான தேன், கருப்புச் சாறு, இயற்கை வெல்லம், உளர் திராட்சை, பேரீச்சை, மற்றும் இனிக்கும் பழச்சாறுகள் யாவும் கொழுப்புச் செரிமானத்தை திறம்பட நடத்த உதவியாக இருக்கும். இதில் பி-உயிர்ச் சத்துகள் மாவுச் சத்துடன் முழுமையாக இருப்பதால் இவை உடனடிச் சக்க்தியாக மாறி கொழுப்புச் சத்தை செரிக்க மிகவும் உதவியாக இருக்கிறது. சான்றாக கடலை மிட்டாய் செரிக்க அதனுடன் கலக்கப்பட்ட வெல்லம் உதவுகின்றது.
  3. மிளகு: எந்த ஒரு அசைவ உணவோடும் மிளகுத் தூளை கனிசமாகச் சேர்த்துக் கொள்ளும் போது மிகச் சுலபமாகக் கொழுப்புச் செரித்து விடுகிறது.மிளகில் இருக்கும் பி-உயிர்ச் சத்துக்களும் தாதுச் (Minerals) சத்துக்களும் கொழுப்புச் செரிமானத்திற்கு வழி செய்கின்றன. மிளகில் உள்ள தாவரச் சத்துக்கள் (Phytofactors) அசைவ உணவின் விஷத்தன்மையை வெளியேற்ற உதவுகின்றன. பச்சை மிளகாய் உள்ளிட்ட மசாலா அதிகம் சேர்த்த அசைவ உணவுகள் செரிக்க சற்று கடிணமாக இருக்கும்.
  4. மீன்கள்: குளத்து மீன்களைவிட கடல் மீன்கள் நல்லவை. கடல் மீன்களில் சிறிய அளவு உள்ளவையும் தோல் மென்மையாகவும் உள்ளவையும் சிறந்தவையாகும். வாலை மீன் உள்ளிட்ட மீன் வகைகளில் பாதரசம் உள்ளிட்ட உயர் அடர்த்தி உலோகங்கள் (Heavy metals) தோலில் படிந்துள்ளதால் அவைகளை தவிர்ப்பது நல்லது. மீன் கொழுப்பு சுலபமாக செரிக்கக்கூடியதாகவும் மூளைக்கு உணவாகவும் திகழ்கிறது.
  5. மாமிசம்: பொதுவாக மாமிச உணவுகள் செரிக்க குறைந்தபட்சம் 12 மணி நேரமும், அவை செரித்தபின் அதன் கழிவுகள் வெளியேர மூன்று நாட்களும் ஆகும். அன்றாடம் மாமிச உணவு எடுத்துக் கொள்பவர்கள் தினமும் மலம் கழித்தாலும், உண்மையில் அது மூன்று நாட்களுக்கு முந்தய மலமேயாகும். அதே போல், மாமிச உணவில் 1/3 பங்கு மட்டுமே சக்தியும் 2/3 பங்கு கழிவையும் கொண்டுள்ளது. மாமிசம் மூலம் கிடைக்கும் சக்தியானது அதன் கழிவை வெளியேற்றவே போதாது ஆகையால், மாமிச உணவை தவிர்ப்பது நல்லதுதான். அதே சமயம், மாமிச புரதத்தில் சில அத்தியாவச அமினோஅமிலங்களைக் கொண்டுள்ளன. அவைகள் தாவர உணவுகளில் கிடைக்காது. அந்த விதத்தில் மாமிச உணவு தேவைதான். ஆக, மாமிச உணவு தேவையென்றால், குறைவான அளவுகளில், அதுவும் மிளகு சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாமிசக் கொழுப்புகளில் சதை தனி கொழுப்பு தனி என்று இருக்கும் பறவை இறச்சி நல்லது. அதுவே சதையும் கொழுப்பும் இரண்டரக்கலந்து இருக்கும் பாலூட்டிகள் (ஆடு, மாடு மற்றும் பன்றி) மாமிசம் கெட்டக் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். அதே போல் இரசாயனங்கள் மற்றும் ஹார்மோன்கள் அதிகம் கொடுத்து வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் நம்மை குண்டாக்கும் தன்மை கொண்டது. இவைகள் வேகமாக வளரக் கொடுக்கப்படும் எஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆண்களுக்கு பெண்தன்மையையும், பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் மற்றும் உடல் பருமனாவது அதிகரிக்கின்றது. பிராய்லர் கோழிகளை அதிகம் எடுத்துக்கொண்டால் ஹார்மோன் சமன்பாடு குலைந்து மன உளைச்சல் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்கு பதிலாக நாட்டுக்கோழி சாப்பிடலாம்.
  6. எண்ணைகள்: அசைவ உணவைவிட எண்ணைதான் அதிக ஆபத்தானது. அசைவ உணவை எண்ணையில் பொறித்து சாப்பிடும் போது மிகக் கெட்டக் கொழுப்பாகிவிடுகிறது. அதே போல் ஒரு முறை பயன் படுத்திய எண்ணையை மீண்டும் சுடவைத்து பயன்ப்டுத்தும் போது அது மிகக் கொட்டக் கொழுப்பாக மாறி விடுகிறது. எண்ணைகளில் மிகவும் சிறந்தது ஆலிவ் எண்ணையாகும். இதை இரண்டு அல்லது மூன்று முறை சுடவைத்தாலும் கெட்டக் கொழுப்பாக மாறுவதில்லை. ஆலிவ் எண்ணையில் உள்ள ஒமேகா-9 வகைக் கொழுப்பானது நோய் எதிர்ப்பு சக்தியையும் தோல் ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. இந்த எண்ணையானது மற்ற எண்ணைகளைவிட மூன்று மடங்கு அடர்த்தியானது. இதன் விலை அதிகம்தான், ஆனால் உங்கள் இதயம் அதைவிட அதிகம்தானே. ஆலிவ் எண்ணைக்கு அடுத்து சிறந்த எண்ணை தேங்காய் எண்ணையாகும். இதுவும் ஓரிரு முறை சுட வைத்தாலும் கெட்டுப் போவதில்லை. மூன்றாவது சிறந்த எண்ணை நல்லெண்ணையாகும். ஆலிவ் எண்ணையும் தேங்காய் எண்ணையும் பித்தத்தையும் கபத்தையும் போக்கும் தன்மையுடையன. நல்லெண்ணை வாய்வையும் உடல் உஷ்ணத்தையும் நீக்க வல்லது. நல்லெண்ணை சமையல் அரோக்கியத்திற்கு நல்லது எனபதால்தான் அதை நல்லெண்ணை என்று பெயர் வைத்துள்ளனர். இந்த மூன்று எண்ணைகளைத் தவிர மற்ற எண்ணைகளெல்லாம் அரோக்கியத்திற்கு சுமார்தான். இதயத்திற்கு நல்லது என்று மற்ற எண்ணைகளைக் குறிப்பிடுவதெல்லாம் டூப்பு. உண்மையில் சூரியகாந்தி, நிலக்கடலை மற்றும் சோயா எண்ணையெல்லாம் மித வெப்ப நாடுகளுக்கு (Temperate countries) ஏற்றதாகும். நம்மைப்போல் வெப்ப நாடுகளுக்கு மிகவும் ஏற்ற எண்ணை நல்லெண்ணையேயாகும்.
  7. தேங்காய்: தேங்காய் என்பது ஒரு முழுமைப் பொருள். இதில் எல்லாவித அத்தியாவச அமினோ அமிலங்கள் மற்றும் உயர் கொழுப்புகளையும், இவைகளைச் செரிக்கத் தேவையான உயிர்ச் சத்துக்கள், மற்றும் தாதுச் சத்துக்களை உள்ளடக்கிய ஒரு அற்புத உணவாகும். தேங்காயை சமையலில் பயன் படுத்தும் விதத்தில்தான் நல்லதாகவும் கெட்டதாகவும் மாறி விடுகிறது. தேங்காயை அதிகம் வேகவிடாமல் மேலோட்டமாக வதக்கிய நிலையில் எடுத்துக் கொண்டால் சுலபமாகச் செரித்துவிடும், இல்லையேல் செரிப்பதற்கு சற்று கடினமாக இருக்கும். கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் தேங்காய் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பரிந்துரை அளிக்கப்படுகிறது. இவர்களின் செரிமானத்தை அதிகரிக்க வழி தெரியாததால் இப்படி பரிந்துரை செய்ய்கின்றனர். இவர்களின் பரிந்துரையால் இப்போதெல்லாம் அதிகமாக வெங்காயச் சட்னி அல்லது தக்காளிச் சட்னியே அதிகமாக சாப்பிடுகிறார்கள். வெங்காயத்தை அரைப்பதால் நரம்பு பாழ்பட்டுப்போகிறது. தக்காளியை அரைப்பதால் சிறுநீரக கற்கள் உருவாக வழியாகி விடுகிறது. ஐய்யோ! பாவம், நல்லதை விட்டு கெட்டதற்கு மாறுகிறார்கள். தேங்காயோடு மிளகு அல்லது இயற்கை வெல்லம் சேர்த்து எடுத்துக் கொண்டால் தேங்காய் சுலபமாக செரித்துவிடும். தேங்காய் அரோக்கியத்திற்கு கேடு என்பவர்கள் மலையாளிகளைப் பார்த்தாவது திருந்த வேண்டும்.
  8. முட்டை: முட்டையும் ஒரு முழுமை உணவேயாகும். முட்டையை அவித்து சாப்பிட்டால் அத்தனையும் வாய்வாகிவிடும். அதே முட்டையை சிறிதளவு எண்ணையில் மிளகு சேர்த்த ஆம்லெட் செய்து சாப்பிட்டால் அத்தனையும் செரித்தும் கெட்டக் கொழுப்பு ஒட்டாமலும் பார்த்துக் கொள்ளும். கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். முழுமையற்றதை எடுத்துக்கொள்ளும் போது செரிமானச் சிக்கல்தான் ஏற்படுகிறது. முட்டையின் வெள்ளைக் கருவில் உயிர்ச் சத்துக்களும், தாதுக்களும் உள்ளன. மஞ்சள் கருவில் அத்திவாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்புகளும் கொண்டுள்ளன. இவையிரண்டும் சேர்ந்தால் தான் நல்லது நடக்கும்.
  9. பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகள்: பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளில் ஒமேகா-3 வகை கொழுப்பு ஓரளவுக்கு இருக்கிறது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. இவ்வகைப் பருப்புகள் செரிக்க சற்று கடிணமாக இருக்கும் ஆதலால் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளலாம். இவைகளைத் தேனுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும் போது சுலபமாக செரிக்கும்.
  10. வெண்ணைப்பழம்: ஆல்பகடா பழம் என்று அழைக்கப்படும் வெண்ணைப் பழம் ஒமேகா-3 வகை கொழுப்பை ஓரளவுக்கு கொண்டு இருக்கிறது. நோய்வாய் படும் நேரத்திலும் இப்பழம் சுலபமாக செரித்து சக்தி அளிக்கவல்லது.

