– 2011 – August | தன்னம்பிக்கை

Home » 2011 » August

 
 • Categories


 • Archives


  Follow us on

  கவிதைகள்

  வெற்றி நிச்சயம்
  கவிஞர் ஞானசித்தன்
  உன்
  கண்ணாடி மனதில்
  கவலைகளெனும் தூசி
  படியாமல் பார்த்துக்கொள்

  உன்
  இரும்பு நெஞ்சத்தில்
  சோம்பலெனும் துரு
  பிடிக்காமல் பார்த்துக்கொள்

  உன்
  தெளிந்த சிந்தனை ஓட்டத்தில்
  எதிர்மறைஎண்ணங்களான
  பாசி படராமல் பார்த்துக்கொள்

  உன்
  வெள்ளை மனதில்
  கர்வமெனும் கறைசேராமல்
  பார்த்துக்கொள்

  சோம்பலை சாம்பலாக்கு
  அலைபாயும் மனதை அடக்கு
  முடங்கி கிடக்கும்
  உன் திறமையை முடுக்கிவிடு
  கட்டிக்கிடக்கும்
  உன் ஆற்றலை கட்டவிழ்த்து விடு
  வெற்றி நிச்சயம்

  தன்னம்பிக்கை

  கசந்துபோன என் வாழ்க்கையில்
  பாலைவனம் ஆன என் மனதை
  சோலைவனமாக மாற்றுவதற்கு
  கைவசம் என்னிடம்
  தன்னம்பிக்கை மட்டுமே…

  புன்செய் கவி எஸ். விஜயகுமார்
  புன்செய்புளியம் பட்டி

  வாழ்வோம் சாதிப்போம்
  கு. சுப்பிரமணியன்
  அந்தியூர், ஈரோடு மாவட்டம்

  தோழாÐ துள்ளி எழு
  விடியலை நோக்கி
  இறக்காத இந்த நாளில்
  வாழ்க்கையை வாழப்பார்
  பிறக்காத நாளையும்
  திரும்பாத நேற்றும்
  வேண்டாம்

  வாழ்க்கை தான்
  ஆனந்தத்தின் விளைச்சல்
  அற்புதங்களின் புகலிடம்
  அனுபவங்களின் பாதை
  மாற்றங்களின் சோலை
  சூழ்நிலைகளின் நூலகம்
  வார்த்தைகளின் நீர்வீழ்ச்சி
  செயல்களின் பிம்பம்
  பார்வைகளின் கொண்டாட்டம்
  வாழ்வோம்Ð சாதிப்போம்

  புதுமைப் பெண்ணே

  புதுமைப் பெண்ணேÐ உன்னை
  உலகம் அறிய பூக்கோலம் போதாதுÐ
  போட்டியில் வென்றுவிட
  வெளி உலகம் அறிந்திடுÐ
  விடாமுயற்சியும், உழைப்பையும்
  இரு சிறகுகளாக மாற்றிடுÐ
  மழைநீர் வடிந்து பூமி குளிர்வது
  போல வாழும் வழியை வசப்படுத்துÐ
  வையத் தலைமை கொள்ள
  வானம் தாண்டி யோசிÐ
  யோகம் என்பது ஜாதகத்திலில்லை
  முன்னேறஅது பாதகம் என்றிடுÐ
  எடுத்த செயல்முடியும் போது
  அடுத்த செயலுக்கு தொடக்கம் தேடுÐ
  தேடுதல் என்பதற்கு முடிவில்லை
  முடிவிற்காக தேடுவதை நிறுத்தாதேÐ
  நீ உன்னை நம்பு
  வானம் ஒருநாள் வசப்படும்Ð

  தேசியக்கொடி
  ப. நரசிம்மன், பி.இ.,
  உதவிப் பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை
  பாப்பிரெட்டிபட்டி ,தருமபுரி மாவட்டம்
  சுதந்திர தேசத்தின்
  சுவாசக் காற்றாய்
  உயரப் பறக்கும்
  உன்னதக் கொடி

  தேசம் போற்றும்
  தேசியக்கொடி
  மூவித வண்ணத்தில்
  பறக்கும் கொடி

  சிவப்பு வண்ணம்
  தியாகத்தின் சின்னம்
  விடுதலைப் போரின்
  வீரர்தம் தியாகம்

  பச்சை வண்ணப்
  பாங்கை உணர்வோம்
  பசுமை நிறைந்திட
  மரங்கள் நடுவோம்

  வெள்ளை வண்ணத்
  தூய்மை அறிவோம்
  உள்ளத் தூய்மை
  அனைவரும் கொள்வோம்

  நடுவில் இருக்கும்
  அசோகச் சக்கரம்
  வாழ்வில் உண்மையை
  உணர்த்தும் சக்கரம்

  மக்கள் பலவாய்
  மொழிகள் பேசினும்
  மனதில் ஒற்றுமை
  உணர்வுடன் வாழ்வோம்

  வாழும் மக்கள்
  இனம்வே றெனினும்
  பாரத தேசம்
  பண்பட வாழ்வோம்

  நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்

  இக்கட்டுரையின் முதற்பகுதியில், உலகத்து மனிதரெல்லாம் மொத்தம் எட்டு வகைப்பட்டோர்கள்தாம் என்றும், அத்தைகையோரை நான் எவ்வாறு பிரித்துள்ளேன் என்ற விவரத்தையும் கீழே உள்ளதுபோல எழுதியிருந்தேன்.
  எலும்பும் தோலுமாய் உள்ளோர்,
  ஒல்லியாய் உள்ளோர்,
  செம்மையானோர்,
  தடிப்பு வரிசையின் இரண்டாம் நிலையினர்,
  தடிப்பு வரிசையின் முதல் நிலையினர் (அல்லது, தடிப்பின் தொடக்கநிலையில் உள்ளோர்),
  தடிப்பு வரிசையின் மூன்றாம் நிலையினர்,
  தடிப்பு வரிசையின் நான்காம் நிலையினர் (அல்லது, தடித்தவர்),
  நிலைகுலைந்தோர் (அல்லது, நலம் இழந்தோர்). (இவர்களே எட்டாம் வகையினர் ஆவர்.)
  இறுதியாக உள்ள எட்டாவது வகையினர், அவர்களுக்குள்ள நோய்களின் விளைவாகச் சிறிது சிறிதாக நலிவுறுவர். அந்நலிவுக்கு ஏற்ப, அவர்கள் மேலும் எட்டுவகையான உடல் அமைப்புக்களைப் பெறுவர்.
  இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியில் நாம் கண்டவை:
  மேற்குறிப்பிட்ட அத்தனை வேறுபாடுகளுக்குமான அடிப்படைக்காரணம் மனிதஉடலில் சேரும் கால்சியம் எனப்படும் சுண்ணாம்புச் சத்தின் வேறுபட்ட அளவுகள்தாம் என்பதையும்,
  நிலைகுலைந்தோர் (அல்லது, நலம் இந்தச் சுண்ணாம்புச் சத்து உடம்பில் மிகுந்துவிடும்போது, அது எவ்வாறெல்லாம் நமது உடலைவிட்டு வெளியேறுகிறது என்பதையும்,
  நிலைகுலைந்தோர் (அல்லது, நலம் அவ்வாறு வெளியேறாது மிகைப்படும் சுண்ணாம்பு, மனிதரிடத்திலேயும் விலங்குகளிடத்திலேயும் எவ்வாறெல்லாம் உருப்பெறுகின்றது என்பதையும் கண்டோம்.

  மேற்குறிப்பிட்ட இந்த எட்டுவகைப்பட்ட மனிதரிடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டுவது மிக முக்கியமான ஒன்றாகும்.
  அவற்றை அறிந்துக்கொண்ட பிறகுதான், நீங்கள் எந்த வகையைச் சார்ந்தவர் என்பதை உணரமுடியும்.
  எனவே, அந்த எட்டுவகைப் பட்டோரின் உடல் அமைப்புக்களையும் அவர்களது மற்ற மற்ற விவரங்களையும் இனி காண்போமாக.
  எலும்பும் தோலுமாய் உள்ள, “Skeletal People” அல்லது “S” எனும் முதல் வகையினரது உடற்கூறுகளையும், பழக்கவழக்கங்களையும், இவர்களுக்கு இப்பொதுள்ள நோய்களையும் முதலில் பட்டியலிடுகிறேன்.
  இவ்விவரங்களில் பெரும்பகுதியானவை உங்களுக்கு ஒத்துவந்தால், நீங்கள் இந்த “S” வகையைச் சேர்ந்தவர்கள் என முடிவு செய்துகொள்ளுங்கள்.
  மாறாக, பெரும்பாலானவை தவறாக இருக்குமானால், நீங்கள் வேறு ஏதோ ஒரு வகையைச் சேர்ந்தவர் எனப் புரிந்துகொண்டு, உங்களுக்கான வகை விளக்கம் வரும்வரை பொறுத்திருங்கள்.
  எலும்பும் தோலுமாய் உள்ளோர் பற்றியவை:
  உங்கள் முகம் வற்றினாற்போல், சதுர வடிவமான முக எலும்பினைக் கொண்டிருக்கும்.
  உங்கள் உடம்பு, எலும்பும் தோலுமான ஒல்லியான தோற்றத்தைக் கொண்டிருக்கும்.
  சட்டையின் முன் கழுத்துப் பட்டைக்கு கீழே உள்ள உங்களின் (Collar Bone) இருபக்கத்து எலும்புகளும், நெஞ்செலும்புகளும் தோலுக்கு வெளியே சற்றே தூக்கினாற்போல அமைந்திருக்கும்.
  கால்-கைகளின் எலும்புகள்கூடக் ‘குச்சி-குச்சியாகவே’ தென்படும். முழங்காலும் முட்டிக்கொண்டிருக்கும்.
  உங்களின் இப்போதைய வயது பதினாருக்கும் எண்பதுக்கும் இடையில் இருக்கும். (இதன் பொருள் என்னவெனில், எந்த வயதினர் வேண்டுமானாலும் இந்த “ந” எனும் ‘எலும்பும்-தோலுமான’ வகையைச் சார்ந்தவராக இருக்க முடியும் என்பதே.)
  ஒவ்வொரு நாளும் (24 மணி நேரத்தில்), நீங்கள் 14 அல்லது அதற்குக் கூடுதலான தடவைகள் சிறுநீர் கழிப்பீர்கள்.
  ஒவ்வொரு நாளும் (24 மணி நேரத்தில்), நீங்கள் குறைந்தது மூன்றரை லிட்டர்கள் (3ணீ க ‘ 14 பெருங் குவளைகள்) அல்லது அதற்குக் கூடுதலான அளவு தண்ணீர் குடிப்பீர்கள்.
  உங்கள் உள்ளங்கைகளிலும், பாதங்களிலும், உடல் முழுமையும், மிக அதிகமான அளவில், எந்தநேரமும் வியர்வை சுரந்துகொண்டேயிருக்கும்.
  கோவையில், கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் என்னிடம் மருத்துவம் பார்த்துக் கொள்ளுவதற்காக அழைத்துவரப்பட்டார். அந்தப் பெண்ணின் உடலில், நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு வியர்வை வடியும். ஆயினும் உடலில் வியர்வை நாற்றம் இராது. நடு இரவுப் பொழுதில், அவர் படுத்திருக்கும் மெத்தையின் விரிப்பு முழுவதும் ‘தெப்பமாய்’ நனைந்துவிடுமாதலால், நள்ளிரவுதோறும், அப்பெண்ணின் அன்னையார், அப்பெண்ணை எழுப்பி, படுக்கை விரிப்பை மாற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். கல்லூரியில், அவர் உட்கார்ந்திருக்கும் நாற்காலி நனைந்துவிடுமாதலால், அவருக்கென தனியொரு இருக்கை போட்டிருப்பார்களாம். இந்த அளவிற்குக்கூட, இந்த ‘எலும்புந்தோலுமாய்’ உள்ள வகையினருக்கு, வியர்வை ஏற்பட முடியுந்தான். உங்களின் ஆர்வத்தை அடக்கும்பொருட்டு, பின்னர் என்ன ஆனது என்ற விவரத்தையும் இங்கேயே தெரிவித்துவிடுகிறேன்.
  மருந்து-மாத்திரைகள் ஏதுமில்லாது, ‘Reverse Engineering’ என்ற முறைப்படி, அவரது வாழும் நெறிமுறையை மாற்றி அமைத்த அடுத்த இரு மாதங்களிலேயே அந்தப்பெண் முற்றிலுமாக நலம்பெற்றுவிட்டார்.
  இந்தக் கட்டுரையை அந்தப்பெண் படிக்கநேர்ந்தால், இப்போது அவர் எப்படி இருக்கிறார் எனும் விவரத்தை நேரடியாகவே “தன்னம்பிக்கை”க்கு எழுதுவார் என எதிர்பார்ப்போமாக.
  இக்கட்டுரையைப் படிக்கும் நீங்கள் இந்தவகையைச் சார்ந்தோராக இருப்பீர்களானால், நீங்கள் எல்லையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகித்தான் இருப்பீர்கள். அவ்வாறானால், எவ்வாறு இதனைக் குணப்படுத்திக் கொள்ளுவது என்பதை “தன்னம்பிக்கை”யின் வழி உங்களுக்குப் பின்னர் அறிவுறுத்துகிறேன்.
  இப்போதைக்கு, மிக அதிகமான அளவில் உங்களுக்கு வியர்த்தபோதிலுங்கூட, உங்களால், காற்றாடி அல்லது குளிரூட்டியின் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே, காற்றாடியை மிகக்குறைந்த வேகத்தில்தான் பயன்படுத்துவீர்கள்.
  உங்களுக்கு அடிக்கடி மென்மையான இருமல் இருந்துகொண்டே இருக்கும்.
  உங்களின் முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையே, பின்புறமுள்ள ஆடுசதையைச் சற்றே அழுத்திப்பாருங்கள். அது, தொள-தொளவென, சதைப்பிடிப்பில்லாது, துணிபோல, மிக மென்மையாக இருக்கும். இது, -21 முதல் -40 வரையிலான சதை இறுக்கம் (Calf Hardness = cH) எனப்படும்.
  உங்களுக்கு அடிக்கடி, மாதம் ஒரு முறையாவது, சளி பிடித்துக் கொள்ளும். ஆயினும், பெரும்பாலும், அது ஒரே நாளில் குணமாகிவிடும்.
  அடிக்கடி காய்ச்சலும் ஏற்படும். வந்த வேகத்தில் தானாகவே குணமுமாகிவிடும்.
  பெரும்பகுதி, உங்களுக்குக் குடலில் புண் (Duodenal Ulcer) ஏற்பட்டிருக்கும். இவ்வலி, பால் குடித்தாலும், அல்லது எந்த உணவு உட்கொண்டாலும், தற்காலிகமாக நின்றுவிடும்.
  காலையில் உறங்கி எழுந்தவுடன், உங்களுக்கு நிறையத் தடவைகள் தொடர்ந்து தும்மல்கள் ஏற்படும்.
  உங்களுக்குத் தலைவலி அடிக்கடி ஏற்படும். ஒற்றைத் தலைவலியும் (migraine) இந்தப் பிரிவினரில் பலருக்கும் ஏற்படுவதுண்டு.
  முகத்திலும் முதுகிலும் பருக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இவர்களுக்கு மிகுதியாக உண்டு.
  இவர்கள் மலச்சிக்கலுக்கும் ஆளாகித் துன்பப்படுவதுண்டு. மலத்துவாரத்தில் “மூலம்” எனும் கட்டிகள் ஏற்பட்டு, இரத்தக் கசிவும் ஏற்படலாம் இப்படி இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது அவைகள்
  அடுத்த இதழில்…

