– 2005 – July | தன்னம்பிக்கை

Home » 2005 » July (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    இரவுகள் விடியும்

    சிறப்பு நேர்காணல்

    – சுசி. திருஞானம்

    கவிஞர் வாலி

    அனுபவச் செல்வம் மிகுந்த ‘கவிஞர்’ என்ற முறையில் வாழ்க்கையில் முன்னேற

    Continue Reading »

    நிறுவனர் பக்கம்

    குறிக்கோளை நோக்கி…

    மனித ஆற்றல்

    ‘மனித ஆற்றலுக்கு ஓர் எல்லையே இல்லை மானிடப் படைப்பு ஒரு வியத்தகு படைப்பாகும். அவனுடைய பகுத்தறிவின் மாட்சிமை பெருஞ் சிறப்புடையது. அவனது பரந்துபட்டபல்துறை

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    பள்ளி – கல்லூரி இறுதித் தேர்வு முடிவுகளைக் கண்டதும் சில மாணவர்கள் தங்கள் வாழ்வின் இறுதி முடிவைத் தேடிக்கொள்கிறார்கள். ஆண்டுதோறும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களும், பெற்றோரின் அதிகப்படியான எதிர்பார்ப்பு உள்ளத்தை நொறுக்கிவிடும்படியான மிகையான கண்டிப்பு, பிற

    Continue Reading »

    திறமையானவராக திகழுங்கள்

    காலத்தின் மாற்றத்திற்கேற்ப – நமது
    கருத்திலும் வளர்ச்சி வேண்டும்!
    புதுப்புது திறன்களை கற்றால் – நெஞ்சில்
    புத்துணர்ச்சி என்றும் தவழும்

    Continue Reading »

    திறந்த உள்ளம்

    சூன் மாத தன்னம்பிக்கை இதழ் படித்தேன். பேராசிரியர் பெரு. மதியழகன் அவர்களின் முன்னேற்றத்தின் மூலதளங்கள் பகுதியில் ‘டாக்டர் தம்பையா’ அவருடனான நேர்முகத்தைப் படித்தேன்.

    இதில் மாவீரன் அலெக்சாண்டரைப் பற்றிய அந்த வரிகள் என்னை நெகிழச் செய்தன.

    Continue Reading »

    மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் சு. பழனியாண்டி பேட்டி…

    தங்கள் நிறுவனத்தின் தொடக்கம் மற்றும் சூழல் குறித்து சொல்லுங்கள்.

    இந்த நிறுனம் என் தந்தையார் புலவர் சுப்ரமணியம் அவர்களால் நிறுவப்பெற்றது. அவர் தமிழாசிரியரக பணியாற்றினார். தமிழ்க்கல்லூரி ஒன்றை நிறுவ வேண்டும் என்ற அவா, அவர் நெஞ்சத்தில் குடிகொண்டது.

    அக்காலத்தில் தமிழ்க் கல்லூரிகள் ஏதாவது ஒரு மடத்தைச் சார்ந்தே இருந்தன. அந்த வகையில் நெருஞ்சிப் பேட்டையில் இருந்த ஒரு மடத்தை அணுகி, கல்லூரி நிறுவ எண்ணினார். ஆனால், கல்லூரி சார்ந்தவர்களுக்கு அதில் நாட்டமில்லை.

    அதனால் என் தந்தையார் தன் சொந்த பொறுப்பிலேயே தமிழ்க்கல்லூரியை நிறுவினார். அந்த காலத்தில் கோவை பேரூர் இராமசாமி சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி இயங்கி வந்தது.

    1967 ஆம் ஆண்டில் மோகனூர் சுப்ரமணியம் தமிழ்க்கல்லூரி என்ற பெயரில் தொடங்கினார்.

    இக்கல்லூரியின் சிறப்புகளாக தாங்கள் கருதுவது….

    சேலம், தரும்புரி, வடாற்காடு, மாவட்டங்களுக்கு இது ஒன்றுதான் தமிழ்க்கல்லூரி.

    சிறப்பு மிக்க தமிழறிஞர்கள், பலர் வருகை தந்தனர். குறிப்பாக அன்றைய இயக்குநர் மீனாட்சி சுந்தரம், 1971-ல் டாக்டர் மு.வ. ஆய்வு செய்து பாராட்டினார்கள்.

    மேலும் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் ஒத்துழைப்பு படிப்படியாக வளர்ந்தது. சிலம்புச் செல்வர் மா.பொ.சி. சென்னைப் பல்கலைக் கழகத்தில் இருந்து பேராசிரியர் மணிசுந்தரம், பச்சையப்பன் கல்லூரி முதல்வர் சண்முகநாதன் ஆகியோரின் ஆய்வில் பாராட்டி சிற்பிக்கப்பெற்ற கல்லூரி இது.

    தமிழ்க் கல்லூரியாக செயல்பட்ட நிறுவனம்தான் இன்று கலை அறிவியல் கல்லூரியாக இயங்குகிறதா?

