– 2019 – February | தன்னம்பிக்கை

Home » 2019 » February

 
 • Categories


 • Archives


  Follow us on

  உலக டெக்கான்டோ கூட்டமைப்பு (WTF)

  உலக டெக்கான்டோ கூட்டமைப்பு (WTF) எழுதிய ஒரு கட்டுரையாகும் – விளையாட்டுக்கான சர்வதேச ஆளும் குழு.

  டேக்வாண்டோ மிகவும் முறையான மற்றும் அறிவியல் கொரிய பாரம்பரிய தற்காப்பு கலை ஒன்றாகும், உடல் சண்டை திறன்களை விட கற்றுக்கொடுக்கிறது. இது எங்கள் உடலையும் மனதையும் பயிற்றுவிப்பதன் மூலம் நமது ஆவி மற்றும் உயிர்களை மேம்படுத்துவதற்கான வழிகளைக் காட்டும் ஒரு ஒழுங்கு. இன்றைய தினம், ஒரு சர்வதேச விளையாட்டுப் பொருளாக உருவாகியுள்ளது, அது ஒலிம்பிக்கில் அதிகாரப்பூர்வ விளையாட்டுக்களில் உள்ளது.

  “Tae” “Kwon” “Do.” என்ற வார்த்தையின் அர்த்தத்தை ஒரு நெருக்கமாக பார்ப்போம். கொரிய மொழியில் இது ஒரு சொல் என்றாலும், இது ஆங்கில எழுத்துகளில் காட்டப்பட்டுள்ளது போல் மூன்று பகுதிகளால் ஆனது. “Ta” என்பது “கால்”, “கால்” அல்லது “படிப்படியாக” என்று பொருள்; “குவோன்” என்பது “முள்,” அல்லது “சண்டை” என்று பொருள்; மற்றும் “செய்” என்பது “வழி” அல்லது “ஒழுக்கம்” என்பதாகும். நாம் இந்த மூன்று பகுதிகளையும் ஒன்றாக இணைத்திருந்தால், “டே குவான் டூ” க்கு பின்னால் உள்ள இரண்டு முக்கிய கருத்துகளை நாம் பார்க்கலாம்.

  முதலாவதாக, டை மற்றும் குவோன் ‘கைமுட்டிகள் மற்றும் கால்களைப் பயன்படுத்துவது சரியான வழி, அல்லது உடலின் அனைத்து பாகங்களையும் கைகளாலும் கால்களாலும் குறிக்கப்படும். இரண்டாவதாக, சண்டைகளை கட்டுப்படுத்தவோ அல்லது அமைதியாகவோ அமைதியாக வைத்திருக்கவோ ஒரு வழி. டிக் கோன்னை ‘கட்டுப்பாட்டுக்குள் பிடுங்குவதற்கு’ [அல்லது ‘கைமுட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க’] அர்த்தத்திலிருந்து இந்த கருத்து வருகிறது. இதனால் டைக்வோண்டோ என்பது “சண்டைகளை நிறுத்தி ஒரு நல்ல மற்றும் அமைதியான உலகத்தை உருவாக்க உதவுவதற்காக உடலின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்துவதற்கான சரியான வழி” என்று பொருள்.

  கொய்தாவின் 5000 ஆண்டுகால வரலாற்றோடு டைக்வோண்டோ வளர்ந்து வருகிறது, இது நிச்சயமாக பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. கொரியாவில், டேக்வாண்டோ “சுபாக்” அல்லது “டைக்யுயோன்” என்று அழைக்கப்படும் பாதுகாப்பு தற்காப்புக் கலை என்று தொடங்கி, “சன்பே” என்ற பெயரில் பூர்வ ராஜ்யம் கோகூரோவில் பயிற்சி மையம் மற்றும் மனநிலையைப் போல வளர்ச்சியடைந்தது. ஷில்லா காலத்தில், நாட்டின் தலைவர்களை உற்பத்தி செய்யும் நோக்கில் ஹார்வங்டாவின் முதுகெலும்பாக இருந்தது.தெய்வ்வோண்டோ இன்று மற்ற ஓரியண்டல் நாடுகளில் தற்காப்பு கலைகளை ஒத்திருக்கிறது, அவற்றுடன் சில அம்சங்களைப் பகிர்ந்து கொள்கிறது, ஏனென்றால் அதன் பரிணாம வளர்ச்சியில், ஜப்பான் மற்றும் சீனா போன்ற கொரியாவைச் சுற்றியுள்ள நாடுகளின் தற்காப்பு கலைகளில் இருந்த பல வேறுபட்ட பாணியை அது பெற்றுள்ளது.

  ஆனால் Taekwondo பல போன்ற ஓரியண்டல் மார்ஷியல் ஆர்ட்ஸ் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. முதலில், உடல் திறனுடன் கூடிய திறமைவாய்ந்த இயக்கங்களைக் கொண்டு இயங்குவது மிகுந்த ஆற்றல் கொண்டது. இரண்டாவதாக, அடிப்படை உடல் இயக்கங்கள் மனதில் மற்றும் வாழ்க்கை முழுவதுமாக சிம்பாட்டிக்கோவில் உள்ளன. மூன்றாவதாக, இது மற்றொரு கண்ணோட்டத்தில் மாறும் தன்மையை கொண்டுள்ளது.

  டைக்வோண்டோ ஒற்றுமையைக் கொண்டிருப்பார்: உடலின், மனதில், வாழ்க்கையின் ஒற்றுமை, மற்றும் போஸ் [“பூம்சே”] மற்றும் மோதலின் ஒற்றுமை மற்றும் கீழே விழுதல். நீங்கள் Taekwondo செய்யும் போது, நீங்கள் உங்கள் மனதில் அமைதியான மற்றும் உங்கள் இயக்கங்கள் உங்கள் மனதில் ஒத்திசைக்க வேண்டும், உங்கள் வாழ்க்கை மற்றும் சமுதாயத்தில் இந்த இணக்கம் நீட்டிக்க வேண்டும்.

  இது எப்படி டைக்வோண்டோவில் இயற்பியல் இயக்கங்களின் கொள்கை, மனோதத்துவ பயிற்சி கொள்கை, மற்றும் வாழ்க்கை கொள்கை ஒரே மாதிரியாக மாறும். மறுபுறம், சரியான பூமியே சரியான மோதலுக்கு வழிவகுக்கும், இது இறுதியில் பெரும் அழிவு சக்தியை உருவாக்கும்.

  எப்படி டைக்வோண்டோவில் அத்தகைய ஒற்றுமையை அடைகிறோம்? Taekwondo வாழ்க்கை ஒரு வழி, மிகவும் வேலை ஒரு வேலை, ஒரு குடும்பத்தை உயர்த்தி, ஒரு காரணத்திற்காக போராடும், அல்லது ஏராளமான ஏராளமான ஒன்று. இவற்றில் இருந்து Taekwondo மாறுபட்டது என்னவென்றால், அது மிகவும் விரோதமான சூழல்களில் உயிர்வாழ்வதற்கான செயலாகும். தீங்கு விளைவிக்கும் முயற்சியை எதிரி எப்போதும் வெல்ல வேண்டும்.

  ஆனால் வெறுமனே சண்டையை வெல்வது ஒரு பாதுகாப்பிற்கான உத்தரவாதத்திற்கு போதாது, ஏனென்றால் எதிரி மறுபடியும் மறுபடியும் மீண்டும் தாக்குதல் நடத்தலாம். மேலும், தோற்கடிக்கப்பட்டதைவிட வேறு பல எதிரிகள் இருக்கக்கூடும். நிரந்தர சமாதானத்தை பெறும் வரை யாராலும் பாதுகாப்பாக உணர முடியாது. இந்த நிரந்தர அல்லது நிரந்தர சமாதானத்தை அடைவதற்கு, ஒருவர் ஒற்றுமை தேவை. இதுதான் டைக்நோண்டோ நோக்கம். இல்லையெனில், வேறு எந்த தெரு-சண்டை திறமைகளிலிருந்தும் வேறு எந்த வகையிலும் டேக்வோண்டோ வேறுபட்டதாக இருக்காது.

  Taekwondo அதன் தனிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் இணக்கமான வளர்ச்சி மற்றும் வாழ்க்கை மேம்பாடுகளை தொடர்கிறது. அதனால் தான் டைக்வோண்டோ வாழ்க்கை ஒரு வழி என்று சொல்ல முடியும். இறுதியில் மதிப்புமிக்க உயிர்களை வாழ வழிவகுக்க, Taekwondo இல் ஆழமாக மறைத்து வைத்திருக்கும் வழிகாட்டு நெறிகளைக் கண்டுபிடிப்போம்.

  முடியும் என்று புறப்படு சரித்திரம் போற்றப் பெயரெடு

  வைபவ் குமராவேல்,

  Partner, The Red Box,

  சென்னை.

  நேர்முகம்: விக்ரன் ஜெயராமன்

  தன்னம்பிக்கை உள்ளவர் தன் தேவை என்னவோ அதை நோக்கி மட்டுமே பயணம் செய்து தனது குறிக்கோளை அடையும் வரை ஒரே சிந்தனையுடன் செயல்படுவார்கள். அந்த வழியை சரியாகப் பின்பற்றி வருபவர்.

  நான் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றிப் பெற்றே தீருவேன். எந்தச் செயலையும் சிறப்பாகவும், சென்மையாகவும் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையை நிரம்ப பெற்றவர்.

  பெற்றோர் எவ்வழியே அவ்வழியே பிள்ளைகள் என்பார்கள். ஆனால் இவர் அவ்வழியில் செல்லாமல் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கி அதில் புகழ் கொடியை நட்டுவருபவர்.

  தற்போதைய இளைய தலைமுறையினருக்கு ஒரு முன் உதாரணமாய், 24 மணி நேரமும் இடைவிடா இயந்திரமாய் செயல்பட்டு வரும் THE RED BOX நிறுவனத்தின் PARTNER களில் ஒருவரான வைபவ் குமாரவேல் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு….

  கே:  உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

  நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். எனது பெற்றோர் திரு. குமராவேல், திருமதி. வீனா நேச்சுரல் கேர், ராகா நிறுவனத்தின் நிறுவனர்கள். பள்ளிக்கல்வி என்று பார்த்தால் சென்னை மற்றும் ஊட்டியில் படித்தேன். பள்ளிப்படிப்பை முடித்த கையோடு சிங்கப்பூரில் பிபிஏ படிக்க சென்று விட்டேன். எனக்குப் படிக்கின்ற காலத்திலிருந்தே ஏதேனும் ஒரு தொழில் தொடங்க வேண்டும், அந்தத் தொழில் முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். என்னுடைய தந்தை பிரபலமான தொழில் செய்து வந்தாலும் அத்தொழில் செய்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை.

  கே: நிறுவனம் தொடங்கியது பற்றிச் சொல்லுங்கள்?

  நான் சிங்கப்பூரில் படிக்கும் போது அடிக்கடி நண்பர்களுடன் சாப்பிட வெளியே செல்வது வழக்கம்.  சாப்பிடும் போது அங்கு பரிமாறிய உணவுகள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அவ் உணவை உண்பதற்கு மிகவும் சுவையாக இருந்தது. இதை ஏன் நாம் தமிழ்நாட்டில் செய்யக்கூடாது என்ற எண்ணம் அப்போது என் மனதில் உதயமாயின. அப்படி தொடங்கியது தான் இந்த ரெட் பாக்ஸ் நிறுவனம். ஒரு நான்கு ஆண்டுக்கு முன்னர் சென்னையில் ஒரு சிறிய அளவில் தொடங்கினோம்.

  கே:  ரெட் பாக்ஸ் சைனீஸ் உணவகத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

  நான் ஒரு வேலை செய்வதற்கு முன் பலமுறை யோசித்து செய்வேன். செய்து விட்டால் வெற்றிகரமாக முடிக்காமல் விடமாட்டேன் இது தான் என்னுடைய தாரக மந்திரம். அப்படி என் மனதில் உதயமான இந்த ரெட் பாக்ஸ் சைனீஸ் உணவகம். தற்போதைய சூழலில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை இருக்கிறது. அப்படியிருக்கும் போது அவர்கள் வீட்டிற்கு வந்த உணவை சமைத்து சாப்பிடும் அளவிற்கு நேரம் இருப்பதில்லை.

  இதனால் அவர்கள் உணவகத்தை நாடுகிறார்கள். நல்ல தரமான உணவை வீட்டிற்கு வாங்கிச் சென்று சாப்பிடும் பழக்கம் தற்போது அதிகளவில் இருக்கிறது. இப்படி சாப்பிடும் உணவு அவர்களின் உடலிற்கு எவ்வித தீங்கும் இல்லாத அளவில் இருக்க வேண்டும் என்பதால் தான் இப்படி ஒரு திட்டத்தையே கொண்டு வந்தோம். இதில் நாங்கள் தயாரிக்கும் உணவில் மிகுந்த அக்கரையுடன் தயாரிக்கிறோம். உணவுக் கொடுக்கும் பாக்ஸில் முடிந்தளவிற்கு பிளாஸ்டிக் தவிர்த்து விடுகிறோம். எங்களிடம் நம்பி உணவை வாங்கி உண்ணும் வாடிக்கையாளர்களின் நலனில் மிகுந்த அக்கரை கொண்டு செயல்படுத்தி வருகிறோம். இதனாலேயே எங்களை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆரம்பத்தில் சென்னையில் ஒரு மூன்று இடத்தில் மட்டுமே ரெட் பாக்ஸ் இருந்தது. ஆனால் தற்போது சென்னையில் எல்லா இடத்தில் ஆரம்பித்து விட்டோம். ஆர்டர் செய்த நேரத்திலிருந்து எவ்வளவு சீக்கரமாக அவர்களுக்கு உணவைக் கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கரமாக கொடுத்து வருகிறோம்.

  கே: உங்கள் பெற்றோர் ஒரு புகழ் பெற்ற தொழில் செய்து வருகிறார்கள், நீங்கள் அதே வழியில் செல்லாமல் புதிய தொழில் தொடங்கியதன் காரணம் என்ன?

  எனது பெற்றோர் தொடங்கிய நேச்சுரல்ஸ் கேர் நிறுவனமானது மிகவும் பிரபலமான ஒன்று. அதை அவர்கள் இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் அதற்கு கொடுத்த உழைப்பும் அர்ப்பணிப்பு தன்மையும் அளப்பறியது. எப்போதும் அதன் வளர்ச்சியை பற்றியே மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருப்பார்கள். நேச்சுரல்ஸ் என்றாலே என்னுடைய பெற்றோர்களின் பெயர்களைத் தான் சொல்வார்கள். அதை நான் அடுத்த படிநிலையாக எவ்வளவு பெரிய வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றாலும் என்னுடைய பெற்றோரின் பெயரைத்தான் சாரும்.

  இவர்களைப் போல நாமும் ஒரு தொழில் தொடங்க வேண்டும். அது தொடங்கியது நானாக இருக்க வேண்டும். அதன் வளர்ச்சி என்னைச்  சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.  அப்படித்தான் தொடங்கினேன். அதுவுமின்றி எனக்கு இந்த சலூன் தொழிலில் அவ்வளவு ஈடுபாடு இல்லை, அதே வகையில் உணவுத் தொழிலின் மீது பெரும் ஈடுபாடு இருந்தது. இப்படித்தான் என்னை இதில் ஈடுபடுத்திக் கொண்டேன்.

  கே: ரெட் பாக்ஸ் என்று பெயர் வைப்பதற்கான காரணம் என்ன?

  ஒரு நிறுவனத்தின் பெயர் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருக்கும். இந்த ரெட் பாக்ஸ் என்பது சைனீஸ் உணவை மட்டும் தயாரித்துக் கொடுக்கும் நிறுவனம் என்பதால் இந்த உணவிற்கு என்று  ஒரு பாக்ஸ் தேவைப்படும். அதில் நிரப்பப்பட்ட உணவை தான் பார்சல் செய்து ஆர்டர் செய்பவர்களுக்கு கொடுத்து வருகிறோம்.

