– 2016 – November | தன்னம்பிக்கை

Home » 2016 » November (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    தட்டுங்கள் திறக்கப்படும்…

    மேதகு முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் அணுசக்தி விஞ்ஞானியாக இருந்த காலத்தில், ஒருநாள் அவருடைய விஞ்ஞானக் கூடத்தில் அவரிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்த இளம் விஞ்ஞானி ஒரு வேண்டுகோளை வைத்தார். “நான் என் குழந்தைகளை கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன்”. மாலை 5.30 மணிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார். அப்துல்கலாம் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

    வேலை மும்முரத்தில் மூழ்கிப்போன விஞ்ஞானி இதை மறந்து போனார். கடிகாரத்தைப் பார்த்த போது இரவு 8.30 மணி ஆகி இருந்தது. வீட்டில் குழந்தைகளை கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாய் இருந்தோமே, நேரம் போவது தெரியாமல் மறந்து விட்டோமே, குழந்தைகள் ஏமாந்து போயிருப்பார்களே என்று தன்னைத்தானே நொந்து கொண்டு வருத்தப்பட்டார்.

    வருத்தத்துடனும், பயத்துடனும் வீட்டிற்குப் போனார். வீட்டில் மனைவி மட்டுமே இருந்தார். குழந்தைகள் எங்கே? என்று கேட்டதும், மனûவி சொன்னார், “உங்கள் மேலதிகாரி கலாம் அவர்கள் வந்து குழந்தைகளை  கண்காட்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்” என்று சொன்னார். அந்த இளம் விஞ்ஞானி ஆனந்தத்தாலும், மகிழ்ச்சியாலும் வாயடைத்துப்போனார்.

    இளம் விஞ்ஞானி வேலையில் மூழ்கி விட்டதைப் பார்த்த கலாம் அவர்கள், அவருடைய கவனத்தை கலைக்க விரும்பாமல், குழந்தைகளின் கனவையும் கலைக்க விரும்பாமல் தானே அந்த வீட்டிற்கு சென்ற குழந்தைகளை கண்காட்சிக்கு அழைத்துச் சென்றார். கலாம் அவர்களுக்கு இருந்த தடுக்க முடியாத நேர்மறை ஈர்ப்பு (Irresistibly Attractive) அதிர்வு அலைகளும், இளம் விஞ்ஞானிக்கு இருந்த நேர்மறை ஈர்ப்பு அதிர்வு அலைகளும் ஒரே திசையில் பயணித்ததால்தான், இளம் விஞ்ஞானி என்ன நினைத்தாரோ, அதை செயலில் செய்து காட்டினார் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.

    தடுக்க முடியாத ஈர்ப்பு (Irresistibly Attractive)  என்றால் என்ன?

    ஒருவர் தடுக்க முடியாத ஈர்ப்புடன் இருப்பது எப்படி? இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கேள்வி இது தடுக்க முடியாத ஈர்ப்பு என்பது ஒரு சக்தி. ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கும் ஒரு உந்து சக்தி. நம் மனதிலே அந்த சக்தி உருவாகிறது. சக்தி நம்மைச் சுற்றியே இருக்கிறது. நம்மை சுற்றி இருப்பவர்களிடமும் இருக்கிறது. அந்த சக்தி உண்மையானது. கண்ணுக்குப் புலனாகாதது. ஆனால், வலிமையானது. நம்மிடம் உள்ள அந்த உந்து சக்திதான் (Irresistibly Attractive) நம்மை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறது.

