– 2010 – April | தன்னம்பிக்கை

Home » 2010 » April (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    விழியே கதை எழுது

    – மன்னை மாதவன்

    பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் மனிதனின் வாழ்க்கையில் இன்றி அமையாதது. வாழ்க்கையில் சிலர் இந்த நீரால் சாதித்து இருக்கிறார்கள். பலர் வாழ்ந்து வாழவும் வைத்திருக்கிறார்கள். ஆகையால் தான் வள்ளுவ பெருந்தகை மழையை வானிலிருந்து பொழியும் அமுதம் என்றார். உடல்

    Continue Reading »

    எந்தப் புற்றில்….

    – அருள்நிதி Jc S. M. பன்னீர் செல்வம்

    ஒரு நாட்டின் ஜனநாயகத் தூண்களுள் ஒன்று ஊடகங்கள் (ஙங்க்ண்ஹ). ஊடகங்கள் என்பது நிகழ்வு களை, சாதனைகளைச் செய்தி களாக படிப்பதற்காக பேப்பரி லும், கேட்பதற்காக வானொலி யிலும், பார்ப்பதற்காக தொலைக் காட்சி (பய)யிலும் தருகின்றன.

    Continue Reading »

    திறந்த உள்ளம்

    கொங்கு மலைச்சாரலில்
    கொலுவீற்று மணித்தமிழை
    மங்காத ஒளியேற்ற
    மங்கையரின் அகல்விளக்காய்
    இதழென்னும் மணம்வீசிட

    Continue Reading »

    இன்றைக்கு உங்கள் முதல் வேலை

    – கே. ரஜனிகாந்த், தன்னம்பிக்கை பயிற்சியாளர்

    இந்த இதழில் நாம் ஆராயப்போவது, ரர்ழ்ந்- ப்ண்ச்ங் க்ஷஹப்ஹய்ஸ்ரீங்; அதாவது அலுவலக பணி மற்றும் பொது வாழ்க்கை; இதனை நாம் எந்த அளவிற்குச் சமமாக எடுத்துச் செல்கிறோம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

    Continue Reading »

    வெற்றிப்பயணம்

    உன்னை நீ அறிவாய்
    விண்ணே உன் அறிகுறியாய்!….
    எண்ணத்தை விளிப்பாய் – உன்னுள்ளே
    வண்ணத்தை ஒளிர்விப்பாய்!…

    Continue Reading »

    உடலினை உறுதி செய்

    – தியானம் தொடர்ச்சி…

    – முனைவர் செ. சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.

    மனதைக் கட்டுப்படுத்துதல்

    தியானம் செய்யும் போது முழுக்கவனத் தையும் ஒரு வார்த்தையில் அல்லது ஒலியின் மீது வைத்துக் கொண்டிருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒரு பாட்டைக் கேட்கும் போதுகூட மனது அப்பாட்டிலிருந்து விலகி வேறு எங்கோ போய்விடுகிறது. தொடர்ந்து தியானப் பயிற்சியில் ஈடுபட்டால்தான், மனதைக் கட்டுப்படுத்த முடியும். கட்டுப்பாடுள்ள மனதால் தான் ஒரு செயலில் தொடர்ந்து ஈடுபட முடியும். சாதனைகளையும் படைக்க முடியும்.

    முழு ஈடுபாட்டோடு முயற்சி செய்தால் தான் மனதினை ஒருநிலைப்படுத்த முடியும்.

    தியானம் மூலம் ஒருநிலைப்படுத்தி பழக்கப்பட்ட மனத்தால் அதாவது பண்பட்ட சுயக்கட்டுப்பாடுள்ள மனத்தால் உண்ணும் உணவின் மீது முழுக்கவனம் செலுத்தி உணவின் சுவையைத் தொடர்ந்து ரசிக்க முடியும். இதனால் அளவான உணவு உண்ட உடனேயே போதுமென்ற திருப்தி உணர்வு ஏற்படுகிறது. உணவின் மீது முழுக்கவனமும் செலுத்த இயலாத மனதாக இருந்தால், குறைந்த நேரம் மட்டும் உணவில் கவனம் இருக்கும். எனவே போதுமான உணவு உண்ட போது கூட உணவு உண்ட திருப்தி இருக்காது. இதனால் அதிகமாக உணவு உண்ண வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

    தியானப்பயிற்சி மாணவர்களுக்குப் பாடங்களில் முழுக் கவனத்தையும் செலுத்த உதவுகிறது. 45 நிமிடங்கள் பாடம் நடத்தும் ஆசிரியரின் உரையைக் கூர்ந்து கவனித்தால் பாடமானது மனதில் பதிந்து விடுகிறது. அதை மீண்டும் டியூசனுக்குச் சென்று படிக்க வேண்டியதில்லை. மனதில் இப்படி முழு கவனத்துடன் பதியவைத்த பாடம் பின்னர் எளிதில் ஞாபகத்தில் வருகிறது.