  நண்பர்களே! நல்ல கொழுப்பைக் கொடுக்கும் உணவுகளைத் தெரிவு செய்து உடல் பருமனைத் தவிர்த்து, இலகுவான இரத்தக் குழாய், மென்மையான நரம்பு மற்றும் பலபலப்பான தோல் ஆகியவற்றை பெற்று அரோக்கியமாய் வாழுங்கள்.

  நல்லதுக்கு நீங்கள் மாறாவிட்டால்
  கெட்டது உங்களை கெடுத்துவிடும்.

  To buy this book click below……

  b4buy now

  சித்திரைக்கனி-நாதன்

         பற்பல உதாரணங்கள் சொன்னார். வெளிநாட்டு டிராக்டர் வாங்கி விற்கப்படும் கதையைச் சொன்னார். ஏழைகள் இது போன்ற வியாபாரங்கள் செய்ய முடியாது. பணக்காரர்கள் பேரில்தான் இத்தகைய காரியங்களைச் செய்ய முடியும் என்று விளக்கினார்.
  எப்படியோ என் மனதை மாற்றி விட்டார். கப்பல் வாங்குவதை விட்டுவிடுங்கள் என்று வ.உ.சி.க்கு வெள்ளைக் காரர்கள் லஞ்சம் கொடுத்தபோது அதை அவர் உதறி எறிந்த நிகழ்ச்சி எனக்கத் திடீரென்று நினைவுக்கு வந்தது. அந்த உறுதியான மனதைப் போற்றினேன். ஆனால் நாட்டுக்காகத் தம் சொத்து சுகமெல்லாம் இழந்த அந்தப் பெருமகன் அவரது இறுதிகால வாழ்வில், காசநோயினால் பீடிக்கப்பட்டுக் கவனிப்பற்ற நிலையில் இறந்து போனதைப் படித்ததும் என் நினைவுக்கு வந்தது.
  நன்றி கெட்ட இந்த உலகைப் பணத்தால்தான் பணிய வைக்க முடியும்போல் இருக்கிறது என்றும் எண்ணியது மனம்.
  ஏழையாய இருக்கும் வரை ஏழ்மையைப் பற்றியும் ஏழைகளைப் பற்றியும் எண்ணுகிறார்கள். பணம் வந்து சேர்ந்ததும் பணக்காரர்களைப் பற்றியும் வசதியான வாழ்க்கையைப் பற்றியுமே எண்ணுகிறார்கள்.
  புதிய செருப்பு வந்ததும் பழைய செருப்பு ஒதுக்கப்படுகிறது. புதியது அறுந்த போதுதானே பழையதைத் தேடுகிறோம்?
  கால ஓட்டத்தில் நான் புதிய செருப்பு அணிவிக்கப் பட்டேன். ஏன் மற்றவர்கள் மேல் குறையைச் சுமத்த வேண்டும்? நம் குற்றத்தை மற்றவர்கள் மீது சுமத்துவதை விடக் கோழைத்தனம் வேறு என்ன இருக்க முடியும்? இல்லை, நானே தான் அணிந்து கொண்டேன்.
  அவர் தேர்தலுக்கு நிற்கக் கொஞ்சம் பணம் கடனாகக் கேட்டார், கொடுத்து உதவினேன். அதற்கு ஈடாக எனக்கு பர்மிட் வாங்கிக் கொடுத்தார்.
  மிளகாய் ஏற்றுமதி வியாபாரம் அது. தமிழ் நாட்டிலிருந்து என் வழியாகத்தான் வெளி நாட்டிற்கும் வெளி மாநிலங்களுக்கும் மிளகாய் ஏற்றுமதி செய்தாக வேண்டும். மிளகாயைக் கொள்முதல் செய்வது முதற்கொண்டு அதைப் பதப்படுத்தி ஏற்றுமதிக்குத் தயாராக்குவது வரை, முதலீடு இல்லாமல் ஆங்காங்கே வியாபாரிகளே முதல் போட்டுச் செய்து விடுவார்கள். ஏற்றுமதியான சரக்குக்கு வரும் தொகையில் ‘கமிஷன்’ போக எஞ்சியதை மட்டும் அவர்களுக்குக் கொடுத்துவிடுவேன். இதுதான் அந்த வியாபாரம்.
  உழைக்காமலே மாதம் ஐந்தாயிரம் ஆறாயிரம் கூடக் கிடைப்பதுண்டு.
  இந்த வியாபாரத்துக்கு ஒத்துக் கொண்டது வடிவுக்குத் தெரிந்தால், அவள் உறுதியாக மறுத்துவிடுவாள். எனவே வடிவுக்கும் தெரியாமல் இதில் ஈடுபட வேண்டியதாயிற்று.
  மனைவிக்குத் தெரியாமல் செய்கின்ற காரியங்கள் எல்லாம் மனக்கவலையைத்தான் தரும் என்பதைக் காலம் உணர்த்தி விட்டது.
  முதலில் நானும் மறுக்கத்தான் செய்தேன். அவர் பெரிதும் வற்புறுத்தவே ஒத்துக் கொண்டேன்.
  கெட்ட வழியில் வருவது கெட்ட வழியில்தான் போகும் என்பார்கள். முடிவு அப்படித்தான் ஆயிற்று.
  ஆனால் முடிவைப்பற்றி யார் முதலில் சிந்திக்கிறார்கள்? எதற்கும் ஒரு முடிவு வந்த பிறகுதானே முதலிலேயே இதைச் செய்திருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
  ஒரு முறை வியாபாரிகள் மாநாடு டில்லியில் நடக்கிறது என்று என்னை அழைத்துச் சென்றார் எனது எம்.எல்.ஏ. நண்பர். ஒருவாரம் அங்குத் தங்கினோம். மதுப் பழக்கம் மாது பழக்கம் எல்லாம் புகுந்து கொண்டது.
  தெரியாத இடத்தில் எப்படி இருந்தால் என்ன? என்று முதலில் எண்ணினேன். பிறகு தெரியாதவரை எப்படி இருந்தால் என்ன என்ற நிலையும் வந்துவிட்டது.
  டில்லியிலிருந்து திரும்பி வந்தபோது வடிவை நான் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. குற்ற உணர்வு எனக்குத் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விட்டது. ஒரு காலத்தில் காந்தியின் வாரிசு என்று போற்றப்பட்ட நான், கொலை ஒன்றைத் தவிர பஞ்சமா பாதகங்கள் எல்லாம் செய்யத் தலைப்பட்டு விட்டேன். ஏன்?
  என்னைனே என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடிய வில்லை. எனக்கிருந்த உடற்பசியை அந்த எம்.எல்.ஏ. கண்டு பிடித்து அவற்றுக்குத் தீனி போடத் தொடங்கினார். அதுவே என் தூய்மையை இழப்பதற்குக் காரணமாகியது. இந்த நாற்பத்து ஐந்தில் இப்படி ஒரு வெறித்தனமா? அந்த அரைகுறை நாட்டியக் காட்சிக்கு வந்தவர்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அதிகம் இருந்தார்கள். இது வாழ்க்கையில் இரண்டாவது கட்டமோ?
  ஓ முதிய இளைஞர்களே; நீங்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர்கள்!
  இவையெல்லாம் ஒட்டு மொத்தமாகத் தெரிந்தால் வடிவுக்குத் திடீரென்று மூச்சு நின்றாலும் நின்று விடும். அதனால் ஒரு நாள் அவளிடம், ‘இப்போதெல்லாம் காம உணர்ச்சி அதிகமாக இருக்கிறது என்றேன்.
  ‘திருமண வயத்தில் பெண்ணை வைத்துக் கொண்டு ஒரு தகப்பன் பேசுகிற பேச்சா இது?’ என்று கடிந்து கொண்டாள். ‘உங்களைத் தெய்வமாக மதிக்கின்ற எனக்கு, உங்களிடத்தில் சிறிதளவு அப்பழுக்கு இருப்பதாகத் தெரிந்தாலும் அந்த நிமிடமே என் உயிர் போய்விடும்’ என்று எச்சரித்தாள்.
  அவள் முகன் என் நெஞ்சில் புதைந்தது. என் மீது எவ்வளவு அன்புடன் இருக்கிறாள். நான் அவளுக்கு எத்தகைய துரோகம் செய்துகொண்டே ஏகபத்தினி விரதனாக நடிக்கின்றேன். என்னைப்போல் எத்தனை பேர் நடத்துத் தங்கள் மனைவியரை ஏமாற்றுகிறார்களோ? ‘அன்பு எதையும் எளிதில் நம்பிவிடு என்பது எவ்வளவு உண்மை.