    1987 – ல் கலை அறிவியல் கல்லூரியாக உருவெடுத்துது. தமிழ்க் கல்லூரிகளில் முதன் முதலில் (பி.காம்.) பட்டப்படிப்பைத் துவக்கிய பெருமையை எங்கள் கல்லூரி பெற்றது. இடையில் பல்வேறு இடற்பாடுகளால் தொடர்ந்து பட்டப்படிப்புகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் என் தந்தையார் நோய்வாய்ப்பட்டு மறைவெய்தினார்கள்.

    1992-ல் என் தந்தையார் மறைவின் போது இருபத்தெட்டு மாணவர்களே (பி.காம். 11 பி.பி.ஏ. 17 படித்து வந்தனர்.

    இன்று 350 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    இருபத்தெட்டை 350 ஆகிய நிலைகளைப்பற்றி கூறுங்களேன்….

    தமிழ்க்கல்லூரி என்ற அளவில் மூன்று நான்கு வகுப்பறைகள் மட்டுமே இருந்தன. 1992-ல் நான் தாளாளர் மற்றும் செயலாளர் பொறுப்பினை ஏற்ற பிறகு அய்ம்பது அறுபது இலட்சம் மதிப்பீட்டில் மூன்று அடுக்குக்கொண்ட அழகான கட்டிடம் மற்றும் ஆய்வுக் கூடங்கள் வகுப்பறைகள் என்ற வகையில் உருவாக்கி இருக்கிறேன்.

    1997 வரை பாடப்பிரிவுகளை மட்டுமே கொண்ட எம் கல்லூரி 97-ல் 6 பாடப்பிரிவுகளாக வளர்ந்து தற்போது எட்டு பாடப்பிரிவுகளாக உயர்ந்துள்ளது.

    மற்ற கல்லூரிகளினின்று தங்கள் கல்லூரி எந்த வகையில் வேறுபட்ட சூழலால் இருக்கிறது?

    மோகனூர் என்பது ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்தபோதும் சரி, இன்று நாமக்கல் மாவட்டத்திற்குப்பட்ட நிலையிலும் சரி கடைகோடியில் ஒதுகுப்புறமாகவும் அடுத்து செல்வதற்கு சாலை வசதியற்று இருப்பதால் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் பெற வாய்ப்பற்ற நிலையே! புதியதாக இங்கு பிறர் வரும் நிலையற்றுபோய் இங்கிருந்து வெளியேறுபவர்களே அதிகம். எனவே இப்படிப்ட்ட இந்த சூழலில் கிராமப்புற மக்களுக்கு முடிந்த அளவு நல்லது செய்ய வேண்டும் என்ற உயரிய நோகில் செயல்பட்டு வருகிறோம்.

    இங்கு வரும் மாணவர்கள் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினரே. அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் குறைந்த கட்டணமே கட்ட முடியும் என்ற சூழல் எமது கல்லூரிக்கு வருகிறார்கள். அது மட்டுமன்றி குறைந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்களே அதிகம்.

    இந்த நிலையில் தங்கள் நிலை?

    வசதி வாய்ப்புகளற்றவர்களுக்கு கட்டணத்தில் சலகை தந்து கல்வியைத் தொடரவைத்து மகிழ்கிறோம். அது மட்டுமின்றி, எங்கள் மாணவர்களுக்கு உழைப்பு, உண்மை, மனிதநேயம் உள்ளவர்களாக அதே நேரத்தில் வல்லவர்களாக உருவாக்கி அனுப்பி வைக்கிறோம். வேலை வாய்ப்புப்பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகளையும் வழங்கி தன்னம்பிக்கைக் கொண்டவர்களாக உருவாகி அனுப்பி வருகிறோம்.

    கடந்த ஆண்டு 70 மாணவர்கள் இரத்த தானம் செய்தனர்.

    இங்கிருந்து பட்டத்தோடு திரும்பும் மாணவர்கள் 50% மேற்படிப்பிற்கும், 50% பணியிலும் இருக்கிறார்கள். யாருக்கும் இல்லாத பெரும் ஒன்று எங்களுக்கு மட்டுமே உண்டு. 1972-ல் சமுதாய விழிப்புணர்வு தந்தை ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் எங்கள் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று வாழ்த்தினார்கள். இதுவே எங்கள் கல்லூரி பெற்ற பெரும் பேறாக மகிழ்கிறோம்.

    வாழ்க்கைப் பிரச்னைகள்

    முன்னுரை

    வாழ்க்கைப் பிரச்னைகளில் ஒன்றான பிரச்சினைகள் பற்றிச் சில கருத்துக்களை இக்கட்டுரையில் காண்போம்.

    பணப்பிரச்சினைகள் வருவதற்கு முக்கியமான சில காரணங்கள்

    1. பணம் பற்றிய ஒரு கல்வி – விழிப்புணர்வு – பொருளாதார அழிவு நமக்குச் சிறுவயது முதல் போதிக்கப்படவில்லை. பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையில் இதுபற்றிச் சொல்லித் தரப்படுவதில்லை.