  பொதுவாக சைனீஸ் திரைப்படங்களைப் பார்க்கும் போது அதில் அனைவரும் பாக்ஸில் மட்டுமே உணவை உண்பதைப் பார்த்திருப்போம். அந்தப் பாக்ஸ் படத்தைப் பார்க்கும் அனைவரின் மனதிலும் பதியும் படி இருக்கும். சென்னை முழுவமும் நிறைய சைனீஸ் உணவகங்கள் இருக்கிறது. அதில் முற்றிலும் மாறுப்பட்டு செயல்பட வேண்டும் ரெட் பாக்ஸ் என்பது சைனீஸ் உணவைக்குறிக்கும் சொல் என்பதால் அதனாலேயே இந்த ரெட் பாக்ஸ் என்ற பெயரை வைத்தோம்.

  கே:  பெரிய நகரங்களுக்கு மட்டுமே இந்த உணவு முறைகள் சாத்தியமா?

  உணவு  என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று, உபர், சுகி போன்ற நிறுவனங்கள் பெங்களுரூ, ஹைத்ராபாத் போன்ற நகரங்களில் தொடங்கி அடுத்து தமிழ்நாட்டில் பல கிராமப்புற பகுதிகளுக்கு வருவதாக திட்டம் வைத்திருக்கிறார்கள்.

  தற்போது எல்லாப் பொருளையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிப் பயன்படுத்தும் பழக்கம் அதிகளவில் மக்களிடையே பெருகி விட்டது. அதிக விலை கொடுத்து வாங்குபவர்களும் உண்டு, ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு வித பயம் இருக்கும் பொருள் சரியாக வந்து விடுமா? ஓரிஜினலாக இருக்குமா போன்ற ஐயப்பாடுகள் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் இன்றும் கிராமப்புறத்தில் வாழும் மக்கள் இன்னும் கடைக்குச் சென்று தான் வாங்கி வருகிறார்கள்.

  இவர்களுக்கு முதலில் குறைந்த விலையிலான உணவை முதலில் கொண்டு வந்து அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திச் செய்ய  வேண்டும். அப்படி செய்தால் எல்லாப் பகுதியிலும் கொண்டு வந்து விடலாம்.

  கே: எது மாதிரியான உணவுகள் இதில் கிடைக்கும்?

  இதில் முழுக்க சைனீஸ் உணவுகள் மட்டுமே கிடைக்கப் பெறும். அனைத்து விதமான வெரைட்டி உணவுகளும் இருக்கும். 40 முதல் 50 வகையான உணவு வகைகள் இருக்கிறது.

  ஆர்டர் செய்பவர்கள் யாரும் உணவைத் தனித்தனியாக ஆர்டர் செய்ய மாட்டார்கள். தேவையான அனைத்து உணவுகளையும் ஒன்றாகவே ஆர்டர் செய்வார்கள்.

  அதில் மோமோ, சூப் போன்ற உணவுகள் சிறுதானியங்கள் மூலம் செய்யப்படுகிறது. இதில் குறைந்த அளவே எண்ணெய் உடன் தயாரித்துக் கொடுக்கப்படுகின்றன்.

  அது மட்டுமின்றி சிக்கன் லாலிபப், பன்னீர், சில்லி பன்னீர் போன்ற உணவுகள் தயாரித்துக் கொடுக்கிறோம்.  இதில் முதன்மையான உணவு என்னவென்றால் காம்போ தான். இக்காம்போவானது ஒருவர் மட்டும் சாப்பிடும் அளவிற்கு சிக்கன் மற்றும் வெஜ் சம்பந்தமான  ரைஸ் மட்டும் அதில் கிரேவி போன்றவை ஓரே பாக்ஸில் பேக்  செய்யப்பட்டு கொடுக்கப்படும்.

  சென்னை போன்ற பெரிய நகரங்களில் நிறைய பேர் வேலை செய்வதற்கும், படிப்பதற்கும் சொந்த ஊரிலிருந்து இங்கே வருகிறார்கள். அவர்களின் நிறைய பேர் ஹோட்டலை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள். இப்படிப்பட்டவர்களைக் கருத்தில் கொண்டு இந்த முறையைக் கொண்டு வந்தோம்.  அவர்கள் எங்கு வேண்டுமென்றாலும் இப்பாக்ஸை எடுத்துச் செல்லலாம். அந்த அளவிற்கு பாக்ஸ் நன்றாக கவர் செய்யப்பட்டிருக்கும். இவர்கள் எங்கிருந்தும் ஆர்டர் செய்யலாம். அவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு வந்து சேர்ந்து விடும். இதுவே எங்களின் தலையாய நோக்கம்.

  கே: ரெட்பாக்ஸ் குழுவைப் பற்றிச் சொல்லுங்கள்?

  குழு என்பது பலரை ஒற்றிணைக்கும் ஒரு வழி ஆகும். நாங்கள் இதை ஐந்து பேர் கொண்ட குழுக்களாகவே இணைந்து தொடங்கினோம். ஆரம்பத்தில் நாங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி என்னவென்றால் எப்போதும் இதை நாம் ஒற்றுமையாகவே இருந்து செயல்படுத்த வேண்டும். எல்லோரும் ஒரே  பணியைப் பார்க்காமல் எங்களுக்குள் தனித்தனி துறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். அதில் அனிதா அவர்கள் பைனாஸ் துறையிலும், பிரசன்னா அவர்கள் என்னுடனும், ஸ்வேதா, பிந்து இருவரும் மார்கெட்டிங் துறையிலும் இணைந்து கொண்டோம். இப்படி அன்று முதல் இன்று வரை இனி என்றும் தொடர்ந்து வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

  கே: இந்த சைனீஸ் உணவை மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்கள்?

  தரமும் சுவையும், உடலுக்கு தீங்கும் இன்றி கிடைக்கும் உணவை எப்படி மக்கள் மறுக்க நினைப்பார்கள். நாங்கள் எப்போதும் ஆர்டர் செய்து விட்டார்களே அவர்களுக்கு எப்படியும் நேரத்திற்கு ஏதோ ஒரு சுவையில் கிடைத்துவிட்டால் போதும் என்று ஒரு போதும் உணவைத் தயாரிக்க மாட்டோம். ஒரு முறை ஆர்டர் செய்து எங்களின் உணவை ருசித்து விட்டால் அவர்கள் எங்களின் ரெகுலர் கஸ்டமராகி விடுவார்கள். நிறைய பெரிய பெரிய சினிமா நட்சத்திரங்கள், பிரமுகர்கள் என்று எங்களுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஆர்டர் செய்யும் பொழுது யார் என்று எங்களுக்குத் தெரியாது ஆனால் இணைய வழியில் பார்க்கும் போது நிறைய பிரபலங்கள் எங்களின் உணவை சாப்பிடுவதை அறிந்து கொள்ள முடியும்.

  எங்களின் உணவு எப்படித் தரமானதாக இருக்கிறதோ, அதை விட நாங்கள் உணவைக் கொடுக்கும் பாக்ஸ் மிகவும் தரமானதாக இருக்கும். வாங்கும் வாடிக்கையாளர்கள் எப்படிப்பட்ட பயணத்திலும் எவ்வித நெருடலும் இன்றி சகஜமாக சாப்பிடலாம்.

  நிறைய பேர் எங்களிடம் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இவ்வளவு குறைத்த விலையில் எப்படி இவ்வளவு விலையில் பாக்ஸ் உங்களால் கொடுக்க முடிக்கிறது என்று. அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்வது தரம் தான் ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய சொத்து. அதை நாங்கள் எப்போதும் கொடுத்துக் கொண்டே தான் இருப்போம்.

  இந்தப் பாக்ஸை நாங்கள் கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமப் பட்டோம். நிறைய பேரிடம் கேட்டோம். அதற்கு அதிக விலையைக் கூறினார்கள். ஆனாலும் எங்களின் நோக்கத்திலிருந்து ஒரு போதும் பிறழாமல் இதை செய்து முடித்தோம். இதைப் பாராட்டி நிறைய பேர் என்னிடம் நேரடியாக மற்றும் இணையத்தின் மூலமும் சொல்லியிருக்கிறார்கள். இப்படித்தான் மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டதாக நினைக்கிறேன்.

  கே: இத்துறையில் உள்ள சவால்கள் பற்றிச் சொல்லுங்கள்?

  இங்கு சவால் இன்றி சாதிப்பில்லை. சவால்களை எதிர்கொள்ளாமல் இருந்தால் அந்த சாதிப்பில் எவ்வித பயனுமில்லை. அன்றாடம் நம் கண் முன்னே பார்க்கும் எல்லோரும் ஏதேனும் ஒரு தேடுதலை நோக்கி பயணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குள்ளும் ஏதேனும் ஒரு சவால்கள் இருக்கத்தான் செய்கிறது. இது மனித மாண்பு தான் இதைத் தவிர்க்க முடியாது. அந்த வகையில் இத்துறையிலும் சவாலுக்கு பஞ்சமில்லை.

  உணவகத்தில் எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இருக்காது. உணவிற்கு உண்பதற்கென்று நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் தான் உண்ண வேண்டும். சிலர் வேலை நிமிர்த்ததின் காரணமாக நேரம் தாழ்த்தி உண்பார்கள். அவர்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டாம். உணவு இடைவேளையின் போது அனைவரும் ஒரே நேரத்தில் உணவை ஆர்டர் செய்வார்கள். செய்பவர்கள் அனைவரும் ஒரே உணவை ஒரே மாதிரியாக ஆர்டர் செய்வதில்லை. இப்படி ஒரே நேரத்தில் பலதரப்பட்ட உணவை சரியான நேரத்தில் அவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.

  ஒரு சில அலுவலகத்தில் உணவு இடைவேளை என்பது மிகவும் குறுகியதாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் உணவை ஆர்டர் செய்யும் போது குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போது அவர்கள் சாப்பிட முடியும். காலம் தாழ்த்தி கொண்டு சேர்த்தால் அவ் உணவு வீண் என்பதால் சமைப்பவர் முதல் பார்சல் செய்பவர், பில் போடுபவர், ஆர்டர் எடுப்பவர் என அனைவரும் இயந்திரம் போல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.

  அதே போல் பெரிய பெரிய ஐ.டி நிறுவனங்கள் பெரிய அளவில் உணவை ஆர்டர் செய்து விடுவார்கள். அவர்கள் அனைவரையும் உணவில் திருப்தி படுத்த வேண்டும். இப்படி எண்ணற்ற சவால்கள் நிறைந்தது தான் இந்த துறை.

  கே: உங்கள் பெற்றோரிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது.?

  என் பெற்றோர் இருவரும் கடுமையான உழைப்பாளிகள். 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டும் என்றாலும் சற்றும் மனம் தளராமல் செய்வார்கள்.

  ஒரு வேலையை எடுத்துக் கொண்டாலும் அதை முடிக்கும் வரை அதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.. சின்ன வயதிலிருந்தே அவர்களைப் பார்த்து வருகிறேன், அந்த வகையில் அவர்களின் ஒவ்வொரு அசைவையும்  என் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து வருகிறேன்.

  சாதாரணமாக தொடங்கி சலூன் தொழில் இன்று காணும் இடமெல்லாம் காட்சியளிக்கிறது என்றால் அதற்கு அவர்கள் பட்ட இன்னல்களும் வழிகளும் சொல்லால் சொல்லி விடமுடியாது.

  அவர்கள் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் பழகும் விதம் என்னை பல விதத்தில் கவர்ந்திருக்கிறது. அவர்களை போலவே நானும் அதை கடைபிடித்து வருகிறேன்.

  என் பெற்றோர்களிடம் நானும் தொழில் தொடங்குகிறேன் என்ற உடன் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் இன்று வரை  என்னுடைய வாழ்விற்கு ஒரு கலங்கரை விளக்காய் இருந்து என் வாழ்க்கைக்கு நல்லதொரு ஒளியைக் கொடுத்து வருகிறார்கள்.

  என்னிடம் ஆலோசனை கூறும் பொழுது கூட அவர்களின் அனுபவத்தைக் கூறாமல், உன்னால் இது முடியும் செய் என்று கூறி ஊக்கப்படுத்துவார்கள். அந்த வகையில் என்னுடைய பெற்றோர் என்னுடைய வளர்ச்சிக்கு பெரும் ஊன்று கோல் என்று சொன்னால் அது மிகையாகாது.

  கே: உங்களின் எதிர்காலத்திட்டம் பற்றிச் சொல்லுங்கள்?

  நாங்கள் இந்நிறுவனத்தை 2017 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு சிறிய அளவில் தொடங்கினோம். ஆரம்பத்தில் மூன்று அவுட்லெட்டுடன் அமைந்த இந்நிறுவனம் ஓரே ஆண்டில் 50 ஆக உயர்ந்தது. தற்போது பார்த்தால் சென்னையில் இல்லாத இடங்களே எதுவும் இல்லை என்று கூறலாம்.

  அடுத்து எங்களின் திட்டம் கோவை பகுதியில் கொண்டு  வர வேண்டும் என்பதாக இருக்கிறது, அதற்கான இடத்தை எல்லாம் தேர்வு செய்து விட்டோம். அங்கு வெகு விரையில் தொடங்க இருக்கிறோம்.

  அதுபோலவே பெங்களுரூ, ஹைத்ராபாத், கேரளா, கொச்சின் போன்ற இடங்களின் அடுத்தடுத்த தொடங்க திட்டம் வைத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வரும் நாட்களில் தொடங்கி விடுவோம். தற்போது இது மட்டுமே திட்டமாக இருக்கிறது.

  கே: இளைய தலைமுறையினருக்கு நீங்கள் கூற விரும்புவது?

  நானும் ஒரு இளைஞன் தான். இது சாதிப்பு நிறைந்த உலகம். இங்கு சாதிக்க ஏராளமான வழிகள் இருக்கிறது.

  புதிது புதிதாக சிந்தியுங்கள், உங்கள் சிந்தனைக்கு உருவம் கொடுங்கள், அந்த உருவத்தை நடைமுறைப் படுத்துங்கள் அது தான் உங்களின் வெற்றி.

  ஒரு முறை தோல்வியா? அழுது விடுங்கள், மனதில் போட்டு அடக்கி வைத்து விடாதீர்கள், அது உன்னை அழுத்தி விடும். நீ சிந்தும் ஒவ்வொரு கண்ணீர் துளியும் உன் இலட்சியத்தை நோக்கி பெருகெடுத்து ஓட வேண்டும். அப்போது தான் வெற்றியின் மகத்துவம் என்ன என்பதை உன்னால் முழுமையாக உணர முடியும்.

  இந்த இதழை மேலும்

  நினைப்பதே நடக்கும் – 3

  உயிர் பற்றிய துர்நாற்றம் எவருக்குமே உறுத்தவில்லை. உயிர் பற்றிய ஆராரணம் எல்லோருக்கும் வலிப்பதேயில்லை. உயிர் பற்றிய வாசனை யாருக்குமே அதுவாகப் புரிவதேயில்லை. உயிர் அவரவருக்கு அவரவரின் கற்பிதத்தை மட்டுமே போதிக்கிறது. அவரவர் கற்ற கேட்ட வளர்ந்த விதத்தினூடாகவே ஒரு உயிரினை பெரிதாகவும் சிறிதாகவும் காண்கிறது இவ்வுலகம்.

  உயிரோடிருப்பதில் பெரும் வேதனையையும் அவமானங்களையும் அனுபவிப்பது இன்றைய காலக்கட்டத்தில் பெரியோர்களே. அதிலும் கை முறிந்து கால் முறிந்து வீட்டில் படுத்த படுக்கையாய் இன்னலுறும் எத்தனை அம்மா அப்பாக்களை தாத்தா பாட்டிகளை நாம் நன்றாகப் பார்த்துக்கொள்கிறோமென மனசாட்சியோடு ஒரு கணம் எல்லோரும் யோசித்துப் பாருங்கள். கால் கை உடைந்தால் பொதுவாகப் பார்த்துகொள்வோம் தான், ஆனால் இது தான் குத்துக்கல்லாட்டம் இருக்கே, இதுக்கென்ன கேடு என்று எண்ணுபவர்களும் நம்மிடையே இல்லாமலில்லை.