    நம்மிடமுள்ள அந்த சக்தி அலை நம்மிடமிருந்து நம்மைச் சுற்றி இருப்பவரிடமும் பரவுகிறது. நமக்குப் பக்கத்தில் இருப்பவருடைய சக்தியும், நம்மை நோக்கி சக்தி அலைகளாக திரும்பி வருகிறது. இதை சோதித்துக்கூட பார்க்க முடியும். நம்முடைய கைகளை அடுத்தவர்களுடைய கைகளுக்கு பக்கத்தில் ஒரு அங்குல இடைவெளி விட்டு 2 நிமிடம் வைத்துப்பாருங்கள். நம் சக்தி அடுத்த உடலுக்குள் பாய்வதையும், அடுத்த உடலில் உள்ள சக்தி நம்மை நோக்கி வந்து மின் அலைகளைப் போல நமக்குள் பிரவேசிப்பதையும் உணரலாம். பாம்பின் கால் பாம்பு அறியும் என்பதைப்போல நம்மிடமுள்ள நேர்மறை அதிர்வுகள் அதே நேர்மறை அதிர்வுகள் கொண்ட பக்கத்தில் உள்ளவர்களின் அதிர்வுகளோடு கலக்கும்.

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில்….

    யார் பொறுப்பு?

    ஒருவருக்கு வெற்றி எப்படிக் கிடைக்கிறது…?” என்று பல்வேறு ஆராய்ச்சிகள் நாள்தோறும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. வெற்றி பெற்றவர்களுடைய வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால் – அவர்களின் உழைப்பு, திட்டமிடும் திறன், நேர்மை போன்ற பல குணங்கள் அவர்கள் வாழ்வில் பளிச்சிட்டு வெற்றியை வழங்கியிருப்பதைக் காணலாம்.

    “நேர்மையாக வாழாதவர்கள்கூட பிரபலங்கள் வரிசையில் அமர்ந்து உலா வருகிறார்களே” என்ற வருத்தம் பலருடைய மனதில் இன்றும் இருக்கத்தான் செய்கிறது.

    பிரபலமானவர்கள் அனைவரையும் நாம் வெற்றியாளராக கருத முடியாது. குறுக்கு வழியில் நேர்மை தவறி, பணம் ஈட்டியவர்களின் மீது அந்தப்பணமே ஈட்டியாக மாறி அவர்கள் நெஞ்சில் குத்துவதை இன்றும் பல நிகழ்வுகளில் நாம் காணலாம். எனவேதான், “பிரபலம்” என்பதையும் “புகழ்” என்பதையும் வேறுபடுத்திக் காட்டுகிறார்கள்.

    எச்சில் இலை சில நேரத்தில் வேகமாக வீசுகின்றகாற்றில் மேலே பறக்கிறது. மேலே பறந்ததும் அதிசயமாய் அனைவரும் அந்த இலையைப் பார்க்கிறார்கள். காற்று நின்றதும், அந்த எச்சில் இலை, கீழே விழுகிறது. அப்போது, அதனை நாய்கூடத் தீண்டுவதில்லை. இதைப்போலதான், சிலர் ஒரேநாளில் ஏதேனும் நேர்மைக்கு அப்பாற்பட்ட செயல்களில் ஈடுபட்டு பிரபலமாகி விடுகிறார்கள். அவர்களின் அந்தரங்கம் பிரபலமாகும் போது, அவர்களால் பயன் பெற்றவர்கள்கூட அவர்களைப் புறக்கணிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

    நேர்மை, தியாகம், உழைப்பு, மக்கள் சேவை போன்ற பல இனிய பண்புகளால் படிப்படியாக மக்கள் மனதில் நிலைத்து நீங்காத புகழ் பெற்றவர்கள், கல்லில் செதுக்கிய சிற்பம்போல நிலைத்து என்றும் காட்சியளிக்கிறார்கள். இந்தப் புகழ்தான் நீடித்த வெற்றியை ஒருவருக்கு வழங்குகிறது.

    “வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும். அதிகமாகப் புகழ் பெறவேண்டும்” என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். இதற்காகத்தான் இளம்வயதிலேயே தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். மேற்படிப்புக்காக கல்லூரிகளிலும் சேர்த்து அவர்கள் கனவை நனவாக்க அரும்பாடு படுகிறார்கள். ஆனால் – நன்றாக படித்தவர்கள் கூட எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியாமல் தவிக்கிறார்கள். “இப்போதுள்ள இளைஞர்களில் பலர் படிப்பில் கவனம் இல்லாமல் இருக்கிறார்கள்” என்று வேதனைப்படுகின்ற பெற்றோர்களும், இப்போது அதிகமாகி வருகிறார்கள். “பெற்றோர்களிடம் இந்தக் கவலை ஏன் உருவாகிறது…?” என்பதை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். “”பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக அமையவில்லை என்றும், அவர்களிடம் நல்ல குணங்கள் எதிர்பார்த்த அளவு வளர்க்கப்படவில்லை” என்றும் வருத்தப்படுபவர்களில் பலர் அதற்கான காரணத்தைப் பற்றி சிந்திக்கத் தவறி விடுகிறார்கள். பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுவதற்கு பள்ளிகள், கல்லூரிகள், நண்பர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் காரணமாக அமைகிறார்கள்.