  அன்றாடங் காய்ச்சி சூழ்நிலைகள்

  நாள்தோறும் நம் வாழ்க்கை அழகாக அமைந்தால் போதும் என்கின்றவிருப்பம் நம் எல்லோர் மனதிலும் இருக்கின்றது. அழகாக பறவைகள் சிலுசிலுக்கும், கதிரவன் மஞ்சள் கீற்றுக்களோடு புலர்ந்தெழும், காலை முதல் அந்தச் சூரியன் ஓய்வெடுக்கச் சாய்ந்தாடும் மாலை வரை நமது மனம் அமைதியின் மடியிலேயே இருந்தால் என்ன இனிமையாக இருக்கும்.
  மனதிற்கொரு வெப்பநிலைமானி கண்டுபிடிக்க வேண்டும். உடல் வெப்பநிலை அதிகம் ஆனால் வைத்தியம் செய்வது போலவோ? அல்லது காய்ச்சல் ஏதோ ஒரு நோயின் வெளிப்படையான அறிகுறி என்று நாம் தெரிந்து கொள்வது போலவோ? மன வெப்ப நிலையையும் அறிந்து கொள்ள ஒரு கருவி கிடைத்தால்; எவ்வளவு உதவியாக இருக்கும்.
  ‘அன்றாடங்காய்ச்சி’ என்கின்ற சொல் ஏழை மக்களை குறிக்கப் பயன்படுகின்றது. ஒவ்வொரு நாளுக்குமான உணவை அன்றன்றே சம்பாதித்து வாழ்கின்றவர்களை குறிப்பாகச் சொல்கின்றது. இச்சொல்லை முன்பு கண்ட மனதை சூடாக்கும் நிகழ்வோடு இணைத்துப் பார்க்கலாம் என்று முயற்சிக்கின்றேன்.
  “இன்னார், நிரம்பவும் குளிர்ச்சியான மனிதர் (மிஸ்டர் கூல்) அவரை பதட்டமாக்குவது நிரம்பக் கடினம்” என்று எதற்குமே அசராத பெரிய ஆட்களை குறித்து நாம் பேசக் கேட்டிருக்கின்றோம். அப்படியானால் மனதிற்கும் வெப்பநிலை இருக்கும் போல் உள்ளது. அதைத்தான் கொஞ்சம் ஆழம்போய் ஆராய்ந்து பார்ப்போம் என்று கொஞ்சம் கூட பரபரப்பில்லாமல் முயற்சி செய்யப்போகின்றோம்.
  சுப்ரபாதமுடன் பொழுது புலர்கையில் கனவுடன் உறங்கிய கண்கள் திறக்கையில், மனதின் வெப்பம் குறைவாகத்தான் இருக்கும். அந்த இளங்காலைப் பொழுதிலே கவலைப்பட்டு மன வெப்பநிலையை யாரும் ஏற்றிக் கொள்வார்கள் என்று நம்ப வேண்டுமா என்ன? இராபின் சர்மா ஐந்து மணிக்கு ஏழுந்திருங்கள் என்று சொல்வது, பத்து மணிக்குள் பாதிநாள் முடிந்து போகின்றது என்றஉண்மையை முன்னிட்டுத்தான்.
  இதன்பிறகு தான் தலைப்பைத் தொடும் சூழ்நிலை உருவாகின்றது. ‘அன்றாடங்காய்ச்சி சூழ்நிலைகள்’ மன வெப்பநிலையைக் காய வைத்து அதிகமாக்கி விடுகின்றன. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் என்று வள்ளுவர் கூறி இருக்கின்றார். செல்லிடத் தொலைபேசி கூட நிறைய நேரம் பேசினால் சூடாகித் தகிக்கின்றது. மௌனம் நல்ல குளிர்பதனச் சாதனம். அமைதி ஒரு A.C. போல. அது மனச்சூட்டை ஆற்றுகின்றது. ஒரு நாள் வளர வளர நாம் சந்திக்கும் சூழல்கள் மனதைக் காய்ச்சுவதாக இருக்கத் தேவையில்லை. இருந்தாலும் நாம் சூடாகாமல் இருக்க முயற்சிக்கலாம். இத்தகைய சூழலில் நம்முடைய பதில் செயல் (reaction) எப்படி அமைகின்றது என்பது மன வெப்பநிலையைத் தீர்மானிக்கிறது. நம் ரியாக்சன்கள் அன்றாடங்காய்ச்சி சூழ்நிலையைத் தீர்மானிக்கிறது. இச்சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என முடிவு செய்வதிலிருந்து டர்னிங் பாயின்ட் தொடங்கிவிடுகின்றது…
  கையாற வைத்து எடுக்கலாம்…..
  மதுரையில் பணிபுரிகையில் அச்சகப் பணி செய்கின்றநண்பர் சங்கருடைய பழைய கல்லூரித் தோழர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அந்த மின்னஞ்சல் பிரச்சனைகளை நீண்ட நேரம் பிடிவாதமாக பிடித்துக்கொள்ளாமல் விட்டுவிட்டால், அதன் தீவிரம் மீண்டும் பரிசீலித்துப் பார்க்கையில் குறைந்திருக்கும் என்று சொல்லியது. நாள்தோறும் ஏதாவது ஒரு சிக்கல் என்று கருதுகின்றநிகழ்வு நடந்து விடலாம். அச்சிக்கலை அவிழ்க்கும் முயற்சியில் முனைந்து நாம் ஈடுபடலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சிக்கல் குறையவில்லை என்றால் அந்தப் பிரச்சனையை அப்படியே சற்றுநேரம் விட்டு விட்டு அடுத்த பணியைப் பார்க்க போய்விட வேண்டும். அதன்பிறகு சற்றுநேரம் கழித்தோ? அல்லது அடுத்த நாளோ? அந்தச் சிக்கலை திரும்பி நாம் பார்த்தால் அது தானே அவிழ்ந்து போயிருக்கும் அல்லது மிக எளிதில் தீர்க்கக் கூடிய அளவு நெகிழ்ந்து போயிருக்கும். இதைத் தான் ஆங்கிலத்தில் ”Natural Death” என்கிறார்கள்.
  இதற்கு உதாரணமாக நீர் நிரம்பிய ஜாடி ஒன்றை கை நீட்டிப்பிடித்துக்கொண்டு நிற்பதை காட்டியிருந்தனர். தொடர்ந்து பிடித்து கொண்டே இருக்க முடியுமா? நீர் ஜாடியை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் நீட்டிப் பிடிக்க இயலாமல் கை வலிக்கும். அதனால் சற்று நேரம் கீழே வைத்துவிட்டு மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதைப்போல நமது பிரச்சனைகளையும் தொடர்ந்து மனதிலிட்டு குழப்பிக் கொள்வதும் அவசியமற்றது என்பதைப் பற்றி விவரித்தது அந்த ‘சக்திப்புள்ளி விருந்தளிப்பு” (Power Point Presentation) (இப்படிக்கூட மொழி பெயர்க்கலாமோ?)
  கண்களைக் கசக்கிப் பார்க்கலாம்
  (கண் மருத்துவர்கள்; மன்னிப் பார்களாக). நாம் சொல்ல வருவது கண்களை கை கொண்டு கசக்கிக் கொள்ளும் அந்த நேரடிப் பொருளில் அன்று. நீர் ஜாடி என்று நாம் பிரச்சனைகளைப் பற்றி பேசினோமல்லவா? அவை பல நேரங்களில் இளநீர் போல அழகான தாகம் தீர்க்கும் மருந்தாகவும் இருந்து விடக்கூடும். எல்லாம் நம் பார்வையில் தான் இருக்கின்றது. எனவே, ஒன்றுக்குப் பலமுறை யோசித்துப் பார்க்க வேண்டும் என்று தான் சொல்ல வந்தோம்.
  ஆம். பல நேரங்களில் சூழ்நிலையை சூடாக்காத பதில்கள் நம் மனதுள்ளேயே எழும். இந்திய ஆட்சிப்பணித் தேர்வின் இறுதிப்படியான நேர்முகத் தேர்விற்கு செல்ல ஒரு மாணவி தன்னைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றார். அவர் நம்மிடத்தில் ஒரு கேள்வி கேட்கின்றார்,
  “நண்பரே நான் வெளியுறவுத்துறைப் பணியை (IFS) விருப்ப வரிசையில் (Optionals) சேர்க்கவில்லை. எனக்கு வெளிநாடு சென்று பணிபுரிய விருப்பமில்லை…”
  இதைப் பார்த்துவிட்டு, என்னுடைய நேர்முகத் தேர்வு அறையில் தேர்வாளர்கள் (போர்டு மெம்பர்ஸ்) பதில் கேட்டால்? எப்படி சொல்வது? என்று கேட்டார்.
  இப்படியொரு பதிலுக்கு நம் மனதில் என்னடா இது குறுகிய மனப்பாங்கோடு (Narrow Mindednes) இப்பெண் பேசுகிறாளே என்று தோன்றக்கூடும். இது எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்… என்னும் குறளுக்கேற்ப சொல்கின்றகருத்தை மட்டுமே ஒவ்வொரு கேள்விக்கும் பதிலாக வரும்பொழுது கேட்டுக்கொண்டு அதை அத்தோடு இன்டர்வியூவில் விட்டுவிடுவதில்லை. ஒரு கேள்வியின் பதில்தான் அடுத்த கேள்வியின் தாயாகின்றது, விதையாகின்றது. எனவே எதிர்மறை பதில்களை கூடிய அளவு குறைப்பது உசிதமானது.
  இப்பொழுது இந்த பதிலை எப்படி மாற்றிப் போடலாம் என்றால்….
  நாம் சொன்னது, ‘எனக்கு எனது (துறைப்பணித்) திறமைகள் யாவும் இந்திய நாட்டிற்குள்ளேயே இருந்து செய்யும் பணிகள் மூலம் பயன்படல் வேண்டும் என்பதே எண்ணம்’ என்று. ஆக, அதே பதில்தான் ஆனால் கோணம் வேறு. மனதில் ஏற்படுத்தும்… விளைவு வேறு. முன்னது எதிர்மறை… அதிக உராய்வு… அதிக வெப்பமான பதில். பின்னது… நேர்மறை குறைந்த மன உரசல்… குளிர்ச்சியான விளைவு.