  எது எப்படியோ வீட்டிலிருந்தும், உறவுகளிடமும், நிறுவனங்களிலும் என பல வசவுகளை வாங்கிக்கொண்டும் மறைத்துக்கொண்டும், மனதழுத்தும் பல வலிகளோடும் தான் நாம் ஒவ்வொருவரும் மருத்துவமனை நோக்கி ஓடுகிறோம். நானும் ஓடி அவசரம் அவசரமாக மேல்மாடி சுற்றி ஐந்தாம் தளம் புகுந்து எனது அலுவளுள் ஓடி அமர்ந்தேன்.

  எனக்கு நினைவெல்லாம் வெப்பம் தகித்தது. மருத்துவமனை வாசனை உள்ளே மனசெல்லாம் பரவிக்கிடந்தது. அதிலும் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணொருத்தி கத்தியதும், கால் உதைத்துக்கொண்டு துடித்ததும் கண்ணுக்குள்ளேயே விழித்திருந்தது. எப்படி முனகினாள் அவள். அத்தனை அழகுப் பெண்ணாயினும் பாவம் வலி என்றதும் அக்கம்பக்கம் கூட மறந்துவிடுகிறது அவளுக்கு. எனக்கு மட்டும் முடிந்திருந்தால் கொடம்மா உன் பிள்ளையை நான் பெற்றுத் தருகிறேன் என்று கேட்டு நானே வாங்கிக் கொண்டிருப்பேன். அப்படியொரு வலிபோல் அவளுக்கு. அமர்கிறாள் அமரமுடியவில்லை. நிற்கிறாள் நிற்கமுடியவில்லை. அவ்வளவு இருந்தும் அப்படியொருப் பெண்ணை தனியே மருத்துவமனைக்கு அனுப்பும் ஆண்களை என்ன சொல்வது??!!

  ஆயிரம் கருத்து வேறுபாடோ, பிரச்சனையோ, பிடித்து பிடிக்காதோ போகட்டும்; மரணத்தையும் ஜனனத்தையும் அதனோடு சேர்த்துப் பார்ப்பதற்கில்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணிற்கு ஆற்றவேண்டிய கடைமைதனில் ஒன்று அவளுடைய பிரசவ காலத்தில் அவளை தனது கண்ணாகப் போற்றி காத்துகொள்ள வேண்டியதும். அவ்வளவு வலியில் அவள் துடிக்கையில் ஒரு குழந்தையைப் போல மார்மீது அவளை அணைத்துக்கொள்ளும் கணவனை எந்தப் பெண்ணும் தான் சாகும்வரை தன்வாழ்நாளில் அந்த நெருக்கத்தை மறப்பதில்லை.

  பொதுவாக உதவுவது என்பதே விதைப்பது தானே, நீ ஒன்றை விதைதுப்பார், அதிலிருந்து நூறு முளைக்கும். கொடுப்பதும் அப்படித்தான் திரும்ப இரட்டிப்பாய் கிடைக்கும். எதை கொடுக்கிறோம், யாருக்கு, எவ்விடத்தில் அது நிகழ்கிறது என்பதைப் பொறுத்தே அதன் பலன்களும் மாறுகிறது. எனக்கு எப்போதுமே இதில் ஆழமான நம்பிக்கையுண்டு, எதை கொடுக்கிறோமோ அது கிடைக்குமென்று. எதை நினைக்கிறோமோ அது நடக்குமென்று. அதற்காக உடனே ஜீபூம்பா நான் ஒரு அமெரிக்க அரசனாக ஆகவேண்டும் என்றுக் கேட்டால் இப்போதைய பிரசிடெண்ட் ட்ரம்ப்ட் வந்து நம் தலையில் பெரிய ஒரு குண்டை தூக்கி போட்டாலும் போடுவார்.

  நினைப்பதென்பது நல்லது சார்ந்திருக்க வேண்டும் என்பது இயற்கையின் இயல்பு விதி. எதையும் பிறர் நன்மைக்காக, ஒரு நல்ல நீதிக்கு வேண்டி எண்ணல் வேண்டும். இது செய்தால் நான் நல்லாருப்பேனா என்று நினைப்பதை விட, இதை செய்தால் பிறர் நன்றாக வாழ்வாரா’ என்று எண்ணிச் செய்யுங்களேன், நீங்கள் தானாகவே நன்றாகிப் போவீர்கள்.

  நினைத்தல் என்பது ஒரு செய|ன் ஆணிவேரைப் பிடுங்கி அதை நம் மனதுள் ஆழ நடுவதற்குச் சமம். நட்டால் போதுமா, ஒரு விதையை மண்ணில் அப்படி ஊன்றிவிட்டால் முடிந்ததா? நீர் ஊற்றவேண்டும், வெயில் படவேண்டும்,கற்றடிக்கவேண்டும், தேவைப்பட்டால் உரமும் இடவேண்டும். அப்படிதான் நமது எண்ணங்களும்.

  நினைத்ததோடு நின்றுவிடாமல், அதை முதலில் ஆழமாக நம்பவேண்டும். நம்பி அது நடப்பதற்கான முயற்சிகளை ஏற்பாடுகளை செய்யவேண்டும். நடந்துவர வர அதை மேல்கொண்டுப்போக பெரிதாக முழுதாக உழைக்கவும் வேண்டும். ஆக நம்பி, முயற்சித்து, மேலே உழைக்கவும் துவங்கினால், நினைப்பில் இட்ட விதை முளைத்து செடியாகும், மரமாகும், பூத்துக் குலுங்கும். அதற்கிடும் உரம் தான், அந்த நினைப்பு சார்ந்த நற்கனவுகளும், பிறர் நலமும் பேணும் சிந்தனைகளும்.   எனவே, நினைப்பதை தனக்கு மட்டுமே சாதகமாக நினைக்காமல் ‘இது இப்படி நடந்தா அது அப்படி எல்லோருக்கும் பயனளிக்குமே’ என்பதுபோன்ற பொதுநலன் பற்றிய கனவுகளும் நமக்குள் இருத்தல் வேண்டும்.

  எப்படின்னா “எனக்கு நாளைக்கே ஒரு ரெண்டு கோடி பணம் அடிச்சிடனும், நேரா ஆப்பிரிக்கா காட்டுல போய் செட்டுலாயிடுவேன்னு” கனவு கண்டா பின்னாடி அண்டார்டிக்கா யானை வந்து காரி த்தூனு முகத்திலேயே துப்பும் இல்லையா??!! அப்போ கனவென்பது எப்படி இருக்கணும்? “நான் வளர்ந்தா கூட இருப்பவர்களும் வளர்வார்கள். கூட உள்ளோர் உயர்கையில் தூர உள்ளவருக்கும் உதவி கிடைக்கும். எல்லோருக்கும் உதவி கிடைக்கையில் பாகுபாடு அற்று போகும். பாகுபாடு இல்லையெனில் பெரிது சிறிது இராது. ஆக, தூரத்திலிருந்து என் அருகாமை வரை நல்லோர் புழங்கத் துவங்குவர். நல்லோர் கண்டு நல்லோர் கண்டு ஊர் மெல்ல மாறும். ஊர் மாற மாற நாடு மெல்ல திருந்தும். என் நாடு எனது. என் தேசம் எனது. எனது மக்களுக்கான நன்மை என்னில் இருந்தே துவங்கும். எனவே நான் முத|ல் சரியாக வேண்டும். நான் தூய அன்போடு எல்லோரிடமும் பழக வேண்டும். யாரையும் பழிக்காமல், யாரையும் கெடுக்காமல் நானொரு நதி போல எல்லோருக்குமான சமத்துவத்தோடு பாயவேண்டும். அப்படியொரு சமத்துவ நதியின் கரைகளில் வந்து நீரருந்தும் அனைவருக்கும் பசி தீர, பசியில் அமர்ந்து ஓய்வுகொள்ளும் பல மரங்களும் வளர்ந்து செழிக்க, ஒரு அழகிய வனம் அங்கே எம் ஆதி மனதோடு அமைந்துவிட கனவு விரிபடவேண்டும்.

  அப்படி ஒரு சுகமான கனவு துவங்கும் நாளில் நமக்குள் பேதம் ஒழிந்துப் போவோம். காரணம் என்றைக்கு நாமெல்லோரும் எனக்காக’ என் வீட்டிற்க்காக மட்டுமென்று என்று எடுத்துவைக்க ஆரம்பிடித்தோமோ, பதுக்கிக்கொள்ள பழகினோமோ அன்றிலிருந்து தான் நாம் மறைமுகமாக திருட்டையும் பிறருக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறோம்.

  இந்த உலகம் நான் எனும் ஒரு புள்ளியிலிருந்தே துவங்குகிறது. இங்கு எது ஒன்றுமே தானே நடப்பதில்லை. எது நடக்கவும் நான் காரணமாகிறேன். நல்லதை மட்டுமே சுந்துள்ள காற்று போல இல்லை நான். நல்லதாக மட்டுமே பொழியும் மழையைப் போல் இல்லை நான். நல்லதை நினைத்தாலும் கேட்டதை விதைத்தாலும் எண்ணியதை எண்ணியபடியே அமைத்துத் தரும் இந்த வானும் மண்ணும் போல இல்லை நான். பொதுத்துவததோடு இல்லவே இல்லை நான்.

  வெளிச்சம் தரும் நெருப்பை கூட எரிக்கக் கற்றவன் இந்த நான் தான். அதை தடுக்கமுடிந்தவனும் இந்த நான் தான். இந்த நான் ஒழியுமிடத்தில் மட்டுமே பிறர் நுழைய முடிகிறது. பிறரோடு வாழும் வாழ்க்கைக்கு மட்டுமே வெற்றி தேவைப்படுகிறது, மகிழ்ச்சி தேவைப்படுகிறது, பண்பு தேவைப்படுகிறது, ஒரு வாழ்த|ன் அர்த்தம் துளிர்ப்பது நாம் பிறரோடு சேர்ந்து வாழ துவங்கியப் பின்தான். தனித்து வாழ்க்கையில் அல்ல. பிறகு நல்லதை எண்ணுகையில் மட்டும் தனக்கென எண்ணிக் கொள்வது மட்டும் எத்தகைய சரி? எனக்கு காரு வேண்டும், எனக்கு சோறு வேண்டும், எனக்கு பங்களா வேண்டும்? எனக்கு சாவே நிகழக்கூடாது என்றால், இந்த இயற்க்கை என்ன செய்யத் துணியும் நமை?

  ஒரு உண்மையை மிக அழகாக புரிந்துக்கொள்ளுங்கள்; நமைக் கொல்வது நாம் தான். நமது ஒற்றைச் சுயநலம் தான். என்னை நான் மட்டும் தான் கொல்கிறேன். யார் ஒருவரையும் யாராலும் கொல்லஇயலாது. நமை நாம் தான் கொன்று குவிக்கிறோம்.  நம் சுயநலம் மட்டுமே நமக்கு நம்மையே எதிரியாக்கி சிரிக்கிறது. அந்த சுயநலத்தை வேரருக்கத்தான் ஐயா கௌதம புத்தர் நமை ஆசைபடாதீர்கள் என்றார்.

  ஏனெனில் ஆசை என்பது ஒரு பூஞ்சையைப் போல, அது மனது பாழ்ப்படும்போதேல்லாம் தானே கணக்கற்று முளைத்துக்கொள்ளும். எனவே ஆசையை கொல் என்றுச் சொல்லவில்லை. ஆசையை கொள்ளாதே என்றார். ஆசை அதுவாக துளிர்ப்பது, மேலும் நீ அதிகமாக ஆசைப்படாதே, அது உன்னைக் கொன்றுவிடும் என்றார். அதுவாக உனது வாழ்வுபொருத்து எழும் ஆசைகள் எழட்டும், அது இயல்பாக எழும் இயல்பாக வினை செய்யும்.  மேலும், நீயாக வேறு தனியே ஆசைப்படுவானேன், அது உனை முற்றிலும் உனது ஆசைத் தீக்குள் தள்ளி எழவிடாது மூழ்கடித்துவிடும், எனவே ஆசையற்று இறுக்கப் பழகு என்றார் அந்த புத்த ஞானி.

  ஆக, ஆசையை முற்றிலும் கொன்றுவிடாதீர்கள். ஆசை இயல்பில் வேண்டும். வாழ்வின் இயல்பாக இருக்கும் ஆசை எண்ணவிதைகளை ஆழ்மணத்துள் தூவி பின் மெல்ல பல கிளைகளாக கனவுகளாக ஆசை விரிபட்டு பின் அந்தக் கனவுகள் செயல்களின் காரணிகளாக விரிந்துபோகும். அதற்காக பேராசை கொள்ளாதீர்கள். பேராசை என்பது நமையும் அழிக்கும் நம்மோடுள்ளோரையும் அழிக்கும்.

  ஒரு காட்டில் ஒரு பெரிய குளம் இருந்தது. அந்த குளத்தின் கரையருகே தங்கக் காசுகள் கொட்டிக் கிடந்தன. வெகு நாட்களாக வறுமையில் வாடிய ஒரு பெரியவருக்கு கனவில் அந்த குளம் தெரிகிறது. எப்போதேனும் அந்த குலத்தைக் கண்டுவிட வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொள்கிறார். பிறகு நாடுகள் நகர்கிறது.

  ஒரு வருடம் பத்து வருடங்கள் இருபது வருடங்களென காலம் உருண்டோடி விடுகிறது. பெரியவருக்கு மனதுள் விதைத்த அந்த கனவின் ஆசை இன்னும் மறக்கவேயில்லை. அதை சொல்லிச் சொல்லியே தனது பிள்ளைகளை வளர்க்கிறார். பெரியவரின் நான்கு பிள்ளைகளும் பெரிய ஜாம்பவான்களாக வளர்ந்துவிடுகிறார்கள்.

  பெரியவருக்கு ஒரு பெரிய நம்பிக்கை, எப்படியும் அந்தக் குளக்கரையில் இருக்கும் வெள்ளிக்காசுகள் ஒரு நாள் நமது வீட்டிடையே வந்துசெருமேன்று. அன்றிரவு திடீரென மீண்டும் அந்த கனவு வந்தது பெரியவருக்கு. குளமெங்கும் தங்கக் கட்டிகள். ஐயோ ஐயோ தங்கக் கட்டிகள் கண்டேனே தங்கமாய் தங்கமாய் எங்கும் தங்கத்தை மட்டுமே கண்டேனே என்று எழுந்து புலம்புகிறார்.

  பிள்ளைகள் ஆளுக்கொரு அறையிலிருந்து அப்பா அலறும் சத்தம் கேட்டு ஓடி வருகிறார்கள். அவருக்கு தண்ணீர் குடிக்கக் கொடுத்து படுக்கச்சொல்கிறார்கள். அவர் அதை விடுவதாக இல்லை. அந்த தங்கத்தின் கனவைப் பற்றியே புலம்பித தீர்கிறார். ஒரு கட்டத்தில் இந்தாளுக்கு பயித்தியம் என்றுச் சொல்|விடுகிறது வீடு. வீட்டின் முனுமுனுப்பை ஒற்றிருந்துக் கேட்டு ஊரும் பேச ஆரம்பித்துவிட்டது. பெரியவரை எல்லோரும் பயித்தியமென்று கூற ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் கொஞ்ச நாட்கள் ஆக ஆக பெரியவரை எல்லோரும் “லூசு ரங்கநாதன்” லூசு ரங்கநாதன் என்றே கூப்பிட ஆரம்பித்துவிட்டனர்.

  தனது கனவினால் இப்படி அவருக்கு பெயரே “லூசு ரங்கநாதன்” ஆனது குறித்து பெருவருத்தம் அவருக்கு. நெஞ்சு பொறுக்கவில்லை. ஒருநாள் திடீரென்று கோபம் பொங்கியவராய் விருட்டென்று எழுந்தார். துண்டை எடுத்து தலையில் கட்டிக் கொண்டார். உடல்சூடும் வெயில் தகிக்க அதை பொருட்படுத்தாமல் முறுக்கி மீசையை முறுக்கி மேலேற்றி விட்டுகொண்டு சரக் சரக்கென நடக்கிறார்.