    எந்தவொரு செய்தியையும் மனதில் பதிவு செய்யப்படாதவரை அதைத் திரும்ப நினைவு கூறமுடியாது.

    மறதிக்கு மருந்து தியானம்

    நம்மில் பலருக்கு மறதி இருக்கும். சிலருக்கு மறதி மிகவும் அதிகம். அக்ஷள்ங்ய்ற் ம்ண்ய்க்ங்க் ல்ழ்ர்ச்ங்ள்ள்ர்ழ் என்ற ஒரு பேச்சும் உண்டு. ஒரு மொபைல் போனை எங்கேயோ வைத்துவிட்டுத் தேடுவோம். பின்னர் வீட்டில் கஹய்க்ப்ண்ய்ங் போனில் டயல் செய்து சத்தம் கேட்கும் இடம் சென்று தொலைந்து போன செல்போனை கண்டுபிடிப்போம். செல்போன் வைத்திருந்த இடத்தை எப்படி மறந்தோம் என்று பார்த்தால், நாம் செல்போனை மேஜைக்கு அடியில் வைத்த நேரம் நமது கவனம் வேறு எங்கேயோ இருந்திருக்கும். எனவேதான் அதை எங்கு வைத்தோம் என்று தெரியாமல் போய்விடுகிறது. மறதியின் முக்கிய காரணம் கவனக்குறைவுதான். ஒருவருடைய பெயர் என்ன என்று கேட்போம் அவரும் சொல்லிவிடுவார், ஆனால், இரண்டு நிமிடம் கழித்து அவருடைய பெயர் நமக்கு ஞாபகத்தில் வராது. யோசித்துப் பார்த்தாலும் ஞாபகம் வராது. ஏன் தெரியுமா? உங்களது பெயர் என்ன என்று கேட்ட மாத்திரத்திலேயே நமது முழுக் கவனமும் வேறு ஏதாவது ஒன்றில் சென்றிருக்கும். அடுத்து என்ன கேள்வி கேட்பது என்றஎண்ணத்தில் நாம் இருந்த அந்த வேளையில் ‘பிரவீன் குமார்’ என்று அவர் சொல்லியிருப்பார். நாம் அதைப் பதிவு செய்திருக்க மாட்டோம். எனவேதான் மறதி ஏற்படுகிறது. தொடர்ந்து கவனம் செலுத்தும் ஒரு மனநிலையை வளர்க்க தியானம் அனைவருக்கும் மிக மிக அவசியமாகிறது.

    எனவே, மன உளைச்சலைக் களையவும், மன அமைதியைத் தேடவும், ஞாபக சக்தியை வளர்க்கவும், வாழ்க்கையில் தினமும் நாம் செய்ய வேண்டியது, தியானம்.

    உடலைக் கட்டுப்படுத்தும் மனது

    நல்ல தியானப் பயிற்சி பெற்றமனதால் பல நோய்களைத் தடுக்க முடியும், வந்த நோயைக் கூட குணப்படுத்த முடியும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். மனதில் உள்ள எண்ணங்களும், உணர்ச்சிகளும்தான் உடலின் நிலையைக் கட்டுப்படுத்துகின்றன. இன்னும் சொல்லப் போனால் மனதும், உடலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. மனதில் உள்ள எண்ணங் களுக்கேற்ப உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக நீங்கள் சென்னைக்குப் பஸ்ஸில் வந்திறங்கும்போது உங்களது பெட்டிகள் காணாமல் போய்விட்டால் உங்கள் இரத்தம் கொதிக்கும். உங்கள் இதயத்துடிப்பு அதிகரிக்கும், கால்கள் நடுங்கும், வியர்த்துக் கொட்டும், தலை சுற்றும். உங்களால் நிதானமாகக் கூட சிந்திக்க முடியாது, ஏன் உடலில் இவ்வளவு மாற்றங்கள்? யாராவது உங்களைத் தாக்கினார்களா? கீழே விழுந்து அடிப்பட்டு விட்டதா? இல்லையே. உடல் நன்றாகத்தானே இருக்கிறது. ஆனால் நகையும், பணமும், சான்றிதழ்களும் இருந்த பெட்டி தொலைந்துவிட்டது என்ற செய்தியை மூளை தெரிந்து கொண்டு உடலுக்குச் சில கட்டளை களை இடுவதால் இந்த மாற்றங்கள் உடலில் ஏற்படுகிறது. நமது எண்ணங்களும் உணர்ச்சிகளும் உடலின் நிலையை நிர்ணயிக்கின்றன.