  அன்றும் இன்றும்

  அன்று அழிந்தது ஹிரோஷிமா
  1945 ஆகஸ்டு 6 – மனித குல வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சோகமான தினம். ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கிய நாள். அந்த தினம்தான் ஹிரோஷிமா தினமாக உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி என்றபெயர்களை கேட்கும் போதெல்லாம் அணு ஆயுதப் பேரழிவுதான் நினைவுக்கு வரும்.
  இரண்டாம் உலகப் போரின் போது 1945 ஆகஸ்டு 6ம் தேதி ஹிரோஷிமா நகரின் மீதும், 9ம்தேதி நாகசாகி நகரின் மீதும் அணுகுண்டுகள் வீசப்பட்டு மக்கள் நெருக்கம் மிகுந்த இருபெரும் நகரங்களும் இருந்த இடம் தெரியாமல் நொடிப் பொழுதில் அழிந்து நாசமாயின.
  அந்தப் பேரழிவுக்கு ‘பொடியன்’, ‘தடியன்’ என்றபெயரில் அதாவது Little Boy, Fat Man என்ற இரு அணுகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. ‘லிட்டில் பாய்’ என்ற அணுகுண்டு 60 கிலோ எடை கொண்டது, இந்த அணுகுண்டை சுமந்து வந்த பி-29 ரக ‘எனோலா கெய்’ (Enola Gay) என்றஅமெரிக்க விமானம், 1945ம் ஆண்டு ஆகஸ்டு 6ம் தேதி காலை மணி 8.15க்கு ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியை நோக்கி உலகின் முதல் அணுகுண்டை வீசியது.
  குண்டு வீசப்பட்ட மறுகணம் அந்நகரின் மீது ஒரு கோடி சூரியன்கள் தோன்றி மறைந்தது போன்றதோற்றம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனை அடுத்து பல மணி நேரத்திற்கு ஹரோஷிமாவில் நடந்தது என்ன என்பதே ஜப்பானுக்கு தெரியவில்லை. பேரழிவு நிகழ்ந்திருப்பதை மட்டும் அறிந்து கொள்ள முடிந்தது. குண்டு வீசப்பட்ட 16 மணி நேரம் கழித்துதான் அமெரிக்க அதிபர் ‘ஹாரி ட்ரூமேன்’ ஜப்பான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். இதன் பிறகே ஹரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டுள்ளது என்றசெய்தி ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு தெரிய வந்தது.
  1945 ஆகஸ்டு 9ல் நாகசாகி மீதும் அணு ஆயுத தாக்குதலை நடத்தியது அமெரிக்கா. Fat Man எனும் அணுகுண்டு ஆகஸ்டு 9ம் தேதி அந்நாட்டு நேரப்படி 11 மணிக்கு வீசப்பட்டது. வீசப்பட்ட 43 வினாடிகளுக்கு பிறகு வெடித்து நகரை தடைமட்டமாக்கியது. அமெரிக்காவின் இந்த தாக்குதலால் இரு நகரங்களும் முற்றிலுமாக அழிந்து சுடுகாடாக காட்சியளித்தன.
  விமானத் தாக்குதல்களை எதிர்கொள்ள இந்த இரு நகரங்களும் ஆயத்தமாக இருந்த போதிலும் அணுகுண்டின் பேராற்றல் அனைத்தையும் பயனற்றதாக்கி விட்டது. விமானத் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க காப்பகங்களில் தஞ்சம் புகுந்தவர்கள் கூட அங்கு புகுந்த வெப்பக் காற்றால் வெந்து போனார்கள்.
  ஹிரோஷிமாவில் வீசிய குண்டினால் ஏறத்தாழ 1,40,000 பேர் உயிரிழந்தனர். நாகசாகியில் வீசிய குண்டினால் ஏறத்தாழ 90000 பேர் உயிரிழந்தனர். இரண்டு நகரங்களிலும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண பொதுமக்கள். அத்தகைய பேரிழப்பிற்குப் பிறகும் கூட கதிர்வீச்சு போன்றபல்வேறு காரணங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,30,000 என்று சொல்லப்படுகிறது.
  அமெரிக்காவின் தாக்குதலின் பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அணு ஆயுதத்தால் எவ்வளவு அழிவு ஏற்படும் என்பதை அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கே புதிராக இருந்ததால் அதை பரிசோதிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
  ‘போரினால் ஏற்கனவே ஜப்பான் அழிந்திருந்தது. அந்த நாடே முடங்கிப் போயிருந்தது. அதை அழிக்க அணுகுண்டே தேவைப்படவில்லை’ என இந்த சம்பவத்தை பற்றி குறிப்பிடுகிறார் மறைந்த பிரிட்டன் பிரதமர் சர்ச்சில்.
  ஹிரோஷிமா-நாகசாகி சம்பவம் அணு ஆயுதத்தின் பயங்கரத்தை உலகம் உணர்ந்து கொள்ளும் விதமாக அமைந்தது ஹரோஷிமாவிலும் நாகசாகியிலும் நிகழ்ந்த பேரழிவு சம்பவம். உலக நாடுகளின் அனுதாபத்தை ஜப்பானுக்கு தேடித்தந்த நிகழ்ச்சி இது.
  யுத்தத்தில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது அதுவே முதன்முறை. இன்றுவரை அதுவே கடைசிமுறையாகவும் இருக்கிறது. எனினும் ஆயிரக்கணக்கான அணுகுண்டுகள் தயார் நிலையில் இருப்பதால் உலகம் முழுவதும் அணு ஆயுதத்தின் அச்சம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
  புகழ் பெற்றஅணு விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒரு நண்பர் கேட்டார். ‘மூன்றாவது உலகப் போரில் என்ன ஆயுதம் பயன்படுத்தப்படும்’ என்று. அதற்கு அவர் ‘மூன்றாவது உலகப் போரினைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது உலகப் போரில் கல்லும் வில்லும் பயன்படுத்தப்படும்’ என்று பதிலளித்தார்.
  இதன் பொருள் என்ன? மூன்றாவது உலகப் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். ஆணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் உலகம் சுடுகாடாகிப் போகும். அதன் பின் புதிய மனிதர்கள் உருவாக வேண்டும். அந்த கற்காலத்தில் கல்லும், வில்லும் தானே கருவிகளாகும். அணு ஆயுதங்களால் உலக அழிவு நெருங்கிக் கொண்டிருப்பதை குறிப்பால் உணர்த்தவே அணு விஞ்ஞானி இவ்வாறு உலகை எச்சரித்திருக்கிறார்.
  இந்த அழிவைக் கண்ணுற்றமகாத்மா காந்தி கூறியது “அணுகுண்டு விளைவித்த மாபெரும் சோகம் நமக்கு கூறும் நீதி – அணுகுண்டை எதிர்-அணுகுண்டு மூலம் அழிக்க முடியாது. வன்முறையை எதிர் வன்முறையைக் கொண்டு வீழ்த்த முடியாது என்பதைப் போல அகிம்சையின் மூலமே வன்முறையிலிருந்து உலகம் மீண்டு வர வேண்டும். அன்பால் மட்டுமே வெறுப்பை வெல்ல முடியும்’ என்றார்.
  1945 முதல் இதுவரை உலகில் சுமார் 1,30,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அணுஆயுதப் படைக்கலைப்பு ஒப்பந்தங்களுக்குப் பிறகு தற்போது உலகில் ஏறத்தாழ 30000 அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்ட அமெரிக்காவில் சுமார் 10000 அணு ஆயுதங்கள், பிரிட்டனில் 200, பிரான்சில் 350, சீனாவில் 200. அணுஆயுத நாடுகள் என்று அறிவிக்கப்படாத இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்றநாடுகளிலும் அணு ஆயுதங்கள் உள்ளன.
  இவற்றில் 12000 அணு ஆயுதங்கள் ஏவுகணை உள்ளிட்ட தாங்கிகளில் பொருத்தப்பட்டு தயாராக உள்ளன. இதில் 3500 ஆயுதங்கள் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் செலுத்தி விடக்கூடிய தயார் நிலையில் உள்ளன. பெரும்பாலான ஆயுதங்கள் பொது மக்கள் அதிகம் வசிக்கும் பெருநகரங்களை குறி வைத்து நிறுத்தப்பட்டுள்ளன.
  தவறான தகவல்கள், தகவல் இடைவெளி காரணமாக எந்த நேரத்திலும் அணு ஆயுத தாக்குதல் நடக்கக் கூடிய மிகப்பெரும் பேராபத்தான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அமைதியை விரும்பும் மக்கள் உலகம் முழுக்க இந்த தினத்தில் அணு ஆயுத பயன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
  இன்று உதித்தது தென்சூடான்
  ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள சூடான் நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு ‘தென்சூடான்’ எனும் புதிய நாடு ஜுலை மாதம் 9ம் தேதி உதயமானது. புதிய தேசத்தின் உதயத்தை மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஆடிப்பாடி உற்சாகத்தோடு கொண்டாடினர். கோலாகலமான இந்த விழாவில் நம் நாட்டின் துணை ஜனாதிபதி அமீது அன்சாரி அவர்கள் கலந்து கொண்டார்.
  தென்சூடான் நாட்டின் தலைநகரமாக ஜுபா (Juba) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவராக சல்வாகிர் மியார்டிட் (Salva Kiir Mayardit) பொறுப்பேற்றுள்ளார். வடபகுதி சூடான் ‘சூடான்’ என்றபெயரிலேயே அழைக்கப்படும். பிரிந்து வந்த சூடானின் தென்பகுதி ‘தென்சூடான்’ என்றபெயரில் அழைக்கப்படும்.
  ஐ.நா. சபையில் புதிதாக தென்சூடான் 193வது உறுப்பு நாடாக சேர்ந்துள்ளது. ஆப்ரிக்காவை சேர்ந்த உறுப்பு நாடுகளில் தென்சூடான் 54வது நாடு. அடுத்த ஆண்டு முதல் ஜுலை 9ம்தேதி தென்சூடான் தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.
  சூடான் நாட்டில் எண்ணெய் வளம் நிறைந்துள்ள தெற்குப் பகுதி மக்கள் தனி நாடு கோரி. கடந்த 48 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 20 லட்சம் பேரை பலி கொண்டது இந்த விடுதலைப் போராட்டம்.
  வடகிழக்கு ஆப்ரிக்காவில் எகிப்துக்கு அருகில் உள்ள நாடு சூடான். ஆப்ரிக்கா மற்றும் அரபு நாடுகளிலேயே பரப்பளவின் அடிப்படையில் மிகப்பெரிய நாடு சூடான்தான். இதன் தலைநகர் கார்த்தௌம் (Khartoum) ஆகும். வடக்கில் எகிப்தும், வடகிழக்கில் செங்கடலும் கிழக்கில் எத்தியோப்பியா மற்றும் எரித்திரியா ஆகியவையும், தென்கிழக்கில் கென்யா, உகாண்டா ஆகியவையும், தென்மேற்கில் காங்கோ மக்களாட்சிக் குடியரசு. மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகியவையும், மேற்கில் சாட் (இட்ஹக்) நாடும், வடமேற்கில் லிபியாவும் அமைந்துள்ளன. சூடானின் வடக்குப் பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தெற்கு பகுதியில் பழங்குடி மக்கள் அதிகம் உள்ளனர்.
  1956ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் எகிப்திடமிருந்து சுதந்திரம் பெற்றது சூடான். அன்று முதலே வடக்கு சூடானியர்களுக்கும் (இவர்கள் அரபு மற்றும் நுபியன் இனத்தை சேர்ந்தவர்கள்). தெற்கு சூடானில் இருந்த கிறித்தவர்களுக்கும் இடையிலான மோதல்களால் நாடே பிளவுபட்டுக் கிடந்தது.
  எண்ணெய் வளம் கொண்ட நாடு சூடான். 85 சதவீத எண்ணெய் தென்சூடானில் உள்ளது. எண்ணெய் வளம் மிக்க இந்த நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வலுத்து வந்தது. மேலும் மதம், இனம் மற்றும் மொழிப் பிரச்சனைகளால் உள்நாட்டுப் போர் தொடர்கதையாக இருந்து வந்தது.
  இந்த நிலையில் சூடானிய அரசுக்கும், தென்சூடானில் உள்ள மக்கள் விடுதலை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2005ம் ஆண்டில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், அமெரிக்க வெளியுறவு துறைமுன்னாள் அமைச்சர் காலின் பவல் ஆகியோர் முன்னிலையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இதனால் தெற்கு சூடானுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது. அதன் காரணமாக பிரச்சனை ஓரளவு தணிந்திருந்தது.
  இருப்பினும் வடக்கு சூடானோடு தாங்கள் சேர்ந்து வாழ்வது இயலாது என்று தொடர்ந்து தெற்கு சூடான் மக்கள் கூறி வந்த காரணத்தால் கடந்த ஜனவரி மாதம் ‘தெற்கு சூடான் தனி நாடாகலாமா?’ என்று கேட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 98 சதவீத மக்கள் தெற்கு சூடான் தனி நாடாக பிரிய ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆளும் வர்க்கத்தினர் நிறைந்த வடக்குப் பகுதியின் புறக்கணிப்பையும், அடக்கு முறைகளையும் பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள் தங்கள் கோபத்தை இந்த வாக்கெடுப்பின் மூலம் காட்டியுள்ளனர். ஆனால் சூடான் அதிபர் ஓமர் அல் பஷிர் வாக்கெடுப்பின் தீர்ப்புக்கு தலை வணங்க மறுத்தார். எனினும் தெற்கு சூடான் மக்களுக்கு பெரும்பாலான நாடுகளின் ஆதரவு இருந்த காரணத்தால் தெற்கு சூடான் உதயமானது.
  கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்படும்போது குழந்தை யாருடன் இருப்பது என்றபிரச்சனை முளைப்பது போல் தெற்கு சூடான் விவகாரத்திலும் பிரச்சனை தோன்றியுள்ளது. சூடானில் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிக்கு நடுவே அமைந்திருக்கிறது தெற்கு கார்டோம் (ஓட்ஹழ்ற்ர்ன்ம்) மாகாணம், பாதுகாப்பு, கௌரவ முக்கியத்துவம் வாய்ந்த நியூபா மலைப் பகுதியைச் சுற்றியுள்ள இந்த மாகாணத்தை இணைத்துக் கொள்வதில் வடக்குப் பகுதி இராணுவமும், தெற்குப்பகுதி புரட்சிக் குழுக்களும் கடந்த சில ஆண்டுகளாகவே போராடி வந்தன. தெற்குப் பகுதியின் விடுதலைப் போராட்டத்தில் கார்டோம் மக்களின் பங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

