வயது என்பது ஒருவரின் மனதைப் பொறுத்தது. நாம் என்ன நினைக்கிறோமோ அது தான் நமது வயது என்று சொல்வார்கள். அதுபோன்ற மனநிலை உள்ளவர் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன்.

அவர் தனது 80 வது அகவையைக் கொண்டாடிய போது, நெருங்கிய நண்பர் ஒருவர் கூறினார். எடிசன் உங்களுக்கு 80 வயதாகிவிட்டது. உங்களின் ஆராய்ச்சியின் வேகத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இனி நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டு உங்கள் பொழுதை மகிழ்ச்சியாக செலவழியுங்கள். ஏதாவது ஒரு பொழுதுபோக்கைத் தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

அதற்கு எடிசன் நண்பரே நீங்கள் சொல்வது போல எனக்கு அவ்வளவு ஒன்றும் வயதாகிவிடவில்லை. வயது முதிர்ந்த பருவமான 80 வயதிலும் தான் இன்னும் இளமையாக இருப்பதாகவே நினைக்கிறேன் என்று எடிசன் நகைச்சுவையாக கூறினார்.

ஒருவரின் வயது என்பது இந்தப் பூமியில் அவர் வாழ்ந்த ஆண்டுகளை குறிப்பிடுவது. இதில் இந்த வாழ்நாட்களை நாம் எப்படி வாழ்ந்தோம் என்பது தான் முக்கியமானது. வாழ்க்கையின் உச்சத்தை அடையவும், சாதனைகள் நிகழ்த்தவும் நினைப்பவர்களுக்கு வயது ஒரு போதுமே தடையாக இருந்தது கிடையாது.