  ஏமாற்றிக் கொண்டே நம்பவைப்பது எவ்வளவு கயமைத்தனம்? நான் எங்கிருந்தேன்? இப்பொழுது எங்கு இருக்கிறேன்.
  புது வியாபாரத்தில் வந்த பணத்தில்தான் இரண்டாவது கார் வாங்கினேன். வீட்டில் முன்பிருந்த கார் எனக்கே சரியாக இருந்தது.
  வடிவு கடைக்குச் செல்வதற்கும், மகள் கல்லூரி செல்வதற்கும் ஒரு கார் இருக்கட்டும் என்றுதான் அதனை வாங்கினேன். வசதிகள் பெருகப் பெருகத் துன்பங்களும் பெருகும் என்பது இயற்கை நியதியாகப் போய்விட்டது.
  ‘ஏன் இன்னொன்று? ஒரு கார் போதாதா?’ என்றாள் வடிவு. ‘நீ விரும்பிய நேரத்தில் எங்கும் செல்லமுடிவதில்லை. அகிலா கல்லூரிக்குச் செல்லவும் பயன்படும்’ என்றேன். எப்போதும் தன் கருத்தைச் சொல்லுவாள் வடிவு. முடிவு என்னுடையதாகவே இருக்கும். இதிலும் அப்படித் தான் ஆயிற்று.
  கார் வந்த பிறகு அதைப் பயன்படுத்தியவளே என் மகள்தான். கண்ட கண்ட நேரங்களில் எல்லாம் காரை எடுத்துக் கொண்டு மகள் வெளியில் செல்கிறாள் என்று குறைபட்டுக் கொண்டாள் வடிவு.
  என் மகள் கார் ஓட்டிச் செல்வதைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியக இருந்தது. நான் அகிலா வயதில் இருக்கும்போது சைக்கிளும் எனக்குச் சொந்தமில்லை. அது ஒரு காலம். இன்று என் மகளும் கார் ஓட்டுகிறார். எவ்வளவு மாறுதல்?
  இளமைக் காலத்தில் செல்வம் இருந்தால் அதனை எப்படி எல்லாம் வெளிக்காட்டிப் பெருமை கொள்ள மனம் முந்துகிறது. அதே செல்வம் முதுமைக் காலத்தில் இருந்தால், அதை வெளியில் தெரியாமல் மறைக்கவே முயற்சி செய்கிறது மனம்.
  என் நிலை? தீய சேர்க்கை எவ்வளவு பொல்லாதது, அவர் என்னென்ன காரியங்களையோ துணிந்து செய்கிறாரே?
  யார் யாருக்கு எதில் எதில் ‘வீக்னஸ்’ என்று தெரிந்து அவரவர்களை அதனால் மடக்கி விடுகின்றார். எல்லோரும் அவர் வைக்கும் குறியில் விழுந்து விடுகிறார்கள். பணத்தால் சரிக்கட்ட முடியாத அந்தக் கல்வி அதிகாரியைக் கூட்டம் போட்டு மாலை மரியாதை செய்து, நினைத்ததை முடித்து விட்டார்.
  ஒவ்வொருவரும் ஏதேனும் ஒன்றுக்கு அடிமைப்பட்டே தீர்கிறார்கள். ‘நீங்கள் ஏழைகள் என்றால் வலிந்து கூட நன்மை செய்வீர்கள் என்று கேள்விப் பட்டேன். இப்படிப் பட்டவர்கள் நாட்டில் மிகக் குறைவு. இல்லையென்றே சொல்லலாம். நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டே சில ஏழைகளைக் கொண்டு நிறுத்தி, அவர்களுக்கும் சில நன்மைகளைச் செய்து, தான் முன் செய்த தவறான காரியங்களுக்கொல்லாம் கழுவாய் தேடிக் கொள்வார்.
  அந்த ஏழைகளைப் போலக் கட்டணம் இல்லாமல் விளம்பரம் செய்பவர்கள் வேறுயார் இருக்கிறார்கள்? ஒன்று செய்தால் ஓராயிரம் நன்மை பாராட்டும் நன்றி உள்ளவர்கள்; உயிருள்ள விளம்பரங்கள்.
  என்ன உலகம்? எல்லாம் ஒரே நடிப்பாக அல்லவா இருக்கிறது? ‘உண்மை குறையக் குறைய நாட்டில் அமைதியும் குறைந்து கொண்டே போகிறது? என்பதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?
  ஏன், நான் மட்டும் என்ன?
  என்னிடத்தில் இருந்த நேர்மை குறையக் குறைய என் மன அமைதியும் குறைந்து விட்டதே! பலநாள் சரியாகத் தூங்கவும் முடியவில்லையே!
  ‘எனக்குச் சரியாகத் தூக்கம் வருவதில்லை’ என்று சிலர் சொன்னபோதெல்லாம் எனக்கு வியப்பாக இருக்கும். இப்பொழுதுதான் தெரிகிறது, ஆர்வம் உள்ளவர்களுக்குத் தூக்கம் வராதது போல, அச்சம் உள்ளவர்களுக்கும் தூக்கம் வராது என்பது, தவறு செய்கின்றவர்களுக்குத் தூக்கம் வருமா?
  இரவு பத்தரை மணிக்குமேல் ஆகிவிட்டதே; அகிலா எங்கிருந்து வருகிறாள்? ஒரு வேளை படத்துக்குப் போயிருப்பாளோ? அப்படியே இருந்தாலும் அவள் ஏன் தனியாகப் போக வேண்டும், வடிவு இதையெல்லாம் கவனிப்பதில்லையா?