  இதில் உள்ள இன்னொரு பிரச்சனை எண்ணெய் வளம் மிகுந்த அப்யே (அக்ஷஹ்ங்ண்) பகுதி எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்பது. இது இரு நாடுகளின் எல்லையில் அமைந்திருப்பதாலும், எண்ணெய் வளம் கொழிக்கும் பகுதி என்பதாலும் அப்யே பகுதியை விட்டுத் தருவதற்கு இரு நாடுகளுக்குமே மனமில்லை.

  சூடானின் தென்பகுதி பிரிந்து செல்வதால் வடபகுதியைக் காட்டிலும் அதிக எண்ணெய் வளங்கள் கிடைக்கப்போகின்றன என்பது உறுதி. ஆனால் அவற்றைமுறையாக தோண்டி எடுப்பதற்கும், சந்தைப்படுத்துவதற்கும் தேவையான கட்டமைப்பு வசதிகள் தென்பகுதியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தென்சூடான் மக்கள் பொருளாதார நெருக்கடிகளையும், அரசியல் இழப்புகளையும் காட்டிலும் இனப்பிரச்சனையே முக்கியமானது என்று கருதுவதால் பிரிவினையால் அவற்றைஎல்லாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றனர்.

  உள்நாட்டு மோதல்களுக்கு பெயர் பெற்றது சூடான். இத்தகைய மோதல்களே இந்த நாட்டை வறுமையின் கோரப்பிடிக்கு கொண்டு போய்விட்டது. 40 சதவீத மக்கள் போதிய உணவு கிடைக்காமல் பட்டினியால் தவித்து வருகின்றனர். 10 சதவீத குழந்தைகள் 5 வயதை எட்டுவதற்குள் மரணமடையும் அவல நிலை உள்ளது. சுமார் 75 சதவீத மக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். எனினும் இவர்களின் போர்க்குணம் புதிய நாட்டை பெற்றுத் தந்துள்ளது.

  தெற்கு சூடானில் நடந்த எழுச்சியை முன்னின்று நடத்தியது ‘சூடான் மக்கள் இயக்கம்’. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தெற்கு சூடானை ஆக்கிரமித்து கட்டுப்பாட்டில் வைத்திருந்தது இந்த இயக்கம்தான். இதுவரையில் பயங்கரவாத இயக்கம் என்று உலக நாடுகளால் கூறப்பட்டு வந்த இயக்கம் தெற்கு சூடானில் ஓர் அரசை அமைக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  தென்சூடானுக்கு இன்று சுதந்திரம் கிடைத்து விட்டாலும் நீண்ட கால போரினாலும் வேறு பல காரணங்களாலும் ஏற்பட்டிருக்கும் வறுமை நிலையை போக்க அந்த நாடு மிகுந்த சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். ‘போராடினால் வெற்றி நிச்சயம்’ என்றநம்பிக்கையை புதிய நாடாக மலர்ந்துள்ள தென்சூடான் ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் இந்த வரலாற்று மாற்றத்தை ஒருவித ஏக்கத்துடனும், பெரும் நம்பிக்கையுடனும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

