– 2016 – November | தன்னம்பிக்கை

Home » 2016 » November

 
 • Categories


 • Archives


  Follow us on

  வழுக்காத வாழ்க்கை

  வழுக்கைக்கும் இளமைக்கும் சம்மந்தம் உண்டா? என்றால் கன்டிப்பாக சம்மந்தம் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் முடிக்கு உயிர் இல்லை. அதனால்தான் நாம் சலூன் கடையில் சந்தோஷமாக முடி வெட்டிக்கொள்கிறோம். ஆனால் முடிக் கால்களுக்கு உயிர் இருக்கிறது. அது வெட்ட வெட்ட மீண்டும் வளர்ந்துவிடும் என்பதால்தான் நாம் சங்கடமில்லாமல் முடி வெட்டிக்கொள்கிறோம். ஆக, முடியின் அடியில் (தொடக்கத்தில்) உயிர் இருக்கிறது ஆனால், அதன்பிறகு முடியின் முடிவு வரை (முனை வரை) உயிர் இன்றி தான் இருக்கிறது. அதாவது முடியின் நிலைப்புத்தன்மை தலைக்கு வெளியே இல்லை, தலைக்கு உள்ளே தலைத் தோலில் முடிக்காலில் இருப்பது புரிகிறதா? ஆக, இனி முடி உதிர்வதற்கு யாரேனும் வெளி சிகிச்சையை பரிந்துரைத்தால் ஏமாந்து போகாதீர்கள். உண்மையில் சிகிச்சை உள்ளேதான் தேவை. இது புரிய ஒரு கணக்குப்பாடம் தேவைப்படுகிறது. அது ஒரு வீட்டுக்கணக்கு, அதாவது வாழ்க்கைக்கணக்கு.

  உங்கள் வீட்டிற்கு இந்த மாதம் ஒரு பத்தாயிரத்தை சம்பாத்தியமாக உங்கள் துணைவியின் கைகüல் தந்து இந்த மாதச் செலவை பார்த்துக்கொள்ளச் சொல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் துணைவியார் சேமிப்பாக ரூபாய் இரண்டாயிரத்தை முதலில் வங்கியில் கட்டிவிட்டு மீதமுள்ள எட்டாயிரத்தை இந்த மாதச் செலவாக செய்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த மாதம் நிலைமை கொஞ்சம் மோசமாகி உங்கள் கைகளுக்கு வெறும் ரூபாய் ஆறாயிரம் மட்டுமே கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். இப்பொழுது, இப்பொதைக்கு உங்களால் சேமிப்பு செய்ய முடியாதுதானே? அப்புறம் எட்டாயிரம் மாதச் செலவை எப்படி சுருக்கலாம் என்று பார்ப்பீர்கள் அல்லவா? உதாரணமாக சினிமாவிற்குப் போவது, ஹோட்டல் மற்றும் அனாவசிய பயணத்தை தவிர்ப்பது உள்üட்ட சிக்கன நடவடிக்கைகளை எடுப்பீர்கள்தானே. அப்புறம் முக்கியமான ஒன்றையும் செய்வீர்கள்தானே? அதாவது, குறைந்துவிட்ட சம்பாத்தியத்தை அதிகரிக்க முயற்சி செய்வீர்கள்தானே?

  இந்த இதழை மேலும்

  உலக தத்துவ தினம்…

  தத்துவங்களே உலகை ஆள்கின்றன.

  தத்துவங்களால் நீதி, நேர்மை,

  அமைதி மற்றும் சுதந்திரத்தை

  மக்களிடம் கொண்டு வர முடியும்

  தத்துவத்தின் முக்கியத்துவத்தை, மேன்மையை, பயனை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்றநோக்கில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 3வது வியாழக்கிழமையன்று ‘உலக தத்துவ தினம்’ கடைப்படிக்கப்பட்டு வருகிறது. தத்துவங்களே உலகை ஆள்கின்றன. தத்துவங்களால் நீதி, நேர்மை, அமைதி மற்றும் சுதந்திரத்தை மக்களிடம் கொண்டு வர முடியும் என்றநோக்கில் யுனெஸ்கோ உலக தத்துவ தினத்தை அறிவித்துள்ளது.

  உலகில் உள்ள ஒவ்வொன்றும் ஏதோ, ஒரு தருணத்தில் உருவானது அல்லது உருவாக்கப்பட்டதுதான். ஆனால், உலகம் எப்பொழுது உருவானது என்றகேள்விக்கு யாரும் சரியாக பதில் கூறமுடியாது. அதுபோலத்தான் தத்துவம் எப்போது உருவானது என்று கூறஇயலாது. இப்படி வேண்டுமானால் கூறலாம். மனிதன் எப்பொழுது சிந்திக்கத் தொடங்கினானோ அப்போதே தத்துவம் பிறந்தது என்று. மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவதிலும், மனித நாகரிகத்தை வழி மொழிவதிலும் தத்துவஞானிகளின் பங்கு அளப்பரியது. வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் பல தத்துவஞானிகள் உதித்திருக்கின்றனர்.

  உலகின் சிந்தனையை பல்வேறு வழிகளில் செம்மைப்படுத்தியிருக்கின்றனர். அவர்களுள் தலையாயவர் தத்துவஞானிகளின் தந்தை என்று போற்றப்படுபவரும், கிரேக்கத்தின் புகழை உலகெல்லாம் பரவச் செய்தவருமான சாக்ரடீஸ். ஒரு சாதாரண குடும்பத்தில் இராணுவ வீரராக இருந்து ஏதென்ஸ் நாட்டிற்காக பல போர்களில் பங்கெடுத்தார்.

  சாக்ரடீஸ் வாழ்க்கையைப் பற்றி அதிகமாக சிந்தித்தார். எதையுமே வித்தியாசமாகவும் சிந்தித்தார் அவரது சிந்தனைகள் அந்த காலகட்டத்தில் உண்மை என நம்பப்பட்டவைகளின் அஸ்திவாரங்களையே ஆட்டம் காணச் செய்தன. வாழ்வின் உண்மைகளை கண்டறிய வேண்டம் என்றஅதீத தாகம் சாக்ரடீஸுக்கு இருந்தது. தான் அறிந்த உண்மைகளை மக்களுக்கு சொல்ல அவர் கையாண்ட உத்தியே அலாதியானது, அற்புதமானது.