    சில நிகழ்வுகளால் என்னென்ன விளைவுகள் உண்டாகும். என்பதை நாம் உடனே தெரிந்து கொள்ளலாம். ஆனால், சில செயல்களுக்கான விளைவுகளை அறிந்துகொள்ள நாம் ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதைப் போலவே ஒரு நாட்டின் கல்வியிலும், பண்பாட்டிலும் ஏற்படுகின்ற மாற்றங்களை கண்கூடாக உடனே காண முடியாது. அதன் விளைவுகளை காலப் போக்கில் தான் நாம் உணர இயலும்.

    எனவே, இளைய உள்ளங்களின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் அவர்கள் மட்டுமே பொறுப்பு என்று சொல்லி யாரும் எளிதில் தப்பித்து விடமுடியாது. இந்த நாட்டிலுள்ள அரசியல், பொருளாதாரம், சமுதாயம், பண்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற காரணிகளும்தான் இளைஞர்களின் எதிர்கால வெற்றியை தீர்மானிக்கின்றன.

    இந்த இதழை மேலும்

    ஒரு தீக்காடு; உள்ளே சிறு சிறு பூச்சிகளும் வெளிச்சமும்…

    ஒரு சிறு தீப்பொறி பரவி பெருங்காடொன்று அழிவது போல்; ஒரு சின்ன சிரிப்போ, உயிர் மீதான கருணையோ, மனிதம் மிக்கதொரு உணர்விலெழுந்த சிறு அறிவின் பொருட்டோ, நம் மொத்த மனிதர்களின் மன இருளும், ஒரு சேர எவ்வளவோ முகங் கறுக்கும் எண்ணங்களால் சூழும் அசிங்க வாழ்க்கையை நாமின்று வாழ்கிறோமே? அகன்று போகாதா…? இதெல்லாம் நீங்கி, இந்தச் சண்டைகளெல்லாம் விட்டு விலகி, நாமெல்லோரும் ஒருவரையொருவர் அன்பு வழிய வழிய ஆரத்தழுவிக் கொள்ள மாட்டோமா…?!!

    உயிர்தானே… ? எல்லாம் ஈரமுள்ள இதயம் தானே…? கொஞ்சம்  இரக்கமோ, மானுட அன்போ எல்லோருக்கும் பொதுவாய் சுரப்பின், மனிதரை சாதியென்றும், மதமென்றும், மேலோரென்றும், கீழோரென்றும் பிரித்து மேல் கீழாய் வகுத்து ஒருவரை ஒருவர் வருத்தப்பட வைப்போமா…?

    தண்ணீருக்குச் சண்டை, மண்ணுக்குச் சண்டை, சாதிக்குச் சண்டை, சாமிக்குச் சண்டை மொத்தத்தில் மடிவது யார்…? மனிதரில்லையா…? மனிதர் மடிந்து மனிதன் யாருக்காகப் போராடுகிறான்…? இன்னும் எத்தனை பேருந்துக்களை எரித்து, எவ்வளவு மனிதர்களைக் கொன்று எவரொருவர் சிரித்துக் கொண்டே வாழ்ந்தோ, செத்தோ போய்விட முடியும்…?

    யாருக்கு நாம் துன்பம் இழைக்கின்றோம்…? எவரை நாம் கொல்கிறோம்…? எது என் விருப்பம்…? எதற்கானது நமது போராட்டம்…? இப்படிப் பலக் கேள்விகளைக் பேட்டு ஓடாது சற்று நின்றுச் சிந்திப்போமே…?