  நடந்து நடந்து சுடுகாடு புகுந்து வேற ஊர் திரும்பி, புதியதொரு காட்டுக்குள் நுழைந்து, கடைசியில் ஆற்றாமை பொறுக்காமல் அந்தக் காட்டிற்கு நடுவே இருந்த கிணற்றுள் விழுந்து விடுகிறார். மூக்கிலும் நாக்கிலும் நீர் ஏறி மூச்சடைத்து கைகால் துடிக்க துடிக்க உயிர் பிரிகிறது. பிள்ளைகள் அவரை தேடியலைந்து, இங்கு போனார் அங்கு போனார், இப்படி பார்த்தேன் அப்படி பார்த்தேனென்று அவரவர்’ கண்டவர் எல்லாம் சொல்ல’ அதை வைத்து ஒவ்வொருவரையாய் கேட்டு கேட்டு நால்வரும் தேடி தேடி பெரியவர் விழுந்த கிணறு நோக்கி வருகிறார்கள். வந்தால் அந்த கிணறு அருகே பெரிய குளம் இருக்கிறது. அந்த கிணறு குளத்தோடு சேர்ந்து இருக்கிறது. அந்தக் குளத்தின் கரையெங்கும் தங்கக் காசுகள் இரைந்துகிடக்கின்றன.

  ஐயோ அப்பா அப்பா என்று அழுது புலம்புகிறார்கள். ஒருவன் சொல்கிறான் ‘தோ அப்பாவோட துண்டு கிடக்குதே, ஒருவேளை அப்பா அநேகம் இந்த குளத்தில் தான் விழுந்திருப்பார் வாங்கடே தேடுவோம்’ என்றுச் சொல்லி எல்லோரும் கிணற்றில் குதித்து குளத்திற்குள் வருகிறார்கள். குளத்தின் உள்ளே எங்கும் தங்கக் கட்டிகள். தங்க வளையல்கள். தங்க ஆபரணங்களும், தங்கத்திலான பொருட்க்களும், பெரிய பெரிய தங்கச் சுவர்களுமாய் குளம் தங்கத்தால் மின்னுகிறது. அதிலொரு தங்கச் சுவற்றின் மீது அப்பா மிக ஒய்யாரமாய் அந்த பரந்தாமனைப் போல பள்ளிகொண்டிருக்கிறார். மொத்தத்தையும் கொண்டுவந்தார்கள் பிள்ளைகள் ஊருக்கெல்லாம் அப்பாவின் பெயர்சொல்| தங்கமாய் தங்கமாய் வழங்கி மகிழ்ந்தார்கள்.

  இதுல பாருங்க; தங்கம் பெரியவருக்கு கனவுல வந்தது. காரணம் அவரோட ஏழ்மையின் ஏக்கத்தில் மனது பாழ்பட உள்ளிருந்து அதுவாகப் பூத்த பூஞ்சைகள் போலத்தான் அவருக்கு கனவில் வந்த அந்த தங்கத்தின் ஆசையும், அந்த கனவும். அந்த இயல்பாக வந்த ஆசை தவறில்லை. அதுபோல் ஒரு நாள் இந்த தங்கமெல்லாம் எனது வீடுவரும் என்று நம்பினார் அதுவும் நடந்தது. எங்கோ கனவில் பார்த்த ஒரு தங்க குளத்தை நிஜமாகவே அடைந்தும் விட்டார். ஆனால் தப்பென்ன யோசித்தீர்களா? அந்த தங்கமெல்லாம் தனக்கே வேண்டும் என்றுக் கண்ட பேராசை, அதற்காக வாழ்க்கையையே தொலைத்தது, அது மட்டுமே இருந்தா போதுமென்றுக் காத்திருந்ததால் கடைசியில் அது மட்டுமே கிடைத்தது, ஆனா வாழ்க்கை போச்சு.

  எது நாம நினைக்கிறோமோ அது தாங்க நடக்கும். எண்ணங்கள் தான் செயல். அதுக்குத்தான் நல்லதை எண்ணவேண்டும் என்பது. யாருக்கும் நல்லதையே நினைக்கவேண்டும் என்பது. ஒரு நதி போல மழைபோல பிறருக்கு நன்மையைச் சேர்க்க ஆசைப்பட்டுப் பாருங்களேன், உங்களை இந்த உலகமே மழையைப் போல நதியைப்போல கொண்டாடவும் துவங்கிவிடும்..

  இன்னும் கொண்டாட நிறைய இருக்கு உலகில்.. எண்ணுங்கள், நல்லதையே எண்ணுங்கள், நல்லதே நடக்கும்.. (தொடரும்..)

  இந்த இதழை மேலும்

  வெற்றி உங்கள் கையில்- 62

  அதிசய நிகழ்வுகள்

  “சிறப்பாகத் திட்டமிட்டுவிட்டேன். என் வெற்றி உறுதிதான்” என்று தனது தௌல்வான திட்டத்தினால் வெற்றியை உறுதியாக்கிக்கொண்டவர்கள் உண்டு.

  “எத்தனையோ வழிகளில் திட்டமிட்டபின்பும், என் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கவில்லையே” என்று ஏங்கித் தவிப்பவர்களும் உண்டு.

  சிறந்த திட்டங்கள் அமைந்தாலும், சிலவேளைகளில் “வெற்றியின் சறுக்கல்கள்” சிலரது வாழ்வில் வந்து விழுந்துவிடுகின்றன.

  சரியாகத் திட்டமிடுதல் ஒருவரின் வெற்றிக்கு அடிப்படையான காரணிதான். இருந்தபோதும் அவர் வாழுகின்ற சூழல் மிக முக்கியமானது. சிலவேளைகளில் சாதகமான சூழல் அமையாவிட்டால், ஒருவரின் வெற்றி பெருமளவு பாதிக்கப்படுகிறது.

  ஒருவரின் வெற்றிக்கான சூழல் மிக அற்புதமாக இருந்தாலும், அவர் சார்ந்திருக்கின்ற சூழலிலுள்ள மற்றவர்களின் திட்டம் அவருக்கு எதிராக அமைந்துவிட்டால், வெற்றி என்பது கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

  இதனால்தான், தனது ‘சுற்றுப்புறச்சூழல்’ சிறந்ததாக மாற்றுவதற்கான முயற்சிகளிலும் ஒருவர் ஈடுபடுவது நல்லது.

  சிலநேரங்களில் சுற்றுப்புறச்சூழல் பிரச்சினைகளை உருவாக்கிவிடும். சுற்றியிருக்கும் நபர்கள்கூட நம்மை சிக்கலில் சிக்கிக்கொள்ள வைத்துவிடுவார்கள். அமைதியாக இருந்தாலும், எதிரிகளாகக் கருதி போருக்கு நின்றிடுவதைப்போல, வெறுப்பின் நெருப்பைக் கக்கிக்கொண்டு சண்டைக்கு வடம்பிடிப்பார்கள். இன்னும்சிலர், சொல்லாததையெல்லாம் “அவர்தான் இப்படி சொன்னார்”. “இவர்தான் இப்படி நடந்துகொண்டார்” என்று மற்றவர்களிடம்போய் கோள்சொல்வார்கள். அங்குமிங்கும் அலையும் கோளாய் இயங்கி, உறவுகளில் கோளாறை உருவாக்குவார்கள்.

  எனவே, வெற்றியைப்பற்றி சிந்தித்து செயல்படுபவர்கள் தங்களைச் சுற்றி நிலவும் சூழலைப்பற்றியும், அங்குள்ளவர்களின் மனநிலையைப்பற்றியும் தெரிந்துகொண்டு செயல்படுவது விவேகமான செயலாகும்.

  அது ஒரு விவசாயியின் வீடு.

  ஒரு குதிரையை பாசத்தோடு வளர்த்து வந்தார் அந்த விவசாயி.

  குதிரைக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கண்போல காத்து வந்தார். குதிரையோடு சேர்த்து ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தார். குதிரையும், ஆடும் நண்பர்கள்போல நன்றாகப் பழகி வந்தார்கள்.

  திடீரென ஒருநாள் குதிரையின் உடல்நிலையில் பிரச்சினை ஏற்பட்டது. மிகக்கொடிய வைரஸ் நோய் அந்தக் குதிரையைத் தாக்கியிருந்தது.

  விவசாயி துடிதுடித்துப்போனார்.

  அருகிலுள்ள கால்நடை டாக்டரை அழைத்துவந்தார். குதிரைக்கு மருத்துவ சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தார்.

  குதிரையின் உடலை நன்கு பரிசோதித்த டாக்டர், குதிரைக்கு மிககொடிய வைரஸ் நோய் தாக்கியிருப்பதை உறுதிப்படுத்தினார். இரண்டு, மூன்று நாட்களுக்கு மருந்து கொடுத்துவிட்டு ஒரு முக்கிய தகவலையும் விவசாயியிடம் சொன்னார்.

  “எனது மருந்து மூன்று நாட்களுக்குள் குதிரையின் நோயை குணமாக்கிவிடும். அதற்குள் அந்தக் குதிரை எழுந்து நடக்கும். இந்த மூன்று நாட்களுக்குள் குதிரை எழுந்து நடக்கவில்லையென்றால், எந்த டாக்டராலும் இந்த நோயைக் குணப்படுத்த முடியாது. நீங்களே அந்தக் குதிரையைக் கொன்றுவிடுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார் டாக்டர்.

  டாக்டரும், விவசாயியும் பேசிக்கொண்டதை அருகிலிருந்த ஆடு கவனித்துக் கொண்டிருந்தது.

  “மருந்து கொடுத்தும் குதிரையின் நோய் சரியாகவில்லையென்றால், நம் நண்பனான குதிரையை கொன்றுவிடுவார்களே” என்று பயந்தது ஆடு.

  டாக்டரின் ஆலோசனையின்படி, குதிரைக்கு மருந்தைக் கொடுத்தார் விவசாயி.

  ஆனால், குதிரைக்கு நோய் குணமாகவில்லை. ஆட்டுக்கு குதிரையின் உயிர்மீது பயம் ஏற்பட்டது. விவசாயி மருந்துகொடுத்து சென்றபின்பு குதிரையிடம் நெருங்கி வந்தது ஆடு.

  “குதிரையே… நீ என் நண்பன். நீ தயவுசெய்து எழுந்து நடக்க முயற்சி செய். உனது நோயைப்பற்றி டாக்டர் பேசும்போது நான் கேட்டேன். நீ ஒழுங்காக எழுந்து நடக்காவிட்டால், நம் முதலாளியான விவசாயி உன்னை கொன்றுவிடுவார். உன்னைக் கொல்லவில்லையென்றால், உனது நோய் மற்ற விலங்குகளுக்கும் பரவி, வைரஸ் நோயை உருவாக்கிவிடும் என்று டாக்டர் எச்சரித்துச் சென்றிருக்கிறார்” என்று ஆடு தனது நண்பனான குதிரையிடம் சொன்னது.

  இதைக்கேட்ட குதிரை அதிர்ச்சியடைந்தது.

  தன்னால் நடக்க முடியாவிட்டாலும், எழுந்துநின்று மெதுவாக அங்கும், இங்குமாக நடந்து பார்த்தது. விவசாயி தனது அருகில் வந்தபோது அந்தக் குதிரை ஓடுவதற்கு முயற்சி செய்தது. இதைப்பார்த்த விவசாயி மகிழ்ந்தார். மறுநாள் டாக்டரை அழைத்து வந்தார். நோயினால் நடக்க முடியாத குதிரை ஓடிய அதிசயத்தைச் சொன்னார் விவசாயி.

  குதிரையை பரிசோதனை செய்த டாக்டர் “நான் கொடுத்த மருந்தினால் உங்கள் குதிரையின் நோய் முழுவதுமாக குணமாகிவிட்டது. இனி பிரச்சினையில்லை” என்றார்.

  விவசாயி மிகவும் மகிழ்ந்தார்.

  “தீராத என் குதிரையின் நோயை நீங்கள் குணமாக்கிவிட்டீர்கள். உங்கள் உதவியை நான் என்றும் மறக்கமாட்டேன். நாளைக்கு எங்கள் வீட்டுக்கு வாருங்கள். உங்களுக்கு பிரியாணி விருந்து வைக்கிறேன்” – என்று சந்தோச துள்ளலில் டாக்டரையும் விருந்துக்கு அழைத்தார்.

  மறுநாள் – குதிரையை ஊக்கப்படுத்திய ஆடு பிரியாணிக்கு சுவை சேர்த்தது.

  “எனது உயிர் போய்விடும்” என்று பயந்த குதிரை உயிரோடு எழுந்து நடந்தது. “எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று மகிழ்ந்த ஆட்டின் உயிர் பிரிந்தது.

  இதுதான் உலக வாழ்க்கையில் சிலநேரங்களில் நிகழும் அதிசய நிகழ்வுகள்.

  “தனது உயிருக்கும் ஆபத்து ஏற்படும்” என்பதை முன்கூட்டியே ஆடு உணர்ந்திருந்தால், அதற்கு உயிர்போகும் பரிதாப நிலை ஏற்பட்டிருக்காது. “நம்மைச் சுற்றியிருக்கின்ற சூழலில் ஆபத்து எந்த வடிவிலும் வரலாம்” என்பதைத் தெரிந்துகொண்டு செயலாற்றத் தவறிய ஆடு உயிரிழந்தது.

  “அசைவ பிரியாணி விருந்துக்கு தானும் இரையாகலாம்” என்பதை முன்கூட்டியே உணர்ந்துகொண்டு தப்பித்துச் செல்லும் முயற்சியில் அந்த ஆடு ஈடுபட்டிருந்தால், உயிர் பிழைத்திருக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கும்.

  ஆனால், விவசாயியின் முடிவை எதிர்பார்க்காத ஆடு பலியானது.

  பிறருக்கு உதவுவதும், மற்றவர்களை உற்சாகப்படுத்துவதும் சிறந்த செயல்தான். அது வெற்றிக்கு துணைநிற்கும் நடவடிக்கைதான். இருந்தபோதும், நமது உயிருக்கும், வெற்றிக்கும் ஆபத்து வரும் சூழல் ஏற்படும்போது மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

  எந்தச்சூழலிலும் எச்சரிக்கை உணர்வோடு செயல்படுதன்மூலம், வாழ்க்கையில் நிரந்தர வெற்றியை நிலைநாட்டலாம்.

  தொடரும்.

  இந்த இதழை மேலும்

  வெற்றியை பாதையில் பயணம் செய்…!

  நீண்ட காலமாக ஒருவர் உழைத்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். செக்குமாடு போல ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தாரே தவிர அவரிடம் திட்டமிட்ட உழைப்பு இல்லை. திட்டமிட்ட உழைப்பு அவரிடம் இருந்திருந்தால், வெற்றிக்கன்னி அவரை வட்டமிட்டு வளைத்துக் கொண்டிருப்பாள்!

  ஒருவர் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் முகவராக அறிமுகப்படுத்தப்பட்டார். முகவர் தொழிலைச் செய்து முன்னுக்கு வரவேண்டும்: படிப்படியாகப் பதவி உயர்வுகளைப் பெற வேண்டும் என்ற ஆசைப்பட்டார். ஆனால் அந்தத் தொழிலைச் சரியாகச் செய்யாததால் அதில் அவர் வெற்றி பெற முடியவில்லை. காரணம், பீல்டு ஆபீசர் இவரை அழைத்த போது, அவரோடு சென்று அவருக்கும், இவருக்கும் தெரிந்த முதலீட்டாளர்களைச் சந்திக்க முடியாமல் போனதுதான்! பீல்டு ஆபீசர் இவரை அழைத்த போதெல்லாம், ‘வேறு அலுவல் இருக்கிறது. நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம்” என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். சோம்பல் அவரை ஆட்டிப்படைத்தது. பீல்டு ஆபீசர் அழைத்தபோது, விடாப் பிடியாக அவரோடு சென்று முதலீட்டாளர்களைச் சந்தித்துப்பேசி உறுப்பினர்களாகச் சேர்த்திருந்தால் நிறைய உறுப்பினர்கள் சேர்ந்திருப்பார்கள். இடைவிடாத உழைப்பு, இவருக்குப் பதவி உயர்வுகளை வழங்கிக் கொண்டே இருந்திருக்கும். எல்லாவற்றையும் இவர் இழந்து விட்டார். முகவராக ஆசைப்பட்டு என்ன பயன்? விடாமுயற்சியும், உழைப்பும், ஆர்வமும் இல்லாமல் போய்விட்டதே! முகவர் பதவியைக் கூட அவர் சில நாட்களில் இழக்கும்படி ஆகிவிட்டது.