    2. பணம் பற்றிய சில தப்பான நம்பிக்கைகள் உள்மனதில் பதிக்கப்படுள்ளது (உலக அளவில்). வெளிநாட்டு அறிஞர்களும் இதுபற்றி எழுதியுள்ளனர். உதாரணத்தற்குச்சில:

    “நல்ல வழியில் நிறையப்பணம் சம்பாதிக்க முடியாது”. “பணம் பாவத்திற்குக் காரணம்”

    “எதைத் தலையில் கட்டிப் போகப் போகிறோம்”

    “எனக்குக் காசு ஆசை கிடையாது”

    3. பொருளாதாரத் திட்டம் பலரிடம் இல்லை.

    4. தனி மனிதர்களும், குடும்பங்களும், நிறுவனங்களும் கணக்கு எழுதாமல் (No Proper Account Keeping) இருத்தல். எவ்வளவு வருகிறது, எவ்வளவு செலவாகிறது, எவ்வளவு கடன், எவ்வளவு வெளிபாக்கி வரவண்டும் என்றெல்லாம் தெளிவாக எழுதி அடிக்கடி சரிபார்க்காத போது அது பிரச்சினைகளால் வந்து நெருக்கும்.

    5. எல்லோரையும், எந்த நிறுவனத்தையும் சரியான விபரங்கள் சேகரிக்காமல் நம்பி விடுவது, அறிவு பூர்வமாய் அலசி ஆராயாமல், உணர்வு பூர்வமாய் முடிவெடுத்து நம்புதல்.

    6. வராத பணத்தைச் செலவு செய்தல். அதாவது அடுத்த மாதம் இவ்வளவு வந்துவிடும் என்ற எண்ணத்தில் – நம்பிக்கையில் – இருக்கும் பணத்தை அல்லது கடன்வாங்கிப் பணத்தைச் செலவு செய்வது.

    7. வருமானத்தைப் பெருக்காமல் – செலவுகளை அதிகப்படுத்திக் கொள்ளல்.

    8. ‘கடன் கிடைக்கிறது’ என்பதற்காகவும், சுலபத்தவணை – வட்டி குறைவு என்பதற்காகவும் தேவையற்ற பொருள்களை வாங்குவது; போலி கௌரவத்திற்காக வாங்குவது.

    9. வீண் ஆடம்பரச் செலவுகள்.

    10. அனுபவம், திறமை இல்லாத துறைகளில் அதிக முதலீடு செய்தல், அங்கே இருட்டுப்பகுதி இருக்கிறது. அதாவது வெளிச்சம் இல்லாத நிலை – ‘இதுதான் இவ்வாறுதான் ஆகும்’ என்பது தெரிந்தால் வெளிச்சம். “மற்றவர்களுக்கு வெற்றி ஆனதால் எனக்கும் வெற்றி ஆகும்; எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அநேகமாக வெற்றி ஆகலாம்..” என்றெல்லாம் இருக்கும் நிலையில் தொழில் பிரச்னை உருவாகிப் பணப்பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம்.

    11. தொழிலில் வந்த வரிபணத்தை, மீண்டும் தொழிலிலேயே முதலீடு செய்யாமல், வேறு வகையில் செலவு செய்தல், தொடர்ந்து எதிர்பார்த்த வரவு வராவிட்டால், கடன், அல்லது தொழில் முதலீட்டிற்குப் பணம் போதாமல் உற்பத்தித்திறன் பாதித்தல்.

    12. சேமிப்பைத் தப்பான நிறுவனங்களில் முதலீடு செய்தல். “Investigate before investing” என்ற விதியைப் பின்பற்றாவிட்டால் – சேமித்த பணம் திரும்பி வராமல், பணப்பிரச்னைகள் உருவாகும்.

    தீர்வுகள்

    1. மேற்கண்ட காரணங்கள் ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்து, தக்க நடவடிக்கை எடுத்தல், விழிப்புணர்வுடன் இருத்தல் – பிரச்னைகளுக்கும் தீர்வு ஆகும்.

    2. வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தல, உற்பத்திபெருக்கம், மேம்பாடு, மதிப்பைக்கூட்டுதல் (value Addition) செய்தல்.

    3. ஒரு தொழில் செய்தல் போக மீதி நேரம் இருந்தால் வேறு பகுதி நேர தொழில் செய்து, பலவகை வருமானத்தைப் பெருக்குதல். (Multi Source Income – MSI)

    முடிவுரை

    கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இனிச் செய்யக்கூடியது என்ன? என்று தைரியமாய், மனத்திலிருக்கும் பேராற்றலைப் பயன்படுத்திச் செயல்புரிவோம். வெற்றி அடைவோம். வாழ்த்துக்கள்!

    – தொடரும்