  அவர் கிரேக்கத்தின் பகல்பொழுதில் கையில் விளக்கேந்திக் கொண்டு கூட்டமுள்ள இடத்தில் எதையோ குனிந்து தேடுவது போல் நடிப்பார். வேடிக்கை பார்க்க அங்கு கூட்டம் கூடும். என்ன தேடுகிறீர்கள் என்று எவராவது கேட்கும் போது “மனிதகளை தேடுகிறேன்” என்று பதில் கூறுவார். மக்கள் புரியாது விழிக்கும்போது அவர்களிடம் விளக்கிப்பேசி தன் கருத்துக்களை பரப்புகிறார் என்று குற்றச்சாட்டுகளை ஆணித்தரமாகவும் அறிவுப்பூர்வமாகவும் மறுத்தாலும் தனது 70ஆவது வயதில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார் சாக்ரடீஸ்.

  “என்ன நீதிமன்றத்தின்முன் நிறுத்திய என் எதிரிகளை நான் குறுக்கு விசாரணை செய்ய விரும்பவில்லை. என்னுடைய உண்மையான எதிரிகள் அநீதியும், அறிவின்மையும்தான். நான் கல்லையும், மண்ணையும் கடவுள் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். நான் கல்லுக்கும் மண்ணுக்குமல்ல ஒரு பெண்ணுக்குதான் பிறந்தேன். கடவுளைப்பற்றி ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால், கடவுளை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ…? என்று பயப்படுவதுது அதைவிட நாத்திகம்.

  நீங்கள் என்னை மன்னித்து வெளியே அனுப்பினாலும் என் உயிருள்ளவரை தர்க்கவாதத்தைத் தொடர்வேன். உண்மையில் எனக்கு அறிவில்லை. மற்றவர்களுக்கும் இல்லை. மற்றவர்கள் அதை உணரவில்லை. நான் எனது, அறிவீனத்தை உணர்ந்தேன். அவ்வளவுதான் வேற்றுமை. நான் மரணத்திற்கு அஞ்சவில்லை. அநீதிக்குத்தான் அஞ்சுகிறேன். எனக்கும் உங்களுக்கும் பொதுவான கடவுள் பெயரால் நீதி கேட்கிறேன்”. இவ்வாறு நீதிமன்றத்தில் பேசினார் சாக்ரடீஸ்.

  இந்த இதழை மேலும்

  மனம் மாறினால் குணம் மாறலாம்…

  உலகம் ஒன்றுதான். ஆனால், அதே உலகம் ஒருவருக்கு நரகமாகவும், மற்றவர்களுக்கு சொர்க்கமாகவும் தெரிகிறது  என்ர்சன்.

  நமக்குப் பிடித்தவை எல்லாம் பிறருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஒருவரது உணவு இன்னொருவருக்கு விஷமாகி விடுகிறது.

  இன ரீதியாக, மதம் மற்றும் மொழி வகையில் அவரவர் சார்ந்த விஷயங்கள் தான் மிகவும் உயர்ந்தவை. மற்றவைகள் எல்லாம் அதற்கும் கீழே தான் என்று எண்ணுகிறோம். எல்லோருமே தங்களது அடையாளங்களை பேணிக்காக்கத் துடிக்கிறார்கள். ஒத்த எண்ணங்கள் நம்பிக்ன்ப்ப்ள், மதிப்புகள் கொண்டவர்களாக எல்லாம் ஒருங்கிணைந்து பல்வேறு குழுக்களாக செயல்படுகிறார்கள்.

  சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் இனிப்பான அனுபங்களின் அடிப்படையில் எந்த ஒன்றின் மீதும் அளவற்றவெறுப்போ, விருப்பமோ இயல்பாகவே அமைந்து விடுகிறது. அந்த மதிப்பீட்டுத் தளத்திலிருந்து எளிதில் எவரும் வெளியே வர விரும்புவதில்லை.

  இவற்றுக்கெல்லாம் அடித்தளமாக அமைவது எது…? அவரு மனப்பான்மை என்ற மனோநிலை தான்…

  மனப்பான்மை என்றால் பிறரிடம் உங்கள் மனோநிலையை தெரிவிப்பதுதான். ஏதேனும் ஒன்றைப் பற்றியோ, யாரோ ஒருவரைப் பற்றியோ நாம் கொண்டுள்ள தீர்மானம். நம்பிக்கை, மதிப்பீடு அல்லது அபிப்ராயம் தான் மனப்பான்மை என்பது. அந்த தீர்மானம் சாதகமாகவோ, சாதகமற்றதாகவோ அல்லது நடுநிலையாகவோ அமையக்கூடும்.

  உன் மீதும், இந்த உலகத்தின் மீதும் நீ கொண்டுள்ள  நம்பிக்கைகள் உனது எதிர்பார்பினை  உருவாக்குகின்றன. உங்கள் எதிர்பார்ப்புகள் உங்களின் மனோபாவத்தை முடிவு செய்கின்றன. உங்கள் மனோபாவம் பிறரிடம் நீ நடந்து கொள்ளும் முறைமற்றும் நடத்தையினை உருவாக்குகிறது.

  உங்கள் நடத்தை உங்கள்மீது பிறர் கொள்ளும் மனப்பான்மையை தீர்மானிக்கின்றன. மொத்ததில் நீங்கள் ஒரு வெறும் முகம் பார்க்கின்றகண்ணாடி போன்றவரே. உங்களின் செயல்களெல்லாம் எதிர் செயல்பாடுகள் தானாகவே வந்து சேரும்.

  மனப்பான்மை என்பது பழகி விட்ட எண்ணங்களின் தொகுப்புதான். பழக்கங்கள் என்பவை பிறரிடமிருந்து பெறப்படுபவவை. திரும்ப திரும்ப செய்யப்படும் செயல்களே நாளடைவில் இறுகி மனப்பான்மைகளாகி விடுகின்றன.  பால் மேயர்.

  ஒரு பெரிய மாற்றத்தினை உருவாக்கவல்ல ஒரு சிறிய விஷயமே மனப்பான்மை  சர்ச்சில்

  நமக்கு விரும்பியது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை விரும்பி விடுவது புத்திசாலித்தனம் அல்லவா…?