  நீங்கள் மிகவும் விரும்பும் தொழில் மீது நாட்டம் கொண்டால், அதிலேயே கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும். ‘இந்தத் தொழிலில் நான் வெற்றிக் கொடி நாட்டியே தீருவேன்!” என்று  மனதில் உறுதி எடுத்துக் கொண்டு, அந்தத் தொழிலை அக்கறையோடு செய்து முயன்று முன்னேற வேண்டும். ஆயிரம் பேர்கள், நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளை அசைப்பதற்கும், அழிப்பதற்கும், கெடுப்பதற்கும் முன்வருவார்கள். இதற்கெல்லாம் நீங்கள் அசைந்து கொடுக்காமல், எவருடைய கேலிப் பேச்சுக்களுக்கும் மனம் வருந்தாமல், மிகவும் பிடிவாதக் குணத்தோடு இருந்து, அந்தத் தொழிலில் வெற்றி காண வேண்டும். எனவே சலிப்படையாமல், நீங்கள் உழைத்துக் கொண்டே இருங்கள். சோம்பலைக் கடலில் தள்ளி விட்டுச் சோர்வடையாமல் பாடுபடுங்கள். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். தளர்ச்சியில்லாமல் உழைத்தால் மட்டுமே உங்களுக்கு வருங்காலத்தில் நல்ல வளர்ச்சி கிட்டும். இதன்மூலம் உங்களுடைய மனம் மிகுந்த மலர்ச்சியைப் பெறும். ‘நான் விரும்பிய துறையில் வெற்றி பெற்றே தீருவேன்!“ என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டு, மெய்வருத்தம் பாராமல் உழைத்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கு வெற்றி எப்படி கிடைக்காமல் போகும்? ‘வெற்றி!  வெற்றி!  என்று முழங்கிக் கொண்டே முன்னோக்கிச் செல்லுங்கள். நீங்கள் கட்டாயம் வெற்றி பெறுவீர்கள்!

  நீங்கள் மிகச்சிறந்த தடகள வீரனாக வரவேண்டும் என்று மிகவும் விரும்புகிறீர்கள். சும்மா ஆசைப்பட்டால் போதுமா? அதில் தீவிரம் காட்ட வேண்டும். ஒலிம்பிக் போட்டிகளில் உலக சாதனை நிகழ்த்தும் போட்டிகளில் நீங்கள் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வாங்க வேண்டுமென்று கனவு காண்கிறீர்கள். அந்தக் கனவை நனவாக்க நீங்கள் இடைவிடாமல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மிகச் சிறந்த பயிற்சியாளரை அணுகி, அவரிடம் பயிற்சி பெற வேண்டும். பயிற்சியாளர் கூறும் அறிவுரைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் முத்தாண்டல் போட்டியிலும், நீளத்தாண்டல் போட்டியிலும், 400 மீட்டர், 800மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள். இவைகளுக்குத் தகுந்த பயிற்சிகளை, உங்கள் பயிற்சியாளர், முறையாகச் சொல்லிக் கொடுப்பார். நீங்கள் நல்ல சக்தியைப் பெற ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். இவைகளெல்லாம் முறையாக நடக்கும் போதே, உங்கள் உள்ளத்தில் வெற்றி வெற்றி பெறுவேன்” என்ற வைராக்கிய விதையை விதைக்க வேண்டும். முறையான பயிற்சிகளும், இடைவிடாத முயற்சிகளும், உழைப்பும், மன உறுதியும் இருக்குமானால், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் நீங்கள் கலந்து கொண்டு, முதலிடத்தைப் பெறுவது மட்டுமின்றி, சிறந்த சாதனைகளையும் படைத்துக்; காட்டுவீர்கள். நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற ‘மாபெரும் வீரர்” என்ற பெருமையையும் பெறுவீர்கள்! இத்தனை வெற்றிகளும், பாராட்டுக்களும் நீங்கள் சும்மா இருந்திருந்தால் வந்திருக்குமா? சும்மா இருந்திருந்தால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடத்தின் வாசலைக்கூட நீங்கள் மிதித்திருக்க முடியாது. உறுதியான நெஞ்சும், கடுமையான உழைப்பும், இடைவிடாத முயற்சியும், தொய்வில்லாத முறையான பயிற்சியும், எவராலும் அசைக்க முடியாத நம்பிக்கையும் உங்களிடத்தில் இருந்தால் நீங்கள் மிகச்சிறந்த வெற்றிகளைப் பெறுவீர்கள்!

  நீங்கள் முயற்சிகளையும், பயிற்சிகளையும் மேற்கொள்ளும்போது, பல இடையூறுகள், எதிர்ப்புகள் ஆகியவைகள் வரத்தான் செய்யும். அவைகளைக் கண்டு நீங்கள் பயப்படவே கூடாது. தேவையில்லாத அச்சம், பதட்டம், உங்களுடைய ஆற்றலையும், சக்தியையும் வீணாக்கி உங்களைத் துன்பத்தில் ஆழ்த்திவிடும்.

  நீங்கள் மேற்கொள்ளும் செயலில் பல இடையூறுகள் வரத்தான் செய்யும். அந்த இடையூறுகளை நீங்கள் துச்சமாகமதித்து, முன்னேறுவதிலே நாட்டம் கொள்ளுங்கள்.  ஆயிரம் இடையூறுகள் உங்களுக்கு  வரட்டுமே அவைகளைக் கடந்து நீங்கள் முன்னேற வேண்டும்.

  நீங்கள் அருமையான குறிக்கோளை மனதிலேவைத்திருந்து, அதைச் செயல்படுத்துவதற்குத் தீவிரம் காட்டுவீர்;கள்! பலபேருக்கு உங்களுடைய குறிக்கோள் பிடிக்காம|ருக்கலாம். அதற்காக நீங்கள் மேற்கொண்ட குறிக்கோளைக் கைவிட்டு விட வேண்டுமா, என்ன? ஒரு போதும் உங்களுடைய குறிக்கோளைக் கைவிட்டு விடாதீர்கள். இந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் பிடிவாதமாக இருங்கள். பலரும் உங்களை விமர்சனம் செய்வார்கள். ‘இவர் வறட்டுப் பிடிவாதக்காரராக இருக்கிறார். இவருடைய கொள்கை சரியில்லை என்று இவரிடம் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள இவர் மறுக்கிறார்.” என்று பலரும் சொல்லத்தான் செய்வார்கள். கொள்கையில்  மிகுந்த நாட்டம் கொண்டு அந்தக் கொள்கையில் வெற்றி பெறுவதற்கு மிகுந்த பிடிவாதமுள்ளவராக இருக்க வேண்டும். நன்மையைத்  தரக் கூடிய இந்தப் பிடிவாதம் மட்டுமே ஒரு மனிதனுக்குக்  கட்டாயம் வேண்டும்.

  ‘உலகிலேயே மிகச் சிறந்த பணக்காரனாக விளங்க வேண்டும்” என்று நீங்கள் நினைத்தால்  அதைத்தவறு என்று சொல்ல முடியாது. முயற்சியும், கடினமான  உழைப்பும், இருந்தால்  நீங்கள் சிறந்த  பணக்காரராக விளங்க முடியும். டாடா, பிர்லா, அம்பானியைப் பின்னுக்குத்  தள்ளி விட்டு நீங்கள் முன்னுக்கு வர முடியும் ‘இந்த உலகத்தை  ஆட்டிப் படைக்கும் கடவுளாக நான் மாற வேண்டும்” என்று  நீங்கள்  நினைத்தால்  இது நடக்கிற காரியமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். தேவையில்லாத இந்த எண்ணங்களை வெட்டியெறிந்து  விட்டு உண்மையான வெற்றியைப்  பெறுவதற்கு, முழுமுயற்சியோடு உழையுங்கள்.

  மிகுந்த இலட்சியத்தோடு நீங்கள் பாடுபடும் போது எவருமே எதிர்பார்க்காத வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்குப் பல இடையூறுகள் வந்த போதிலும், மனதில் உறுதி கொண்டு, வெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்! எல்லோரும் பாராட்டும்படி முழு வெற்றி உங்களுக்குக் கிடைக்கும்.

  இந்த இதழை மேலும்

  மாறாத காலம்

  உலகத்தில் எந்த இடத்திலும் கடிதத்திற்கான காத்திருப்பு ஒன்றுபோலத் தான். கிராமப்புறங்களில் ஒரு ஒற்றை அறை வீட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்தது போஸ்டாபீஸ். ஒரு ஆள் மட்டும் பிரபலமாக இருந்தார் எல்லா இடத்திலும். எல்லா வீடுகளிலும் வரவேற்கப்பட்ட மனிதனாக இருந்தார் போஸ்ட்மேன். கடிதங்கள் எல்லா இடங்களுக்கும் வந்தன.

  ஊரைவிட்டு சென்றவர்களில் வெளிநாட்டுக்கு போனவர்களும், பட்டாலத்துக்கு போனவர்களும் இருந்தார்கள். பட்டாலத்துக்கு போனவர்கள் இருந்த வீடுகளில் தினம் ஏராளமான கண்கள் தெவில் போஸ்ட்மேன் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தன. கடிதங்களும், மணியார்டகளுமாக காக்கிநிற உடையில் போஸ்ட்மேன் படிகள் ஏறிவந்தது. கொங்சநாள் கழித்து, சைக்கிளில் போஸ்ட்மேனுடைய வரவு… சைக்கிள் மணியின் ஒலி வரப்போகும் கடிதங்களின் வரவை அறிவித்தன. ஒரு பிளாஸ்டிக் பையிலும், மிச்சமீதி அளவிலும் இடுக்கிக்கொண்டு சஞ்சரித்தார் போஸ்ட்மேன். மேற்பக்கத்திலும், கீழ்பக்கத்திலும் கிழிந்த இடங்களில் ஒட்டுப்போட்டது நன்றாகத் தெரியும் அந்த காக்கி சட்டையில். சட்டையின் கீழ் இருந்த பாக்கெட்டில் தான் மணியார்டகளுக்கான பணம் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். பெரிய ஒரு கறுப்பு குடை எப்போதும் காவல் தெய்வம் போல கூடவே வந்தது. காக்கித் துணியால் தைக்கப்பட்ட ஒரு துணிப்பையும் கூட வரும். விடுவிடுவென்று ஒரு வேகமான நடப்பு. எப்படியிருந்தாலும், பழைய அஞ்சலோட்டக்காரனாகதானே இருந்தான் போஸ்ட்மேன். ஒவ்வொரு வீட்டின் படிகளுக்கருகில் வரும்போதும், வெறும் இரண்டொரு வார்த்தைகளில் மட்டும் தான் கடிதம் என்றால் சற்று உரத்த குரலில் சத்தம் வரும். ‘மாணிக்கம் பயல் வரான்’.

  மாதத்தில் ஒரு தடவை படிகளில் ஏறி உள்ளே முற்றத்துக்கு வரும்போது தான் இரு தரப்பாருக்கும் சந்தோசம் அதிகமாவது. பணத்தை எண்ணிக்கொடுக்கும் போது, ஒரு சிறிய தொகை போஸ்ட்மேனுக்கு சந்தோசத்தின் அச்சாரமாக தரப்படும். அது லஞ்சம் இல்லை. மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் போஸ்ட்மேனுக்குத் திரும்பத்தரப்படும் நேசம். மொபைலும், இன்டர்நெட்டும், பேக்சும் எதுவும் இல்லாதிருந்த அந்த காலம் கடிதங்களுக்கு இடையேயானதாக இருந்தது. தூரதேசத்தில் இருக்கும் மகனிடம் இருந்தோ, கணவனிடம் இருந்தோ கடிதம் வந்துவிட்டால் அவ்வளவு தான். கடிதத்தில் எழுத்துக்களின் வழியாக ப்ரியமானவரின் சந்தோசத்தில் பிரகாசிக்கும். யுத்தமோ மற்ற ஏதாவது நடக்கும் சமயம் என்றால் கடிதங்கள் வந்துசேர வாரங்களும், மாதங்களும் பிடிக்கும். மனதில் ஒரு ஆயிரம் எண்ணங்களும், வேதனைகளுமான எழுத்துக்களாக காத்திருக்கும் ஒரு நீண்ட நெடிய தவம். ஒவ்வொரு நாளும் கிலோமீட்டர் கணக்காக நடந்து வெய்யில் என்றும், மழை என்றும் பார்க்காமல் சந்தோசத்துக்குரியதோ, துக்கத்துக்குரியதோ தூதனாக வரும் ஊரில் எல்லோருக்கும் பிரியமானவன் ஆவான்.

  முன்பு போஸ்ட்மேன் தன்னுடைய பகுதியில் ஒவ்வொரு வீட்டின் செய்திகளையும், விஷேசங்களையும் நன்றாக அறிவார். மக்களுக்கு மிகவும் விருப்பமான சர்க்கார் ஊழியராக போஸ்ட்மேனாக மட்டுமே இருந்தார். கால்நடையாக பயணம் செய்த போஸ்ட்மேன் முதலில் சைக்கிளிலும், பிறகு இருசக்கர வாகனங்களுமாக கடிதங்களுடன் வரத்தொடங்கினார்.

  அப்போதுதான் தொலைத்தொடர்பு துறை வளரத் தொடங்கியது. எழுதிய கடிதங்களை தபாலில் சேர்க்க, அங்கங்கே தபால் பெட்டிகளும் அன்று இருந்தன. இன்லாண்டும், கவரும் தான் அதிகமாக வந்துபோன கடித உருப்படிகளாக இருந்தன. பழைய காலத்தில் நிறைய பயத்தோடு பார்க்கப்பட்ட விஷயமாக இருந்தது டெலிகிராம். துக்கசெய்தியுடன் டெலிகிராமுமாக வரும் போஸ்ட்மேன் கண்ணீரின் தூதனாக மாறியிருந்தார். ‘டெலிகிராம் வந்திருக்கு’ என்ற தெருவுக்கு செய்தி சொல்ல போஸ்டாபீசிலிருந்து ஆள் வந்தால் காட்டுத்தீ போல அந்த செய்தி ஊரெங்கும் பரவும். பட்டாளத்தில் வேலை பார்ப்பவருடைய வீட்டுக்குதான டெலிகிராம் வந்திருக்கிறது என்றால் ஊர்க்காரர்கள் தாங்களாகவே கூட்டம் போட்டுப் பேசுவார்கள்.

  காலம் எப்படி மாறிவிட்டது? தொலைத்தொடர்பு எத்தனை வேகமாக வளர்ந்திருக்கிறது. போஸ்ட்மேன் அபூர்வத்திலும் அபூர்வமாக வருபவராக மாறிவிட்டார். கிறுக்கல்களின் மொழியில் கடிதங்களாக இருந்தவை என்றைக்குமாக மறைந்து போய்க் கொண்டிருக்கின்றன. இப்பொழுது போஸ்ட்டல் முகவரியை சொல்லச்சொன்னால் யாருக்கும் தெரியாது. எலக்ட்ரானிக் மெயில் முகவரியும், மொபைல் போன் நம்பர்களாகத் தான் இன்று பரஸ்பரம் சொல்வதும், கைமாறுவதும்… ‘அன்புள்ள’ என்று வார்த்தைகளோடு தொடங்கும் கடிதத்துக்கு பதிலாக ‘ஹலோ’ என்ற வார்த்தைகளோடு உள்ள மொபைல் சாம்ராஜ்யம் நம்மை இன்று அடிமைப்படுத்திவிட்டது.