  To buy this book click below….

  b11buy now

  சுக பிரசவ சூச்சமங்கள் -கருத்தரிப்பும் மசக்கையும்

             அன்புத் தாய்மார்களே! ஆதியிலே, இந்த பூமியிலே உயிர் ஜனித்த விதமும், நாம் நம் தாயின் கருப்பையில் உயிராக ஜனிக்கும் விதமும் ஒரே விதமாகத்தான் இருக்கிறது என்று இரகசியம் உங்களுக்குத் தெரியுமா?. ஆதியிலே, கடலில்தான் உயிர் ஜனித்ததாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அடிக்கடலில் எரிமலை வெடிப்பால் (Hydrothermal Vent) உண்டான நெருப்புக் குழம்பை (Volcanic lava) நீர்ச் சூழும்போது, அதிரடியாக குளிர வைக்கப்பட்டு உயிரியல் கூழில் (Bio-plasma) உருவாகியது. பிரிதொரு தருனத்தில் இந்த உயிர் கூழில் ஆகாச சக்தி (உயிர்ச் சக்தி) அதிரடியாக உட்புகும் போது உயிர் சுழற்சி ஆரம்பமாகி உயிரணு (Cell) உருவானது. இந்த உயிர் அணுதான் பரிணாம வளர்ச்சியில் (Evolution), ஒரு உயிரணுவில் (Single Cell Organism) இருந்து, பல்லணு உயிராகி (Multicellular Organism) மனிதன் வரை வந்திருக்கிறோம். அன்புத் தோழியர்களே! இந்த பரிணாமத்தின் அடையாளமாகவே நம் ஒவ்வொரு உயிர் உருவாக்கமும் நிகழ்கிறது என்ற அதிசய இரகசியத்தை நாம் இப்பொழுது தரிந்து கொள்வோம்.
  அன்புத் தோழ தோழியர்களே! சினை முட்டை முதிர்ந்து கருத்தரிக்கத் தயாராய் இருக்கும் நாளில் (மாதவிடாயின் 13 முதல் 16 நாட்களில்), இதமான மற்றும் இணக்கமான நிலையில் உடலுறவு நிகழுமாயின், புதிய உயிர் ஜனிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. தாம்பத்திய உறவில் ஏற்படும் அதீத உடல் உஷ்ண பரிமாற்றச் சூழலில் (எரிமலை வெடிப்புக்கு இணையாக) வெளியிடப்பட்ட இலட்சக் கணக்கான விந்தணுக்கள் (எரிமலை குழம்புக்கு இணையாக) யோனி திரவத்தில் (நீர் சூழ்ந்த நிலைக்கு இணையாக) நீந்திச் செல்கின்றன. அத்தனை விந்தணுக்களில் ஒரே ஒரு விந்தணு, சினை முட்டையைத் துளைக்கும் (கருத்தரிக்கும்) போது (ஆகாச சக்தி உட்புகுவது போல்) புதிய உயிர் உருவாகிறது. இந்தக் கருவணுதான் (Zygote) பின்னர் பல செல்லணுக்களாக பெருகி, பெருங் கருவாகி (Fetus) மனிதக் குழந்தையாக பிறக்கின்றோம். ஆக, உயிர் உருவாவது முதல் கருவாகி குழந்தையாக வெளிவரும் வரை பரிணாமத்தின் படிநிலைகளை கடந்துதான் நாம் வருகிறோம் என்றால் அது மிகையில்லை. இதுதான் இறையாற்றலின் விந்தை. பரிணாமத்தின் பதிவு. ஆக, ஆதியில் நிகழ்ந்த பரிணாமத்தின் தன்மை கூட நம் மரபுக்கூறில் பதிவாகி இருக்கும் போது நம் மூதாதையரின் பதிவு கண்டிப்பாக இருக்கும்தானே? ஆக, இந்த விந்தைகள் எல்லாம் நம் மரபுக் கூறில் (Genetic Make-up) இருப்பதால் தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நம் ஜனன மண்டலத்தை கரு மையம் (Genetic Center) என்றும், அதில் பதிவாகும் தன்மையை ஜீவ காந்தம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த மகானின் ஆழ்ந்த அறிவியல் ஞானத்தை நாம் உணர்ந்து வாழ்ந்தால், நம் வாழ்க்கை சிறக்கும்.
  அன்புத் தோழியர்களே! இப்படிப்பட்ட உயிர் ஜனித்த அல்லது கருத்தரித்த ஷணத்தை நாம் எப்படி உணர்ந்து கொள்ள முடியும் என்பதையும், கருத்தரித்த பின் பெண்ணில் ஏற்படும் மாற்றங்களையும் இனி தெரிந்து கொள்வோம்.
  1. கருத்தரித்த ஷணத்தை அறிந்து கொள்ளுதல்: அன்புத் தோழியர்களே! கருத்தரித்த ஷணத்தை அல்லது தினத்தை உணர்ந்து கொள்ள நமக்கு முழுமையான விழிப்புணர்வு வேண்டும். விழிப்புணர்வு என்பது நரம்பும் மூளையும் உணர்வுடன் இருப்பதாகும். விழிப்புணர்வு குறைவாக இருப்பவர்கள், தன் உடலில் ஏற்படும் நோய்த் தன்மைகளை முன்னமே உணராமல் முற்றிய நிலையில் ஸ்கேன் எந்திரம் மூலம் தெரிந்து கொள்ளும் நிலையில் இருப்பார்கள். அன்புச் சகோதரிகளே! தான் கற்பமுற்றதை வயிறு பெரிதானபின் சந்தேகப்பட்டு, மருத்துவரிடம் சென்று, உறுதிசெய்து கொண்டவரையும் நான் வாழ்க்கையில் சந்தித்துள்ளேன். உங்களால் நம்ப முடியவில்லைதானே?. என்னாலும் அப்போது நம்ப முடியவில்லைதான். ஆனால், என் விழிப்புணர்வைத் தட்டிப் பார்த்த போது அது உண்மைதான் என்பதை உணர்ந்தேன். விழிப்புணர்வு அற்றவர்களுக்கு இதுவும் நடக்கும், நடக்ககூடாததும் நடக்கும். உண்மையில் அவ்வித நபருக்கு முறையான மாதவிடாய் சுழற்சி இல்லாமல் இருந்ததும் ஒரு காரணம் என்பதைத் தெரிந்து கொண்டேன். சரி, அதைவிடுங்கள், நாம், நம் விஷயத்திற்கு வருவோம். கருத்தரித்த அந்த ஷணத்தில், உடலில் சற்று அதிகமான வெப்பம் ஏற்படும். இவ்வித வெப்பம் நமக்கு ஒரு உத்வேகம் கலந்த ஆனந்த ஷணத்தைத் தரும். குதூகலமான மனநிலையைத் தரும் தருணமாக அது இருக்கும். இந்த உத்வேகத்தை உணர்பவர்கள் யாராக இருக்க முடியும் என்றால், பசி எடுக்கும் தருணத்தில் உண்டாகும் வெப்பத்தால் ஏற்படும் துன்பம் கலந்த இன்பத்தை உணர்ந்தவர்கள்; உடற்கழிவு (சிறுநீர் மற்றும் மலம்) வெளியேரும் போது உடலில் உண்டாகும் புத்துணர்வை உணர்ந்தவர்கள்; உடலில் ஜுரம் வரப் போவதை அல்லது சளிப் பிடிக்கப் போவதை முன்னமே உணர்ந்தவர்கள் கருத்தரிக்கும் தருணத்தையும் உணர முடியும்.
  2. கருத்தரித்த தினத்தைத் தெரிந்து கொள்ளுதல்: கருத்தரித்த ஷணத்தை உணராவிடினும் கருத்தரித்த தினத்தையாவது உணர முடியும். கருத்தரித்த நிகழ்வை உடலானது சில அறிகுறிகள் மூலம் வெளிப்படுத்துகிறது. முகத்தில் ஒரு வித தேஜஸ் (பொலிவு) காணப்படும். மார்பகமானது இயல்பிலிருந்து சற்று பெருத்தும், மென்மையாகவும் (Tenderness) மாறும். மார்பக முளைக் காம்பானது சற்று தடித்தும், அதன் கருமை நிறம் கூடியும் இருக்கும். இரவும் பகலும் சிறுநீர் அடிக்கடி வரும். புளிப்பாகவும் இனிப்பாகவும் சாப்பிடத் தோன்றும். இவைகளின் மூலம் கருத்தரித்த தினத்தை அறிய முடியும்.
  3. கருத்தரித்ததை மாதத்தை தெரிந்து கொள்ளுதல்: கருத்தரித்த தினத்தை கண்டு பிடிக்காவிடில், மாதப் போக்கு வராமல் இருக்கும் நிலையைக் கண்டு கொண்டு கருத்தரிப்பு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்துவது மூன்றாவது நிலையாகும். இது 10 அல்லது 20 நாட்கள் கடந்தே தெரிய வரும்.
  4. மசக்கை உபாதைகள்: அன்பான தோழியர்களே! கருத்தரித்த பின்பு வெளிப்படும் உடல் மசக்கை உபாதைகள், உண்டாகி இருக்கிறோம் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள நிகழும் அற்புத நிகழ்வாகும். மசக்கை என்பது உண்மையில் ஒரு பெண் தரமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தேவைப்படும் உள் உடல் சூழலை உண்டாக்க பெண்ணின் உயிரானது எடுக்கும் அற்புத முயற்சியே ஆகும். குமட்டல் வருவதானது உடலில் தேங்கிவிட்ட அதிகப்படியான கெட்ட பித்தத் தன்மையை வெளியேற்றும் வழியாகும். இரவும் பகலும் அதிகப் படியான சிறுநீர் போக்கு என்பது தேங்கிவிட்ட நீர்க் கழிவுகளை நீக்க உயிர் எடுக்கும் முயற்சியாகும். அதேபோல், புண்ணோ வலியோ இன்றி வெளிப்படும் வெள்ளைப்படுதல் என்பது கருப்பையில் தேங்கி உள்ள அசுத்தங்களை வெளியேற்றும் செயலாகும். வேண்டாத வாசனைகளுக்கு தும்மல் வருவது என்பது உடலில் உள்ள அசுத்த வாய்வை நீக்க நுரையீரல் எடுக்கும் முயற்சியாலும். மார்பகமும் மார்பகக் காம்பும் தொட்டால் வலிப்பதுபோல் தோன்றும் உணர்வு என்பது நரம்பின் பலவீணத்தை உணர்த்துவதாகும். மசக்கை மயக்கம் என்பது உயிர்த் திணிவும், இரத்தமும், சக்தியும் போதிய அளவில் இல்லை என்பதைத் தெரிவிப்பதாகும். மலச்சிக்கல் இருப்பது போல் தோன்றுவதானது பெருங்குடலானது அதிகப்படியான சத்தெடுக்க அதிக உறிஞ்சுதலைச் செய்ய முற்படுவதைக் குறிக்கிறது. புளி, களிமண் மாங்காய் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றின் மீது ஆசை ஏற்படுவதற்கு காரணம் மண்ணீரல் சக்தியை மாற்றியமைத்து கரு வளர்ச்சிக்கு அதிக சக்தியை அளிக்க வழி காண்பதாகும். அன்புச் சகோதரிகளே! பேருகால மசைக்கை அறிகுறிகளை தடுக்கவோ அல்லது மாற்றவோ முயற்சிக்காமல், அவை சொல்லும் உடல் தன்மைகளை புரிந்துணர்ந்து உடலை ஆரோகியமாக ஆக்க முயலுங்கள். முதலில் மண்ணீரல் மற்றும் கல்லீரல் அழற்சியை நீக்க, செரிமாணத் தன்மையை சீர் செய்ய, சமச்சீர் புரதமும் பி-உயிர்ச் சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பும் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து உடல் கழிவுகளை நீக்க, சி மற்றும் ஈ-உயிர்ச் சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். வெள்ளைப்படுவது ஹார்மோன் பற்றாக்குறையால் வெளிப்படுவது என்று புரிந்து, சமச்சீர் புரதமும் உயிர் மற்றும் தாதுச் சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பும் எடுக்க வேண்டும். நரம்பு உணர்வை அதிகரிக்க ஒமேகா-3 கொழுப்பு மற்றும் ஜின்சங் தாவரச் சத்து எடுக்க வேண்டும். சிறுநீரகங்கள் வளம்பெற காய்-கனி செரிவுச் சத்து எடுக்க வேண்டும்.
  தாய்மை அடைய விழிப்புணர்வாய் இருப்போம்! கருத்தரிக்க உயிர் உடல் இணக்கம் காப்போம்!
  மசக்கை அறிகுறிகளை விழிப்பாய் அனுகுவோம்! உடல் சிக்கல்களை பாங்காய் நீக்குவோம்!