  பிரச்சனைகளில் வாய்ப்புகளைக் காண்பவன் நேர்மறைசிந்தனையாளன். மாறாக வாய்ப்புகளில் பிரச்சினைகளை காண்பவன் எதிர்மறைசிந்தனையாளன்.

  இந்த இதழை மேலும்

  கொங்கு நாட்டு மன்னன் வீரராஜேந்திர சோழன்

   

  கொங்கு நாட்டு மன்னன் வீரராஜேந்திர சோழன் பற்றிய வரலாற்றுச் செய்திகளில் இருந்து சில துளிகள்…

  இன்றைய நிகழ்வு, நாளைய வரலாறு. மனிதனின் படைப்புகளுக்கு என்றென்றும் அழிவு கிடையாது. கலை, மூலம் மனிதன் தன்னுடைய செயல்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகள் மூலம் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அந்த வரிசையில், கொங்கு நாட்டு மன்னன் வீரராஜேந்திர சோழன் பற்றிய சில வரலாற்றுச் செய்திகளை இங்கு விவரிப்பதன் மூலம் அவன் மீண்டும் நம் எணணங்களில் வாழ வந்துள்ளான் என்பதை நினைக்கும் தருணத்திலேயே கொங்கு நாட்டின் செழுமை மிக்கத் தோற்றம் நம் கண் முன்னே தோன்றுகிறது.

  முந்தைய தமிழ்நாடு, சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு தொண்டை நாடு மற்றும் கொங்கு நாடு என்று ஐந்து பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வந்தது. கொங்கு நாட்டை கி.பி. 942 முதல் கி.பி. 1303 வரை கொங்கு சோழ மன்னர்கள் ஆண்டு வந்தனர். மூன்றாம் வீர சோழரின் (கி.பி. 1168 – கி.பி. 1207) புதல்வன் வீர ராஜேந்திர சோழன் கி.பி. 1207 முதல் கி.பி. 1256 வரை 48 ஆண்டுகள் கொங்கு நாட்டைத் திறம்பட ஆட்சி புரிந்தான். கி.பி. 1211ம் ஆண்டு இரண்டாம் குலோத்தங்கனை வென்று வட கொங்கு, தென் கொங்கு இரண்டையும் தன் வசம் கொண்டவன் என்றசிறப்பினைப் பெற்றான். ஆகையினால், தாராபுரம் அவனது நாட்டின் முதல் தலைநகரமாகவும், பேரூர் இரண்டாம் தலைநகராகவும் விளங்கின.

  “ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்

  சேனை வளைந்து திசைதோறும் கை தொழ

  ஊனை விளைத்திடும் உம்பாதம் ஆதியை

  ஏனை வளைந்தருள் எட்டலும் ஆமே”.

  என்பது திருமூலரடிகளின திருமந்திரம். இதன் விளக்கமாவது, உலகத்திற்கு தேவையானாவை, தேவையற்றவை போன்றவற்றைதெளிவாக உணரும் மெஞ்ஞானத்தை கைவரப் பெற்றவர்களே, அவர்களுக்கு கீழே அவர்களை நம்பி வாழ்கின்றமக்களுக்கும், ஏனைய உயிர்களுக்கும் மன்னவராகத் திகழ்வார். அத்தகைய ஞானியைக் கருவி, காரணங்களாகிய சேனை சூழ்ந்து அவர் வழி நிற்பர் என்பதாகும். வீரராஜேந்திர சோழன் அத்திருமூலரடிகளின் திருமந்திரப்படி நடந்துள்ளான் என்று நாம் நினைப்பதற்கு ஏற்ப ஒரு வரலாற்றுச் செய்தி போரூரில் உள்ள பட்டீஸ்வரரர் கோயில் மகா மண்டபம் வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு மூலம் தெரிய வந்துள்ளது. (த.நா.அ. தொல்லியல் துறை. தொடர் எண். 116/2004)

  பேரூரில் உள்ள பட்டீஸ்வரர் கோயிலுக்கு தேவையான நீர் வேண்டியிருந்தது. அப்பொழுது நொய்யலாற்றின் குறுக்கே “தேவி சிறை” என்றஅணை கட்டப்பட்டது. கோளூர் என்றஅணை ஏற்கனவே நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்தது.

  இவ்விரு அணைகளுமே நொய்யலாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்தபடியால் மன்னன் வீர ராஜேந்திர சோழன்,

  “தேவி சிறையில் நீரை தேக்கும் போது கீழுள்ள கோளூர் அணை நீர் நிரம்பிய பின் தேக்க வேண்டும்”. என்று ஆணையிட்டுள்ளான்.

  இத்தகைய மதிநுட்பம் வீரராஜேந்திரனின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் இரந்தது. அவன் விபரங்களை நன்றாகத் தெரிந்து கொண்ட பின் ஒரு காரியத்தை சிறந்த முறையில் செயல்படுத்தி மக்களுக்கு நல்ல அறிவுரைகள் கூறும் மந்திரியாகவும் இருந்துள்ளான்.

  இந்த இதழை மேலும்

  பிறந்த குழந்தையின் தோல் பராமரிப்பு

  மனிததோலின் முக்கியமான பணிகள்

  • நீர் மற்றும் தாதுக்களை சமநிலைப் படுத்துதல்
  • வெப்பநிலையை சமநிலைப்படுத்துதல்
  • நோய்க்கிருமி தொற்றிலிருந்து பாதுகாத்தல்
  • காயங்களிலிருந்து பாதுகாத்தல்
  • சுற்றுப்புற நோய்கிருமி தாக்கத்திலிருந்து பாதுகாத்தல்
  • யூவி (UV) கதிர் தாக்கத்திலிருந்து பாது காத்தல்
  • நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்தல்
  • அழகை பராமரித்தல்
  • உணர்ச்சி உறுப்பாகவும், தாய்சேய் பிணைப்பை பலப்படுத்தவும் உதவுகிறது.

  குழந்தை பிறப்பு என்பது ஒரு குழந்தை கருவறையிலிருந்து வெளியுலகத்திற்கு வருவதாகும். பிறந்த குழந்தையின் தோல் பெரியவர்களின் தோல் போன்றது தான் என்றாலும் அதன் தன்மைகள் மாறுபடும்.