  கடிதத்தை கொடுத்துவிட்டு நகைச்சுவையின் ரசிகனாக இருந்த போஸ்ட்மேன் தமாஷாக சொல்வார்.. இங்கு சுகம். இங்கும் சுகம். அப்புறம் எனக்கா சுகவீனம்? இப்பொழுதோ முக்குக்கு எஸ்.டி.டி பூத்துகள். இன்று எங்கு பார்தாலும் மனிதர்களைவிட மொபைல்போன்களே அதிகமாக இருக்கின்றன. கம்ப்யூட்டர்கள் இன்று சர்வசாதரணமாக ஆகிவிட்டதால் உலகத்தில் எந்த பாகத்தில் இருப்பவரோடும் வெப் காமராக்கள் வழியாக நேரில் பார்பது போல பார்த்து, பேச வசதி ஏற்பட்டதால் எலக்ட்ரானிக் சாதனங்கள் அதிகமாகிவிட்டன. யார் இன்லேண்டும், கார்டு வாங்கி விஷயங்களை எழுதி நேரத்தை வீணாக்குவார்கள்? இதுதான் இக்காலத்தில் சிந்தனையாக உள்ளது. மொபைல்போன்கள் கையில் இருந்து யாரையும் எந்த இடத்தில் இருந்தும் எப்போது வேண்டுமானாலும் கூப்பிடலாம். செய்திகளையும் அனுப்பலாம். மாடியில் கம்ப்யூட்டர்கேம் விளையாடும் மகளை கீழ வந்து சாப்பிட சொல்லக்கூட அம்மா கூப்பிடுவது மொபைலில் sms அனுப்பித்தான்.

  குக்கிராமங்களில் பலசரக்கு கடைகளில்கூட மளிகை சாமான்கள் இருக்கின்றதோ இல்லையோ மொபைல் ரீசார்ஜ் கூப்பன்கள் தாராளமாக கிடைக்கும். இரண்டு கிலோ அரிசியும், இருபது ரூபாய்க்கு ரீசார்ஜ் கூப்பனும் வாங்கும் நிலைக்கு நம்முடைய கிராமங்கள் கூட மாறியிருக்கின்றன. இப்போதுள்ள குழந்தைகளிடம் =போஸ்டாபிசுக்கு போய் ஒரு கார்டு வாங்கி லெட்டர் எழுதி அனுப்பனும்+ என்று சொல்லிப்பாருங்கள். ஏதோ அதிசயத்தை சொல்வதைப்போல உங்களை பார்பார்கள்.

  வழிமீது விழிவைத்து போஸ்ட்மேனுக்காக காத்திருந்த ஒரு காலம். இப்போது எல்லாம் போஸ்ட்மேன் வந்து போவதை நமக்குத் தெரிவதேயில்லை. அரசு அல்லது அது தொடர்பான இடங்ளில் இருந்தோ மட்டும்தான் இப்போ கடிதங்கள் என்ற பெயர் தாங்கி செய்திகள் வருகின்றன. மற்றதெல்லாம் இப்போது ஆன்லைன் வழியாகத்தான். கொரியர் கம்பெனிகளின் ஆக்கிரமிப்பும் கூடிவிட்டதால் போஸ்ட்மேனுடைய கை வழியாக வரும் கடிதங்கள் அபூர்வமாகிப்போய்விட்டன. ஆனால், சில சலுகைகளும், மான்யங்களும் உள்ளதால் பிரசுரங்கள் எல்லாம் தபால் வழியாக வருகின்றன. எல்லா வீடுகளிலும் தபால் போன்றவற்றுக்காக பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதால் அதிசயமாகக்கூட நாம் தபால்காரரை காணமுடிவதில்லை. என்றாலும் நினைவுகளின் அடித்தட்டில் கையில் கடிதக்கட்டுகளுமாக நடந்து போகும் நரைத்த தலையும், காக்கிசட்டையுமாக காட்சியளிக்கும் தபால்காரரைக் காணலாம். அவர்களுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். வீழ்ந்து போகாத சேவையுடன், கடமை தவறாமல் எடுத்துக்காட்டுக்காக இருக்கிறார்கள்.

  கடிதங்களுக்காக காத்திருந்த காலம் போல இனியொரு காலம் வருமா? ஒரு மகோன்மத சேவையின் மாதிரியாக விளங்கிய அந்த காலம் என்றென்றும் வாழட்டும் நம் நினைவுகளின் வழியாவது.

  இந்த இதழை மேலும்

  உண்மை உன்னை உயர்த்தும்

  எங்களுக்கு நிகரான பதவி, பணம், புகழ் செகுசு, சுகம், சொத்து, ஆபரணங்கள் இன்னும் தங்களுக்கும் பிடித்ததும் விரும்பியதும் தருகின்றோம்; எங்களை எதிர்ப்பதை விட்டுவிட்டு எங்களுடன் இணைந்துவிடுங்கள் என்று ஆங்கிலேயர் ஆசைக்காட்டியபோது, இதெல்லாம் எங்களது கால் தூசிற்கும், செருப்புக்கம் கூடச் சமமில்லை. வேறெதுவும் வேண்டாம். கொண்ட நீதிக் கொள்கையாகிய சுதந்திரம் மட்டுமே வேண்டும்.  உம்மால் இதைக் கொடுக்கமுடியுமா? கொடுக்காவிட்டால் சாகும் வரை இப்படியே போராடுவோம் என்று வெள்ளையனின் கேள்விக்குப் பதில் சொன்னதனால் தான் பின்பு தூக்கிலிடப்பட்டு வீர மரணம் அடைந்தனர்.

  சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய எண்ணற்ற படை வீரர்களுக்கு நடுவில் தூக்கு மேடையில் நிற்க வைத்திருந்த வேலையிலும் ஆங்கிலேயக் கூலிப்படை என்றழைக்கப்படும் ஆங்கில அரசுப்படை சிப்பாய்க் காவலர்கள் அருகில் வந்து தூக்குக் கயிறை தன் கழுத்திலும் மாட்டிவிட்ட பொழுது, இனி வேறு வழியில்லை செத்துத்தான் ஆகவேண்டும்  என்று இருந்த சூழ்நிலையிலும் சிங்கமெனக் கர்ஜித்து எதிரி வந்து மாட்டிய அக்கயிறை அடுத்தவனை மாட்டவிடாமல் வீரபாண்டியனும், சின்னமலையும், தாங்களே மாட்டிக்கொண்டனர்.  உயிருக்குப் பயந்தஞ்சியவர்கள் நாங்கள் அல்ல என்பதைக் காட்ட இதைச் செய்தனர், இப்பொழுதும் கூட மரபுப்படி கடைசி ஆசை என்னவென்று கேட்டதற்கு சுதந்திரம், சுதந்திரம்,விடுதலை விடுதலை என்றனர். நம் கட்டளையை ஏற்று கட்டுப்பட மாட்டார்கள் என்பதையறிந்த வெள்ளையன் கொதித்தெழுந்து அவர்களைத் தூக்கிலிட ஆணையிட்டான்.  வெறும் கயிறு இறுதியில் மரணம் கயிறாகிறது. இருவரது உயிரைக் குடித்தது. இருவரும் இறந்தனர் மீண்டும் பிறப்பதற்காக மடிந்து கிடந்த மாவீரர்களது பிணத்திற்குப் பக்கத்தில் நெருங்கவும், பேசவும் கூட  அஞ்சினான் ஆங்கிலேயன்.  இறந்த இவர்களது  உடலில் இன்னும் வீரம் இருக்கும் என்பதற்காக.

  ஆங்கிலேயனும் அது தூக்குமேடை இவர்களுக்கே அது வீர மேடை நீதியைக் கொல்லாமல் உன் இலக்கை வெல்லவேண்டும். உனது உயர்வு உண்மையான  வெற்றியாக அமைய வேண்டும்.

  நியாயமில்லாமல் ஒன்றை வென்று வாழ்வதைவிட, நீதியான நியாயமான ஒன்றைப் பெறுவதற்குப் போராடிச் சாவதே மேல்.

  வெற்றி நியாயமான வெற்றியாக இருக்கவேண்டும்  தோல்வி நீதியான தோல்வியாக இருக்கவேண்டும். அதுதான்  சமூகத்தார் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படும். மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளிலும் உயிர் போகும் போர் நிலையிலும் கூட நியாயத்தைக் கைவிட்டு விடாமல் சாவதானாலும் ஆவதானாலும் செயல்பட வேண்டும்.

  உணவுக்கே வழியில்லையென்றாலும் உண்மையை விட்டு விடலாகாது நாணயமான சாதனையைத்தான் நாளைய சமூகம் ஏற்கும்.

  மாவீரன் தீரனும், கட்டபொம்மனும் இறந்தாலும் அவர்கள் நட்டும் விட்டும் வைத்த சமூக நீதியான இலட்சியம் இறக்கவில்லை நீதி – அநீதிக்கிடையிலான போர் ஆட்டத்தில் இறுதியில் நீதியே அநீதியை வென்றது நீதியே ஜெயிக்கும்  என்பதற்கான தக்க சான்றும் இதுவே.

  கஷ்டம்  வருகிறது என்பதற்காக (கடமையை) கொள்கையை மாற்றவும் அநீதியான வழியில்  நடக்கவும் கூடாது.

  நிம்மதி இல்லையா?

  உலக வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள் உண்மையாகவும் நுண்மையாகவும் நேர்மையாகவும் தமது இலட்சியத்துக்காக வாழ்ந்த மகாத்மா காந்தி, நேதாஜி  சுபாஸ் சந்திரபோஸ், வல்லபாய்பட்டேல், வ.உ.சி. திலகர் போன்ற வரலாற்றவர்கள் நிம்மதியாகவும்  மகிழ்ச்சியாகவும் வாழ்ந்ததாகவும், மறைந்ததாகவும் சரித்திரம் இருக்காது. அதுபோல்தான் உங்களது வாழ்க்கை வரலாறும் அமைந்திருக்கும் வருத்தத்தை நினைத்து வருத்தப்படத் தேவையில்லை. துன்பத்தை எண்ணித் துன்பப்பட வேண்டாம். நிம்மதி இல்லை என்று கருதி  இருக்கிறது நிம்மதியையும் அழிக்கவேண்டாம்.

  நேர்மறையாகச் சிந்தியுங்கள்

  எதிலும் நேர்மறையான சிந்திக்கும் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்துக்கொள்ளுங்கள். நேர்மறையாகச் சிந்திக்கும் விசயங்கள் அனைத்தும் இறுதியில் உறுதியாக வெற்றி பெறும். எதிர்மறை எண்ணத்தை அகற்றி நேர்மறையாகச் சிந்தித்தீர்களானால் தொட்ட காரியங்கள் அனைத்திலும் எதிலும் வெற்றிபெற்று விடுவீர்கள். இப்படி சிந்திக்கும்பொழுது தான் எளிதிலும், மிக வேகமாகவும் செய்கின்ற செயலில் வெற்றி என்பது கிட்டும். இதில் சொல்லியிருக்கும் வெற்றியாளர்கள் அனைவரும் நேர்மறையாகச் சிந்தித்துச் செயல்பட்டவர்கள். ஒருபோதும் இவர்கள் எதிர்மறையாக சிந்தித்ததில்லை.

  வாழ்க்கை

  காதல், காமம் போன்றதுதான் வாழ்க்கை என்பதல்ல எண்ணற்ற விசயங்களால் பின்னப்பட்டவைதான் வாழ்க்கை என்பது. இன்பம் மட்டும்  நமக்கு சொந்தமானதல்ல, வெற்றி தோல்வி, துன்பம், தொல்லைகள், சிக்கல்கள், கச்சரவுகள், பிரிவினைகள் என்பதும் மனிதருக்குச் சொந்தமானவைதான். மட்டுமல்ல மைனஸ் என்பதும் மனித வாழ்க்கைக்குச் சொந்தமானதுதான் . இதில் எது வந்தாலும் வந்தபொழுது வரவேற்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  புகழ்ச்சி – இகழ்ச்சி

  தற்புகழ்ச்சிக்கு மயங்காதே, இகழ்ச்சிக்கு இடம் கொடுக்காதே புகழ்ச்சிக்கு மயங்கியவர்களும் இகழ்ச்சிக்கு இடம் கொடுத்தவர்களும் எதையும் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியாது. சமுதாயம் உன்னைப் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் இகழ்ந்து மட்டம் தட்டிப் பேசினாலும் அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டாம்.  காதில் வாங்கி கொள்ளவேண்டாம்.  அரசியல்வாதிகள் உட்பட பெரிய பெரிய தொழில் அதிபர்களுடன் யாம் பேசும்பொழுது நீதான் சிறந்த இளைஞன் உன்னுடைய சேவை சொல்வதற்கரியது. சிறு வயதிலேயே பத்திரிகை உலகில்  பத்திரிகைத் துறைக்குள் கால் வைத்த இளைஞனும் நீ தான் மாவட்ட மாநில அளவில் கணக்கிட்டால் கூட மிக சிறந்த வேகமான இளைஞனாக நீதான் வருவாய். உன்னுடைய இனத்தில் உன்னை வைத்துப் பார்க்கும்பொழுது எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கிறாய் என்றெல்லாம் பலபேர் என்னைப் பாராட்டியப்போதும் என்னை ஆணவத்துடன் உயர்த்திக் கொண்டதுமில்லை. பகைவர்களின் பேச்சில் தாழ்த்திக்கொண்டதில்லை. என்றும் நான் என நிலையிலேயேதான் உள்ளேன். எதற்குச் சொல்கிறேன் என்றால் ஊருக்கு உபதேசம்  என்று ஆகிவிடக்கூடாது அல்லவா அதற்குத்தான்.

  இந்த இதழை மேலும்

  வாஸ்து சாஸ்திரம்

  தேவர்களின் தச்சனான விஸ்வகர்மவினால் உருவாக்கப்பட்டது வாஸ்து சாஸ்திரம். எந்த ஒரு இடத்தையும் வாஸ்து முறைப்படி நல்ல இடம்தானா என்பதை ஆராய்ந்து அதன் பிற்கே வாங்க வேண்டும்.வாஸ்து பகவானுக்கு உரிய பூஜைகள் செய்த பிறகே வீடு கட்ட வேண்டும். காலி மனை இடம் வாங்கவாஸ்து தேவை இல்லை.வீடு வாங்க உள்ள இடத்தில் உத்தமமான பூமியை தேர்வு செய்ய வேண்டும்.அருகில் நிறைய ஜனங்கள் வசிக்க வேண்டும். பசுக்கள் வசிக்க வேண்டும்.உண்டு புசிக்க தகுந்த காய்,கனிகளை தரும் காற்றோட்டம் தரும் செடி,கொடிகள் அந்த பகுதியில் இருக்க வேண்டும். நெல் வயல்கள்,ஓங்கி உயர்ந்த  மலைகள்,கடல்,ஆசிரமம்,மயானம் மிக அருகில் இருக்க கூடாது. கிழக்கு மூலை(இந்திரன்) தாழ்ந்து,மேற்கு மூலை(வருணன்) உயர்ந்திருக்கும் நிலப்பகுதி கோவீதி எனப்படும்.இங்கு வீடு கட்டினால் வளம் பெருகும்.

  அபிவிருத்தி கிடைக்கும். கிழக்கு மூலை உயர்ந்து மேற்கு மூலை தாழ்ந்து இருக்கும் பகுதி ஜல வீதி எனப்படும்.

  இங்கு வீடு கட்டக்கூடாது. தெற்கு மூலை உயர்ந்து வடக்கு மூலை  தாழ்ந்து இருக்கும் பகுதி கஜ வீதி எனப்படும்.இங்கு வீடு கட்டுவது மிகவும் நல்லது. ‘வடகிழக்கு மூலை (ஈசானியம்)சற்று உயர்ந்து தென்மேற்கு தாழ்ந்து  இருந்தாலும்(நிருதி)அங்கே வீடு கட்டுவது உசிதமல்ல.இந்த நிலம் பூத வீதி எனப்படும்.தென் கிழக்கு மூலை (அக்னி) உயர்ந்து வடமேற்கு மூலை (வாயு மூலை) தாழ்ந்து இருந்தாலும் அங்கே வீடு கட்டக்கூடாது.இது நாக வீதி எனப்படும். வாயு மூலை உயர்ந்து அக்னி மூலை தாழ்ந்து இருந்தாலும் வீடு கட்டக்கூடாது.இது அக்னி வீதி எனப்படும்.அதே சமயம் நிருதி மூலை

  உயர்ந்து ஈசானியம் தாழ்ந்து இருக்கும் பகுதி, தான்ய வீதி எனப்படும்.

