– 2005 – March | தன்னம்பிக்கை

Home » 2005 » March (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    மாணவ/மாணவிகள் கல்வியில/வாழ்வில் வெற்றியடைய…..

    முன்னுரை

    கடந்த பத்து ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பயிற்சிகள் நடத்தினேன்.  பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் நடத்தினேன்.  பல பள்ளிகளில் Joy of Teaching & Effectiveness என்ற தலைப்பில் பயிற்சிகள் நடத்தியதோடு மாணவர்கள் பிரச்சனைகள் பற்றிக் கலந்துரையாடல் நிகழ்த்தினேன்.  பெற்றோர்களிடம் பிள்ளைகள் பற்றிய பிரச்னைகள் பற்றிக் கேட்டுத் தீர்வுகள் பல அளித்தேன்.  இவை பற்றி அவ்வப்போது மனநல மருத்துவர்களிடமும், மனோதத்துவப் பேராசிரியர்களிடமும் ஆலோசனைகள் கேட்டேன். இவற்றையெல்லாம் தொகுத்து ஒரு தொடராய் எழுத முடிவு செய்துள்ளேன்.

    பிரச்னைகள்

    மாணவர்  பிரச்னைகளை அறிய பயிற்சி நடத்திய ஆரம்ப காலங்களில் “கேள்விகள் கேளுங்கள்” என்பேன்.  “பயிற்சி முடிந்து தனியாக என்னிடம் பிரச்சனைகளைச் சொல்லித் தீர்வு பெறுங்கள் “என்பேன்.   இந்த வகையில் ஒரு சிலருடைய பிரச்னைகளை அறிய முடிந்தது.  ஆனால்  பேசாத மாணவர்கள் கூச்சம், அச்சம், தயக்கம் உள்ள மாணவர்களின் பிரச்னைகளை அறிவது எப்படி?

    பிரச்னைகளை எழுதுக

    பெரும்பாலான பயிற்சிகள் இரண்டு தினங்கள் நிகழ்வதால்,முதல் நாள் பயிற்சியின் முடிவில் “நண்பர்களே!  உங்களிடம் ஒரு வெள்ளைத்தாள் வழங்கப்படும்.  அதில் உங்களுடைய கேள்விகள் / தடைகள்/ பிரச்னைகள் பற்றி எழுதுங்கள்.  உங்கள் பெயர், வகுப்பு, பள்ளி எதுவும் எழுத வேண்டாம்.  (விரும்பினால் எழுதலாம்).  நீங்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெற உங்களிடம் உள்ள தடைகள்/ சிக்கல்கள்/ பலவீனங்கள் என்ன?  மனம் விட்டு எழுதுங்கள்.  நூற்றுக்கு நூறு சிறந்த குணங்கள் 1. Positive Qualities உள்ள மனிதர் என்று எவருமில்லை.  100% கெட்ட குணங்கள் 2. Negative Qualities  உள்ள மனிதர் யாருமில்லை.  ஆகவே நீங்கள் என்ன எழுதினாலும் நான் தவறாக நினைக்க மாட்டேன்; எழுதுங்கள்” என்ற ஒரு பெரிய முன்னுரை கொடுத்து ஊக்கப்படுத்தி எழுதச் சொல்லி வாங்குவேன்.  அவற்றையெல்லாம் படித்துப்பார்த்துத் தீர்வுகளை அடுத்தநாள் பயிற்சியின்போது கொடுப்பேன்.

    பிரச்னைகளின் வகைகள்

    பல ஊர்கள், பல பள்ளிகள்,  பல வயது மாணவர்கள் பிரச்னைகளை ஆய்ந்து பார்த்ததில் இன்றைய மாணவர்களின் பிரச்னைகள் நாம் மாணவர்களாய் இருந்தபோது வந்த சிக்கல்களைவிட கடுமையாக இருக்கின்றன. நிறைய diversio-deviations கவனச் சிதறதல்களையெல்லாம் மீறி அவர்கள் வெற்றி பெற வேண்டியுள்ளது.  இன்றைய மாணவர் பிரச்னைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

    1. மனம் பற்றிய பிரச்சினைகள்
    2. வழிமுறை பற்றிய பிரச்சினைகள்.

    மனம் பற்றிய பிரச்சினைகள் : (சுருக்கமாக)

    1. பல மாணவர்கள் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்கள்.