    சமநிலையை விட ஒரு பெரிய எரிச்சல், சமநிலையை விட ஒரு கோழைத்தனம், சமநிலையை விட ஒரு சார்பாய் நிற்றல், ஒருவன் செத்துக்கொண்டிருக்கும்போது பேசும் சமநிலையை விட வேறு பெருங்கொடுமை இல்லைதான். ஆனால், இயல்பாக எல்லோருக்கும் ஏற்படும் உள்ளச் சமநிலையால் மட்டுமே நீயும் நானும் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து, அடுத்த வேளைச் சோற்றை நிம்மதியாய் உண்ணவும், உள்ளச் சிரிப்பினால் நாம் வாழ்க்கையை மகிழ்வோடு நகர்த்திடவும் இயலும்.

    மனதில் உண்டாகும் ரணம், அழுத்தம், வெறி, கோபம் எல்லாவற்றையும், எடுத்ததும் போட்டு உடைத்திடவோ அல்லது வீரியம் பொங்குமளவிற்கு உடனே காட்டிடவோ மனிதப்பண்பு அனுமதிப்பதில்லை. மனதை அமைதியாக்கிப் பார்த்தால் மட்டுமே அடுத்தவரின்  கோபத்தைக் கூட கருணையால் அணுகிட முடிகிறது.

    கொதிக்கும் நீரில் நீரள்ளி ஊற்றினால், அந்த நீர் கூட சுடவே செய்யும். சற்று நிதானித்தால் இரண்டுமே ஆறிப்போகும். காரணம் காலம் ஒரு அருமருந்து. அனைத்தையும் காலம் ஆற்றித் தருகிறது. அதற்கு பொறுக்கும் மனப்பக்குவம் நமக்குத் தேவை. ஒருவனின் நிதானமற்ற இடத்தில் மீண்டும் அவனே விழுவதை நம் வரலாறு நமக்குக் காட்டுகிறது.

    இங்கே எவர் விழுந்தாலும்  பிறருக்கு வலிப்பதுவுமில்லை நமது ஆய்வு, என்னவெனில் தீங்கு விளைவிப்பவர் தீங்கையே அறுப்பர். எனவே, தீங்கினை விட்டு விலகு என்று கேட்கிறேன். விதைப்பதே விளைகிறது எனில், நாம் நன்மையையே விதைப்போம் என்கிறேன். நாம் நல்லதை நோக்கி நடப்போம். நாளை உலகம் நம் பின்னால்  வந்தே தீரும். வரட்டுமே என்கிறேன். அதற்காக பிறர் நம்மை அடிக்கும்  போது நாம் மறு கன்னத்தையெல்லாம் காட்ட வேண்டாம். அடிக்க நினைக்கும் முன்னரே நாம் எத்தனை வலிமையுள்ளவர்கள் என்பதை அடிப்பவர்கள் முன் கூட்டிஅறிய நம் வாழ்வுதனை நெறிப்படுத்துவோம்.

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி…?

    நம்மை அழிக்கத்துடிக்கும் எதிரிகள் நவீன உலகில் உண்டா…? அவர்களால் பேரிழப்பு ஏற்பட்டுவிடுமா…?

    – திவ்யா, ஈரோடு.

    நாம் நல்லவர்கள்; நம்மை எவராலும் வெல்ல முடியாது என்று நாமாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால், நமது எதிரிகள் அப்படி நினைப்பது இல்லை. பல எதிரிகள் எளியவர்களாகவும், ஏமாளிகளாகவும் இருக்கக்கூடும். ஆனால், சில எதிரிகள் கொடூரமானவர்களாகவும், கொலை வெறி பிடித்தவர்களாகவும் இருப்பார்கள். சர்வாதிகாரிகளான இவர்களுக்கு நம்மைத் தோற்கடிப்பது மட்டும் எண்ணம் அல்ல, நம்மை முற்றிலும் அழிப்பதுதான் அவர்களது நோக்கம். நம்மை தலை வேறு, உடல் வேறு என்று பிரித்தால் தான் அவர்களுக்கு நிம்மதி. இப்படிப்பட்ட எதிரிகளை போர்க்களத்தில் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும் வேண்டும்.