  அசுப இடங்களில் அதற்குரிய பரிஹாரங்கள்,ஹோமங்கள் முறையாக  செய்து,உரிய பலிகளை கொடுத்த பின்னர்தான் பணிகளை துவக்க வேண்டும். ஜோதிட பிரம்ம ரகசியத்தின் படி சித்திரை மாதம் வீடு கட்டினால் சுகமாக இருக்கும்.வைகாசியில் தன விருத்தி ஏற்படும்.ஆனியில் வீடு கட்டக்கூடாது. ஆடியில் சுபத்தை கெடுக்கும்.ஆவணியில் வீடு கட்டினால் வேலைக்காரர்கள் கிடைக்க மாட்டார்கள். புரட்டாசியில் வீடு கட்டினால் வியாதி வரும். ஐப்பசியில் கட்டுவது விஷேஷம்.கார்த்திகையில் கட்டினால் நிறைய பணம் வரும். மார்கழியில் கட்டக்கூடாது. தையில் கட்டினால் எண்ணியதெல்லாம் நிறைவேறும். மாசியில் கட்டினால் ரத்தினங்கள் சேரும்.பங்குனியில் வீடு கட்டக்கூடாது.

  மனை கட்ட அதிபதி வாஸ்து புருஷன். அவர் நித்திரை விடும் நேரத்தில் வாஸ்து பூஜை செய்வது நல்லது.

  சித்திரை 10 தேதி-5 நாழிகைக்கு மேல்

  வைகாசி 21தேதி -8 நாழிகைக்கு மேல்

  ஆடி 11 தேதி -2 நாழிகைக்கு மேல்

  ஆவணி 6 தேதி-21 நாழிகைக்கு மேல்

  ஐப்பசி 11 தேதி-2 நாழிகைக்கு மேல்

  கார்த்திகை 8 தேதி-10 நாழிகைக்கு மேல்

  தை மாதம் 12 தேதி-8 நாழிகைக்கு மேல்

  மாசி மாதம் 22 தேதி-8 நாழிகைக்கு மேல்

  வாஸ்து புருஷன் 3 தீ நாழிகை எழுந்து விழித்திருப்ப்பார்.மொத்தம் 90

  நிமிஷம்.கடைசி 36 நிமிஷம் போஜனம்,தாம்பூல தாரணம்செய்யும் நேரத்தில்

  பாலக்கால் போட்டு பூஜை செய்வது மிக நல்லது. தங்கு தடையின்றி வீடு கட்டும் பணி நடக்கும். வடக்கில் இருந்து செல்வம் வரும் என்பதால் அந்த பக்கத்திலும் வட கிழக்கிலும் பெரிய மரங்களை பயிரிட க்கூடாது.எமன் மற்றும் வருணன் இடமிருந்து காப்பாற்ற  தெற்கிலும்,மேற்கிலும் உயரமான  பலமான கட்டுமானங்கள் தேவை. வீட்டின் உயரமான பகுதி தென்மேற்கிலும்,தாழ்வான பகுதி வடகிழக்கிலும் அமைய வேண்டும். கிழக்கு,வடக்கு திசைகள் முக்கியமானவை.சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது.உடலுக்கு நன்மை தருவது.காலை வேளையில் சூரிய கதிர்கள் அதிகவெளிச்சத்தையும்,குறைவான வெப்பமும் தரும். எனவே கிழக்கு திசையில் கதவுகளும் ஜன்னல்களும் சூரிய ஒளியை வீட்டினுள் ஊடுருவ செய்யும். மேற்கிலும்,தென்மேற்கிலும் அடர்த்தியான சுவர்கள் குறைந்த ஜன்னல்கள் சூரியனின் புற சிகப்பு கதிர்களை தடுக்கும்.

  வடக்கில் தலை வைத்து தூங்க கூடாது,தூக்கம் கெடும்.காந்த சக்தியால் மனஅமைதி குறையும்.தெற்கு திசை எமனின் வீடு. எமனை நோக்கி காலை நீட்டி படுப்பதோ,பார்ப்பதோ கூடாது.வீட்டு தலைவனின் அறை தென் மேற்கு திசையில் அமைய வேண்டும்.இளம் தம்பதியினர் அறை வட மேற்கு அறையில் இருக்க வேண்டும்.பொக்கிஷ அறை -பொன் பொருள்,ஆபரணம் போன்ற விலை உயர்ந்த பொருள்கள் வடக்கு திசையில் குபேர திசையில் வைக்க வேண்டும்.அந்த  அறையின் தெற்கு புற சுவரை ஒட்டி பாதுகாப்பு பெட்டகம், வடக்கு நோக்கி அமைய வேண்டும்.

  ‘அக்னி தேவனுக்கு உரிய் தென் கிழக்கு திசையே சமையல் அறைக்கு உகந்தது. தென் மேற்கு காற்று இதற்கு சாதகமாக இருக்கும்., பூஜை அறை,சமையல் அறை,,கழிவறைகள் அடுத்தடுத்து அமைய கூடாது. வீட்டின் தலை வாசலுக்கு நேரே சமையல் அறை இருக்கக்கூடாது.

  வீட்டில் உடைந்த கண்ணாடிகள்,முகம் பார்க்கும் கண்ணாடிகள் இருக்க கூடாது.

  கண்ணாடிகள்,வாஷ் பேசின்,குழாய்கள், வட கிழக்கு சுவரில் அமைய வேண்டும். பாதுகாப்பு பெட்டகம் வடக்கு அல்லது கிழக்கில் திறப்பது போல அமைய வேண்டும்.எனவே தெற்கு அல்லது மேற்கு சுவரில் அமைக்கவும். கழிவறையில்  உட்காரும் இடம் வடக்கு தெற்காக அமைய வேண்டும் கழிவுக்குழி வடமேற்கு அல்லது தென்கிழக்கில் அமைக்கலாம். வீட்டின் நேர் எதிரில் குப்பை தொட்டி,விள்க்கு தூண்,அல்லது பாறை கள் இருக்கக்கூடாது. வீட்டின் பிரதான  வாயிலுக்கு நேர் எதிரே இன்னொரு வீட்டின் பிரதான வாயில் கூடாது.வீட்டின் ப்ரதான கதவில் கஜலக்ஷ்மி உருவம் இருப்பது நல்லது வீட்டின் கீழ் தளத்தில் அதிக ஜன்னல்கள்,கதவுகள் இருப்பது நல்லது மேல் தளத்தில் குறைவாக அமைக்கவும். வீட்டின் வடகிழக்கு திசை வீட்டின் முகம் ஆகும்.எனவே அந்த இடம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டின் தரையை கிருமினாசினியால் துடைக்கும் போது சிறிது உப்பு சேர்க்கவும்.மாணவர்கள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி உக்கார்ந்து படிக்கவும். தலைவாசல் கதவு மீது நிழல் படாதவாறு கட்ட வேண்டும்.

  உத்தரத்திற்கு கீழே அமர்வதும்,உறங்குவதும் தவிர்க்க வேண்டும். சண்டை,குற்றம்,அமைதி இன்மை,துன்பம்.துயரம் போன்ற காட்சிகள் கொண்ட படங்களை வைக்க வேண்டாம்.வீட்டின் முன்புறம் துளசி செடி வளர்க்கவும். வீட்டில் சப்பாத்தி கள்ளி செடி கூடாது.-இது வீட்டின் வேலி இருப்பது நல்லது.வட கிழக்கு,வடக்கு திசையில்மழை நீர் சாக்கடை நீர் வடிய வேண்டும்.வீடு கட்ட புதிய பொருள்களையே உபயோகிக்கவும்.

  வயதானவர்களின் வசதியான அறை தென் மேற்கு திசை ஆகும். தென்மேற்கு உயர்ந்தும்,வடகிழக்கு  தாழ்ந்தும் கட்டிடம் அமைய வேண்டும். தென்மேற்கு திசை சுவர்கள் வட கிழக்கு திசை சுவர்களை விட பருமனாக இருக்க வேண்டும். பூமி பூஜை,வாஸ்து சாந்தி,கிரஹப்ரவேசம் செய்து பின்னர் குடி போக வேண்டும்.வீட்டின் நடுவில் கிணறு கூடாது. மாடிப்படிக்கு கீழே பூஜை அறை,கழிவறை கூடாது. வீட்டின் பாதாள அறைகளை காலியாக வைத்திருக்க கூடாது. வீட்டில் வினாயகர் படம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். நெருப்பு,நீர் தவிர இதர சக்திகளை சமையலறையில் வைக்கக்கூடாது. குடி நீர் பானை அருகே மாலை வேலையில் தீபம் ஏற்ற வேண்டும்.

  செம்மண்,முந்திரி,பவளம் ஆகியன சிகப்பு துணியில் முடிந்து வைத்துமேற்கு திசையில் வைத்து செவ்வாய் கிழமைகளில் தூபம் காட்டி  வணங்கினால் மன அமைதி வரும்.

  வாஸ்து புருஷன் சிலை,வெள்ளியால் ஆன நாகம்,செப்பு கம்பி,முத்து,செம்மண்,பவளம் ஆகியன சிகப்பு துணியில் சுற்றி கிழக்கு திசையில் வைக்க வேண்டும். வீட்டின் வாசற்படியை தினமும்சந்தனம் கும்குமம்,கோலமிட்டு வணங்க வேண்டும். நிலைபடியை மிதிக்க கூடாது. ருத்ர ஜபம் ஒவ்வொரு திங்கள் கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் செய்ய வேண்டும்.வீட்டில் கண்டிப்பாக பூஜை அறை இருக்க வேண்டும்.

  இந்த இதழை மேலும்

  பயணங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

  நாம் பயணங்களில் நம் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் அளவிற்கு மோசமானதை நாம் சாப்பிடக் கூடாது அல்லவா? ஆக, அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இக்கட்டுரை. நாம் நம் பயணங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி நாம் இங்குப் பார்ப்போம்.

  1. அசைவம் கூடாது: நமக்காக எப்பொழுதும் புதியதாக (Fresh) அசைவ ஐயிட்டங்களை எல்லா ஹோட்டல்களிலும் வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. நாட்பட்ட அசைவ உணவுகளை அதிரடிக் குளிர் நிலையில் (Deep freezer) வைத்திருக்கும் போது ஒரு சிறிய காலத்திற்கு குளிர்தன்மை இல்லாது போகுமாயின் அதிபயங்கர வைரஸ் தொற்றுத் தன்மை அவ்வுணவுப் பொருளில் உருவாகி, அதை முழுமையாக வேகவைக்காது போகுமாயின் நமக்கு அந்த வைரஸ் தொற்று, வைரஸின் உணவுப் பொருளோடு நம் உல்லில் நிலைகொள்ளும். இப்படித்தான் ரஜனிகாந்திற்கு சங்கடம் ஏற்பட்டது. ஆகவே பயணங்களில் கண்டிப்பாக அசைவம் வேண்டாமே.
  2. குப்பை உணவுகள் வேண்டாம்: நொறுக்குத் தீனிகள், துரித உணவுகள், இரசாயனம் கலந்த உணவுகள், சாயம் சேர்த்த உணவுகள், குறை உணவுகளான பரோட்டா, நுடுல்ஸ், சேமியா, இரவா சேசரி, குளிர் உணவுகளான ஐஸ்கிரீம்கள், ஐஸ்மோர், கோல்டு காப்பி, குளிர் பானங்கள் உள்ளிட்டவைகளை நாம் அவசியம் தவிர்க்க வேண்டும். காரணம், நொறுக்குத் தீனிகள் வயிற்றுப் போக்கை உருவாக்கலாம். துரித உணவுகளில் உயிர்ச் சத்துக்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. இரசாயனம் மற்றும் சாயம் கலந்த உணவுகள் நம் கல்லீரல் மற்றும் மண்ணீரல் செரிமானத்தைக் கெடுக்கும். குறை உணவுகளால் நமக்கு சக்தி கிடைக்காது. குளிர் உணவுகளால் நம் மண்ணீரல் கெடும்.
  3. மசாலா மற்றும் எண்ணெய் உணவுகள் வேண்டாம்: பயண காலங்களில் நம் வீட்டுச் சாப்பாட்டிற்கு இணையாக வெளி உணவுகளில் தரம் மற்றும் சுவை கண்டிப்பாக இருக்காது. ஆக, நம் நாவின் சுவை ஏக்கத்தை ஈடு செய்ய நாம் மசாலா மற்றும் எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகளை ஆசையோடு சாப்பிடுவோம். இவ்வித உணவுகள் நம் மண்ணீரல் மற்றும் கல்லீரலைக் கெடுக்கும். இதனால், நம் பயணம் ஆனந்தமயமாக இருப்பதற்கு பதில் ஆ! வாந்தி மயமாக இருக்கும். குறிப்பாக ஹோட்டல்களில் நீண்ட நேரம் அல்லது திரும்பத் திரும்ப சுட வைத்த எண்ணெயானது கெட்ட கொழுப்பையே உண்டாக்கும்.
  4. பொங்கல் வேண்டாம்: அனேக ஹோட்டல்களில் பொங்கலை டால்டாவில்தான் செய்வார்கள். டால்டாவில் (வனஸ்பதியில்) செய்யப்படும் பொங்கல் நம் கல்லீரல் செரிமானத்தைக் கெடுப்பதோடு நம் உடலின் கெட்டக் கொழுப்பையும் அதிகரிக்கச் செய்யும். ஆகவே, பொங்கல் மீதிருக்கும் ஆசையால் பலிகடாவாக வேண்டாம்.
  5. பருப்பு சாம்பார் ஜாக்கிரதை: பருப்பு உடைக்கும் மில்களில் பருப்பு உடைத்த பின்னர் கிடைக்கும் குருணைகளை தரமற்ற ஹோட்டல்களில் சாம்பார் வைக்க பயன்படுத்துகிறார்கள். இவ்விதக் குருணை பருப்புகளில் புழுவின் உறக்க நிலை முட்டைகள் (Cysts) இருக்கும். இவ்வித உறக்க நிலை முட்டைகள் எவ்வளவு வேக வைத்தாலும் அழியாமல் இருந்து நம் வயிற்றுக்குள் வந்ததும் பொறிந்து புழுவாகி வயிற்று உபாதைகளை உண்டாக்கும். இவ்வித சாம்பாரில் பருப்பானது மிகவும் பொடியாகவும் தனித் தனியாகவும் இருக்கும். அவ்வித சாம்பாரைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
  6. வெங்காயம் ஜாக்கிரதை: அனேக ஹோட்டல்களில் வெங்காயத்தை அதிகாலையில் நறுக்கி வைத்து அன்றைய நாள் முழுவதும் நள்ளிரவு வரை ஆனியன் ஊத்தாப்பம், ஆனியன் பச்சடி மற்றும் ஆம்லெட் ஆகியவற்றில் தூவித் தருவர். வெட்டிய வெங்காயமானது வெளியிலிருக்கும் அனைத்துக் கிருமிகளையும் இழுத்து வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனால், நமக்கு கிருமித் தொற்று மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

  இந்த இதழை மேலும்

  வலிகள் நம்முடைய நண்பன்

  மாணவ கண்மணிகளே, வாழ்வில் நாம் சந்திக்கும் போரட்டங்கள்தான் நம்மை உண்மையில் வலிமைமிக்கவர்களாக மாற்றுகிறது. போரட்டமே இல்லாமல் கடின உழைப்பு இல்லாமல், சவால்களே இல்லாமல் நமக்கு எதுவுமே கிடைக்காது. எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு. விலையில்லாமல் குறுக்கு வழியில்  ஏதாவது கிடைத்தால் நம்மிடம் இருப்பதையும் சேர்த்து கொண்டு போய்விடும்.

  போரட்டமில்லாமல் நாம் வளர முடியாது. எதிர்ப்பு இல்லாமல், சவால்கள் இல்லாமல்,  நம்முடைய வலிமையை அதிகரிக்க முடியாது. வலிகள் நம்முடைய நண்பன்.

  மாணவக் கண்மணிகளே, படிப்பது கஷ்டமாக இருக்கலாம். பள்ளி இறுதியில் சந்திக்கும் பொதுத் தேர்வில், நுழைவுத் தேர்வில், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பலன் உங்கள், வாழ்நாள் முழுவதும் பலனளிக்கும்.

