– 2006 – January | தன்னம்பிக்கை

Home » 2006 » January (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    நீயார்?

    நம் வாழ்க்கை
    தொடர்…

    இனிய வாசகர்களே!

    வாழ்க வளமுடன்.

    “மனிதன் என்று சொல்லுவோம்! மகிழ்ச்சியுடன் துள்ளுவோம்”” என்றபுதுமை கீதம் பாடுவோம். நாம் எல்லோரும் மனிதராய் பிறந்து விட்டோம். இந்த ஊரில், இந்த தேதியில், இந்த நேரத்தில் இவர்கட்கு குழந்தையாய் பிறக்க விரும்பிப் பிறந்தோமா என்றால், நிச்சயமாக இல்லை. நம் விருப்பமின்றி இவ்வுலகில் நாம் பிறந்து விட்டோம். நாம் இறக்கும் முன்பே நம் காலத்தை வாழ்ந்து காட்டுவோம். இதற்கு அடிப்படையாக “நீ யார்”” என்று ஒவ்வொருவரும் கேட்டுத் தெளிவு பெறவேண்டும்.

    Continue Reading »

    நாமக்கல் கவிஞர் பேரன் எச். நடராஜன் நேர்கானல்

    சென்ற இதழ் தொடர்ச்சி

    மிகச்சிறந்த சிந்திக்க வைக்கும் கேள்வி. இதன் பதில் பல பேரின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஊட்டவல்லதுதான்.

    Continue Reading »

    ஆர்வம் பொங்கட்டும்

    நீங்கள் எடுத்த செயலில் வெற்றி பெறுவதற்கு ஆற்றல் முக்கியம் என்றாலும் அதை விடவும் ஆர்வம் முக்கியம். ஆர்வம் இருந்தால்தான் ஒரு செய்கின்றவேலையில் ஈடுபாடு தோன்றும். ஆர்வம் இல்லாமல் செய்கின்ற எந்த வேலையும் அரையும் குறையுமாகத் தான் முடியும். முழுமையாக முடியாத பணிகளால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.

    Continue Reading »

    தமிழறிஞர் முனைவர் க.ப. அறவாணன் அவர்களுடன் நேர்முகம்

    சென்ற இதழ் தொடர்ச்சி

    தங்களின் பணிகளைப் பற்றி….

    எம்.ஏ. முதல் வகுப்பில் முதன்மையில் (First Rank) தேர்ச்சி பெற்றிருந்தாலும், 1967இலும் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. இருபதுக்கு மேற்பட்ட நேர்முகங்களுக்குச் சென்று ஏமாந்து திரும்பியதுதான் மிச்சம். இச்சூழலில் என் வாழ்க்கையில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. நேர்முகம் எதுவும் வைக்காமலும், நேரில் பார்க்காமலும் என் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் மிகச்சிறந்த கிருத்துவக் கல்வி நிறுவனமான திருநெல்வேலித் தூய சேவியர் கல்லூரி விரிவுரையாளராக அமர்த்தப்பெற்றேன்.

    Continue Reading »

    முன்னேற்றத்தின் மூலதளங்கள்

    முன்னேற்றத்தின் மூலதளங்களில் சில தளங்கள் குறித்து கடந்த பதினைந்து கட்டுரைகளில் மிக ஆழமாகவும் விரிவாகவும் எழுதியதை நேசித்து வாசித்திருக்கிறீர்கள். இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டின் முதல் கட்டுரை ஒரு புதிய தளத்தைக் குறித்து விவரிக்க இருக்கிறது. இந்தத் தளம் சற்று வலுவாக இல்லை என்றால் முன்னேற்றம் முறையாக இராது. எந்த முன்னேற்றமும் நிலைத்து நிற்காது. இது உயிரினும் மேலாக ஓம்பிடத் தகுந்தது என்கிறார் வள்ளுவர். ஆம்… ஒழுக்கம்!

    Continue Reading »

    நிறுவனர் நினைவுகள்

    டாக்டர் இல.செ.க. அவர்கள் “தமிழர் வேளாண்மை மரபுகள்” பற்றிய ஆய்வினால் கீழ்க்காணும் பயன்பாடுகள் கிட்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். பண்டை நாளில் வேளாண் விளைபொருள் விற்பனை பண்ட மாற்று முறையில் நடைபெற்றது. அது வேளாண் சமுதாய வாழ்வுக்கு உகந்ததாக இருந்தது; எனினும் பொருளுக்கு உரிய விலையும், விற்பனை வாய்ப்புகளும் பெருகினாலன்றி வேளாண் சமுதாயம் மேம்பாடு அடையாது என்ற படிப்பினை இன்றைய சமுதாயத்திற்கு உதவக்கூடும்.

    Continue Reading »

    நிறுவனர் பக்கம்

    இல.செ.க. வின் வெற்றிக்கு ஒரே வழி 1988ல் எழுதியது.

    ஒரு இருபத்தைந்து வயது இளைஞர், ஒரு அறுபது வயது நிரம்பிய பெரியவரோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். பெரியவர் சாதாரணமாக உட்கார்ந்து இருக்கிறார். சாதாரண படிப்பாளியும் கூட, ஆனால் உலக அனுபவம் நிறைந்தவர். நிறைகுடம். இந்த இளைஞரோ மெத்தப் படித்தவர்; பட்டங்கள் பெற்றவர் பெரிய பதவியில் இருப்பவர். பெரியவரிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார். இந்தக் காட்சியைப் பார்க்கிறீர்கள்? நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

    Continue Reading »

    வானம் வசப்படும்..!

    முயற்சியை முன்னுக்கு வையுங்கள்
    முன்னேறம் முன்னே வந்து நிற்கும்!

    இயலாமையை இல்லாமை ஆக்குங்கள்!
    வாழ்வு இனிமை நிறைந்ததாகும்!

    Continue Reading »

    நேர்முகம்


    குன்றா புகழுடன்
    குறுநில மன்னர்கள்
    படை குடி கூழுடன்

    Continue Reading »

    உயிர் சுவாசம் நீ!

    மலரும் மனமும்

    இதன் முதலாக மூச்சை உள்ளிழுத்துதான் மண்ணில் பிறக்கின்றோம். இறுதியாக மூச்சை விட்டுத்தான் மண்ணுக்குள் போகின்றோம். இடைபட்ட காலத்தில் மூச்சை உள்ளிழுக்கும்போது பிறந்தும், மூச்சை வெளிவிடும்போது இறந்தும் வாழ்கின்றோம். மீண்டும் மூச்சை உள்ளிழுப்போம் என்ற நம்பிக்கையில்தான் மூச்சை வெளிவிடுகின்றோம்.

    Continue Reading »