    சரித்திரச் சான்று…

    இந்தியாவை ஆண்ட முகலாயர்களின் முன்னோடி தைமூர். மங்கோலிய இனத்தைச் சார்ந்த செங்கிஸ்கான் வழிவந்த இவனின் பார்வை இந்தியா மீது திரும்பியது. செங்கிஸ்கானும் ஒரு காலத்தில் இந்தியாவிற்குச் செல்வதா…? அல்லது பாரசீகத்திற்குச் செல்வதா…? என்ற பெரிய குழப்பத்தில் சிந்து நதிக்கரையில் நின்றான். நல்ல வேளையாக பாரசீகத்திற்குச் சென்றதால் இந்தியா தப்பித்தது.

    1398ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று தைமூரின் படை சிந்து நதியைக் கடந்தது. தைமூருக்கு “நொண்டி தைமூர்” என்றபெயரும் உண்டு. போரில் ஏற்பட்ட காயத்தால் தாங்கித் தாங்கி நடந்ததால் அப்படி ஒரு பெயர். இந்தியாவை ஆண்ட முகமது ஷாதான் தைமூரின் எதிரி. நொண்டி தைமூரை ஒருகை பார்த்து விடுவோம் என்று வீராப்பு பேசி, கவசம் அணிந்து திடீர்ப் போருக்குத் தயாரானார் போர்ப்பழக்கம் இல்லாத முகமதுஷா. ஷாவிடம் யானைப்படை இருந்தது, போர் யானைகள் பிளிறிக் கொண்டு மலைபோல் வருவதைக் கண்டு எதிரிகள் மிரள்வார்கள்; அந்தப் பயத்திலேயே எதிரிகள் திரும்பி ஒடுவார்கள் என்று நினைத்தார். ஆனால், தைமூர் அதை சமாளிக்க தயாராகவே வந்திருந்தான்.

    சுல்தான் முகமதுஷாவின் கோட்டையை முற்றுகையிட்டுக் கதவைத் தட்டினான் தைமூர். கோட்டைக்கதவுகள் திறந்தன. பத்தாயிரம் குதிரைப்படை வீரர்கள் புயலாக வெளியேறிவந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து நாற்பதாயிரம் காலாட்படை வீரர்கள் சுனாமி போல திரண்டு வந்ததைக் கவனித்தான் தைமூர். அதற்கு பிறகு தான் அந்தப் பயங்கரம். நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று நூற்றுக்கணக்கான யானைகள் தைமூரின் படைவீரர்களை நோக்கி பிளிறியபடி முன்னேறின.

    வாள் பொருந்திய தந்தங்கள், யானைகளின் நெற்றியில் இரும்பு முட்கள், இதை எல்லாம் பார்த்து எதிரிப் படைகள் கதி கலங்கியிருக்க வேண்டும். ஆனால், தைமூர் கலங்கவில்லை. மாறாக தனது தளபதிகளிடம் கையசைத்தான். நொடிப்பொழுதில் அவனது போர்த்திட்டம் அரங்கேறியது.

    இந்த இதழை மேலும்

    புதியதை உருவாக்கு! புகழை  உனதாக்கு!!

     

    எலக்ட்ரிக் ரேஸ் கார் சாதிப்பாளார்கள் “TEAM OJAS”

    வி.ஐ.டி. பல்கலைக்கழக மாணவர்கள், வேலூர்.

    விஐடி பல்கலைக்கழகம் 1984 ஆம் ஆண்டு திரு. ஜி. விசுவநாதன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.  ஆரம்பத்தில் வேலூர் இன்ஜீனியரிங் கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. தொடங்கிய சில ஆண்டுகளிலேயே பெற்றோர்களின் நன்மதிப்பையும், மாணவர்களின் எதிர்பார்ப்பையும் இக்கல்லூரி பூர்த்தி செய்தது. நல்ல திறமை வாய்ந்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள் இக்கல்லூரியில் பணியாற்றுவது மாணவர்களின் எதிர்கால வாழ்விற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

    ஆரம்பத்தில் கல்லூரியகத் தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம் பல்கலைக் கழகமாக 2006- ஆம் ஆண்டு வளர்ச்சி பெற்று பெரிதும் மதிப்பு பெற்றது. ஆண்டுக்காண்டு இதன் வளர்ச்சியால் இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியில் 10 -ஆவது இடத்தையும், தனியார் பொறியியல் கல்லூரியின் வரிசையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.