  போட்டித் தேர்வில் வெற்றி பெற்று நிரந்தர அரசுப் பதவி பெற்று விட்டால் அதன் பலன் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் அல்லவா.

  நமக்கு தோல்விகளே இல்லையென்றால், நமக்கு போரட்டங்களே இல்லையென்றால், நமக்கு ஏமாற்றங்களே இல்லையென்றால் நாம் வலிமையானவர்களாக மாற முடியாது.

  உங்களுக்கு இந்த அரிய அற்புதமான வாழ்க்கை கிடைத்து இருக்கிறது. அவன் சாதித்து இருக்கிறான். அவள் சாதித்து இருக்கிறாள். நமக்கும் சாதிக்க வலிமை இருக்கிறது. ஜ.ஏ.எஸ் தேர்வு மிகவும் கடினம் என்கிறார்கள். அந்த தேர்விலும் வருடந்தோறும் முதலாவதாக வருபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நீட் தேர்வு மிகவும் கஷ்டம் என்கிறார்கள். அதிலும் தேசிய அளவில் முதலாவதாக வருபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் பார்த்தேன். ஒரு சிறுமி திருக்குறளில் முதல் அல்லது கடைசி ஒரு வார்த்தையை சொன்னால் திக்காமல், திணராமல் அழகாக சொல்கிறாள். எல்லாமே விடாமுயற்சிதான். கடின உழைப்பு, பொறுமை, விடாமுயற்சி நம்மை மேன்மையானவர்களாக, உன்னதமானவர்களாக, சாதனையாளர்களாக மாற்றுகிறது.

  மாணவச் செல்வங்களே, நீங்கள் நினைப்பதை விட நீங்கள் வலிமையானவர்கள் என்பதுதான் உண்மை. சவால்கள் எது வந்தாலும் நீங்கள் சமாளித்து நீடித்து நிற்பீர்கள். கரிய மேகக் கூட்டங்கள் எவ்வளவு காலத்திற்கு ஓளல் விடும் நிலவை மறைத்து நிற்க முடியும். உங்களுக்கு வரும் சோதனைகள் தற்காலிகமானவை. இந்த  உலகில் நீங்கள் வாழ்வதற்கு ஓரு அர்த்தம் உள்ளது. ஆம். உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டாமா? அதற்கான பாதையை  நீங்கள்தானே கண்டறிய வேண்டும்.

  இளம் வயதில் தனது அன்புக் கணவரை இழந்தவர் சாந்தி ரங்கநாதன் என்கிற பெண்மணி. என் கணவருக்கு குடிநோய் இருந்தது.  அந்த சமயத்தில் இந்தியாவில் குடிநோய்க்கு சிகிச்சை தரக்கூடிய டாக்டர்கள் இல்லை. அமெரிக்காவிற்கு அழைத்து சென்று சிகிச்சை தந்தோம். பலனில்லை. இறந்து விட்டார். குடிப்பது ஆண்கள் பாதிக்கப்படுவது பெண்கள். ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்தேன்;. குடிப்பழக்கத்திற்கு அடிமையானோரை மீட்கும் மருத்துவமனையை 1980-ல் இந்தியாவில் முதன் முதலாக சென்னையில் தொடங்கினேன் என்கிறார்;. இவருடைய சேவையை ஊக்குவிக்க, அங்கீகரிக்க ஜ.நா விருது, பத்ம ஸ்ரீ விருது தமிழக அரசின் ஒவ்வை விருது இவரைத் தேடி வந்தது. காசு கொடுத்து விருது வாங்குபவர்கள் சமுதாயத்தில் உள்ளனர். அது அற்ப ஆசை.  இவரோ அற்புதமானவர். இவரது விலாசம் தேடி வந்து காசும் கொடுத்தும் விருதையும் கொடுக்கிறார்கள்.

  நமது இலட்சியத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தால் நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உங்கள் போராட்டம் உள்ளது. இன்று நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அதை தீர்மானித்தது உங்கள் போராட்டம்தான். போரட்டம் என்றால் அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதை சொல்ல வில்லை. கடினமான கரடுமுரடான முட்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையை கடந்து வெற்றியை சுவைக்கும் போராட்டம். நீங்கள் எதிர்நோக்கும் போரட்டங்களுக்கு நன்றியுடையவர்களாக இருங்கள். உங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எழுத துவங்குங்கள். உங்கள் போராட்டம்தான் உங்கள் வாழ்க்கை. நீங்கள் எதிர்கொள்ளும் போராட்டம் உங்களுக்கு கிடைத்த ஒப்பற்ற பரிசு.

  கொலைக்காரர்களாக, திருடர்களாக, பொய்யர்களாக, ஏமாற்றுக்காரர்களாக, ஒழுக்கமற்றவர்களாக, நியாயமற்றவர்களாக, மோசடிபேர்வழிகளாக, எத்தர்களாக,, நயவஞ்சகர்களாக, இரக்கமற்றவர்களாக,  திரிவதற்க்காகத்தான் இந்த பிறவி கிடைத்துள்ளதா? ஏன் இவ்வளவு காவல் நிலையங்கள்? ஏன் இவ்வளவு சிறைச்சாலைகள்? ஏன் இவ்வளவு நீதிமன்றங்கள்?

  இந்த உலகம் உங்களை பார்த்து பரிதாபப்பட  வேண்டுமா? அல்லது வியந்து ஆச்சர்யப்பட வேண்டுமா? எப்படி சிலர் சிவப்பு குழல் விளக்கு பொருத்திய காரில் பவனி வருகிறார்கள்?. எப்படி சிலர் அரசு சின்னம் பொருத்திய அஞ்சல் உறைகளை பயன்படுத்துகிறார்கள்?. எப்படி சிலர் மேடையில் நடுநாயகமாக அமர்கிறார்கள்?

  புகழ் பெற்ற மனிதர்களாக இன்று வலம் வருபவர்கள் போராட்ட பள்ளத்தாக்கில் பிறந்தவர்கள்தான். உங்களுக்கு என்ன துன்பங்கள் நடந்ததோ அவற்றையெல்லாம் விட நீங்கள் மிகவும் வலிமையானவர்கள். உங்கள் போரட்டம்தான் உங்களை தூக்கி நிறுத்துகிறது. உங்களுக்கு வலிமையான கருவிகளை வழங்குகிறது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு மற்றவர்கள் மீது பழி போடாதீர்கள்.

  நம்முடைய போரட்டம்தான் நம்மை வலிமையானவராக மாற்றுகிறது. அதனால் அதற்கு நன்றியுடையவராக இருங்கள். இன்று நாம் என்னவாக இருக்கிறோமோ அதற்கு காரணமாக இருந்தது இந்த போராட்டம்தான். அதற்கு நன்றி சொல்லுங்கள்.

  நம்மை துன்புறுத்துபவர்கள்தான் நம்மை வலிமை படைத்தவர்களாக மாற்றுகிறார்கள். அவர்களை பழிவாங்க நினைக்காதீர்கள். மன்னித்து விடுங்கள். முடிந்தால் நன்றி சொல்லுங்கள்.

  நாம் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். அது மிகவும் வலி மிகுந்ததுதான். நமக்கு ஆதரவாக யாரும் இல்லாமல் இருக்கலாம். நாம்  தந்தை அல்லது தாயை இழந்து இருக்கலாம்.  உடன்பிறந்தவர்கள் நோய்வாய்பட்டவர்களாக இருக்கலாம். அந்த வலி நமது மனதை வலிமையானதாக மாற்றும். நாம் என்னவாக வேண்டும் என்கிற கனவு நமக்கு இருக்கிறது. நமது அன்றாட வாழ்வில் போரட்டங்கள், சவால்கள், கடினமான நேரங்கள் நமது வாழ்வின் ஒரு அங்கமாகவே உள்ளது. நாம் அதை எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் நமது உயர்வு உள்ளது.

  வாழ்க்கை எளிதானதல்ல. பிறவியிலேயே நோயோடு பிறப்பவர்கள் உள்ளனர். நம் வாழ்வில் சந்திக்கும் வலியை, காயங்களை சவால்களை ஏமாற்றங்களை நேசியுங்கள்;. அதுதான் உங்கள் வாழ்க்கையை ஒரு நாள் வண்ணமயமாக்குகிறது.

  நாம் சோர்வடைந்து இருக்கலாம். நம் கண்களில் ரத்தம் கசிவதை உணரலாம். ஆனாலும், நாம் இறக்க வில்லை. நாம்; இறக்கும் வரை போராடுவதை நிறுத்த வேண்டாம். ஒரு நாள் மிகுந்த மகிழ்ச்சியில் அந்த போராட்டங்கள் சுபமாக நிறைவடைகிறது. அந்த துன்பங்களை நீங்கள் சந்தித்திராவிட்டால், முகவரியற்றவர்களாக,  யாரும் பொருட்படுத்தாதவர்களாகவே இருந்திருப்பீர்கள். உங்களுக்கு புதிய வாழ்க்கை காத்திருக்கிறது.

  நமக்கு இரண்டு பாதைகள் மட்டுமே உள்ளன. நாம் எதை தேர்வு செய்ய போகிறோம்? இன்று போராடு, பின்னாளில் வாழ்வை அனுபவி அல்லது இன்றைய வாழ்வை அனுபவி வாழ்நாள் முழுவதும் போராடு என்பதுதான் அது.

  படித்தவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்பார்கள். நீங்கள் செய்யும் தொழிலுக்கு எதிர்காலம் இல்லை என்பார்கள். எதிர்மறையாய் பேசுபவஏ;களின் பேச்சை புறந்தள்ளுங்கள்.

  வலியது வாழும் என்பார்கள். வெறும் கல்லாக இருந்த நம்மை சிற்பமாக மாற்றியவர்கள். களிமண்ணாக இருந்த நம்மை அழகிய வடிவமாக மாற்றியவர்கள். நம்மை செம்மைபடுத்தியவர்கள்  நம்மை பட்டை தீட்டியவர்கள்  நம் எதிரிகள். வலி நம்மை நெழ்வானவர்களாக மாற்றுகிறது.

  நாம் காணும் உலகம்  அழகற்றதாக இருக்கலாம். உன்னிடம் இரக்கமற்றதாக நடந்து கொள்ளலாம். நரகத்தை காட்டலாம். வலி  நம்மை வாழ்நாளும் முழுவதும் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது. வலிவு மிக்க மனம் உடையவர்களுக்கு வலிமைமிக்க வாழ்க்கை அமைகிறது.

  வாழ்க்கையில் ஒரு போராட்டத்தை கடந்தால் மற்றோரு போராட்டம் புதிதாக முளைக்கிறது. புதிய சிக்கல் புதிய பிரச்னை புதிய போராட்டம் உங்கள் எதிர்காலத்தை வளமாக்க, செம்மைப்படுத்த உங்களை வலிமைபடைத்தவர்களாக மாற்றுவதற்க்காகத்தான் உங்களை நோக்கி அணி வகுக்கிறது.

  போராட்டங்கள் வலிமைக்கு சமமானது. போராட தயாராக இருந்தால்  நம்மை வலிமை படைத்தவர்களாக மாற்றுகிறது. புறமுதுகிட்டு ஒடினால் அழித்து விடுகிறது. நமக்கு யாரோ ஒரு எதிரி நமக்கு தொடர்ந்து தொல்லை தருகிறான். நமது வாழ்வின் ஒரு மோசமான ஒரு அங்கமாக இருக்கிறான். நமது வாழ்வை பறித்து நம்மை பூஜ்ய நிலைக்கு ஆளாக்குகிறான்.  மீண்டும் எழ வேண்டும். நம் எதிரியை அழிப்பதற்கு அல்ல. பழிவாங்குவதற்கு அல்ல. நம் எதிரி நலமுடன் வாழ பிரார்த்தனை செய்யுங்கள். நமக்கு நம் எதிரி செய்த துன்பங்களை, அவமானங்களை, துயரங்களை, இழப்புகளை கடந்து பல மடங்கு உயர்ந்து நிற்பதை காண நம் எதிரி உயிருடன் நலமுடன் இருக்கவேண்டும்.

  நாம் போராடுவதை நிறுத்தும் போதுதான் நாம் தோற்கிறோம். சோகங்கள் நிறைந்த வாழ்க்கையை கடந்தவர்கள்தான் சாதனை மிக்க வாழ்க்கையை வாழ்கிறார்கள். நாம் மற்றவர்களை காட்டிலும் மாறுபட்டவர்கள் என்பதை உணரும்போது கிடைக்கும் உற்சாகம் நம்மை சிறுத்தை போல வேகமாக ஒட வைக்கிறது.

  துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளை நீங்கள் கடக்க நேரிடும். போராட்டம் இல்லாதவர்கள் யாருமே இல்லை. இன்று சிகரத்தை தொட்டவர்கள் பலரும் ஒரு நாள் ஆதரிக்க அரவணைக்க யாரும் இல்லாது அல்லாடியவர்கள்தான்;. நம்மை நாமே ஆதரித்துக் கொள்ள வேண்டி உள்ளது. நாம் தனிமைப்படுத்தப்படும் போது, நமக்காக யாருமில்லை என்ற நிலையில் கடவுள் இருக்கிறார் நம்முடன். அவர் நம்மை வ|மைப்படுத்துகிறார்;. நமக்கு வழிகாட்டுகிறார். மனம் உடைந்து போகும் தருணங்கள் நம் வாழ்வில் வரலாம். நல்வாழ்விற்க்கான விலையை அந்த வலிதான் தீர்மானிக்கிறது.

  திரு.சைலேந்திர பாபு ஜ.பி.எஸ் சொல்வார். மாணவர்களே, எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு. உலகிலேயே எளிதானது படிப்பதுதான். பெற்றோர்க்கு விசுவாசமானவராக இருங்கள் என்பார்.

  திரு.இறையன்பு ஜ.ஏ.எஸ். சொல்வார். பெண் என்பவள்; ஆணின் இன்னொரு பரிமானம் அவ்வளவுதான். மாணவர்களே கவனத்தை சிதற விடாதிர்கள் என்பார். திரு.கலியமூர்த்தி முன்னாள் காவல்துறை அதிகாரி சொல்வார்.  கல்வி வீட்டிற்கு விளக்கு, நாட்டிற்கு பாதுகாப்பு என்பார். நமது வாழ்க்கைப்பாதையில் நமக்கு இன்னல்  தருபவர்கள்  நம்மை சின்னாபின்னாமாக்க துடிப்பவர்கள்;; பொறுப்பற்ற நபர்களை கடக்க நேரிடலாம். அத்தகைய வலிகளை கடந்தவர்கள்தான்  இன்று புன்னகையுடன் வாழ்வை நகர்த்துகிறார்கள்.

  பூணை போல இருந்தவர்களை போராட்டங்கள்தான் புலிகளாக மாற்றியமைத்து இருக்கிறது. மிகவும் கடினமானவற்றை சாதிக்க மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட வல்லவர்களாக மாற்றுகிறது. மனஅழுத்தங்களில் இருந்து வெளியேறுங்கள். மறுமுதலீடு செய்யுங்கள். உங்களால் மிகவும் சிறந்தவற்றை தாருங்கள்.

  நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள். சிக்கல்கள், போராட்டங்களை மாறுபட்ட கோணத்தில் பார்க்கத் துவங்குங்கள். தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் மிகவும் கஷ்டமானவைதான். அதை எதிர்கொள்ளும் போதுதான் நாம் வலிமையானவர்களாக சிறப்பானவர்களாக மாறுகிறோம். நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுகிறது. நம் உள்ளே நெருப்பு எரிகிறது. நம் கனவுகளை அடைய நமக்கு கிடைத்த பயணச்சீட்டுதான் நமது போராட்டங்கள். நாம் வெல்ல பிறந்தவர்கள். வீழ்வதற்க்கு அல்ல. நீங்கள் பிறந்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆழ மரமாய் வளருங்கள் பலருக்கும் நிழல் கொடுங்கள். வ|மைமிக்க போர்வீரர்களுக்குத்தான் கடவுள் கடினமான போர்க்களங்களை தருகிறார்.

  இந்த இதழை மேலும்