    அ. ஐயா! நான் படித்தால் மதிப்பெண் பெறுவேன்.  ஆனால் படிப்பதில்லை.  சோம்பல், தள்ளிப்போடல் இந்த இரண்டும் என்னை ஆட்டிவிக்கின்றன.  எப்படி வெல்வது?

    ஆ. அதிகாலை எழ எண்ணிவிட்டுப் படுப்பேன். ஆனால் எழ முடிவதில்லை.  பீப் அலாரம் அடிக்கும்.  ஆனால் அதை நிறுத்தி விட்டு உறங்கிவிடுவேன்.

    பின்னால் வருந்துவேன். சில சமயம் உடல் சோர்வாக இருக்கும்.  சிலசமயம் மனம் சலிப்பாய் இருக்கும். எப்படி அதிகாலைப் பழக்கத்தை உருவாக்குவது?

    இ. வகுப்பில் கவனிக்க வேண்டும் என்று எண்ணுவேன்.  ஆனால் மனம் சிதறுகிறது.  எப்படி கவனிக்கும் தன்மையை உருவாக்குவது.

    ஈ. வகுப்பில் தூக்கமாய் வருகிறது. சில சமயம் சிறிது நேரம் படித்துக் கொண்டிருப்பேன். கண்கள் சொருகும்.  இரவு தூங்கியும் அதிகத் தூக்கம் வரக்காரணம் என்ன?

    உ. ஆசிரியர் என்னைத்திட்டி விட்டால் – வகுப்பில் அனைவரின் முன்னால் ஏதேனும் கேட்டுவிட்டால் – மனம் அதையே எண்ணும். யார் என்னைக் குறை சொன்னாலும், நண்பர்களோடு ஒரு சிறு பிணக்கு ஏற்பட்டாலும் புத்தகத்தை எடுத்து வைத்தால் அதுதான் நினைவுக்கு வருகிறது.  மன ஒருமைப்பாடு Concentration பாதிக்கப்பட்டு விடுகிறது.

    ஊ. எல்லோரும் “படி! படி!” என்று நச்சரிப்பது, தொடர்ந்து அறிவுரை, கண்காணிப்பது, நம்பிக்கையற்ற தன்மை இது எரிச்சல் ஊட்டுகிறது. என்ன செய்வது?

    எ. நண்பர்கள் என்னைத் திசை திருப்புகின்றனர்.  அவர்களை முறைத்துக் கொள்ள முடியவில்லை.  என்ன செய்வது?

    ஏ. சில பாடங்கள் பிடிக்கவில்லை. அதை படிப்பதென்றாலே வெறுப்பாக உள்ளது.

    ஐ.பத்தாம் வகுப்புக்கு மேலுள்ள மாணவர்கள் சிலர் எழுதியிருந்தனர். செக்ஸ் மற்றும் காதல் எண்ணங்கள் வருகின்றன.  மனத்தை எப்படி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது?

    இவ்வாறாக இவைகளெல்லாம் மனம் சம்பந்தமான பிரச்னைகள்.

    வழி முறைகள் பற்றிய பிரச்னைகள்

    1. ஐயா!  நான் தொடர்ந்து படிக்கிறேன். மார்க் வருவதில்லை.  வருடம் முழுதும் நன்கு படித்து தேர்வு எழுதும் போது பயம், டென்ஷன் இவற்றால் மறந்துவிடுகிறது. என் செய்வது?

    2. விரைந்து படித்து நினைவில் வைப்பது எப்படி?  (நான் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறேன்).

    3. கணக்கில் 100% வாங்குவது எப்படி?  ஏதேனும் தவறு செய்து, முழு மதிப்பெண் பெற முடியவில்லை.

    4. நினைவாற்றலை எப்படிப் பெருக்குவது?

    5. சூத்திரங்கள் மற்றும் சமன்பாடுகள் Formulas & Equations எப்படி நினைவில் வைப்பது?

    6. மொத்தத்தில்  எல்லாப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?

    இது போல வழிமுறைகள் பற்றிய பிரச்சினைகள் நிறைய உள்ளன.

    இவற்றிற்கு தீர்வுகள் என்ன?