  இயற்கையாக குழந்தையின் தோல் அமைப்பில் உள்ள மாறுபாடுகள்

  • குழந்தையின் தோலின் பரப்பளவு/எடை அதிகம்.
  • டெர்மிஸ், எபிடெர்மிஸ் இடையே குறைவான பிணைப்பு இருக்கும்.
  • மெல்லிய தோல்
  • அதிகமான ஊடுருவும் திறன், குறைவான எதிர்ப்பு சக்தி மற்றும் குறைவான மெலனின் உற்பத்தி உடையது.
  • வியர்வை சுரப்பி மற்றும் செபேசியஸ் சுரப்பியின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் குறைவான செயல்பாட்டுத்திறன்.

  தோலில் ஏற்படும் தாக்கங்கள்

  • டெர்மிஸ் எபிடெர்மிஸ் இடையே ஏற்படும் மாற்றங்களால் கொப்புளங்கள் ஏற்படுகிற வாய்ப்பு அதிகம்.
  • தோலில் குறைவான நீர்ச்சத்து, அதிகமான தசையின் நீர் உறிஞ்சும் தன்மையினால் தோலின் வெப்ப மாறுபாடுகள் ஏற்படலாம்.
  • தோலின் வளர்ச்சி முழுமை பெறாததால் நோய் கிருமி தாக்கம் அதிகரிக்கலாம்.
  • குறைவான மெலானின் உற்பத்தியினால் யூவி (UV) கதிர்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு அதிகம்.
  • சோப்பு போன்ற இரசாயன பொருள்கள் உபயோகிப்பதால் தோலில் வறட்சி ஏற்படும்.

  பிறந்த குழந்தையின் தோல் பராமரிப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை

  • குழந்தையை மென்மையாகக் கையாள வேண்டும்.
  • தேவையான நீர்சத்து கொடுக்க வேண்டும்.
  • தோலின் வறட்சியைத் தவிர்த்தல்.
  • தோல் மடிப்புகளில் உராய்வு விசையைக் குறைத்தல்
  • சூரிய கதிர்களிடமிருந்து பாதுகாத்தல்

  குழந்தையின் பிறப்பில் நுண்ணுயிர் காலனியாக்கம் இல்லை. பிறந்தபின் ஸ்டெபைலோகாக்கை, குழந்தையின் அக்குள், கவட்டி, தலை பகுதிகளில் அதிகமாகத் தோன்ற ஆரம்பிக்கும்.

  ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் நுண்கிருமி தாயிடம் மற்றும் செவிலியரிடமிருந்து தொற்றும் கிருமிகளாகும். தோலின் எபிடெர்மியஸில் உள்ள ஸ்குட்ராட்டம் கார்னியம் என்பது தோலின் பாதுகாப்பு படலமாகக் கருதப்படுகிறது. கொழுப்பானது தோலின் ஈரப்பதத்தை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

  குழந்தையின் தோல் பரப்பு அமிலத் தன்மையுடன் (pH5ன் கீழ்) இருக்கும். ல்ஏ அதிகமானால் தோலில் நுண்ணுயிரியின் எண்ணிக்கை அதிகமாகும். எனவே குழந்தையின் தோல் அமிலத்தன்மையை பராமரிக்க வேண்டும்.

  வெர்னிக் கேசியோசாவின் செயல்பாடு (Vernix Caseosa)

  Vernix Caseosa என்பது இயற்கையாகவே பிறந்த குழந்தையின் தோலில் ஒட்டியிருக்கும் கொழுப்பு நிறைந்த பொருள். இது சிசுவின் சர்மமெழுகு சுரப்பியால் உருவாக்கப்படுகிறது. இது எபிதீலியம், குழந்தையின் மென்மயிர், சர்மமெழுகு சுரப்பி ஆகியவற்றை உள்ளடக்கியது. இதில் நீர் 81%, கொழுப்பு 19%, புரதம் 10% உள்ளது.

  இந்த இதழை மேலும்

  முயன்றேன்… வென்றேன்

  செல்வி மா.சங்கவி
  உதவி ஆய்வாளர்
  தமிழ்நாடு அரசு
  பட்டுவளர்ச்சித்துறை , ஓசூர்

  தேனை மறந்திருக்கும் வண்டும்

  ஒளிச்சிறப்பை மறந்துவிட்ட பூவும்

  வானை மறந்திருக்கும் பயிரும் 

  இந்தவைய முழுவதுமில்லை தோழி

  எத்தனை சத்தியமான, சாத்தியமான வரிகளை பிறக்க வைத்திருக்கிறான் எட்டயபுரத்து கவிஞன். இதனை சாத்தியமாக்கிய வண்டும், பூவும், பயிரும் எப்படி பாரதியின் நன்மதிப்பை பெற்றதோ, அப்படியே நானும் ஒரு மங்கையராய் வெற்றியின் நன்மதிப்பை இச்சமூகத்தில் சாத்தியப்படுத்திúன்.

  பலரும் கூறுவார்கள் “வானமே எல்லையென்று”. ஆனால், அந்த எல்லையை அடைந்தவர்களுக்குத்தான் தெரியும் வானமும் தொடும் தூரம்தான் என்று. அப்படி தொட்டுவிட்டால் போதுமா…? இல்லை வாழ்க்கை முழுவதும் வானில் தெரியும் நட்சத்திரமாய் ஒளிர வேண்டுமே.

  அப்படி ஒளிரினால் மட்டும் தனித்தன்மை அடைவோமா…? அதற்கு சந்திரனாய் அல்லவா, பிரகாசிக்க வேண்டும்…? அப்படி பிரகாசித்தாலும் சந்திரனின் உயிரோட்டமாய் உள்ள சூரியனாய் அல்லவா பிரகாசித்து எரிய வேண்டும். அதுதானே சித்தாந்தம், வேதாந்தம், ஏன் இயற்கையும் கூட.

  இவற்றையெல்லாம் கூறுவதற்கு காரணம் நானும் ஒரு இயற்கையின் பிரதிநிதிதான். அதனால் இயற்கையின் வண்ணம் ஒப்புமைப்படுத்தி எனது வாழ்க்கையின் சுவடுகளை இவ்விடத்தில் வரைகிறேன்.      மஞ்சள் மாநகரம் என்று வாஞ்சையுடன் அழைக்கப்படும் ஈரோடு எனது சொந்த ஊர். பிறப்பிலேயே கவித்தன்மை உள்ளதோ என்று எண்ணி என்னுடைய பெற்றோர் எனக்கு சங்கவி என்று பெயர் சூட்டினர்.