    இப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகள் இருக்கிறது. அதில் 18 இளங்கலைப்பிரிவுகளும், 32 முதுகலைப்பிரிவுகளும் 18,000 த்திற்க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படிக்கிறார்கள். சிறந்த முறையில் விடுதி வசதி இருபாலருக்கும் உண்டு.

    படிப்புடன் விளையாட்டு, விஞ்ஞானம், கலை, கண்டுபிடிப்புகள் போன்றவற்றிக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். மாணவர்களின் தனித்திறமை என்னவோ அதற்கு மதிப்பளித்து அவர்களின் சாதனையை  நாடறிய செய்திருக்கிறார்கள். எத்தனையோ கண்டுபிடிப்புகள், எத்தனையோ சாதனைகள் இப்பல்கலைக்கழகத்தில் ஆண்டுகாண்டு நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் மேலும் ஒரு சாதனையாக முழுக்க முழுக்க எலக்ட்ரானிக் பொருட்களைக் கொண்டு எவ்வித காற்றுமாசுபாடுயின்றி  ரேஸ் கார் ஒன்றை தயாரித்து சாதனை படைத்துள்ளார்கள். அவர்களின் சாதனையை அறிந்து அந்த குழுவில் ஒருவரான திரு. வருண் செந்தில் அவர்களை நேர்முகம் கண்டோம், வெற்றி களிப்போடு தன்னம்பிக்கை மாத இதழக்கு அவரின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்…அவரின் சாதனை அனுபவங்களோடு இனி நாம்..

    உங்கள் குழுவிற்கு ojas என பெயர் சூட்டக் காரணம் ?

    ojas என்ற சொல்லுக்கு சக்தி என்று பொருள். எங்கள் விஐடி பல்கலைக்கழகத்தில் பலதுறைகள் பல பிரிவுகள் உண்டு. அதில் எல்லாத் துறையிலும் ojas குழு உண்டு  அதில் எலக்ட்ரிக் துறை என்றால் அது எங்கள் துறை தான். குழு என்பது அனைவரும் ஒன்று சேர்தல் என்று பொருள்படும். அவ்வாறு ஒன்று சேர்வதால் பலருக்கு பலவாறாக எண்ணங்கள் தோன்றும், அந்த எண்ணங்கள் தான் எதிர்கால வாழ்விற்கு வண்ணங்களாக அமையும். எங்கள் வகுப்பில் ஆசிரியர்கள் அடிக்கடி உச்சரித்துக்கொண்டே இருக்கும் வார்த்தைகள் என்னவென்றால் ஒவ்வொவரும் மண்ணில் பிறந்துவிட்டால் அவர்களுக்கு என்று ஒரு சாதிப்பு காத்துக் கொண்டிருக்கிறது என்பது தான்.

    இந்த வார்த்தை தான் எங்களின் சாதிப்பின் மூலதனம். இதனால் ojas என்ற குழுவை 2012 ஆம் ஆண்டு தொடங்கினோம். தொடங்கிய சில நாட்களிலேயே எங்களின் கண்டுபிடிப்பை பரவலாக்க நினைத்தோம். அனைவரிடத்திலும் புதிய புதிய யோசனைகள், ஆலோசனைகள் வந்தது, அனைவரும் ஒன்று கூடி பரிசீலிலித்து ரேஸ் கார் தயாரிக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தோம். ஆனால் எவ்வித சுற்றுப்புற மாசுபாடுகளும் இதனால் ஏற்படக்கூடாது என்பதில் மட்டும் மிகவும் கவனமாக இருந்தோம். அதன் பயன் எங்களின் திறனுக்கும் வளர்ச்சிக்கும் சிறந்த தொடக்கத்தைக் கொடுத்தது. இப்பொழுது ஆண்டுக்கு ஒரு பார்முலா காரை தயாரித்து வருகிறோம்.