    – தொடரும்

    திறந்த உள்ளம்

    கவிஞர் இரா. இரவி
    மதுரை

    “உள்ளத்தோடு உள்ளம்” தலையங்கம் சுனாமியால் பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவது அவசியம் என வலியுறுத்தியதற்கு நன்றி.  முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் வேண்டியிருக்கிறீர்கள். நிறுவனர் பக்கம் வழக்கம் போல வாழ்வியல் நெறி விளக்கியது. இனியவர் லேனா தமிழ்வாணன் நேர்முகம் பயனுள்ளவை. வெற்றிபெற்ற

    Continue Reading »

    ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை

    நம்மோடு உரையாடுகிறார் செயல் இயக்குநர் ஆர். கண்ணன்

    நிர்வாகம் வாடிக்கையாளர் அணுகுமுறைப் பற்றி விளக்குங்களேன்

    தொழிலில் வெற்றி, தோல்வி என்பது வாடிக்கையாளரை அணுகுவதில்தான் உள்ளது. சரியான அணுகுமுறையே வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்தும்.

    Continue Reading »

    விடியலை நோக்கி

    நடு இரவில் கடல் நோக்கிப் பயணித்து, விடிய விடிய கரை வந்து சேரும் எத்தனை துணிவான நமது மீனவ கிராம மக்கள் ஆழிப்பேரலையில் அத்தனையும் தொலைந்து இன்று பகல் பொழுதில் கூட இருள் கவ்விய தமது வாழ்வில் விடியலை எதிர்நோக்கி உள்ளனர்.

    Continue Reading »

    எப்படி எப்படி எப்படி

    – ம. திருவள்ளுவர்

    தன்னம்பிக்கை வாசக நெஞ்சங்களுக்கு என் வணக்கத்தையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் வந்திருக்கும் இப்புத்தாண்டு 2005 நம் அனைவருக்கும் புதிய பார்வையையும், புதிய வார்த்தையையும், புதிய வாழ்க்கையையும் வழங்கி சிறப்பிக்கட்டும்.  பொங்கல் திருநாளில் வாழ்வில் நலமும் வளமும் பொங்கிச் சிறக்கவும், மனித குலம் வல்லமை பெற்று உயரவும் கட்டியம் கூறட்டும்.

    பழையன கழிந்து புதியன புகுந்திடும் இந்நாளில்  புதிய தொடரோடு உங்களைச் சந்திப்பதில் பூரிப்படைகிறேன்.  வாருங்கள் தோழர்களே..இனியதொரு பயணத்தை இப்போதே தொடங்குவோம்.

    எது?  ஏன்? எதனால் என்பெதல்லாம், அறிவைக் கிளறித் தீர்வைக் காண்பதற்காக – நம்மை வாத விவாதங்களுகுட்படுத்தும் வினாக்களாகும்.. எந்தப் பொருள் குறித்த அறிவையும்  நாம் ஒரு நூலகத்திலிருந்தோ, விவாத மேடைகளிலிருந்தோ, கருத்தரங்குகளிலிருந்தோ, நிபுணர்களிமிருந்தோ, ஊடகங்களிலிருந்தோ,  வலத்தளங்களிலிருந்தோ பெற்றுவிடலாம்.  ஆனால் இந்த எப்படி என்கிற நுட்ப் இருக்கிறதே இது நுணுக்கமானதொரு விஷயம்.  இது வெறும் அறிவு சார்ந்த விஷயம் மட்டுமல்ல.  இது பெற்ற அறிவை நடைமுறையில் பயன்படுத்திப் பெறுகிற உணர்வைக் குறிப்பதாகும்.

    இனிப்பை உணர்ந்திராத ஒருவர் இனிப்பு எப்படி இருக்கும்? – என்று கேட்பார் என்றால் என்ன பதில் கூறமுடியும்? அவரிடம் ஒரு இனிப்பான பதார்த்தத்தைக்கொண்டு வந்து உண்டு பாருங்கள்… இதுதான் இனிப்பு எனச் சொல்லலாமே தவிர வேறெப்படி விளக்க முடியும்?

    அப்படி விளக்க முடியாத ஒன்றை விளக்க எத்தனிப்பதே இந்தக் கட்டுரைத்தொடரின் நோக்கம். ஆனால் – இது – பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுக்கான விடைகளைத் தரும் என்பதாலேயே இந்த முயற்சி.  இந்த முயற்சி பல்வேறு துறை சார்ந்தவர்களுக்குமான ஐயப்பாடுகளை நீக்கும் என்பதில் ஐயமில்லை.