  உனக்குள்ளே உலகம் 15

  பயிற்சிகள்…… பரிதாபங்கள்

  எந்தவொரு நல்ல குணத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், சிறந்த சிந்தனைகளை வளர்ப்பதற்கும் அடிப்படையாக அமைவது பயிற்சி (Training) ஆகும்.
  “மனித மனங்களில் நல்லெண்ண விதைகளை நாளும் விதைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது இந்தப் பயிற்சிதான். இத்தகைய பயிற்சிகள் முறையானதாகவும், தரமானதாகவும் இருந்தால் மனிதர்களை நல்லவர்களாக மாற்றிவிடலாம்” என்பது ஆய்வின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையாகும். இதனால்தான் ஏராளமான தன்னம்பிக்கை பயிற்சிகளும், பயிலரங்குகளும் உலகமெங்கும் நடத்தப்பட்டு வருகின்றன.
  பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள். இந்தப் பாடங்களெல்லாம் பட்டம் வாங்குவதற்கும், வேலை கிடைப்பதற்கும் உதவியாக அமையும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தப் பாடங்களைக் கற்பிக்கின்றபொழுதே பல்வேறு பயிற்சிகளையும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிலையங்களில் வழங்கி வருகிறார்கள். இதனால் கல்வி நிலையங்களில் பயிலுவதும் வாழ்க்கை மேம்பாட்டுப் பயிற்சி என்றே கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.
  பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
  1. சரியான நேரத்தில் பள்ளிக்குச் சென்று திரும்புகின்ற பழக்கம் – நேரந்தவறாமை (Punctuality) என்னும் பண்பைக் கற்றுத்தருகிறது.
  2. ஆசிரியர்களுக்கு “வணக்கம்” சொல்ல வேண்டும் என்று பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் பழக்கம் வயதில் பெரியவர்களுக்கு மரியாதை (தங்ள்ல்ங்ஸ்ரீற்) செய்யும் குணத்தை உருவாக்குகிறது.
  3. சீரூடை (Uniform) அணிந்து பள்ளிக்குச் செல்லும் பழக்கம் “நாம் எல்லோரும் சமமானவர்கள் (Equality) நமக்குள் ஏற்றத்தாழ்வுகள்” இல்லை என்ற எண்ணத்தை இளம்வயதிலேயே மாணவ – மாணவிகளிடம் உருவாக்கி எல்லோரிடமும் நன்றாக பழகும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.
  4. மற்ற மாணவ – மாணவிகளுடன் பழகுகின்ற வாய்ப்பு பள்ளிகளில் கிடைப்பதால் “ஒருங்கிணைந்து செயல்படும் பண்பு”
  (Co-ordination) தானாக வளருகிறது.
  5. நாள்தோறும் பாடத்தை படித்து மனப்பாடம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துவதன்மூலம் “நினைவாற்றல் திறன்” (Memory Skill) வளர்க்க மாணவ – மாணவிகளுக்கு பயிற்சி தரப்படுகிறது.
  6. “நல்ல உடல்திறன் இருந்தால்தான் நல்லமுறையில் படிக்க முடியும்” என்பதால், தரமான உடற்பயிற்சிமூலம் “உடற்திறன்” (Physical Skill) வளர்க்கும் பயிற்சிகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது.
  7. தான்சொல்ல வந்த கருத்தை தெளிவாக பிறரிடம் சொல்வதற்கு வசதியாக “தகவல் தொடர்புத் திறன்” (Communication Skill) வளர்க்கச் சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
  8. வகுப்பிலுள்ள மாணவ, மாணவிகளில் மாணவத் தலைவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு “தலைமைப் பண்பு” (Leadership Qualities) வளர்க்கும் பல்வேறு பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறது.
  9. இலக்கிய மன்றங்கள் மற்றும் துறைசார் மன்றங்கள் (Department Association) ஆகியவற்றை ஏற்படுத்தி அதன்மூலம் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடத்தப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகளின் “புத்தாக்க சிந்தனை திறன்” (Creativity) வளருகிறது
  10. மாலை நேரங்களில் மாணவ – மாணவிகளுக்கு விளையாடுவதற்கு வசதியாக நேரம் ஒதுக்கப்படுகிறது. கால்பந்து விளையாட்டு, கைப்பந்து விளையாட்டு, கோ – கோ விளையாட்டு, கபடி விளையாட்டு, இறகுப்பந்து விளையாட்டு, ஹாக்கி விளையாட்டு, கிரிக்கெட் விளையாட்டு – என எத்தனையோ வித விளையாட்டுக்களில் மாணவ – மாணவிகள் பங்குபெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகைய விளையாட்டுகளெல்லாம் உடல் உறுதிக்கும், மன இறுக்கம் போக்குவதற்கும் (Tension Relaxation) மனமகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கும், “இணைந்து செயல்படும் தன்மை”யை (Unity) வளர்ப்பதற்கும் உறுதுணையாய் அமைகிறது.
  11. ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அந்தப் பாடத்தில் உருவாகின்றசந்தேகங்களை தெளிவுப்படுத்துவதற்கு கேள்விகள் கேட்கவும், விளக்கங்கள் பெறவும் வாய்ப்புகள் பள்ளி, கல்லூரிகளில் உள்ளன. இதன்மூலம் மாணவர்கள் “கலந்துரையாடும் திறனை” (Conversational Ability) வளர்த்துக் கொள்ளலாம்.
  12. “தேசிய மாணவர் படை” என அழைக்கப்படும் என்.சி.சி (NCC), “நாட்டு நலப்பணித் திட்டம்” என அழைக்கப்டும் என்.எஸ்.எஸ். (NSS), “இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம்” என அழைக்கப்படும் ஒய்.ஆர்.சி. (YRC), – போன்றஅமைப்புகளில் சேர மாணவ மாணவிகளுக்குப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வாய்ப்புள்ளது. இந்த அமைப்புகளில் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் “நாட்டுப்பற்று” (Patriotism) அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும், “சேவை மனப்பான்மை” (Service Attitude) கொண்டவர்களாகவும், தானாக முன்வந்து பணிசெய்யும் தன்னார்வத் தொண்டர்களாகவும் (Volunteers) திகழ வாய்ப்புகளை இந்த அமைப்புகள் உருவாக்கிக் கொடுக்கின்றன.
  13. கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகளுக்கு “புராஜக்ட் ரிப்போர்ட்” (Project Report) என அழைக்கப்படும் “திட்ட அறிக்கை” ஒன்றை தயார் செய்யும் முறை பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த “புராஜக்ட் ரிப்போர்ட்” தயாரிப்பில் நான்கு அல்லது ஐந்து மாணவ – மாணவிகள் குழுவாக இணைந்து செயல்பட வேண்டும். பின்னர் “திட்ட அறிக்கை” தயார் செய்ய வேண்டும் இதனால் நிறைய புத்தகங்களைப் “படிக்கும் திறன்” (Reading Skill) வளர்கிறது. படித்த பாடத்தை “குறிப்பெடுக்கும் திறன்” (Notes Making Skill) மெருகேறுகிறது. இந்தப் பாடகுறிப்புகளை வைத்து சிந்திக்கும்போது புதிய சிந்தனைகள் உருவாகின்றன. ஏதேனும் ஒரு நிறுவனத்தில் சென்று “புராஜக்ட் ஒர்க்” (Project Work) செய்யும்போது நிறுவனத்தின் செயல்பாட்டை நன்கு புரிந்துகொள்ளலாம். அந்த நிறுவனத்திற்கேற்ப தன்னைச் சரிசெய்துகொண்டு மாற்றிக்கொள்ளும் தன்மையை (Adaptability) உருவாக்கிக் கொள்ளலாம். மேலதிகாரிகளுக்கு மரியாதை கொடுக்கும் பழக்கத்தையும், “முடிவெடுக்கும் திறனை”யும் (Decision Making Skill) தன்னுடன் இணைந்து புராஜக்ட் வொர்க் செய்பவர்களை “ஊக்கப்படுத்தும் திறனை”யும் (Motivation Skill) வளர்த்துக் கொள்ளலாம்.
  இப்படி எத்தனையோவிதமான திறன்களை வளர்ப்பதற்குத்தான் பள்ளி, கல்லூரிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயிற்சி கொடுக்கிறார்கள். ஆனால் – “பள்ளி, கல்லூரிகளில் பயிலுவது என்பது – திறன் வளர்க்கும் பயிற்சி” என்னும் அடிப்படை உண்மையை சில மாணவ – மாணவிகள் மறந்து செயல்படுகிறார்கள். கல்வி நிலையங்களுக்குச் செல்வது நேரத்தைப் போக்குவதற்குத்தான் என்று சிலர் சிந்திக்கிறார்கள்.
  முந்தைய நாள் படித்து, அதனை நினைவில் வைத்து, அடுத்தநாள் தேர்வு எழுதி, அதை அடுத்தநாளில் அப்படியே மறந்துவிடலாம் என்ற எண்ணத்தை நினைவில் தாங்கி கல்வி நிலையங்களை சுற்றும் இளைஞர்களும் இருக்கிறார்கள். இப்படி நினைத்தால் அது “குறுகிய கால நினைவாற்றலை”த்தான் (Short-term Memory) வளர்க்கும் என்பதையும் அடியோடு மறந்து செயல்படுகிறார்கள்.
  உடல் வளர்ச்சி பெற வேண்டுமென்றால் நாள்தோறும் தேவையான அளவு உணவை உட்கொள்ளவேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியத்தோடு திகழும். இதைத்தவிர்த்து, “ஒரு மாதத்திற்குரிய உணவை ஒரேநாளில் சாப்பிடுகிறேன்” என்று திட்டமிட்டு ஒரே நேரத்தில் ஒரு மாத உணவை ஒருவர் சாப்பிட்டால் அவரது நிலைமை என்ன ஆகும்? என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதைப்போலத்தான், “பரீட்சை நெருங்கும்போது படித்துக்கொள்கிறேன்” என்று எண்ணி ‘சும்மா’ இருந்துவிட்டு, தேர்வு நேரத்தில் “விழுந்து….. விழுந்து” படிப்பதால் என்ன பலன்? இப்படிப்பட்ட செயல்பாட்டால் தேர்வில் மதிப்பெண்களை வேண்டுமானால் உயர்த்தலாம் ஆனால் ஒருவரின் “மதிப்பு” நிச்சயமாக உயராது. ஏனென்றால் பண்புகளற்ற படிப்பால் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கமுடியாது அல்லவா!
  கடந்த மாதம் மதுரையில் நடந்த ஒரு சம்பவம் என்னை திடுக்கிட வைத்தது. மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி “போஸ்” என்பவர் நாள்தோறும் காலையில் நடைபயிற்சி செய்வது வழக்கம். அன்று காலை அவர் நடைபயிற்சிக்குச் சென்று கொண்டிருந்ததைக் கவனித்த 4 பேர் அவரது வீட்டுக்கு வந்தார்கள்.
  வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தார்கள்.
  வீட்டிலிருந்த அவரது மனைவி சங்கரேஸ்வரி அதைப்பார்த்துக் கூச்சல் போட்டார். ஒருவன் சங்கரேஸ்வரியின் கை விரலை கத்தியால் வெட்டினான். அருகிலிருந்த அவரது மகன் தனது தாயை காப்பாற்றமுயற்சி செய்தபோது ஒரு கொள்ளையன் அவனது கழுத்தில் கத்தியால் கீறினான். பின்னர் 70 பவுன் நகைகளையும் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் திருடிவிட்டு அவர்கள் சென்று விட்டார்கள்.
  சத்தம்போட்டுக்கொண்டே வெளியே வந்தார் சங்கரேஸ்வரி. பொதுமக்கள் திரண்டு கொள்ளையனைப் பிடிக்க முயற்சிசெய்தார்கள். அவர்களில் ஒருவனை மடக்கிப் பிடித்தார்கள். இன்னொருவரை அவனியாபுரம் போலீசார் பிடித்தார்கள்.
  இந்த நிகழ்ச்சி இதுவரை சாதாரண நிகழ்ச்சியாகத் தோன்றினாலும், அந்தக் கொள்ளையர்கள் யார்? என்று விவரம் தெரிந்தபோது நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன்.
  கொள்ளையர்களில் ஒருவன் வில்லாபுரத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞன். இவன் எம்.பி.ஏ., பட்டதாரி. இன்னொரு இளைஞனுக்கு 26 வயது. இவன் பி.இ. பட்டதாரி. பிடிபட்ட இந்த 2 கொள்ளையர்களிடம் நீங்கள் ஏன் இப்படிப்பட்ட தீய செயல்களில் ஈடுபட்டீர்கள்? என்று கேட்டு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
  “எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அதனால்தான் இப்படி செய்தோம்” என்று போலீசாரிடம் அந்த இளம் கொள்ளையர்கள் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.
  இந்தச் சம்பவம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். கல்வி நிலையங்களில் படிக்கின்றபோதே அறிவை வளர்ப்பதற்கும், சிறப்புத் தகுதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும், நல்ல திறன்களை உருவாக்குவதற்கும் எந்தவித முயற்சியும் செய்யாமல் இருப்பவர்கள்தான் இப்படிப்பட்ட ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். படிக்கின்றபொழுதே – “கல்வி நிலையங்களில் படிப்பது நல்ல பண்புகளை வளர்ப்பதற்குத்தான்” என்ற உண்மையை மறந்து செயல்படுபவர்கள் முடிவில் வேதனைத் தீயில் உழன்று நிம்மதி இழந்து தவிக்கிறார்கள்.
  பொதுவாக – புரொபஷனல் படிப்புகளை (Professional Courses) படிப்பவர்கள் சிறப்புத் திறன்கொண்டவர்களாகவும், படிப்பில் சிறந்தவர்களாகவும், சேவை மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் கல்வியாளர்களின் கருத்தாகும். ஆனால் புரோபஷனல் படிப்புகளான பி.இ., எம்.பி.ஏ., போன்ற சிறந்த படிப்புகளை படித்துவிட்டு நாகரிகமற்ற தீய செயல்களில் ஈடுபடுவதற்கு காரணமென்ன?
  பி.இ., எம்.பி.ஏ., போன்ற புரொபஷனல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் தாங்கள் அந்த உயர் படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு ஏற்றதகுதி கொண்டவர்கள்தானா? என சிந்திக்க வேண்டும். நல்ல மதிப்பெண்களும், நல்ல பழக்கவழக்கங்களும், நல்ல குணங்களும்தான் இந்த உயர் படிப்பை முடித்தவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.
  எனவே – சிறந்த படிப்புகளைத் கற்றுத்தரும் கல்வி நிலையங்களை “வாழ்க்கையின் பயிற்சி களம்” என்று மாணவ – மாணவிகள் எண்ண வேண்டும். அங்கு பயிற்சிகளை சரியாக மேற்கொள்ளாவிட்டால் வாழ்க்கை பரிதாபமாகிவிடும் அல்லவா!
  தொடரும்.

  பிரச்னைகளுடன் உறங்கச் செல்லுங்கள்! தீர்வுகளுடன் எழுந்து வாருங்கள் !