  To buy this book click below…

  b2buy now

  தீரன்சின்னமலை -சின்னமலை மரபு கால்வழிப் பட்டியல்

               தீர்த்தகிரிதான் இவ்வரலாற்றின் நாயகன் தீரன் சின்னமலை. இந்த ஐந்துபேரும் அரண்மனைப் பள்ளியில் முறைப்படி கல்விகற்று வந்தனர். தீர்த்தகிரி ஆசிரியரிடம் என்றுமே பணிவாக நடந்து கொள்வான். ஆங்கிலேயர்களிடம் என்றுமே துணிவாக நடந்து கொல்வான். தமிழ் செய்யுட்களில் வீரச்சுவைப் பாடல்களை மட்டுமே சொல்லுமாறு ஆசிரியரிடம் கோரிக்கை வைப்பான். சிறுவன் சின்னமலையின் வீர உணர்வினைக் கண்ட ஆசிரியர் சங்க இலக்கியத்தில் இருக்கின்ற வீரம் பற்றிய பாடல்களையும், கதைகளையும், நிகழ்ச்சிகளையும் தீரனுக்குத் தத்ரூபமாகக் கற்றுத்தந்தார். தீரனும் மெய்சிலிலிர்க்க அவற்றைக் கற்றான்.

  தொல்காப்பியப் புறத்திணை இயல், சேரன் செங்குட்டுவன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கரிகால் சோழன் போன்ற அரசர்கள் பற்றிய வீரத்தைப் பெரிதும் கேட்டு ரசிப்பான். மூத்தவர் குழந்தைசாமிக்கும், இளையவர் குட்டிச்சாமிக்கும் வீர, தீரப் பயிற்சிகளில் ஆர்வம் இல்லை. தம்பாக் கவுண்டர் என்றொரு பெயரையும் கொண்ட தீரன் சின்னமலை சிறு வயதிலேயே கல்வி கேள்விகளிலும், வாள் சண்டை, தடிச்சண்டை, வில்வித்தை, சிலம்பம், குதிரையேற்றம், தடி வரிசை, பிடி வரிசை, மல்யுத்தம், வாள் போர், சொட்டைப் போர் போன்ற வீர தீரச் செயல்களில் ஆச்சரியம் நிகழ்த்துபவனாக சிறந்து விளங்கினான். தீரன் சின்னமலை கரடி வித்தையில் வல்லவன்.

  தமிழ்மீது தீரனுக்கு மிகுந்த உணர்வு இருந்தது. தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து, தேவாரம், திருவாசகம் எனச் சங்ககால நூல்களைக் கற்றுத் தேர்ந்து தமிழ் உணர்வாளனாக விளக்கினான். இலக்கணத்தையும் திறம்படக் கற்றுத் தேர்ந்தார். கொங்கு மண்ணில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் அனைவரையும் பாராட்டி ஆதரித்துப் பரிசுகள் வழங்கினார். பூந்துறை அம்பிகாபதிப்புலவரின் புலமையைப் பாராட்டி பொற்காசுகளால் அவரைக் குளிப்பாட்டினார்.

  கல்வி மற்றும் தமிழ் உணர்வால் பல தமிழ்க் கவிஞர்களைப் பாதுகாத்துப் பாராட்டி நாட்டுப்பற்றையும், மொழி உணர்வையும் வெளிப்படுத்தினான்.பூந்துறை அம்பிகாபதிப் புலவரிடம் முறையாக கல்வி கற்றான். புலவர் மீது தீரனுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. பள்ளிப்பருவத்திலேயே தீர்த்தகிரி சர்க்கரை எனப் பெயர் பெற்றார். பரம்பரையில் சர்க்கரை என்பது பொதுப்பெயர். புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும் இனிமை செய்து வந்ததால் சர்க்கரை எனச் சிறப்புப் பெயர் பெற்றார்கள். கல்வி, வாள்போர், வில்வித்தை, மல்யுத்தம், சிலம்பாட்டம், தடிவரிசை, குதிரையேற்றம், ஈட்டி எறிதல், மலையேற்றம், உடற்பயிற்சிகள், துப்பாக்கி சுடுதல், கயிறு ஏறுதல், குண்டு எறிதல், கவண் கல் வீச்சு போன்ற வீரவிளையாட்டுக்களை சகோதரர்கள் இருவரும் இளமையில் சின்னமலையுடன் ஆர்வமாகக் கற்றுவந்தனர். இப்போர்க்கலைகளை, முறைகளை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத்தேர்ந்தவர். இளைஞர்கள் அனைவரையும் கற்கச் செய்தனர். சாதாரண இளைஞர்களை தேசப்பற்றுள்ள இளைஞர்களாக மாற்றிக் காட்டினர். கொங்கு மண்டலத்தில் உள்ள ஊர்தோறும் பயிற்சிக் கூடங்கள் அமைத்து பயிற்சிகள் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் தீவிரமாக இதில் சேர்ந்தனர். அந்தப் படையின் மூலம் வழிப்பறித்திருடர்களையும், கொலை கொள்ளையர்களையும் அடக்கித் தடுத்து வந்தார்.