  புத்தனுக்கு எப்படி போதிமரமோ, அப்படித்தான் எனக்கும், என்னுடைய மேம்பட்ட வாழ்க்கைக்கும் போதிமரமாய் பள்ளிப்படிப்பும், பள்ளி ஆசான்களும் திகழ்ந்தனர்.

  சிறுவயது முதலே படிப்பின் மீது குறையாத ஆர்வத்தினால் நிறையாத அறிவுத்தேடலும் உருவாகியது. தேடல் என்பது பயனுள்ள, செறிவுள்ள தேடலாய் இருக்க வேண்டும் என்று என் மனம் அன்றேஎனக்கு கட்டடையிட்டு விட்டது. அக்கட்டளையைஎச்சமயத்திலும் கைவிட்டுவிடக்கூடாது என்று அன்றேசபதம் எடுத்தேன்.

  பெண்களின் சபதம் என்றுமே தோற்றுப்போனதில்லை என்று வரலாற்றில் எப்பொழுதோ படித்த ஞாபகம். அந்த ஞாபகத்தை ஒவ்வொரு முறையும் மகாபாரத்தின் பாஞ்சாலியின் சபதமும், சிலப்பதிகாரத்தின் கண்ணகியின் சபதமும் ஞாபகமாகவே என்னுள் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

  அவ்வழியில் வந்த நானும் பெண்களுக்கே உரித்தான சபதத்தை சவாலாகவே எடுத்தேன்.

  அச்சவாலை எதிர்கொள்ளும் தருணமும் எனக்கு கிட்டியது. அதாவது, பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் காலகட்டம் வந்தது. கல்லூரி என்பது பலருக்கும் கனவுகளை திறந்து வைக்கும் வெற்றிவாசல். அந்த வெற்றிவாசலை தேடினேன். தேடலுக்கு சரியான தடம் கிட்டியது.

  ஆம், 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தமையால் தேடலுக்கு சரியான தடத்தை கொடுக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் எனக்கு பாதை அமைத்தது.

  அந்த பாதையில் திசையறியாமல் திகைத்து நின்றபோது, திகைத்து நின்றபோது, திகைத்து போகும் வண்ணமாய் நான் பி.எஸ்.சி., பட்டுப்புழு வளர்ப்பு (B.Sc., Sericulture) படிக்க ஆசைப்பட்டேன். காரணம் பட்டுப்புழுக்கள் வளர்ப்பு மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.

  அதைவிட, அப்பட்டுக்கு காரணமாய் பிறப்பெடுத்த பட்டுப்புழுக்களும், நெசவாளர்களும் என்னுடைய நேசம், பாசம் கடந்த அபிமானிகள். ஒரு நெசவாளியிடம் உள்ள நுட்பத்திறனை என் வாழ்வில் இதுவரை யாரிடமும் பார்த்தில்லை.

  அப்படிப்பட்டவர்களின் வழிக்கும், வாழ்வாதாரத்திற்கும் உயிரோட்டமாய் திகழும் பட்டுப்புழு வளர்ப்பு பற்றி படிப்பதே சாலச்சிறந்தது என்று உணர்ந்தேன்.

  நான்கு ஆண்டுகள். பூமி சுற்றியதும் தெரியவில்லை. நாட்கள் ஓடியதும் தெரியவில்லை. ஆனால், பட்டுப்புழுவின் தன்மையும், மேன்மையும் மேன்மை பட அறிந்தும், தெரிந்தும் கொண்டேன்.

  அந்த மேன்மைக்கு உரமிட்டவர்கள் எனது பேராசிரியர்கள் என்று கூறினால் அது மிகையல்ல. அதனை மேலும், மேன்மைப்படுத்த முதுநிலை படிக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்க மீண்டும் கம்பளம் விரித்தது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்.

  இந்த இதழை மேலும்

  காற்றாடி…

  இவ்வுலகில் பெரும்பாலான காரியங்களை

  அன்பினாலேயே சாதித்து விடலாம்.

  காற்றாடிகளோடு இனியாளுக்கு சின்ன வயதிலிருந்தே பரிச்சயம். இனியாள் படித்துக் கொண்டிருந்த சில புத்தகங்களை சற்றேபுரட்டிக் கொண்டிருந்தது. தோட்டத்து திண்ணை மேல் வீசிக் கொண்டிருந்த இளங்காற்று.

  காற்றில் அருகிலிருந்த பனை ஓலைக்காற்றாடி விர்ரென்று சத்தமிட்டது. இந்தக் காலத்தில் நகரில் இதுபோல காற்றாடி பார்க்க முடியாது. இனியாளின் கிராமத்து விடுமுறைவாசம் இன்று ஆரம்பித்துள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும், இடையே அழைக்கப்படலாம். “”நீங்கள் அநியாயத்திற்கு மென்மையான காவலராக இருக்கின்றீர்கள். விரட்டி, அதட்டி, கம்பீரம் காட்டி பதவியின் விசை காட்டுவதே இல்லை” என்று இனியாளைக் குறித்து அவரை சுற்றி உள்ளவர்கள் கூறுவது உண்டு. பணியில் மிகச்சிறப்பான முன்னேற்றம் காட்டுவதால், அவள் மென்மையாக இருப்பதை வெளிப்படையாக மேலதிகாரிகள்  ஆட்சேபிக்காமல் இருந்தார்கள்.

  சார்லி சாப்ளின் கூறிய பொன்மொழி, வாட்ஸ் அப்பில் சுற்றுக்கு வந்தது நினைவு வந்தது இனியாளுக்கு. “இவ்வுலகில் பெரும்பாலான காரியங்களை அன்பினாலேயே சாதித்து விடலாம். அதிகாரம் அவசியம் தானா…? என்கின்றஅர்த்தத்தில் பேசியிருப்பார். காற்றாடியை இனியாளின் உறவுக்கார சிறுவன் அங்கே மாட்டி வைத்திருந்தான். அது பலமான காற்றில், மக்காசோள தட்டோடு பறந்து இனியாள் படிக்க கொண்டு வந்திருந்த புத்தகங்களில் ஒன்றின் மீது விழுந்தது. ஆரஞ்சு நிறத்திலிருந்த அந்த புத்தகம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் எழுதியது.