    மிகவும் அமைதியாகவும், திருப்தியாகவும், மனது இருக்கும் போது உடல் நிலையும், விரும்பத் தக்க நிலையில் இருக்கிறது. உணர்ச்சி வசப்படும் போதும், நிதானம் இழக்கும்போதும் உடலில் பல வேதியியல் பொருட்கள் தயார் செய்யப்பட்டு நோய்கள் வர ஏதுவாகின்றன. தியானம் நமது உணர்வுகளையும் எண்ணங்களையும் நிதானமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆபத்தான நேரங் களில் கூட நம்மை நிதானமாக சிந்தித்து தீர்வுகாண வழி வகுக்க உதவுகிறது. ஒருவேளை நமது பெட்டி காணாமல் போனால் கூட தியானப் பழக்கம் உள்ள நமது மனது பதறாது. நிதானமாக சிந்திக்கும். அந்தப் பெட்டி கீழே விழுந்திருக்கும் அல்லது யாராவது மாற்றி எடுத்திருப்பார்கள் அல்லது யாராவது திருடியிருப்பார்கள் என்று தியான மனது சிந்திக்கும். பெட்டி திருட்டுப் போயிருந் தால்கூட பதட்டமடைந்து என்ன பயன்? நிதான மாக யோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று முடிவு செய்து செயலில் இறங்குவதுதான் ஒரே வழி என்று அந்தத் தியான மனது உடலுக்கு அறிவுறுத்தும். இதனால் இதயத் துடிப்பு அதிகரிப் பதும், இரத்த அழுத்தம் கூடுவதும், தலைச் சுற்றுவதும் தவிர்க்கப்படும். சிலருக்கு ஒரு

    கெட்ட செய்தியைக் கேட்ட மாத்திரத்திலேயே மாரடைப்பு வந்து விட்டது என்றெல்லாம் நாம் கேள்விப்படுகிறோம். தியானப் பயிற்சி செய்பவர் களுக்கு இதுபோன்ற ஆபத்துகள் வருவதில்லை.

    தியானம் என்பது மனதிற்கான பயிற்சி. நல்ல மனநலம் உடல்நலத்திற்கு அடிப்படைத் தேவை என்பதால், அந்த மனநலத்தைக் காக்கும் தியானத்தில் ஈடுபடுதல் வேண்டும்.

    எங்கும் தியானம் எதிலும் தியானம்

    தியானத்தை எங்கேயும் எப்படியும் செய்ய முடியும். இப்பூமியில் வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும், ஒரு தியான நேரமாக்க

    முடியும். குளியலறையில் கூட

    தியானம் செய்யலாம். குளிக்கும் 10 நிமிடங்களில் ஒவ்வொரு

    விநாடியும் உங்கள் கவனத்தை

    உங்கள் உடல்மீது

    வைத்திருங்கள்.

    குளிப்பதே ஒரு

    தியானம்தான்.

    சோப்பு போடும் போது அது ஒரு ‘மசாஜ்’ என்று கருதி கவனத்தை அங்கேயே வைத்தால், அது மிகவும் சுகமான தியானமாக இருக்கும்.

    அதைப் போல பஸ்ஸிலோ, காரிலோ பயணம் செய்யும் போது கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் ஈடுபடலாம். அலுவலகத் தில் கூட உணவு இடைவேளையின் போது 10 நிமிடங்கள் தியானம் செய்யலாம். ஒற்றைத் தலை வலி போன்றமருந்து கண்டுபிடிக்கப்படாத நோய் களைத் தியானத்தின் மூலம் குணப்படுத்தலாம். தியானத்தில் ஈடுபடும் போது தலைவலியின் காரணகாரியத்தை அறிய முடிகிறது. எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் அதனை நிதான மாக யோசித்து அதற்கான தீர்வும் காண முடிகிறது. நிதானமாக தீர்வுக்கான நடவடிக்கை 0களிலும் இறங்க முடியும். பிரச்சனைக்குத் தீர்வு கண்டபின் மன நிம்மதி நிரந்தரமாக கிடைக்கும். இதுபோன்ற அன்றாட பிரச்சனைகளைச் சமாளிக்கக் கற்றுக் கொள்வதன் மூலம் வர விருக்கும் பிரச்சனைகளையும் சமாளிக்கலாம். எனவே தியானம் ஒரு நல்ல ஆயுதம் அதைக் கையில் எடுப்போம்.

    மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட அதிகம் என்று பல மருத்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள். உடல்நலத்தினை மேம்படுத்த உடற்பயிற்சி தேவைப்படுவது போல மனநலத்தைப் பாது காக்க மனப்பயிற்சி தேவை. இல்லையென்றால் மனவியாதிக்கு ஆளாகும் அபாயம் உண்டு. மனதில் பலவிதமான தீய எண்ணங்கள் தோன்றி விடுவதே மனநோய்க்கு காரணம் ஆகும். வன்முறை, வெறுப்பு, தயக்கம், பதட்டம், பயம், பொறாமை, தாழ்வு மனப்பான்மை போன்ற மனநிலைகள்தான் பெரும்பாலும் மனநிலைப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.. வழக்கமான தியானப் பயிற்சிகளின் மூலம் மனநிலைப் பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற உணர்ச்சி களை மனதிலிருந்து அறவே நீக்கிவிடலாம்.

    சாதனைகள் பல படைக்க வேண்டும். அதற்கு உயிர் வாழ வேண்டும். உயிர் வாழவே நாம் உண்ணுகிறோம். உண்ணுவதற்காக உயிர் வாழவில்லை. உடல் பருமனைக் குறைத்து, தியானத்தில் ஈடுபட்டு உடல் நலத்தை அனுபவிக்க ஒரு நிபந்தனை உண்டு. அதுதான் நல்லொழுக்கம்.

    (தொடரும்)

    முயன்றேன் வென்றேன்

    – உஷாராணி
    கணேசபுரம், கோயம்புத்தூர்
    செல் : 9486989270

    ஷ ன் வளர்ந்த ஊர் கணேசபுரம், அந்த ஊருக்கு ஒரு பள்ளி வர வேண்டும் என்பதற்காக என் அப்பாவும், சில நண்பர்களும் சேர்ந்து கல்வி அதிகாரிகளையும், அரசியல் தலைவர் களையும் பார்த்து கொண்டிருந்த நேரமது,

    Continue Reading »

    வேலையில் இருக்கட்டும் உற்சாகம் வெற்றிக்கு அதுவே அச்சாரம் !!

    – “கோவை பழமுதிர் நிலையம்”
    திரு. சின்னசாமி

    உடலையும், உள்ளத்தையும் வருத்தாமல் பிரம்மாண்டமான எதிர்காலத்தை நம்மால் உருவாக்குவது சாத்தியமில்லை “சின்ன வயதில் இருந்தே கடுமையான உழைப்பு. கொஞ்ச நேரம் கிடைத்தாலும் அந்நேரத்தை எப்படி பயன் உள்ளதாக்கலாம் என்கிற சிந்தனை. தொழில் ஒன்றில்

    Continue Reading »

    வெற்றி பெறுவது கடினம் அல்ல…

    – த. முருகேசன்
    மனநல, மனிதவள
    மேம்பாட்டுப்
    பயிற்சியாளர்

    வெற்றிப் பெற்றவர்களின் வாழ்க்கையையும், அவர்கள் எடுத்துக்கொண்ட வழித் தடங்களையும், அவற்றை அவர்கள் அமைத்துக்கொண்ட விதங்களையும் வித்தியாச மான கோணத்தில் பார்த்தால் புரியும் வெற்றி பெறுவதற்கு அவர்கள் கடினப்படவில்லை; மாறாக வேறு ஏதோ ஒன்று நடந்து இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியும்..

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    எப்படியேனும் மக்களை ஏமாற்றி சம்பாதித்து விரைவில் கோடீஸ்வரன் ஆகிவிடவேண்டும் என்கிற துடிப்புடன் செயல்படும் கூட்டங்கள், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்று தெரிந்தாலும் போகட்டும் நாம் நன்றாக வாழ்ந்தால் போதும் என்கிற எண்ணம் படைத்தவர்கள் தலைதூக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    Continue Reading »