  அரசாண்ட பரம்பரையில் பிறந்த தீர்த்தகிரி சாதாரண இளைஞனைப்போல் தோற்றமளிக்காமல், ஒரு அரச குமாரன் போலவும் அதைவிடத் திறன் வாய்ந்த ஓர் அதிசய இளைஞனாகவே காட்சியளித்தான். மாலை நேரங்களில் ஊர்த் திடலில் தன்னையொத்த இளைஞர்களோடு சிலம்புப்போட்டியில் ஈடுபடுவதும், வாள்வீச்சுப் போன்ற பல போட்டி நடத்துவதுமாக வீர தீரச் செயலில் மிகுந்த ஆர்வம் காட்டி எதிலும் முதன்மையானவனாகத் திகழ்ந்தான். மேலப்பாளையத்தில் உள்ள ஊர் கிணற்றை வேங்கை பாய்வதைப் போல் பாய்ந்து ஒரு புறத்தில் இருந்து மறு புறத்தை அடைவார். நாலுகால் பாய்ச்சலில் ஓடுகின்ற குதிரையில் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று ஏறி அமர்ந்து விடுவார். உண்டிவில்லால் ஒரு சிறு குறிப்பிட்ட இடத்தை எய்துவிடுவார். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, கணீர்க்குரல், தெளிவான பேச்சு, தெளிவான செயல், தொலைநோக்குப் பார்வை, துடிக்கும் கரங்கள், துள்ளுகின்ற மீசை, அநீதியை அழிக்கும் கோபம், நம் மக்கள் அனைவரிடத்திலும் அன்பு, மரியாதை எதையும் எதிர் கொள்கின்ற தோள்கள், போரைச் சந்திக்கத் துடிக்கும் வீர மார்பு என மாவீரனாக தோற்றத்தில் விளங்கினான். ஈட்டி எறிதல், வெடிசுடுதல், கவண் கல் எறிதல், குதிரையேற்றம், வில்- வாள்வீச்சு, சிலம்பம், மல்யுத்தம் என அரச பரம்பரைக்கே உரிய கலைகளைக் கற்பதிலேயே வல்லவராகத் திகழ்ந்தார். தீரனின் அண்ணன் குழந்தைசாமியும், கடைசித் தம்பியுமான குட்டிச்சாமியும் கல்வி கற்பதும், விவசாயம் பார்ப்பதும், தந்தைக்குத் துணையாக இருப்பதுமாக இருந்து வந்தனர்.

  சின்னமலைக்கு அரண்மனைப் பள்ளியில் முறைப்படி கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. வீரம் செறிந்த தமிழ்ச் செய்யுள்களைக் கற்பதில் சின்னமலைக்கு அலாதிப் பிரியம். புறநானூற்றுப் பாடல்களில் வரும் வீரம் செறிந்த நிகழ்ச்சிகளைக் கேள்விப்படும் சின்னமலை அவற்றில் மெய்மறந்து திளைப்பான். தன்னையே மறப்பான். மேலப்பாளையத்தில் இருந்த சிலம்பக் கூடம் ஒன்றில் சின்னமலை பயிற்சி பெற்றான்.

  பயிற்சிக்குப் பின் சகோதரர்கள் மூவரும் குருவை மிஞ்சிய சீடர்கள் ஆகிவிட்டனர். கிணறுகளைத் தாண்டுவது, உண்டை வில்லால் துளையடிப்பது போன்றவற்றில் அவர்களுக்கு ஈடு இணையாருமில்லை.

  ஊர்க்கிணற்றில் மகளிர் மண்குடங்களில் தண்ணீர் எடுத்துச் செல்லும்போது பெரியதம்பியும். கிலேதாரும் உண்டை வில்லில் சுட்ட களிமண் உருண்டைகளைக் கொண்டு துளை செய்வர். குடத்திலிருந்து நீர் வெளிவருவதற்கு முன்பே அத்துளையை பச்சைக் களிமண் உருண்டையால் சின்னமலை அடைத்து விடுவான். துளை செய்வது சாதாரணச் செயல்தான். ஆனால், நீர் கசியும் முன்பு அதை அடைப்பது செயற்கரிய செயல் அன்றோ? குறி தவறுதல் என்பது சின்னமலையிடம் என்றுமே இருந்ததில்லை. நல்ல அகலமுள்ள அந்த ஊர்க் கிணற்றை அலட்சியமாகத் தாண்டுவது தீர்த்தகிரியின் காலை நேரத்துப் பயிற்சியாக அன்று இருந்தது. அரைக்கிணறு தாண்டும் பழக்கம் இந்த வீரப் பிள்ளைக்கு ஒருக்காலும் இருந்ததில்லை! பின்னர் கிணற்றில் நீராடி அருகில் கொலுவீற்றிருந்த பெரிய பிள்ளையாரை பக்திச் சிரத்தையோடு வணங்குவார். மேலப்பாளையத்தில் ஊர்க்கிணறு ஊருக்குக் கிழக்கே இன்றும் உள்ளது. அதிக நீளம் அகலம் உடையது. அக்கிணற்றில் தான் அவ்வூர் மக்கள் தண்ணீர் எடுப்பர். புலிலிப்பாய்ச்சு, உண்டைவில் பயிற்சிகளை அக்கிணற்று மேட்டில் தான் தீரன் செய்து பழகினான்.

  பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தீரன் சின்னமலை அறிவில் சிறந்தவராக, தமிழ்ப்பற்றாளராக விளங்கியதோடில்லாமல் கடையெழு வள்ளல்களின் கொடைத் தன்மையை புரிந்து கொண்டவராகவும் விளங்கி எளியோருக்கும் கொடுத்து வள்ளலாகத் திகழ்ந்தார். சின்னமலை இளமை முதற்கொண்டே தங்கள் அரண்மனையை நாடி வருகின்ற நூற்றுக்கணக்கான புலவர்களுக்கு பொன், பொருள் வழங்கிப் பாராட்டி, அவர்களையும் மகிழச் செய்து தன் குடும்பத்தாரையும் ஆனந்தம் அடையச் செய்வார். தீர்த்தகிரி எங்கு சென்றாலும் அவனது இரு தம்பிகளாகிய பெரிய தம்பியும், கிலேதரும் கூடவே செல்வார்கள். அதே போல் தீர்த்தகிரியின் உற்ற நண்பனாக வேலப்பனும், தளபதியாக குணசீலனும்,கருப்பசேர்வையும் தொடர்ந்து செல்வார்கள்.

  சின்னமலைக்கு முன் கொங்கு மண்ணில் அரசியல்

  சங்க காலத்தில் வேளிர்களால் ஆளப்பட்டது கொங்கு நாடு. அப்போதே நாட்டுப்புறங்களில் இனக்குழுக் குடியரசு முறை செயல்பட்டு வந்தது. பின்னர் கங்கர்கள் சில காலம் இங்கு ஆட்சி நடத்தினர். இதன் வணிக வளத்தையும் இயற்கைச் செல்வத்தையும் கண்ட சேர சோழ பாண்டியர்கள் தொடர்ந்து கொங்கினைக் கைக்கொள்ளப் போரிட்டுவந்தனர்.
  இடைக்காலத்தில் சோழப் பேரரசு கொங்கு மண்டலத்தைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவந்தது. பின்னர் பொன்னர் சங்கர் வழிவந்த கோனாட்டுக் கொற்றவர்கள் கொங்குச் சோழர், கொங்குப் பாண்டியர் என்னும் பெயர்களில் இங்கு நிலையான ஆட்சியை அமைத்தனர். முகமதியர் படையெடுப்பால் தமிழகத்தில் பெருங்குழப்பம் ஏற்பட்டது. அதன் விளைவாகத் தமிழர் ஆட்சி அற்றுப் போய் விசய நகரப் பேரரசின் ஆட்சியும், முகமதியர் ஆட்சியும், மராட்டியர், தெலுங்கர் போன்றவர்களின் ஆதிக்கமும் தமிழகத்தில் காலூன்றின, வேரூன்றியன.