  அவருடன் அருண் திவாரி அவர்களது பெயரும் காப்புரிமை பெற்றபடைப்பாளர்கள் என சேர்த்து வெளியிடப்பட்டு இருந்தது.

  “Transcendence – பிரமுக் சுவாமிகளுடனான எனது தெய்வீக அனுபவங்கள் என்று ஹார்ப்பர் எலிமென்ட் பதிப்பகத்தார் வெளியிட்டிருந்த புத்தகம். எடுத்து விரித்தவுடன் பக்கம் 79ல் இரண்டாம் காலிப் உமர் இபின் அல் கட்டப் (Second Caliph Umar Ibh. al – Khattab) என்கின்றதலைவனுடைய நற்பண்பை பற்றி ஏ.பி.ஜே. அவர்கள் எழுதி இருந்தது தெரிந்தது.

  அவரது படைத் தலைவன் அபு உபய்தா என்பவர் ஜெருசலம் நகரத்தை கி.பி. 636ல் முற்றுகை இட்டிருந்தான். யார்க் போரில் வென்று டமாஸ்கஸ் நகரத்தை கைப்பற்றிய அதே, வேகத்தில் உபய்தா ஜெருசலத்தை நெரிக்க முற்பட்டான். ஜெருசலத்தின் தலைவராக ஷோப்ரோனியஸ் என்பவர் இருந்தார். ஷோப்ரோனியஸ், பிரச்சனையை பேசி தீர்ப்போம் என்று தூது விட்டார். உடன் ஒரு நிபந்தனையும். அதாவது காலிஃப் உமர் தான் பேச வரலாம். அதுவும் அவருக்கு முன்பு ஜெருசலத்தினுள் வேறு யாரும் காலடி வைக்க கூடாது என்றார் ஷோப்ரோனியஸ்.

  இதை கேள்விப்பட்ட காலிஃப் உமர், சரி, என்று ஒப்புக் கொண்டார். ஏனெனில் அவர், அப்துல்கலாம் அவர்களின் வழி காட்டும் ஆத்மாக்கள் (Guiding Souls) குறிப்பிட்டுள்ளவாறு, கற்பனைக்கெட்டாத செல்வக்குவியல்கள் வைத்திருந்தாலும், மாபெரும் வலிமை வாய்ந்த படைகளை கொண்டிருந்தாலும், நினைத்துப் பார்க்க முடியாத அளவு எளிமையானவராம்.

  கதவில்லாத மண்குடிசையில் வாழ்ந்தாராம். பார்லி ரொட்டியும், பேரிட்சை பழங்களும் தாகத்திற்கு தண்ணீர் மட்டுமே உண்டு வாழ்ந்தாராம்.

  தினந்தோறும் தெருக்களில் நடமாடிய அவருடைய அழுக்கடைந்த சட்டை 12 இடங்களில் கிழிபட்டிருந்ததாம். அத்தகையவர் அமைதி பேச்சு வார்த்தை கோரிக்கையை ஏற்று கொண்டு தனியொருவரால் தன் ஒட்டகத்தில் ஏறி கிளம்பி ஜெருசலம் நோக்கி ஒரே உதவியாளரோடு புறப்பட்டாராம். அவர் நினைத்திருந்தால், தன் நிலமெல்லாம் அதிரச் செய்யும் குதிரைப்படையை அனுப்பி கண நேரத்தில் காரியத்தை முடித்திருக்க முடியுமாம்.

  ஒட்டகத்தில் ஒருவரும் தரை மீது ஒருவரும் தொடர்ந்து மிக நீண்ட தூரம் பயணிப்பது தரையில் நடப்பவரை களைப்படைய செய்யும். கருணையும் எளிமையும் நிறைந்தவர் உமர். இவர் ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்து கொஞ்ச தூரம் நடத்து வர உதவியாளரை ஒட்டகம் மீது அமர்த்தி ஓய்வெடுக்க செய்வாராம்.

  அவ்வளவு அன்பும் சமநோக்கும் நிறைந்தவர் காலிஃப் உமர் என்று குறிப்பிட்டுள்ளார் கலாம். அந்த பணியாளர் சற்று நேரத்திற்கு பிறகு இறங்கி உமரை மேலே அமர வைத்து நடந்து வருவாராம்.

  இந்த இதழை மேலும்

  நம்பிக்கையை உள்வாங்கு – சந்தேகத்தை வெளியேற்று…

  பள்ளிப்படிப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், திருமண வாழ்வில் தோல்வி அடைந்தவர்கள், விவாகரத்தானவர்கள், பொதுத்தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தவர்கள், வியாபாரத்தில் முதலீட்டை இழந்து நஷ்டமடைந்து, நொடிந்து போனவர்கள், விபத்தில் சிக்கியவர்கள் ஏராளம். “நாம் இவ்வளவுதான். நம் வாழ்வு முடிந்துவிட்டது. நம் எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இனி விடிவே இல்லை. இதுதான் நம் கடைசி அத்தியாயம். நமக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டது” என முடிவு செய்து கொண்டு ஆமுடங்கியவர்களும் உண்டு. ஆனால்,  நம்பிக்கையை இழக்காமல் வாழ்வில் கிடைத்த சிறு வாய்ப்பைப் பிடித்துக் கொண்டு மனம் தளராமல், போராடி புதிய வெற்றியாளராக மாறி உலகிற்கு வியப்பைப் தந்தவர்களும் உண்டு.

  போர் முனையில் இருக்கும் படைவீரனுக்கு நாளை என்பதே நிச்சயமில்லை.

  பரம்பரைக் குடும்பச் சொத்தை, சரிசமமாக நேர்மையாக பிரித்துக் கொள்ளாததால் மோதல் ஏற்பட்டு ஏராளமான வழக்குகள் நம் நாட்டில் நீதி மன்றங்களில் தேங்கிக்கிடக்கின்றன. விட்டுக் கொடுத்தவர்கள் என்றுமே கெட்டுப்போனதில்லை. வாகன நெரிசல் மிகுந்த சாலையை கடக்கத் தடுமாறும் முதியவர்கள், மூதாட்டியர் போல நம் வாழ்க்கைச் சாலையை கடக்க முடியாமல் தடுமாறும் நிலை, நமக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.

