– 2008 – October | தன்னம்பிக்கை

Home » 2008 » October

 
  • Categories


  • Archives


    Follow us on

    நலமாகும் பயிற்ச்சி

    துன்பம் என்று வந்து விட்டால்
    துடிக்கும் மனிதர் “மனது” – அந்த
    துன்பத் தையே மாற்றும் நிலையில்,
    “பயிற்ச்சி” வேண்டும் மனதில்!

    Continue Reading »

    இயந்திர மனிதர்கள்

    இயந்திர மனிதர்கள்?

    இயந்திர மனிதர்கள் வேறு யாருமல்ல நாம் தான். காரணம் இன்றைய சூழலில் நாம் இயந்திரத் தனமாகத் தான் வாழ்கிறோம். ஒரு ரோபோட்டுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு என்று தேடும் அளவில் உள்ளது நம் வாழ்க்கை. எதற்காக இப்படி மாறிவிட்டோம் என்று சிறிது கூட சிந்திக்க நேரமில்லாமல் இந்த மாற்றம் நிகழ்ந்து விட்டது. அதன் அடிப்படை காரணம் என்ன என்பதை அறிந்து அதை மாற்றமுயற்சி மேற்கொள்வது நலம்.

    Continue Reading »

    குழந்தை பருவங்களில் உடற்பருமன்

    -டாக்டர்.க. ராஜேந்திரன் குழந்தைகள் மற்றும் சிசுநல மருத்துவர்,
    கோவை மெடிக்கல் சென்டர்.

    உடற்பருமன் மற்றும் அளவுக்கதிகமான உடல் எடை ஆகியவை ஒரே அர்த்தம் தரக் கூடியவை. உடல் பருமன் உலக அளவில் குழந்தைகள் மற்றும் இளவயதினரிடம் பரவலாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள குழந்தைகளில் 16% பேர் அளவுக் கதிகமான உடல் எடையும், 31% பேர் உடல் எடை அதிகரிக்கும் அபயாத்திலும் உள்ளனர்.

    Continue Reading »

    இங்கு இவர் இப்படி

    குறிக்கோளில், செயலாற்றலில் தெளிவுள்ளவன் ஒரு நாளும் தோற்பதில்லை என்ற சீனப் பழமொழிக்கேற்ப தான் எடுத்துக் கொண்ட செயலில் குறிக்கோளுடன் உழைப்பவர்கள் வெற்றியின் சிகரத்தை அடைகின்றார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய ஆட்சிப் பணித்தேர்வில் தமிழகத்திலிருந்து அதிகமான போட்டியாளர்கள் வெற்றி பெற்றிருந்தார்கள்.

    Continue Reading »

    கடமைதான் வாழ்க்கை

    -சென்ற இதழ் தொடர்ச்சி…( திரு. மு. ரவி இ.கா.ப., காவல்துறை துணைத்தலைவர்(நிர்வாகம்), சென்னை. அவர்களுடன் நேர்முகம்)

    நம்ப முடியாத அளவு நவீன காலக் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து பொது மக்களின் கவனத்திற்கு தாங்கள் கொண்டு வரும் செய்தி?

    மிக வேகமாகப் பரவி வருகின்ற குற்றங்களில் சைபர் க்ரைம் முதலிடம் வகிக்கின்றது. ஏற்கனவே

    Continue Reading »

    தாழ்வு மனப்பான்மையை தவிடுபொடியாக்குங்கள்

    தன்னம்பிக்கையை தட்டி எழுப்பும் தங்கத் தொடர்-2

    உன் சூழ்நிலை எப்படியிருந்த போதிலும், உன் மன
    உறுதியால் உலகையே வெற்றி கொள்ளும் உத்தம
    ஆத்மா நீ. அச்சம், கவலை குழப்பம் என்னும்
    மாயைகளை வெல்லும் மகாவீரனும் நீயே. எப்பொழுதும்
    நீ இறைவனின் கழுத்து மாலையின் களங்கமற்ற
    மணியாய்த் திகழ்கிறாய்.

    Continue Reading »

    இதுதான் வாழ்க்கை

    1. உங்களுடைய வேலைக்கு செல்ல வேண்டிய நேரத்திற்கு சற்று முன்னதாகவும் முடித்து வெளிவர வேண்டிய நேரத்திற்கு சற்று பின்னதாகவும் செல்லுங்கள்.

    2. பணிபுரியிமிடத்திலுள்ள பொருள்களை உங்களுடைய வீட்டுப் பொருள்களாக நினையுங்கள்.

    3. உங்கள் வாடிக்கையாளர்களை உங்களின் உறவினர்களாகப் பாவியுங்கள்.

    Continue Reading »

    வெற்றிப்படிக்கட்டுக்கள்

    வேலை செய்ய உகந்த நேரம் எது, அட்டவணை போட்டு வேலை செய்யும் போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சென்றஇதழில் பேசிக் கொண்டிருந்தோம் இல்லையா?

    சரி, ஆக மொத்தம், தூக்கமே வராம, கஷ்டப்பட்டு… தூக்கத்தை வரவழைச்சுக்கறதுக்கு முன்னாடி நாம புரண்டு கொண்டிருந்த அந்த சில மணி நேரங்களும் வீண்…

    Continue Reading »

    திறந்த உள்ளம்

    தன்னம்பிக்கை இதழில் தன்னம்பிக்கை உணர்வூட்டும் கட்டுரைகள், தன்னம்பிக்கை வளர்க்கும் கவிதைகள், உளவியல் சார்ந்த கட்டுரைகள் என நன்றாக உள்ளன. மேலும் சமுதாயத்தில் உழைப்பில் உயர்ந்த, சாதனை சிகரங்களை எட்டிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்துறை அறிஞர்களின் நேர்காணல் மூலம் அவர்களின் வெற்றி இரகசியங்கள், அனுபவங்களை வெளிப்படுத்துவது மற்றவர்களுக்கு ஊக்குவிப்பாக, வழிகாட்டுதலாக உள்ளது. மேலும்

    Continue Reading »

    அற்புத இளைஞனே!

    வண்ண வண்ண கனவுகளை
    நாளும் நாளும் கண்டு விடு
    அதற்காய் நித்தமும் உழைத்திடு
    கனவுகள் எல்லாம் உன் வசமாகும்!

    Continue Reading »