  பிற்காலத்தில் வாணிகம் செய்ய வந்த ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரரும் நிலையற்ற ஆட்சியால் சிதைந்து கிடந்த இந்த நாட்டில் சுரண்டல் ஆட்சி முறையை ஏற்படுத்த முற்பட்டனர். அவ்வகையில் கொங்குநாடு, மைசூர் மன்னர்களின் ஆதிக்கத்திலிருந்து ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்குட்பட்டது. விசயநகர ஆட்சிக்காலம் வரையிலும் கொங்கில் இனக்குழு ஆட்சியும், ஊராட்சி முறையும் சிறப்பாக நடந்து வந்ததை நூற்றுக் கணக்கான கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. “வெள்ளாள நாட்டோம்” “ஊரோம்” “ஊரும் ஊராளிகளும்” என வரும் கல்வெட்டுத் தொடர்கள் இவ்வுண்மையை உணர்த்தும். அவ்வாறே வணிகக் குழுக்கள் தமக்கெனத் தனிப் படையும் தனியரசும் கொண்ட “எறிவீரப்பட்டணங்களையும், அடிக்கீழ்த் தளங்களையும்” உருவாக்கித் தனித்த சுயாட்சியுடன் ஆண்டுவந்தனர். இத்தகைய உரிமையாட்சிமுறை முகமதியர், ஆங்கிலேயர் ஆதிக்க ஆட்சியால் அடியோடு மறைந்தது. விசயநகர மன்னர்கள் பாளையக்காரர்களையும், பட்டக்காரர்களையும் ஏற்படுத்தி இக்குடியாட்சிமுறை நசிந்திடக் காரணமாயினர். எனவே, நூற்றுக்கணக்கான குறுநில மன்னர்களைப் போலப் பாளையக்காரர்களும், பட்டக்காரர்களும் ஆதிக்கம் செலுத்தி வந்ததும் அவர்களுக்கிடையே ஒருங்கிணைந்த ஆட்சி முறை இல்லாமையும் அயலவர்கள் ஆதிக்கத்துக்கு வழிவிட்டது. இவ்வாறு அரசியலில் தனக்கெனத் தனித்த குடியரசு முறையைக் கொண்டு சிறந்து விளங்கிய கொங்கு மண் விசயநகரத்தாரால், முகமதியரால், ஆங்கிலேயரால் தனது தனிச்சிறப்பை இழந்து அடிமையாட்சி முறைக்கு முற்றிலும் அடிபணிய நேரிட்டது.

  கொங்கு நாட்டில் மைசூர் மன்னர் ஆட்சி

  விசயநகர ஆட்சிக்குப்பின் கொங்கு மைசூர் உடையார்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அப்போது மைசூர் மன்னருக்கு உட்பட்ட திண்டுக்கல்லிலில் குதிரைப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த மாவீரன் ஐதர் அலிலி தன் திறமையாலும் தன் அறிவாலும், ஆற்றலாலும் மைசூர் உடையார் மரபு அரசரை கைப்பாவையாக்கி விட்டு மைசூர்ஆட்சியில் அமர்ந்து அரசாளும் உரிமையைத் தான் பெற்றான்.

  அய்தர் அலியின் முகவராக இருந்த அதிகாரிகள் கீழ்க்கரைப் பூந்துறை நாட்டில் குன்றத்தூர் எனப் புகழ் பெற்ற சங்ககிரிக் கோட்டையில் இருந்து வரிதண்டல் செய்து மைசூருக்கு கொடுத்துவந்தனர்.

  குன்றத்தூர் சாவடியிலிலிருந்து கொங்குநாட்டில் அதிகாரம் செலுத்தி வந்தனர். கொங்கு மண்டலத்தில் பல பகுதிகளிலும் வரிவசூல் செய்துவரும் பணம், பொருள்கள், எல்லாம் சங்ககிரிக் கோட்டைக்கு வந்து சேரும். அங்கு தெளிவாகக் கணக்குப்பார்க்கப்பட்டு பின் மைசூர் சீரங்கப்பட்டணம் ஐதர் அலிலியின் தலைமையிலான அரசிற்குச் செல்லும்.

  தீர்த்தகிரி தீரன் சின்னமலையாக உருமாறுதல்

  தமிழகத்திலுள்ள பாளையக்காரர்கள், ஆங்கிலேயர் அதிகாரத்தின் கீழ் அடங்கியிருந்த நேரம் மருது சகோதரர்களைத் தூக்கிலிட்ட பின், பெரிய கிளர்ச்சிக்காரர்கள், போராளிகள் யாருமில்லை.
  ஆனால் கொங்குநாடு மட்டும் ஆங்கிலேயர் ஆதிக்கத்திலில்லை. காரணம் அப்போது கொங்குநாடு மைசூர் திப்பு சுல்தான் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆங்கிலேயருடன் மூன்றாம் மைசூர் போரில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கொங்குநாடு மைசூர் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தது.

  1772ல் கொங்கு நாடு மைசூர் மன்னர் (திப்பு சுல்தானின் தந்தை) ஹைதர் அலியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கொங்கு மண்ணின் வரிப்பணம் சங்ககிரிக் கோட்டை வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. மைசூர் அரசுக்காக வரி வசூல் செய்யும் தண்டல்காரன், கொங்கு சீமைக்கு மைசூர் சாம்ராஜ்யத்தின் திவானாக இருந்த மீராசாகிப் ஊர் தோறும் விவசாயிகளிடம் நிலவரியை வசூலிக்க பல்வேறு குழுக்கள் அமைத்திருந்தார். அந்த குழுக்களில் தாராபுரம், ஈரோடு, காங்கயம், மூலனூர், கோவை ஆகிய பகுதிகளில் தங்கியிருந்து வரி வசூல் செய்து கொண்ட பணத்தை மூட்டையாக சுமந்து கொண்டு சங்ககிரிக் கோட்டைக்கு வரிப்பணத்தை எடுத்துச் சென்றனர். அதை அன்றொருநாள், சின்னமலை மற்றும் அவரது சகோதரர்கள் குதிரையுடன் அறச்சலூர் மலைக்குச் சென்று வேட்டையாடிவிட்டு மேலப்பாளையத்திற்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கும்போது குதிரை மேல் வளம் வந்த தீர்த்தகிரி சென்னிமலை அருகே உள்ள கொடுமணல் என்ற இடத்தில் அவர்களைப் பார்த்தான். மாலை நேரம் காங்கயம் சென்னிமலைச் சாலையில் சில குதிரைவீரர்கள் பெரிய மூட்டை முடிச்சுகளுடன் வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். தீர்த்தகிரியின் கண்களுக்கு இதுவரை பார்த்தறியாத புதுக்குதிரைப்படைப் போர்வீரர்களைப் போல் தென்பட்டனர். குதிரையில் வந்த அனைவரும் புதியவர்களாகத் தென்படவே அவர்களைத் தடுத்து வழிமறித்து நிறுத்தினான்.

  திடீர் என்று மின்னல் வேகத்தில் வந்த தீர்த்தகிரியின் இளம் குதிரை அவர்களை வழிமறித்துத் தடுத்து குறுக்கே நின்றது. அவர்கள் தீர்த்தகிரியின் தோற்றத்தையும், தோரணையையும், பேச்சையும், கட்டுடல் மேனியையும், கணீர் குரலையும், யாருக்கும் எதற்கும் எங்கும் அஞ்சாத அழுத்தமான பார்வையையும் கண்டு அரண்டுபோய், மிரண்டுபோய், பயந்துபோய் குதிரையைவிட்டு கீழே இறங்கி நின்றனர். அடுத்த சில விநாடிகளில் இங்கு என்ன நடக்கப்போகிறதோ என்கிற அச்சம் அவர்களது நடை, உடை, பாவனையில் நன்றாகத் தெரிந்தது.

  நீங்கள் யார்? இதெல்லாம் என்ன? எங்கு செல்கிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? எனத் தீர்த்தகிரி தெளிவாகக் கேட்டான். ஐயா, நாங்கள் மைசூர் மகாராஜா ஐதர் அலி பகதூரின் பணி ஆட்கள். தாராபுரம் கெடியில் ஊராளி வேலாயுதக் கவுண்டரிடம் பணியாற்றுகிறோம். தென் கொங்கு நாட்டு வரிப்பணத்தை வசூல் செய்து சிரஷ்தார் வெங்கிட்டய்யன், அமல்தார் மம்முதலி சாகிப் ஆகியோர் கொடுக்க சங்ககிரி திவான் மீரா சாகிப் அவர்களிடம் கொடுக்கச் சென்று கொண்டிருக்கிறோம் என்று தன்னைப்பற்றி அறிமுகம் செய்தான்.