    ஒருமுறை, ஒரு பெரிய தொழில் நிறுவனத்தின் கடைநிலை ஊழியர்களுக்கான ஊக்குவிப்புப் பயிலரங்கு நடத்திக் கொண்டிருந்தேன்.  ஒன்றரை மணி நேர வகுப்பின் இறுதியில் – பங்கேற்றவர்களின் கேள்விகளுகுப்  பதிலளிக்கும் முகமாக அரைமணிநேரம் உரையாடினேன்.  பங்கேற்றவர்களின் வயது 20 முதல் 30 வரை இருக்கும்.  ஏறத்தாழ எல்லோருமே குறைந்தது 10ஆம் வகுப்புப் படித்தவர்கள். பலரும் எழுந்து இந்த நிகழவு – இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததென்றும் தங்களுக்கு மிகுந்த ஊக்கம் தருவதாக இருந்ததகாவும் மனந்திறந்து சொன்னார்கள்.  அப்போது எழுந்த ஓர் இளைஞர் கேட்ட கேள்வி என்னை மட்டுமல்ல அங்கிருந்த அந்தத் தொழிலக உரிமையாளர் அவரது துணைவியார் மற்றும் பலரையும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.

    அவர் கேட்ட அப்படிப்பட்ட கேள்வியை – நீங்கள் வேறெங்கும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் – என்பது மட்டும் நிச்சயம்.

    சார்… சிந்திப்பது எப்படி? – என்பதுதான் அவரது கேள்வி. அந்த கணத்தில்தான் எனக்குள் தோன்றியது.  இவ்வளவு நேரமும் – அவர்கள் அத்தனை பேரின் சிந்தனையைத் தூண்டும் விதமாக  பல்வேறு கேள்விகள் கேட்டும், மேலும் பல யுக்திகளையம் கையாண்டு  நிகழ்த்திய பயிலரங்கின் விளைவு இதுதானா என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டாலும், அந்த இளைஞரின் நேர்மையையும், அத்தனை பேருக்கு முன்னால் எழுந்து நின்று இப்படி ஒரு கேள்வியை கேட்க முனைந்த துணிவையும் என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    அந்தப் பயிலரங்கம் முழுதும் நிகழ்ந்ததெல்லாம் சிந்தனைத் தூண்டல்களாகவே இருந்த போதிலும் சிந்திப்பது எப்படி? – என்றும் கேள்வி விடையளிக்கப்படாமல் தனியாகவே தொக்கி நின்றிருந்தபோதுதான் புரிந்தது; எப்படி – என்னும் கேள்வியின் அற்புதம்.

    நமது சித்தர்களுக்கும், மேற்கத்திய விஞ்ஞானிகளுக்கும் உள்ள வித்தியாசமும் இதுவாகவே தென்படுகிறது. நமது சித்தர்கள் மனித வாழ்வியலை ஒருவமாக அனுபவித்தும், அனுமானித்தும், மருத்தவம், ஆன்மீகம் வானவியல் – போன்ற பல்வேறு அறிவியல் துறைகளுக்கான விடைகளைப் பதிவு செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.  அவறைக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே அவற்றின் உள்ளார்ந்த பொருள் புரியும். எளிதில் எல்லோருக்கும் பிடிபட்டு விடாது. இதுதான் நமது சித்தர்களின் அணுகுமுறை. ஞானத்தால் உணர்ந்தவர்கள் எப்படி தேடிவந்து கண்டு கொள்வார்கள் என்பது அவர்களின் சித்தாந்தம்.

    ஆனால் மேற்கத்திய நிபுணர்களின் அணுகுமுறை இதற்கு நேர்மறையானது. அவர்கள் எதையுமே உடைத்து உடைத்து எளிமைப்படுத்தி – எடுத்துச் சொல்வதில் வல்லவர்கள்.  ஆகவேதான் அவர்களின் படைப்புகள் பெரும்பாலும் எப்படி எப்படி என்றே அழைத்து வாடிக்கையாளர்களை வசப்படுத்த முனைகின்றன.

    எனக்கு இந்த முறையில் இயற்கையாகவே நாட்டமில்லை.  ஏனெனில் எந்த ஒரு விஷயத்தையும் ஒவ்வொரு தனிமனிதனும் அவனவனுக்கென்ற தனித்தன்மையோடு அணுகி அதற்கான விடையை அல்லது தீர்வை அடைவதுவே உயரிய வழியாகவும் உகந்த வழியாகவும் இருக்க முடியும் என்பது எனது கருத்து.