  நமக்கு சோர்வாக இருக்கும்போது, நாம் இதுநாள் வரை பெற்ற வெற்றிகள் எத்தனை என நினைத்துப் பார்த்து, அதற்கு இறைவனிடம் நன்றி தெரிவிக்கலாம். “நமக்கு என்ன நடந்து விட்டது’. என்பதல்ல வாழ்க்கை. “நமக்கு நடந்ததை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்’, என்பதுதான் வாழ்க்கை.

  மிகப்பெரிய லட்சியத்தை அடைய முற்படும்போது கடுமையாகப் போராட வேண்டி வரும். எதிர்ப்புகள் தவிர்க்க முடியாதது. பின்வாங்கலாம் எனத் தோன்றலாம். பின்வாங்கினால் வாழ்வு சுவையானதாக இருப்பதில்லை. உற்சாகமான மனிதர்கள் முதுமையிலும், பம்பரமாக சுழல்கிறார்கள். வலி என்று புலம்பாமல், மாத்திரை போட்டுக்கொள்ளாமல், சோம்பேறியாகத் திரிந்து நேரத்தை வீணடிக்காமல், எழுபது வயதிலும் மகிழ்ச்சியாய் இளைஞர்களுக்கு இணையாக செயல்படுபவர்களும் உள்ளனர்.

  கோபக்காரர்கள் என பெயர் எடுத்தவர்கள் ‘இன்று கோபப்படக்கூடாது. இந்த மாதம் யாரிடம் கோபிக்கக் கூடாது’ என்று முடிவெடுத்து செயல்படுத்தினால், சமூக உறவு ஏற்படும். எரிமலை போல மற்றவர்களிடம் வெடித்துச் சிதறுவதால், எதிரிகள்தான் நமக்கு அதிகரிப்பார்கள். நமக்கு ஏதாவது தொல்லைகளைத் தருவர். மறப்பது, மன்னிப்பது என்றுமே நல்லது. வெறுப்பு, பகைமை, வன்மம், சீற்றம், பழிவாங்கும் குணம் இவைகள் மனிதனை அழித்து விடுகிறது. “இன்று, இந்த வாரம், இந்த மாதம் யாரிடமும் கடுமையாக பேசுவதோ, கோபமாக நடந்து கொள்வதோ கூடாது’, என தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.  விரோதியையும் மன்னிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் மாறவேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட நாம் மாறமுயற்கிக்கலாம். நம் தவறுகள்தான் நம் பலவீனமே.

  எதிலும், நல்லதையே காணும் இனிய மனவளம் உடையவர்களோடு (Optimist) பழகுங்கள். நடுக்கடலில் புயலுக்கு நடுவில் நாம் பயணிக்க நேர்ந்தாலும், நம்பிக்கை என்கிற நங்கூரம் நம்மைக் காக்கும். மற்றவர்களின் தவறான செயல்களுக்கு ஒத்துப்போகும் குணமுடையவர்கள் சுதந்திரமானவர்கள் அல்ல. அவர்கள் ஆட்டு மந்தைக் கூட்டத்தைப் பின் தொடர்கிறவர்கள். நம் மனதிற்கு சரியெனப் படாததை, மற்றவர்களுக்காக ஒப்புக் கொள்ளும் குணமுடையவர்கள். பலவீனமானவர்கள் தரமானது என்ற ஏற்கப்பட்ட வழிகளில் நடக்க, குணமுள்ள மனிதர்கள் முற்படும்போது, பின்னால் வர எவருமில்லாமல் கூட இருக்கலாம். தனக்கு சரியெனப்பட்டால் மாறுபட்டு நடப்பதற்கு தயங்காத மனிதர்களே உலகில் அதிக அளவு சாதித்தவர்கள் ஆவர். பட்டை தீட்டும்போதுதான் விலை மதிப்பற்ற வைரக்கற்கள் கூட ஜொலிக்கின்றன.

  இந்த இதழை மேலும்

  ஆனந்த வாழ்விற்கு….

  இயந்திரத்தனமான, நெருக்கடி நிறைந்த இன்றைய வாழ்க்கை முறையிலே, மனித மனம் பல்வேறு சமயங்களிலே நொந்து நூடுல்ஸ் ஆகி, செய்வதறியாமல் விழிபிதுங்கி நிற்பதைப் பார்க்கும் போது, அட என்னடா வாழ்க்கை என்று சலிப்படைவது, தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதற்கு, காரணம் என்ன? என்று யோசித்த வேளையிலே,

  மூன்று முக்கிய விஷயத்தில் கவனம் செலுத்தாமல், மனிதன் சென்றதனால் கூட இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது. அந்த மூன்று முக்கிய விஷயம்தான் என்ன…?

  1. ஏற்றுக் கொள்ளுதல்
  2. தூய அன்புறுதல்
  3. சில்லென்று சிரித்தல்

  மேற்கண்ட மூன்றும் மனித இனத்திற்கு நலத்தை அளிக்க கூடிய அருமருந்து என்றால் அது மிகையாகாது. அந்த மூன்றைக் குறித்து சுருக்கமாக இனி காண்போம்…

  ஏற்றுக்கொள்ளுதல்:

  நாள்தோறும், சில நேரங்களிலே மாற்றமுடியாதவற்றுடன் அவ்வப்பொழுது நாம் மாட்டிக்கொண்டு மண்டையை உடைத்து, மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். இதற்கு முக்கிய காரணம், ஏற்றுக்கொள்ளும் நம் இயல்பை நாம் மறந்ததுதான் என்றால், அது மிகையாகாது.

  அந்த தருணத்தில், “எனக்கு மட்டும் ஏன் இப்படி வந்து தொலைகின்றது?’ என்று எண்ணாமல், “எல்லோருக்கும் இப்படித்தான் நிகழ்கிறதா?’ என எண்ணிப் பார்த்தாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும்.

  இதுதான், முற்றிலும் உண்மையும் கூட. இந்த உண்மையை உணரத் தொடங்கிவிட்டால், நமக்கு ஏற்பட்ட எப்பேர்ப்பட்ட பிரச்சனையையும் ஏற்றுக் கொள்வது எளிதாகி விடும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடம் இல்லை.