  என்னங்க இது? தூக்கம் வரலீங்கறதே ஒரு பிரச்னை; அதோடு பல பிரச்னைகளையும் நெனச்சுப் பார்த்து, தூங்கப்போனா தூக்கம் வருங்களா?’ இது பலரது கேள்வி. நியாயமானதுதான்.
  எந்தவிதமான பிரச்னைகளுடன் தூங்கச்செல்வது என்பது மிக முக்கியம். நமது உடல் பலம், மனோசக்தி இரண்டுமே பெரும்பாலான பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வுகளைக் கொடுத்துவிடும். இதற்கும் மேலாக, தீர்வுகளே தெரியாத பிரச்னைகள் எல்லோருக்குமே உண்டு. ஒரு சிலவற்றைமற்றவர்களிடம் கூறி, ஆலோசனை பெறலாம். சிலவற்றையாரிடமும் கூறமுடியாது.
  பிரச்னைகள்
  பிரச்னைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை. பிரச்னைகளைப் பெரிதாக நினைத்துக் கொண்டால், தைரியம் குறைந்து, பயம்வந்து வாழ்க்கை மோசமாகிவிடும். பிரச்னைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். ஒருவருக்குப் பிரச்னையாக இருப்பது வேறொருவருக்கு பிரச்னையாக இருக்காது.
  ஒருவர் தமது பேச்சாலும், செயல்பாட்டாலும் தமக்கு உருவாக்கிக் கொள்ளும் பிரச்னைகள் ஒருபக்கம். மற்றவர்களாலும், இயற்கையாலும் உண்டாகும் பிரச்னைகள் மறுபக்கம்.
  இவற்றுள் சிறிது எச்சரிக்கையாக விழிப்புநிலையில் இருந்தால், தாமே உண்டாக்கிக் கொள்ளும் பிரச்னைகள் வராமல் காத்துக் கொள்ள முடியும். அதையும் மீறி, பிரச்னைகள் வந்தால், முதலில் அவைகளை ஒப்புக்கொள்ளும் மனநிலை தேவை. அதன்பின் ஆராய்ந்து பார்த்து, என்ன பிரச்னை எனக் கண்டறிந்து, நீக்குவதற்குத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். அப்பிரச்னை முடிவுக்கு வரும்.
  சேகர் தன் பெற்றோருடன் கோவையிலிருந்து டெல்லிக்கு ரயிலில் செல்கிறான். அவனுக்கு ரயிலில் சைடு லோயர் பெர்த் டிக்கெட் வாங்கியிருந்தனர். தான் நன்றாகத் தூங்க வேண்டுமென்று, மேல் (அப்பர்) பெர்த் பயணியிடம் கேட்டு, இடத்தை மாற்றிக்கொண்டான். இரவுப்பயணம் சுகமாய்க் கழிந்தது. பகல் பயணத்தில் மிகுந்த சிரமப்பட்டான்; தன் பெற்றோரின் உதவியை நாடினான். அவர்களும் அந்தப் பயணியிடம் பக்குவாய் பேசி, பகலில் அவர்கள் மகன் கீழ் பெர்த் இரவில் மேல் பெர்த் என்று பயணம் செய்ய உதவுமாறு ஏற்பாடு செய்தனர். யோசித்தால், இந்த பெர்த் மாற்றமே அவசியமில்லாதது என அறியலாம். இரண்டு நாட்கள் பயணம், கிடைத்த இடத்தை ஏற்றுக்கொள்வது தான் பிரச்னைகளைத் தராது.
  மற்றவர்களாலும், இயற்கையாலும் வரும் பிரச்னைகளுக்குத் தமது அனுபவம், அனுபவசாலிகள், பெரியோர்களது ஆலோசனை ஆகியவற்றின் உதவியால் தகுந்த தீர்வு பெறமுடியும். சில சமயங்களில் ஒரு பிரச்னைக்குப் பல தீர்வுகள் கிடைக்கும். எதை ஏற்றுக்கொள்வது என்று குழப்பமாயிருக்கும். இதுபோன்றபிரச்னைகளை ஆழ்மனதுக்கு அனுப்பிவிட்டால், சரியான தீர்வு கிடைக்கும்.
  நம்மால் தீர்க்கக்கூடியவை, நம்மால் தீர்க்க முடியாதவை என்றவகையில் பிரச்னைகளைப் பிரித்துவிட்டால், மிகச்சுலபமாக அவைகளைக் கையாள முடியும். உதாரணமாக ஊழல் என்பது பெரிய, முக்கிய பிரச்னைதான். தனி ஒருவரால் ஒன்றும் செய்ய முடியாது. நமது கைகளுக்கு அப்பாற்பட்டது என இதை இனம் கண்டு, ஆதரவு மட்டும் தெரிவிப்பதால், நமக்கு பாதிப்பு வராது.
  தூக்கம்
  ஒரு பயிற்சியின்போது, “எதற்காகத் தூங்குகிறோம்” எனக்கேட்டதற்கு, “தூக்கம் வருகிறது; அதனால் தூங்குகிறோம்” என்று பலர் கூறினர்.
  நம் உடல் செல்கள் சோர்வடைந்த தம்மைப் புதுப்பித்துக்கொள்ளவும், சக்தி ஓட்டப் பாதைகளில் (Meridians) உள்ள நரம்புகளைப் பழுது நீக்கவுமே தூக்கம் வருகிறது.
  எவ்வளவு நேரம் தூங்குகிறோம்? அதில் ஆழ்ந்த தூக்கம் எவ்வளவு நேரம், அதிகாலைத்தூக்கம், பகல் நேரத்தூக்கம் எனப் பலவகையாகப் பிரித்து அறிய வேண்டும். பகல் நேரத்தூக்கம், தூக்கமாக இல்லாமல், ஓய்வாக இருப்பது நல்லது. அதிகாலைத் தூக்கம் (4 முதல் 6 மணி) தவிர்க்கப்பட வேண்டும். இரவு 11 மணிமுதல் காலை 3 மணிவரை ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும்.
  தூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பே இரவு உணவை முடித்திருப்பதும், குறைந்தது 1 மணிநேரம் முன்பே தொலைக்காட்சியை அணைப்பதும் சிறந்தது. நல்ல புத்தகங்கள் படித்து, அந்த நினைவுகளுடன், அல்லது தீர்வு தேவைப்படும் முக்கியமான பிரச்னைகளின் நினைவுகளுடன் தூங்கச் செல்வது ஏற்புடையது.
  கனவுகள்
  “”நமது எண்ணங்கள்தான் கனவுகளாகத் தெரிகின்றன” – இது சிலர் கூற்று;
  “”நம் ஆழ்மனதின் வெளிப்பாடே கனவுகள்”
  – இது ஆராய்ச்சியாளர்களின் முடிவு;
  “”உறக்கத்தில் மனதில் அனுபவம். உருவம், சப்தம், உணர்ச்சி இவற்றின் தொடர்காட்சிகளே கனவுகள்” – இது ஆன்மீகவாதிகளின் அறிவிப்பு.
  பொதுவாக நமது எண்ணங்கள்தான் உறக்கத்திலே காட்சிகளாக வடிவம் பெற்று கனவுகள் என்று பெயர் பெறுகின்றன.
  ‘கனவு என்பது தூக்கத்தில் வருவதல்லÐ உன்னைத் தூங்கவிடாமல் செய்வது’ என்றார் இன்றைய இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் முன்னாள் பாரத குடியரசுத்தலைவர் திரு. அடஒ அப்துல்கலாம் அவர்கள்.
  ஒரு மனிதனின் சராசரியான வாழும் காலத்தில் 10ல் 1 பங்கு கனவுக்காலமாய் கழிகிறது.
  தினமும் சுமார் 2 மணிநேரம் கனவு காண்கிறோம்.
  ஒரு மணி அல்லது ஒன்றரை மணிநேர இடைவெளியில் 5 முதல் 15 நிமிட நேரம் நீடிக்கும். காட்சிகளைக் கனவாய் காண்கிறோம். அதிகாலைக் கனவுகள் 15 நிமிடங்களுக்கும் அதிக நேரம் நீடிக்கும்.
  ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிக அளவில் கனவுகள் வருகின்றன.
  நேர்மறையானதைவிட எதிர்மறையான காட்சிகளே அதிகம் வருகின்றன (பல பிரச்னைகளில் சிக்கித் தடுமாறுவது, உயிருக்கு பயந்து ஓடுவது போன்றவை).
  Rapid Eye Movement (REM) மிக வேகமான கண் அசைவு கனவை உருவாக்கும். நம் மூளையின் முன்பகுதியும் நடுப்பகுதியும் தூண்டப்படுவதே, கண் அசைவுக்குக் காரணம். பெரும்பாலும் தஉங தூக்கத்தில் தோன்றும் கனவுக்காட்சிகள் மறந்துவிடும். கனவின் மொத்த சதவீதத்தில் இவை 90 சதவிகிதத்திற்கும் கூடுதலாகும்.
  சர்ய் – Rapid Eye Movement (NREM) கண் அசையாமல் தூங்கும்நிலை. இந்நிலையில் காட்சிகளாய் காணும் கனவுகள். காலை எழும்போது நினைவில் நிற்கும்.
  ஆழ்மனம்
  நமது மனத்தை மூன்று நிலைகளாகப் பிரித்து வைத்துள்ளனர்.
  மேல் அல்லது புறமனm Conscious Mind
  நடுமனம் Sub-Conscious Mind
  ஆழ்மனம் Super Conscious Mind
  மேல் மனம் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் செயல்படும்; அவற்றைப் பதிவு செய்யும்.
  நடுமனம் பழக்கத்தின் அடிப்படையில், விருப்பத்தின் அடிப்படையில் செயல்படும்; அவைகளைப் பதிவு செய்யும்.
  ஆழ்மனம் விருப்பு வெறுப்பின்றி, நியாய உணர்வுடன், தெய்வீக சிந்தனையுடன் செயல்படும்; அவைகளைப் பதிவு செய்யும். தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கான சரியான தீர்வைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும்.

  தீர்வுகள்
  ஒரு பூட்டு தயாரிக்கும்போதே, அதற்குப் பல சாவிகள் தயாரிப்பது போல, எந்தப் பிரச்னையும் வரும்போதே, பலவிதமான தீர்வுகளுடனேயே வருகின்றது. நபருக்கு நபர் பிரச்னையா, இல்லையா என்பதும், தீர்வுகளும் வேறுபடும்.
  ஒருவருக்குள்ள பிரச்னை தீர ஒருவிதமான செயல்பாடு தேவையென்றால், வேறொருவருக்கு இதே பிரச்னைக்கு இதே செயல் தீர்வாக அமையாமலும் போக வாய்ப்புண்டு.
  ஒருவருக்குத்தம் 60வது வயதில் கண்பார்வையில் கோளாறு, நண்பர்கள், உறவினர்கள் எனப்பலரும் அக்கறையுடன் பல ஆலோசனைகள் கூறுகின்றனர். எல்லாமே நல்லவைதான். ஆனால், எந்த ஆலோசனையைச் செயல்படுத்துவது என்பதில் இவருக்கு குழப்பம். காரணம் ஆலோசனை கூறிய அனைவருமே உண்மையிலேயே இவர் மீதுள்ள அன்பினால்தான் கூறியுள்ளனர்.
  இந்நிலையில் இவற்றுள் எந்த ஆலோசனைப்படி செயல்பட்டால், பிரச்னை சரியாகும் என்று எண்ணி உறங்கச் செல்ல வேண்டும். தொடர்ந்து எண்ணும்போது சரியானதீர்வு அவருக்கு ஏதோ ஒரு காட்சி மூலம் கனவாகத் தெரியும்.
  தையல்மிஷின் ஊசி
  கையால் தைக்கும் ஊசியில் நூல்கோர்க்கும் துவாரம், கூர்மையான பகுதிக்கு எதிர்ப்பகுதியில் இருக்கும். ஆனால் தையல்மிஷினில் உள்ள ஊசியில் கூர்மையான பகுதியிலேயே நூல்கோர்க்கும் துவாரம் இருக்கும். இதைக்கண்டு பிடித்தவர் பல நாட்களாக முயன்றும் தீர்வு கிடைக்காத நிலையில், இதே நினைவாக உறங்கும்போது, அவர் கண்ட கனவிலிருந்து, கூர்மையான பகுதியில் துவாரமிட்டு ஊசியை வடிவமைத்தார்.
  உறக்கத்தில் கண்ட கனவில் இவர் ஆதிவாசிகள் வாழும் காட்டுப்பகுதிக்குச் சென்றுவிட்டார். அவர்கள் இவரைத் தம் தலைவனிடம் அழைத்துச் செல்கின்றனர். தலைவனோ, இவரை கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போட்டு, வேகவைத்து, விருந்துண்ணுமாறு ஆணையிட்டான். மகிழ்ச்சியில் ஆதிவாசிகள் கையிலிருந்த ஈட்டி போன்றகூர்மையான ஆயுதத்தால் நிலத்தைத் தொட்டுதொட்டு, இவரைச் சுற்றி ஆடிவந்தனர்.
  கூர்மையான பகுதி கீழே மேலே சென்று வருவதைக் கண்ட இவருக்கு, அந்தப்பகுதியில் துளைபோட்டு நூலைக்கோர்க்கும் எண்ணம் வந்தது. தூக்கம் கலைந்தது. கனவு முடிந்தது. தையல் ஊசி கண்டுபிடிக்கப்பட்டது.
  இதுபோல் பலவற்றைக் கூறலாம்.
  எனவே, எந்தப் பிரச்னையாலும் தீர்வுகள் இல்லாமல் வருவதேயில்லை எனத்திடமாக நம்ப வேண்டும்.
  அந்தத் தீர்வுகளைத் தேடித்தாகத்துடன் உறங்கச் செல்ல வேண்டும்.
  முழுமன ஈடுபாடு, கட்டாயம் தீர்வுகளுடன் உறக்கத்திலிருந்து நம்மை எழுப்பும்.