    என்றாலும் இன்றைய நிலையில் பலரும் சில பல  கருத்துக்களைப் புரிந்து கொண்டாலும் அவற்றை எப்படி நடைமுறை சாத்திமாக்குவது என்பதில் பெரும் சிக்கல்களை சந்திக்கிறார்கள் என்பதை – பல்வேறு பயிலரங்குகளிலிருந்து நான் புரிந்து கொண்டேன்.

    ஆகவேதான் மனிதனின் எல்லாத் தேவைகளையுமே – அடைவதற்கென்று ஒரு  பொது வழி இருக்கக்கூடும்.  அவற்ற முறையாக எடுத்துரைக்க முடிந்தால் அதை அடிப்படையாகக்கொண்டு தனக்கு உகந்த ஒரு தனி வழியை, வாசகர் ஒவ்வொருவரும் வரையறுத்துக்கொள்ள முடியும் – என்கிற நம்பிக்கையில் இந்தத் தொடரை எழுத அனுபவம் கொண்டவர்கள் மட்டுமல்ல புத்திசாலிகளும் கூட நாம் ஒரு கோடுபோட்டால் அவர்கள் ரோடுபாட்டு விடுவார்கள் என்பது எனது நம்பிக்கை.

    அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்வியலுக்குத் தேவையான வர்த்தகம், தொழில் முனைதல், அரசியல், சமூகம், பொருளாதாரம் மற்றும் மேலாண்மை என – எந்த்த துறையினரும் முத்திரை பதிக்கத் தேவையான – சாத்தியக் கூறுகளை அலசி ஆராய இருக்கிறோம். இந்தத் தொடர் நிச்சயமாக உங்களின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் மேம்படுத்த உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பேருதவியாகவும், வாசிக்கவிருக்கும் வாசக அன்பர்களுக்கு சுவாரசியமாகவும் அமையும் – என்னும் உறுதி கூறுகிறேன்.  அது எப்படி என்பதைத்தான் வரும் மாதத்திலிருந்து வரிசையாக அறிந்து கொள்ளப் போகிறீர்களே…

    தொடரும்….

    படிப்பாளிகளை படைப்பாளிகளாக்குவோம்

    4. ஒளிர்தல் (Illumination)

    மனத்தை உடையவன் மனிதன், மற்ற உயிரினங்களிடமிருந்து மனிதனை பிரித்தறிவதும், சிறப்புப்படுத்துவதும் மனம் தான்,  மனம் உயிரையும், உடலையும் இணைத்து ஐம்பொறிகளுக்கும், ஐம்புலன்களுக்கும் ஆதராமாய் இருப்பது.  மனம் சிந்தனைகள் பிறந்தால் சமுதாயத்தில் மனிதன் நல்ல மனிதன் ஆகிறான்.  கெட்ட

    Continue Reading »

    பொன் மொழி அல்ல.. இது என் மொழி

    மனப்புரட்சி
    தொடர் முயற்சி
    இளமையில் புகழ்
    குவிக்கும்!

    Continue Reading »

    நிறுவனர் நினைவுகள்

    இல.செ.க. அவர்கள் இராசிபுரம் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய காலகட்டத்தில் மூத்த ஆசிரியர்களின் பாராட்டுதல்களை வெகுவாக பெற்றார்.

    இல.செ.க. வகுப்பு என்றாலே மாணவர்கள் ஆர்வம் மிகுதியால் அடுத்தப் பிரிவுவேளையும் இவரே பாடம் நடத்தமாட்டாரா என எண்ணி ஏங்குவார்களாம்.

    Continue Reading »

    சாதனை மங்கை சானியா மிர்சா

    சனவரியில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் மூன்றாவது சுற்றுவரை முன்னேறி சாதனை படைத்தார் ஆந்திரத்தின் அழகுமயில் ஹைதாரபாத் விராங்கனை சானியாய மிர்சா.

    ஆறுமுறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அள்ளிக் குவித்த அமெரிக்க வீராங்கனை செரினா

    Continue Reading »

    விதைக்குள் மரம்

    விதைக்குள் மரம்
    விதைக்குள் மலம்
    உறங்கிக்கொண்டு அல்ல
    உழைத்துக் கொண்டு

    Continue Reading »