  வாழ்வில் முடிந்தவைகளைத் தூக்கி, மூலையில் போடுங்கள். அது வெற்றி என்றாலும், தோல்வி என்றாலும் சரி, அதை தூக்கிக் கொண்டே சென்றால், நீங்கள் வளர்ச்சியையும், அமைதியையும் என்றைக்கும் சந்திக்கவே முடியாது என்பது உறுதி. வாழ்வில் கடந்த காலம் கொடுத்த அறிவை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் விளைவை விட்டுவிட இந்த நிமிடமே தயாராகுங்கள். உங்கள் நிம்மதிக்கு அது நல்லதொரு தொடக்கமாக அமையும்.

  அதுபோல் உங்களில் எழும் எந்த பிரச்சனை என்றாலும், அதற்கு உடனே தீர்வைக் கண்டு விடுங்கள். உங்களின்அ டுத்த நிமிடம் எப்போதும்  வெற்றிடமாகவே இருக்கட்டும். எதிர்காலத்தில், எது வேண்டும் என்றாலும் நடக்கலாம். எதுவும், நம் கையில் இல்லை. எனவே கவலைப்படுவதை விட்டுவிட்டு, அச்சப்படாமல் அடுத்த அடியை எடுத்து வையுங்கள். எது வந்தாலும்,  அதனோடு பயணித்து, வென்று திரும்புவோம் என்னும் தன்னம்பிக்கையுடன். அதுதான், உங்களுக்கும் உங்களை சுற்றியுள்ள அனைவருக்கும் நல்லது. இனி மாற்றமுடியாததை ஏற்றுக் கொள்ள தயங்கமாட்டீர்கள் தானே.

  தூய அன்புறுதல்:

  மாபெரும் சக்தி வாய்ந்த மனிதன் வாழும் மண்ணுலகில் ஒத்த உணர்வின் ஈர்ப்புதான், அன்பாய் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தூய அன்பு எங்கே இருந்தாலும், அங்கே, அது ஆச்சரியப் தக்க, அதிர்வை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் என்றால் அது மிகையாகாது.

  நல் அன்பின் அலைவரிசையை எதுவாலும் இடையூறு செய்ய இயலாது. ஒரு முறைதூய அன்புக்குள் ஒருவர் ஆற்பட்டு விட்டால், அந்த அனுபத்தில் இருந்து அவர் வெளியே வருவது சிரமமானதாகும். அத்தனை வல்லமை படைத்தது அது. நிபந்தனை அற்றஅன்பை, பாரபட்சமின்றி, நிமிடம்தோறும் பரிமாறிக்கொண்டே இருப்போம். அதைவிட ஓரு பேரின்பம் எங்கும் இல்லை என்பதை உணர்வோம்.

  இந்த இதழை மேலும்

  பருவத்தே பயிர் செய்

  காத்திருப்பது என்பது சுகமான இன்பம்.

  “ஓடுமின் ஓட உறுமீன் வருமளவும்

  காத்திருக்குமாம் கொக்கு. (மூதூரை  5)”

  – இது அறிஞர் வாக்கு.

  திருவள்ளுவரும் இதை…

  கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

  குத்தொக்க சீர்த்த இடத்து,”  குறள் 490

  என்ற குறளில் பொறுமையுடன் கூடிய செயல்பாட்டை விளக்கியுள்ளார்.

  ஒருமாதம் காத்திருந்த நீங்கள், குழம்பவே வேண்டாம். பிறந்து, நினைவு தெரிந்த நாள் முதல், இன்று வரை நம் உடலும், மனமும் வருந்த காரணமானவர்கள் என்றும் வெறுப்பு, பகை, வேண்டாதவர்கள் என்றும் பட்டியலில் பலர் உள்ளனர்.

  இவர்களில் சிலர் இறந்திருக்கலாம். பலர் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாது. ஆனால், அவர்களால் பெற்ற துன்பங்கள், அதன் நினைவுகள் இன்றும் மனதில் பசுமையாக உள்ளதே…

  இந்த நினைவுகள் தான், நமது வாழ்வின் சந்தேகங்களை தள்ளி வைத்துக் கொண்டேயிருக்கிறது. அவர்களை மனதில் நினைத்து, மானசீகமாக மன்னிப்புக் கேளுங்கள்.

  இந்த செயலுக்கான விளைவு அற்புதமானது. உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில், மன அமைதியில், பொருள் நிலையில், சமுதாய அந்தஸ்தில் என்ன வேண்டும் என எண்ணுகிறீர்களா அனைத்தும், ஒவ்வொன்றாக உங்களை வந்தடையும்.

  அது எப்படி கேட்க முடியும்…? அவர்கள் செய்த செயலை இப்போது நினைத்தாலும்… என்று பல்லைக்கடிக்கும் பலர் இருக்கின்றனர். வேறு வழியில்லை.

  ஒரு பெரிய பள்ளம் இருக்கிறது. அதைக்கடந்து செல்ல வேண்டும் என்றால், ஒன்று நிரப்ப வேண்டும் அல்லது பள்ளத்தில் இறங்கி நடக்க வேண்டும். இது முடியாது என்றால், பள்ளத்தில் இறங்கித்தான் கடக்க வேண்டும். இது முடியாது.

  எனவே, பாலம் கட்டுவதுதான் சரியான முடிவு. இது நம்முடன் முடிவதில்லை. நம் வாரிசுகளின் வாழ்க்கையும், பாதிப்பில்லாமல் அமைய வேண்டுமல்லவா?

  பிறரிடம் மன்னிப்பு கேட்பதுடன், நாமும் மற்றவர்களை உளமாரமன்னித்து விட வேண்டும்.

  ‘மடிப்பிச்சை’ என்றசொல்லை எடுத்துக் கொள்வோம். எவ்வளவு வசதி இருந்தாலும், சில வேண்டுதலுக்காக பிறரிடம் மடி ஏந்திப்பிச்சை எடுத்து, அதை இறைவனுக்குப் படைப்பது வழக்கம்.

  பிச்சை எடுக்கின்ற மனநிலைதான் தன் முனைப்பற்றநிலை. தான் யார்? தனது அந்தஸ்து என்ன?  போன்றவற்றை புறந்தள்ளி, முழுமன ஈடுபாட்டுடன், பிச்சை எடுப்பது இது போன்றதே இந்த மன்னிக்கும் செயலுமாகும்.

  இந்த இதழை மேலும்