  சளைக்காத மனமே சாதனைக்குச் சரியான துணை

  சென்றஇதழ் தொடர்ச்சி…
  முயன்றேன்ÐÐ வென்றேன்ÐÐÐ…

  வண்டி வியாபாரம் கடை வியாபாரமாக எப்படி மாறியது?
  திருச்சி, ரம்பா ஊர்வசி தியேட்டர் அருகில், பத்தடிக்குப் பத்தடி அளவில் ஒரு கடை இருந்தது. அதை தனது வியாபாரத்திற்காக ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார். கடைக்காரரோ, தினமும் என்னுடைய வியாபாரத்தையும், உழைப்பையும் பார்த்துக் கொண்டிருந்தவர். எனக்கு அந்தக் கடையைக் கொடுக்கப் பிரியப்பட்டு என்னைக் கேட்டார்.
  சாலையோர தள்ளுவண்டி வியாபாரத்தில் உள்ள அன்றாட அவதிகளையும், வளர்ந்துவரும் வியாபாரத்தையும் எண்ணிப்பார்த்தேன். தள்ளுவண்டியை விட கடை வியாபாரம் கொஞ்சம் பாதுகாப்பானதாயிற்றேஎன்று நானும் விருப்பம் தெரிவித்தேன். தினசரி வாடகைக்குப் பேசி முடித்தேன். அதுதான் என் முதல்கடை.
  அங்கே எப்படி வியாபாரம் வளர்ந்தது?
  எங்கே வளர்ந்தது? அங்கும் பொறாமைதான். போராட்டம்தான்.
  பத்தடிக்குப் பத்தடி கடையில் பத்துப்பேர் நின்றாலே பெரியகூட்டம் போல் இருக்கும். கடையை ஆரம்பித்து எட்டே மாதம் தான். சில விஷமிகளால் தூண்டப்பட்ட அந்த கடைக்காரர், நானும் இதில் பார்ட்னராகச் சேர்ந்து கொள்கிறேன் என்று ஒரு கோரிக்கையை என் மீது திணித்தார். நான் அதற்கு ஒத்துக்கொள்ளாததால் கடையைக் காலிசெய் என்று கட்டளையும் போட்டார்.
  புதிய கடைதேடும் படலம் ஆரம்பமாயிற்று. அருகிலேயே ஒரு காலியிடம் பார்த்தேன். அதன் உரிமையாளரைப் பிடித்து, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் அவரிடம் பேசினேன்.
  இடைப்பட்ட அந்த ஒரு மாதமும் தள்ளுவண்டி வியாபாரத்தை விடவில்லையே. அது நடந்து கொண்டு தான் இருந்தது. சொல்லப்போனால், இன்று பெரிய அளவில் கடை வைத்து வியாபாரம் நடந்து கொண்டிருந்தாலும், கடைக்கு அருகிலேயே இன்னும் தள்ளுவண்டி வியாபாரமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும் ஏழை எளியவர்களுக்காக, சகாயமான விலைகளில்.
  இடத்தின் உரிமையாளர் அங்கு கடைகட்டிக் கொள்ள எனக்கு அனுமதி அளித்தபிறகு, ஒரே வாரத்தில் கடையைக் கட்டி வியாபாரத்தையும்ஆரம்பித்துவிட்டேன்.
  ஒரே வாரத்திலா?
  ஆமாம். கனவுகளை நனவாக மாற்றுவதில் எனக்கிருந்த வெறிதான், தடைகளை உடைப்பதற்கு எனக்கு சக்தியைக் கொடுத்தது. ஆண்டவனின் அருள் அதை சாத்தியமாக்கியது என்றாலும் அங்கும் நிம்மதியாக இருக்க முடியவில்லை தொடர்ந்து இடம் தேடி போராட்டம். அப்பொழுது கரம் கொடுத்து பக்கபலமாக இருந்தவர் திரு. லோகநாதன் பிள்ளை (மணச்சநல்லூர் சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி நிறுவனர்) அவர்கள் தற்பொழுது உள்ள இடத்தை அவர்களின் உதவியால் கிடைக்கப்பெற்று பல்வேறு போராட்டத்திற்குப் பிறகு எனது விடாமுயற்சியால் இன்றைய நிலையை எட்டியுள்ளேன். திரு. லோகநாதன்பிள்ளை அவர்களுக்கு நன்றி.
  சரி, உங்கள் எதிர்காலத்திட்டங்கள் பற்றி…
  இந்தக் கடைக்குப்பின்னால் கொஞ்சம் காலி இடம் இருக்கிறது. அதை மேம்படுத்தி, அழகுபடுத்தி அங்கு ஒரு கார்டன் ரெஸ்டாரன்ட் வைக்க வேண்டும்.
  தமிழகத்தின் மற்ற ஊர்களிலும் பாட்சா பிரியாணி சென்டரின் கிளைகளை ஆரம்பிக்க வேண்டும். முதல் கிளை அநேகமாக கோவையாக இருக்கும்.
  அயல் நாடுகளிலும் கிளைகளை ஆரம்பிக்க வேண்டும்.
  தொழில்துறை மற்றும் சமூக சேவைக்காக ஜனாதிபதி கையால் விருது வாங்க வேண்டும்.
  சமீபத்தில் நீங்கள் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்ததாகக் கேள்விப்பட்டோம். அதைப்பற்றி…
  எனது பெற்றோர் பெயரால், அப்துல் ரஜாக் சகர்பான் பீவி அறக்கட்டளை என்று ஒன்றைசமீபத்தில் ஆரம்பித்தேன்.
  இதன் முக்கிய நோக்கங்கள்?
  முதிர்கன்னிகளுக்குத் திருமண உதவி, விதவைகளுக்கான வாழ்வியல் ஆதார உதவி, மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவைப்படும் உதவி.
  இவை மூன்றும்தான் இப்போதைய முக்கிய நோக்கங்கள்.
  அருமையான நோக்கங்கள். இப்படிப்பட்ட சமூக அக்கறையுணர்வு இப்போதுதான், அதாவது நீங்கள் இப்படி வளர்ந்த பின் தான் வந்ததா?
  இல்லவே இல்லை. அது என் ரத்தத்திலேயே கலந்திருக்கும் உணர்வு.
  எனது 12ம் வயதில், 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நான் படித்த தொடக்கப்பள்ளியில் பழைய மாணவர் சங்கத்தை ஆரம்பித்து
  ஏழை மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுகளை வழங்கினேன்.
  எனது 17வது வயதில் முதிர்கன்னிகளுக்கான திருமண உதவி வழங்கும் எண்ணத்தை செயல்படுத்தினேன்.
  இந்த அறக்கட்டளை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே சுமார் 50 முதிர்கன்னிகளின் திருமணம் நடப்பதற்கு உதவி செய்திருக்கிறேன்.
  சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் திருச்சி புள்ளம்பாடியில் ஒரு கோவில் திருவிழாவில் இசைகச்சேரிக்காக 6400 ரூபாய் நன்கொடை கொடுத்து, அதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது என் மனதில் ஒரு எண்ணம் எழுந்தது. ஒரு இரண்டு மணி நேர சந்தோஷத்திற்காக 6400 ரூபாய் செலவழித்தோமே இதை வேறுமாதிரி செலவழித்தால் என்னவென்று.
  அடுத்த ஆண்டு முதல் அந்தத் திருவிழாவின்போது ஐம்பது ஏழைகளுக்கு வேட்டி சேலை இலவசமாக வழங்குவதாக அப்போது அறிவித்தேன். அதன்படியே இன்றுவரை ஆண்டுதோறும் வழங்கிவருகிறேன்.
  அறக்கட்டளையை 2010ல் பதிவுசெய்து, 2011ல் நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடிநபியில் பிப்ரவரி 17ல் விழாநடத்தி, தொடங்கினேன். சில நலத்திட்டங்களையும் திருச்சி டவுன் காஜி ஜலீல் சுல்தான் முன்னிலையில் அன்றேசெயல்படுத்தினேன்.
  உங்கள் பிள்ளைகளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?
  ஒரு மகன் முகமது இத்ரீஸ். ஒரு மகள் இஸ்ரத் பானு. இருவரும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறார்கள். என்னைப் போலவே அவர்களுக்கும் சமூக அக்கறையும், எளியவர்களுக்கு உதவும் இயல்பும் இயற்கையாகவே இருக்கிறது.
  நீங்கள் பெற்றவிருதுகள் பற்றிச் சொல்லுங்கள்
  நிறைய. அதில் முக்கியமானவை…
  2004ல் இசையமைப்பாளர் தேவா அவர்களிடம் சிறந்த அசைவ மற்றும் கேட்டரிங் சர்வீசுக்காக.
  2006ல் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவிடம் ராஜகலைஞன் விருது மற்றும் தங்கப்பதக்கம்.
  2007ல் முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமியிடம் சேவைத்திலகம் விருது
  2010ல் தென்கிழக்கு ஆசியநாடுகளில் நடைபெற்றதற்காலத் தமிழ் மொழி இலக்கியப் பன்னாட்டு கருத்தரங்கில் மலேசிய அமைச்சர் டத்தோ சரவணனிடம் மனித நேய மாமணி விருதும் தங்கப் பதக்கமும்.
  இலங்கை, கொழும்புவில் நடைபெற்றவிழாவில் இலங்கை அமைச்சர் புத்திர சிகாமணியிடம் பாராட்டிதழ்
  2010ல் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவிடம் நுகர்வோர் திலகம் விருது.
  இந்த விருதுகள் எல்லாம் எதைக் காட்டுகின்றன என்று கருதுகிறீர்கள்?
  உழைப்பால் உயர்ந்தவனை, சமூக சேவை செய்பவனை, உலகம் ஒருநாள் பாராட்டியே தீரும் என்பதைத்தான்.
  இன்றைய இளைஞர்களுக்கு, குறிப்பாக தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
  எந்தத் தொழிலைத் தொடங்கினாலும், தொழில் பற்றிய நுணுக்கமான அறிவும், நெருக்கடி காலங்களில் இடர்பாடுகளைத் தாங்கும் மன வலிமையும், இலக்கை மட்டுமே நோக்கம் விழிகளும், தன்னம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சியும் இருந்தாலே போதும். வளர்ச்சி குறித்த சந்தேகமே வேண்டாம்.
  மக்களுக்கு உங்களின் பொதுவான அறிவுரை…
  பெற்றோரை மதியுங்கள்
  உழைப்பை நம்புங்கள்
  இறைவனை மறவாதீர்கள்.
  – நன்றி: திரு. நாகராஜன்