  என் பெயர் சேனபாகம் சாலி சாகிப், என்னுடன் வருபவர்கள் கல்லய்யன், சின்னப்பன், ராமையன், வீரய்யன் ஆகிய போர்வீரர்கள் என்று தலைவன் சாலி சாகிப் அடக்கத்துடன் தெரிவித்தான். நம்மிடம் நாட்டை ஆளும் திறமையில்லையா? அறிவில்லையா? ஆண்ட பரம்பரையிலும், ஆண்டுகொண்டு இருக்கிற பரம்பரையிலும் வந்தவர்கள். மைசூர் அரசு நம்மை போர் செய்து போரில் வென்றா ஆளுகிறார்கள். பூந்துறை வாரணவாசிக்கும் தாரமங்கலம் கெட்டி முதலிகட்கும் ஏற்பட்ட போரில் இடையில் புகுந்து வஞ்சகமாகத்தானே கொங்குநாட்டை மைசூர் அரசன் பெற்றான். அப்படிப்பட்டவனுக்கு கொங்குநாட்டில் வரி வசூலிக்க என்ன உரிமை இருக்கிறது? மைசூரார் நமது நிலத்தில் உழுது பயிர் செய்தனரா? பயிர்களுக்கு நீர் பாய்ச்சினார்களா? நிலத்தைக் காவல்காத்தார்களா? அறுவடை செய்து களத்தில் தூற்றினார்களா? தாம்படித்தார்களா? ஏர் பூட்டினார்களா? உழவு ஓட்டினார்களா? காளைகளைக் கழுவினார்களா? கஞ்சிக்களயம் சுமந்தார்களா? களை எடுத்தார்களா? நாற்றுநட்டார்களா? வைக்கோல் சுமந்தார்களா? என்னதான் செய்தார்கள். எதுவும் செய்யவில்லை. கொங்குநாட்டை வரி என்ற பெயரில் சுரண்டும் நயவஞ்சகர்களுக்கு இனி இங்கு அனுமதியில்லை. கொண்டு செல்வதை கொடுத்துவிட்டு ஓடிப்போ. கொடுக்க மறுத்தால், தடுக்க நினைத்தால், இனி நான் பேச மாட்டேன். என்னுடைய வீரவாள்தான் பேசும். உங்கள் கழுத்து மீது வீசும் உன் தோல்வியை உலகம் பேசும்.

  உழைத்தவர்கள் நாம், உண்பவர்கள் மைசூர்காரனா? எங்கே இருந்து கொண்டு எங்கே வந்து வரிவசூல் செய்வது. யாரிடம் வரிவசூல் செய்வது.

  ‘ஆளப்பிறந்த இனம் நாம். ஈராயிரம் ஆண்டுளாக நம்மை நாமே ஆண்டு வந்துள்ளோம். இப்போது நமக்கென்ன ஆளத்தெரியாமல் போய் விட்டதா? நாம் ஏமாந்த போது எத்தராய் நுழைந்த மைசூரானை இங்கு விட்டு வைப்பதே தவறு. நமது மக்கள் உழைப்பில் வந்த நமது நாட்டு வரிப்பணம் அயலவனுக்குச் செல்வதா? கூடாது! கூடாது!! கூடவே கூடாது அந்தப் பணத்தை இப்படிக் கொடு! இல்லையேல் உங்கள் தலைகள் உருளும்!“ என்றார் தீர்த்தகிரி.

  கொங்கு நாட்டில் வரி வசூல் செய்து அதை மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்வதை பெரும் அவமானமாகக் கருதி தண்டலைத் தடுத்து நிறுத்தினார்.

  மைசூர் வீரர்கள் சாமி நான் மைசூர் மன்னனின் ஊழியன். நாங்கள் வயிற்றுப்பிழைப்புக்காக அடிமை வேலை செய்கின்றோம். கொங்கு நாட்டில் வரி வசூல் செய்த பணம் எங்கே என்று சங்ககிரியில் உள்ள அதிகாரி கேட்டால் நாங்கள் என்ன சொல்வது என்று தண்டல்காரன் அடக்கமாகக் கேட்க, அதற்குத் தீர்த்தகிரியோ தான் நின்ற வழியின் இருபுறமும் உள்ள மலைகளை இருகைகளாலும் வீரனுக்கென்று உள்ள ஸ்டைலில் சுட்டிக்காட்டி, சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை பிடுங்கிக் கொண்டான் என்று சொல் என்றான். அவனுக்கு வலிமையிருந்தால் போர் முளையில் சந்திக்கச் சொல் என்று சீறினார்.

  அன்றிலிருந்து தீர்த்தகிரி தீரன் சின்னமலை என்று அழைக்கப்பட்டான். இந்த வாசகம்தான் ஹைதர் அலியின் மகன் திப்புவிற்கு ரொம்பவும் பிடித்திருந்தது. கொங்கு நாட்டு மக்கள் யாருக்கும் அடிமைகள் அல்ல. நாங்கள் யாருக்கும் வரி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பெரும் ஆவேசத்துடன் வீரமுழக்கம் செய்தான் தீரன் சின்னமலை.

  மைசூர் அரசுக்கு சென்ற வரிப்பணம் கொங்கு மண்ணைச் சேர்ந்த ஒரு இளைஞன் பிடுங்கிக் கொண்ட செய்தி காட்டுத் தீ போல் எங்கும் பரவியது. செய்தியறிந்த மைசூர் மன்னர் ஹைதர் அலி 19வயது இளைஞன் அரசாங்க வரிப்பணத்தை மடக்கிப் பிடுங்கிக் கொண்டானா என ஆத்திரமடைந்தார். தீர்த்தகிரி சொன்ன அந்த சென்னிமலைக்கும், சிவன் மலைக்கும் இடையே ஒரு சின்னமலை என்ற வார்த்தை மைசூர் மன்னரின் காதுகளுக்கும், அவரது மகன் திப்பு சுல்தானுக்கும், அவரிடம் இருந்த அதிகாரிகள் அத்தனை பேருக்கும், கொங்கு நாடெங்கும் ஏகமாக தொடர்ந்து விடாமல் எதிரொலித்துக் கொண்டே இருந்தது..சின்னமலையின் வீரவரலாற்றில் அன்று முதல் இன்று வரை பெரும் புகழ் அடைந்துள்ளது.

  சின்னமலையின் இந்த வீர முழக்கம் கொங்குநாட்டு இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. வேகமாக இருந்தது. ஆனால் ஏராளமான இளைஞர்கள் சின்னமலையின் போர் பயிற்சிக் கூடத்தில் சேர்ந்தனர். தடுத்துப் பிடுங்கிய மைசூர் அரசின் வரிப்பணமாகிய பணம், பொருள், காசு செல்வங்களை தாய்நாட்டு ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து மகிழ்ந்தான்.

  மன்னிப்பு கேட்டுவிட்டு வீரர்கள் உயிர்பிழைத்ததே அதிசயம் என்றெண்ணி ஓடிவிட்டனர்.
  இச்செய்தி கொங்கு நாடெங்கும் வேகமாக காட்டுத்தீ போல் அணையாமல் பரவியது. நாடெங்கும் சின்னமலை, சின்னமலை என்பதே பேச்சாக இருந்தது. மைசூர் அரசாங்கத்திடம் இருந்து நம்மைக் காப்பாற்ற ஒருவன் மண்ணில் பிறந்துவிட்டான் என்று குடிமக்கள் குதூகளித்தனர்.

  தேசப்பக்தி மிகுந்த சுப்ராயக்கவுண்டர் சின்னமலையை நேரில் அழைத்து வாழ்த்தினார். அதோடு தன் மகளை பெரியதம்பிக்கு மணம் முடிக்கவும் விருப்பப்பட்டார். பெரிய தம்பியும், அவர் மகளை திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தார். திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

  “சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்தே
  துஞ்சிடோம் – இனி – அஞ்சிடோம்
  எந்த நாட்டிலும் இந்த அநீதிகள்
  ஏற்குமோ? – தெய்வம் பார்க்குமோ?”

  To buy this book click below.

  theeranbuy now

  புதிய விடியல் -சாதனை படைக்கலாம் வா…

  சில நாட்கள் வாழும்
  பட்டாம்பூச்சி பட்டாடை தருகிறது
  ஒரு நாள் வாழும
  ஈசல் கூட ஓடிக் கொண்டே இருக்கிறது
  பல ஆண்டுகள் வாழும் மனிதா
  நீ
  பல சாதனைகள் படைக்கலாம் வா

  To buy this book click below….

  b3    buy now