    இந்த கண்டுபிடிப்பின் நோக்கம் என்பது?

    இதன் முதன்மையான நோக்கம் காற்று மாசுபாட்டைத் தவிர்க்க வேண்டும் என்பது மட்டும் தான்.

    ரேசிங் என்பது அனைவரும் விரும்பிப் பார்க்கும் ஒரு பொதுவான விளையாட்டு. சாதரணமாக F1 ரேசிங் கார் 100 கிலோ மீட்டர் செல்ல வேண்டுமென்றால் 75 லிலிட்டர் எரிபொருள் தேவைப்படும். ஒவ்வொரு முறையும் 24 கார்கள் பந்தயத்தில் பங்கேற்கும் ஒருமுறை பந்தய எல்லைக்கோட்டை அடைய ஒரு காருக்கு 225 லிலிட்டர் தேவைப்படுகிறது. அவ்வாறு பார்க்கும் பொழுது 24 காருக்கு 5400 லிலிட்டர் தேவைப்படுகிறது.

    இதனால் பெருமளவு பொருட்செலவும், காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. மேலும் வெளியேறும் காற்றால் மாரடைப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்பட்டு உயிர்போகும் அளவுக்கு ஆகிவிடுகிறார்கள்.

    இந்நிலை முற்றிலுமாக மாறவேண்டும் என்பதால் தான் மின்சாரத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வகையான ரேஸ் கார் தயாரித்தோம். இதன் மூலம் எரிபொருள் சேமிக்கவும் சுற்றுச்சுழல் சீரழிவிலிருந்து பாதுகாக்கவும் முடியும்.

    இந்த கண்டுபிடிப்பின் மூலம் உங்களின் தனித்திறமைகள் எவ்வாறு வெளிப்படுகிறது?

    கல்லூரிக்கு என்று மாணவர்கள் வந்தாலே படிப்பும் தேர்வும் மட்டுமே மாணவர்களின் தலையாய கடமையாகிவிடுகிறது. இதுவும் எதிர்காலத்திற்கும் தேவைதான். ஆனால் நமக்குள் இருக்கும் தனித்திறமையை உடனுக்குடன் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

    புத்தகம் தாண்டி இவ்வுலகில் நிறைய புதையல்கள் இருக்கிறது, அதை தேடுவதில் தான் முழுமையான வெற்றி அடங்கியுள்ளது.

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்

    ஒருவரின் விலை உயர்ந்த வாகனம் ஒன்றை சிறுவன் ஒருவன் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்தச் சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட வாகனத்தின் முதலாளி அவனை வாகனத்தில் ஏற்றிக் கொண்டார்.

    கொஞ்சதூரம் பயணம் செய்து மகிழ்ந்த சிறுவன், “உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது. என்ன விலையாகும்” என்று கேட்டான். அவரோ “தெரியவில்லை இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது” என்றார்.

    உடனே சிறுவன் உங்கள் அண்ணன் மிகவும் நல்ல அண்ணன் என்று சொல்ல, “நீ என்ன நினைக்கிறாய் என்பதை நான் உணர்கிறேன். உனக்கும் எனக்கு கிடைத்த அண்ணனைப் போல ஒரு அண்ணன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தானே நினைக்கிறாய்?” என்றார் முதலாளி.

    “இல்லை ஐயா, நான் உங்களின் அண்ணனைப் போல இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்று சொல்லி முதலாளியை வியப்பில் ஆழ்த்திவிட்டான் சிறுவன்!.

    உழைப்பில்லாமல் எந்த ஒன்றையும் பெறக் கூடாது என்கிற சிந்தனையும், எப்போதும் பிறருக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்கிற சேவை மனப்பான்மையும் நிறைந்த மனங்கள் வளரட்டும்.

    “நவம்பர் 14- குழந்தைகள் தினம்” நல்வாழ்த்துக்கள்!