October Month Articles  


Recent Comments


Current Issue

cover story
   contents   |   subscribe

Follow us on

 
தன்னம்பிக்கை மேடை

மகிழ்ச்சி – துக்கம் மனிதனுக்கு எங்கிருந்து வரும்?

எம். கோதை, ஒப்பிலிபாளையம்

இன்பம் – துன்பம் என்றஇரண்டு உணர்வுகளால் மனிதன் ஆளப்படுகிறான் என்று சொல்லலாம். மனிதன் ஆனந்தத்தைத் தேடுகின்றான்; துன்பத்தைத் தவிர்க்கிறான். நாம் அனைவருமே மகிழ்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கிறோம், வேதனைகள் நமக்கு வேண்டாம் என்கிறோம். ஆனால் வேதனைகளும், துன்பங்களும், துக்கங்களும், தோல்விகளும், ஏமாற்றங்களும் அடிக்கடி நம்மை சூழ்ந்து கொள்கின்றன. அவற்றை ஏற்க முடியாமல் சிலர் மனம் தளர்ந்து விடுகிறார்கள். ஆனால் ஒருசிலர் மட்டுமே இந்த துன்பத்தைக் கடந்தால் தான் இன்பமான வாழ்வை எட்டிப்பிடிக்க முடியும் என்று நம்புகிறார்கள்; முயன்று முன்னேறுகிறார்கள்.

ஒரு வகையில் பார்த்தால் இன்பங்களும், துன்பங்களும் மாறிமாறி வரும்போது தான் வாழ்க்கை சுவை உள்ளதாக இருக்கிறது. கடுமையான பசியை அனுபவிப்பவனுக்குத் தானே விருந்தில் கிடைத்த உணவின் அருமை புரியும். சைக்கிள் கூட வாங்க வழியில்லாதவனுக்குத் தானே மோட்டார் சைக்கிளின் அருமை புரியும். வாடகை வீட்டில் குடியிருக்கும் இளைஞனுக்குத் தானே சொந்த வீடு கட்டிய பிறகு அதில் குடியேறிய அருமை புரியும். ஆக, ஒரு துன்பம் வரும்போது அதை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு பிரச்சனைகளைச் சமாளித்தால் தான் வாழ்ந்துகாட்ட முடியும், வாழ்க்கையில் சரியான அணுகுமுறைகளையும், கோட்பாடுகளையும் புரிந்து கொள்ள முடியும், அனுபவசாலியாகவும் முடியும்.


Read more..


தன்னம்பிக்கை மேடை

குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கலாமா?

சுஜாதா, திருச்சி

குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு கலை மட்டும் அல்ல அது ஒரு விஞ்ஞானமும் கூட. அந்த விஞ்ஞான உண்மைகளை குழந்தை மனோதத்துவ மருத்துவர்கள் (Child Psychologist) புத்தங்களாகத் தந்துள்ளனர். ஆனால் அவற்றைஎல்லாம் படிக்க பெற்றோருக்கு மனதில்லை, நேரமும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்த வரை, அவர்கள் எப்படி வளர்ந்தார்கள் என்பதை வைத்து குழந்தைகளையும் வளர்க்க முற்படுகிறார்கள். எந்த விஞ்ஞான கல்வியும் இல்லாத பல போலி மருந்துவர்கள் தொலைக் காட்சிகளில் பேசுவதும், சிகிச்சை அளிப்பதும் இன்று கண்கூடாக பார்க்க முடிகிறது.

அந்தக் காலங்களில் 8 அல்லது 10 குழந்தைகளை வைத்து ஒரு தாயார் அவதிப்பட்டபோது குழந்தைகளை அடித்து துன்புறுத்தி பணியவைத்தார். “அடியாமாடு படியாது” என்பதும் “முருங்கையை ஒடிச்சுவளர்க்கணும்; பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்” என்பதும் ஊரறிந்த பழமொழி. ஆக குழந்தைகளைத் துன்புறுத்தி கட்டுப்பாடு பண்ணுவது தான் நம் நாட்டின் வழிமுறையாக இருந்திருக்கிறது. ஆனால் விஞ்ஞான உண்மைகள் அடிப்படையில் இந்த அநாகரிகமுறை கைவிடப்பட்டிருக்கிறது. நவீன உலகில் குழந்தைகள் சித்திரவதை செய்ய வேண்டியதில்லை, பேசிப் புரிய வைத்து விரும்பத்தக்க நடைமுறையை ஏற்படுத்திவிடலாம் என்று வந்திருக்கிறது. இன்று குழந்தைகளை அடிப்பதும் குற்றமாகிவிட்டது; இருப்பினும் அது ஒரு புறம் இருக்கட்டும்.


Read more..


தோல்வியே வெற்றி

கலகமில்லா உலகமில்லை
ரத்தமில்லா யுத்தமில்லை
தோல்வியில்லா வெற்றியில்லை


Read more..


தேய்ந்து வரும் மனிதநேயம்

மணிக்கு மணி மனித நேயம் மக்கிக்கொண்டு
வரும் இந்த தேசத்தில் எனக்கு வாழப்பிடிக்கவில்லை


Read more..


தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 முறைகள்

தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட்டாலும் கீழ்கண்ட எளிய முறைகளை நாம் பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்ட முடியும்.


Read more..


தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம்

தீரன் சின்னமலையின் முன்னோர்கள்:

கொங்கு வேளாளர் சமுதாயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குலத்தார் உள்ளனர். அதில் பயிரகுலமும் ஒன்று. கொங்கு வேளாளர் மரபில் பயிர குலத்தில் பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார் வழியில் தோன்றியவர் சின்னமலை.


Read more..


புதிய விடியல் -சிகரம் அருகில்

மனதில் ஆற்றலை
வைத்துக் கொண்டு
வறுமைத் தீக்குள்
வாடுவதா நீ !


Read more..


முன்னேற்றத்துக்கு மூன்று சொற்கள் -ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்

இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை, வேதனைகளும் சோதனைகளும் நிறைந்தது. ஆயினும் முன்னேற விரும்புகின்றவர்களுக்கு அவர் வாழ்க்கை ஒரு அருமையான பாடமாகும்.


Read more..


கர்ப்ப கால பராமரிப்பு முறைகள்-சிசு பராமரிப்பு

குழந்தை பிறப்பு ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தோஷத்தைத் தரும் நல்ல நிகழ்வு. ஒவ்வொரு தாயும் குழந்தை பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.


Read more..


எடை குறைப்பு -ஒல்லியும் குண்டும்

என் இனிய நண்பர்களே!, ஒல்லி உடம்பு காரர்களுக்கும், குண்டு உடம்பு காரர்களுக்கும் இரு வேறு பிரச்சனைகள். ஒல்லிக்காரருக்கு குண்டாக வேண்டும், குண்டுகாரருக்கு ஒல்லியாக வேண்டும். இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு மிகவும் சுலபமானது.


Read more..


 

Advertisement

Thannambikkai Magzter

Thannambikkai Kindle books