  சாதிக்கலாம் வாங்க…

  திரு. அபிராம் சங்கர் ஐ.ஏ.எஸ். : 09447271728
  ஒவ்வொரு வருடமும் ‘ரேங்க் மேக்கர்’ பட்டத்தைத் தப்பாமல் தட்டிப்பறிக்கிறது சென்னை சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி. 2010 ஆண்டு சிவில் சர்வீஸ் இறுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களில் கணிசமானவர்கள் இந்த அகாடமியின் மாணவர்கள் தான்.
  சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதல் கட்டத்தைத் தாண்டவே தமிழக மாணவர்கள் தவித்துத் திண்டாடிய வேளையில் முதல் முயற்சியிலேயே அந்த உயரம் தொட்டவரின் உழைப்பு அபாரமானதுÐ
  சாதிக்க வைத்தவர்கள் பேசுவதைக் காட்டிலும் சாதித்தவர்களைப் பேசவைத்தால்…
  2010ம் ஆண்டு சிவில் சர்வீஸ் இறுதித்தேர்வில் இந்திய அளவில் 4வது ரேங்க் பெற்றவர், இங்கே நிதானமாக தன்னுடைய வெற்றியை பகிர்ந்து கொள்கிறார்.
  தன்னம்பிக்கை வாசகர்களுக்குத் தங்களைப் பற்றி அறிமுகம்?
  “என் பெயர் அபிராம் சங்கர். தமிழ்க் குடும்பம். தற்போது கேரளாவில் வசித்து வருகிறேன். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம். Federal Bankp மேலாளராக வேலை செய்யும் அப்பா கிரிசங்கர், ஹோம் மேக்கர் அம்மா மீனாட்சி சங்கர், ஆ.பங்ஸ்ரீட் படிக்கும் தம்பி அக்ஷய் என அளவான குடும்பம். திருவனந்தபுரத்தில் உள்ள ஆர்யாஸ் பள்ளியிலும், கொல்லத்தில் உள்ள TKM College of Engineering கல்லூரியில் Computer Science – ம் படித்தேன். ஆனால் பல தேடல்களுடன் இருந்த நான் தொழில் கல்வியை விட சிவில் சர்வீஸ் படிப்பையே என் இலக்காக நினைத்தேன். தற்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளேன்.
  வெற்றியின் பாதையைப் பற்றி?
  இந்த நேரத்தில் என்னுடைய இந்த வெற்றிக்குக் காரணமான சங்கர் ஐஅந அகாடமியைப் பற்றி கூறியே ஆகவேண்டும். 2010ல் இந்த அகாடமியில் சேர்ந்தேன். நல்ல துவக்கம் பாதி வெற்றிக்குச் சமம் என்பார்கள். அந்த துவக்கத்தை எனக்கு இந்த அகாடமியின் நிறுவனர் திரு. சங்கர் கொடுத்தார். அவர் கற்றுக் கொடுத்ததன் விளைவு Geography-ல் மிக அதிகமாக 385 மதிப்பெண்கள் பெற்றேன். அந்த ஆண்டு இறுதித்தேர்வில் நான் மிக அதிக மதிப்பெண்ணாக 300ஐ பெற்றது என் வாழ்வில் மிகச்சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறேன். இவ்வளவு அதிக மதிப்பெண் பெறுவதற்கு சங்கர் சார் பின்பற்றிய Technique, Strategy, தேர்வை எப்படி எதிர்கொள்வது என்று Practical ஆக செய்து காட்டியது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
  தேர்வை எப்படி எதிர்கொண்டீர்கள்?
  முழுதாக தயாராகிவிட்டோமா என்று எனக்கே சந்தேகம் இருந்தாலும், நம்பிக்கையுடன் எழுது என்று என்னை ஊக்கப்படுத்தினார் சங்கர் அவர்கள். அவர் தந்த நம்பிக்கையுடன் தேர்வை எழுதினேன். ஆச்சர்யமாக இந்திய அளவில் 4வது ரேங்க் பெற்று ஐ.ஏ.எஸ். வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடைய இந்த வெற்றிக்கான மற்றொரு ரகசியம் என்னவென்றால் மன ஒருமைப்பாடு, எதிலும் முழுமையாக கவனம் செலுத்தினால் வெற்றி பெற முடியும் என்பதையும், நல்ல முறையில் கவனமாக இருப்பவர்கள் எதையும் சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியும், உள்வாங்கிக் கொண்டைதைச் சிந்தித்து சரியான முறையில் பயன்படுத்த முடியும் என்பதையும் நான் கற்றுக்கொண்டேன்.
  தேர்வுக்குத் தயாரான விதம் பற்றி?
  திட்டங்கள் இல்லாமல், இலக்குகள் இல்லாமல் வாழ்கின்ற வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்? அந்த வாழ்க்கையே அர்த்தமற்றது என்று தோன்றும். எடுத்துக்கொண்ட காரியத்தில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று கடுமையாக யோசிக்கிற நாம் அதன் அடுத்த கட்டம் பற்றி அதிகம் சிந்திப்பது இல்லை. இது ஏன் என்று யோசித்த நான் சிவல் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராக புத்தக அறிவை நன்கு வளர்த்துக் கொள்ள முடிவு செய்தேன். அதன்பொருட்டு நான், 10ம் வகுப்பு முதலே பொது அறிவை வளர்த்துக் கொள்ள The Hindu, Times of India போன்ற செய்தித்தாள்களைத் தொடர்ந்து படித்தேன். India Year Book, NCRT போன்ற மத்திய அரசு வெளியிடும் புத்தகங்களையும் தொடர்ந்து படித்துத் தயாரானேன்.
  உங்கள் வெற்றிக்குப் பின்னால் நின்றவர்கள்?
  என்னுடைய வெற்றிக்கு அதிகாரப் பூர்வமாக சங்கர் அகாடமியின் நிறுவனர்
  ஈ. சங்கர் அவர்கள் நின்றார் எனலாம். மேலும், நம்மை மேன்மேலும் வளர்த்துக்கொள்ள வெளியில் இருந்து ஓர் உந்துதல் எப்போதும் தேவைப்படுகிறது. அதுபோல இத்தனை காலம் என்னை அடைகாத்து, அடையாளப்படுத்தியதில் இரண்டு நபர்களுக்கு பெரும்பங்கு உண்டு. எந்த ஒரு விசயத்திலும் நம்மால் இது முடியும், முடியாதுன்னு பார்க்காமல் முழு மனதோட, அர்ப்பணிப்பு உணர்வோடு உழைச்சோமுன்னா, நிச்சயமாக நாம் வெற்றியடைய முடியுமுன்னு சொல்லி, எனக்கு சமூக அறிவியல் பாடத்தை 10ம் வகுப்பில் எடுத்த திருமதி. கிருபாலனி அவர்களுக்கும், சிறுவயது முதல் இப்போது வரை நான் திரும்புறப்பம் என் தோளுக்குப் பக்கத்திலிருந்து என்னைத் தூண்டிய என் நண்பன் விஷ்ணுவுக்கும் பெரும்பங்கு உண்டு”.
  சிவில் சர்வீஸ் தேர்வுக்கு காத்திருப் பவர்களுக்கு தங்களின் அறிவுரை?
  சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொள்ள, “உங்கள் இலக்குகளை விசாலமாக வையுங்கள். உலகத்தையும், வாய்ப்புகளையும் அகலமாகப் பாருங்கள். வினாத்தாள் தொடர்ந்து எதிர்பார்க்கும் வடிவில் இல்லாமல் வேறுவேறு வடிவில் அமைக்கப்படுவதையும், தலைப்பு தொடர்ந்து மாறுவதையும் கவனத்தில் கொண்டு உங்களுடைய இலக்கை அடைய முயலுங்கள் என்பதை மட்டும் நினைவுபடுத்துகிறேன்”.
  ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வில் நம் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகமான அளவில் ரேங்க் பெறவேண்டும் என்ற தன்னம்பிக்கையின் ஆசையையும் இவருடன் சேர்ந்து பகிர்ந்து கொள்கிறோம்.
  மேலும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகுதல் மற்றும் தேர்வை எதிர்கொள்ளுதல் பற்றிய தங்களின் சந்தேகங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்.

  நலம்தானா

  குழந்தைகள் கீழேவிழுந்து அடிபட்டு ரத்தம் வந்தால்
  கட்டுப்படுத்த காப்பித்தூள், மஞ்சள்பொடிவைத்து மூடலாமா?
  (கார்த்திகேயன், எடப்பாடி)
  காயம்பட்டு ரத்தம் வரும் இடத்தில் காபித்தூள் அல்லது மஞ்சள்தூள் வைத்து அழுத்துவது தவறு. அந்த தூள்களில் உள்ள கிருமிகளால் சாதாரண காயமும் சீழ்பிடிக்க ஏதுவாகிவிடும். அந்த கிருமிகளால் உயிரை பாதிக்கும் ரணஜன்னி கூட ஏற்படலாம். அதைத் தடுக்கத்தான் ப.ப. ஊசி போட வேண்டும். ஆறு மாத காலத்தில் ஏற்கனவே T.T. செலுத்தியிருந்தால் அதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
  காயம்பட்டு ரத்தம் வருவதைத் தடுக்க தூய்மையான துணி, கர்சீப் வைத்து அழுத்திபிடித்து மருத்துவரிடம் செல்ல வேண்டும். மஞ்சள், காபித்தூள் வைத்து அழுத்தும்போது காயபிளவுகளை தையல்போட சிகிச்சையின்போது பிளவு அதிகமாகும் தடை ஏற்படும்.
  வர்ஷினி கிளினிக்
  டாக்டர் N. ரவிசங்கர், M.B.B.S., D.C.H., F.C.D.
  அரசு மருத்துவர்
  கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனை

  வெற்றி பெரும் வித்தை இதோ!

  பரம்பரையின் மீது பழிசுமத்துதல்:
  வெற்றிபெறாமைக்குச் சொல்லும் முதல் காரணம், பரம்பரை அல்லது வம்சம் ஆகும். ஒருவன் உயர்நிலையை அடைவதற்கு அவன் குடும்பச்சூழலே காரணமாக இருக்கின்றது என நம்புவதாகும்.
  இன்றைய மனவியல் வல்லுனர்கள் கூற்றுப்படி பார்க்கின்றபோது ஒருவரின் பரம்பரைக்கும் அவரின் உயர்வுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்றநிரூபித்துள்ளனர், பரம்பரை எனப்படும், மரபணு ஒருவருக்கு அவரின் தாய் தந்தையைப் போன்றஉருவ ஒற்றுமையை வேண்டுமென்றால் தரலாமே தவிர ஒருவரின் அறிவுக்கும், ஆற்றலுக்கும் அது எந்த விதத்திலும் காரணமாக அமையாது என்பதை மனோதத்துவ நிபுணரான வாட்டன் என்பவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
  அவர் சொல்கிறார், “என்னிடத்தில் பல்வேறு மரபுவழி வந்த பத்து குழந்தைகளைக் கொடுங்கள். அவர்களை எப்படி உருவாக்க வேண்டும் என்று முன்கூட்டியே சொல்லிவிடுங்கள். அப்படியே அவர்களை உருவாக்கி காட்டுகின்றேன்” என்கிறார். அதன்படி பிச்சைக்காரன் குழந்தையைக் கோடீஸ்வரனாகவும், தேசத்துரோகியின் குழந்தையை தேசப்பற்றுள்ளவனாகவும் உருவாக்கச் சொன்னார்கள். அதன்படியே அவர் குழந்தைகளை, எப்படி உருவாக்க வேண்டுமோ அந்தச் சூழ்நிலைக்கு உட்படுத்தப்பட்டு, அதன்படியே வளர்த்தார். அவர்களும் அந்த சூழ்நிலைக்குத் தக்கபடியே வளர்ந்தார்கள். முடிவில் பிச்சைக்காரர் குழந்தை கோடீஸ்வரனாகவும், தேசத்துரோகியின் மகன் தேசப்பற்று உள்ளவனாகவும் உருவானார்கள்.
  ஆகையால் ஒருவர் எந்தச் சூழ்நிலையில் வளர்கின்றாரோ அதே தன்மை படைத்தவராக வளர்கின்றார் என்பது உண்மையானது. உதாரணத்திற்கு, நீங்கள் வெற்றியாளர்களுக்கு மத்தியில் இருக்கின்றபோது உங்களுக்குள் எப்படி இருக்கின்றது. தோல்வியாளர்களுக்கு மத்தியில் இருக்கின்றபோது உங்களுக்குள் எப்படி இருக்கின்றது. துக்ககரமான இடத்தில் இருக்கும் போதும் சரி மகிழ்வான இடத்தில் இருக்கும் போதும் சரி நீங்கள் என்ன உணர்வீர்கள் என்றால் அந்தந்த இடத்தின் தன்மைக்கு ஏற்ப நீங்கள் உருமாறி, அதுவாகவே மாறிப்போய்விடுவீர்கள் அல்லவா? அதுபோல்தான் நாம் எப்போதும் வெற்றிபெரும் சூழ்நிலைக்குள்ளே இருப்போமானால், நாம் நிச்சயம் வெற்றியாளர்களாகத்தான் உருவாவோம்.
  அடுத்த இதழில் தொடரும்.