Home » Articles » மாமரத்தில் கொய்யாப்பழம் – 7

 
மாமரத்தில் கொய்யாப்பழம் – 7


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

ஒரு நாளில் பல சமயங்களில் ச்சே என்ன வாழ்க்கை என்ற சலிப்பு தோன்றும். இம்மாதிரி தோன்றாவிட்டால் அது வாழ்க்கையே அல்ல.

என்னவிதை போடுகிறோமோ அது தான் முளைக்கும்.

பொதுவாக இன்று-

குழந்தைகள்  மனதில் பெற்றோர்கள் விதைப்பது

மாணவர்கள் மனதில் ஆசிரியர்கள் விதைப்பது

வாசகர்கள் மனதில் புத்தகங்கள் விதைப்பது

பார்வையாளர்கள் மனதில் காட்சிகள் விதைப்பது

உபயோகிப்பாளர்கள் மனதில் செல்போன்கள் விதைப்பது

எதுவோ அவை தான் வளரும் வளர்கிறது.

ஆனால், குழந்தைப் பருவம் முடிந்த பின் மாணவப் பருவத்திலும் பின் வாலிபப் பருவத்திலும் வேறு மாதிரி எதிர் பார்க்கின்ற மனநிலையில் தான் விதைத்தவர்கள் இருக்கிறார்கள்.

இதைத்தான் மாமரத்தில் கொய்யாப்பழம் என்றேன். குழந்தைகளுக்கு பெற்றோரும்; மாணவர்களுக்கு ஆசிரியர்களும்; வாலிபர்களுக்கு சமுதாயமும் அல்லவா நல்ல முன் உதாரணமாக இருக்க வேண்டும்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல் ( குறள்-664)

திருவள்ளுவர் இக்குறளை வினைத்திட்பம் என்ற அதிகாரத்தில் வைத்துள்ளார். அதாவது ஒரு செயலைச் செய்து முடிப்பதற்கான உறுதி என்பதே வினைத்திட்பம்.

திட்டமிட்ட வாழ்க்கை தெவிட்டாத இன்பம். இதைப் பலர் தெரிந்திருப்பீர்கள்.  சாதாரணமாக ஒரு விளையாட்டுக்குக் கூட பல கட்டுபாடுகள், விதிகள் எனக் கடைப் பிடிக்கிறோம்.

வீடு கட்டுவதற்கு மதிப்பீடு எனும் எஸ்டிமேட், வரைபடம்  எனப்பலவும் தயாரித்து, அதன் பின்பே செயல் படுகிறோம்.

ஆனால், பெற்றோராவதற்கு முன் எத்தனை பேர்திட்டமிட்டு செயல்படுகின்றனர். இன்று கரு உருவானதே பல தாயார்களுக்கு டாக்டர்கள் சொல்லித் தெரிய வேண்டிய நிலையில் உள்ளது.

குழந்தை உருவாக்கம் என்பது பெரும்பாலும் விபத்தாகவே (அவர்கள் அறியாமலேயே) அமைகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

ஒவ்வொரு மணியையும் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு  மாதத்தையும் திட்டமிடத் தொடங்கி விட்டால், மாமரத்தில் மாம்பழங்கள் மட்டுமே காய்க்கும்.

கொய்யாப்பழத்தை எதிர்பார்க்க வேண்டியதில்லை. அடிப்படையாக அவசியமாக எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது.

ஒன்றே ஒன்று தான். அது அவரவர் வாழ்வின் சிற்பி அவர்களே. எல்லா லட்சணங்களும் பொருந்திய கல், ஒரு சுத்தியல், ஓர் உளி இவை மூன்றும் உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன.

உளியையும் சுத்தியலையும் உபயோகித்து கையிலுள்ள கல்லை எப்படிச் செதுக்குகிறீர்கள் என்பது தான் வாழ்க்கை.

நான் மனதுக்குள் தானே நினைத்தேன். நினைத்ததை அப்படியே சொல்கிறார்களே என்ன இது ஆச்சரியம் என வியப்பதில் பயனில்லை.

நாம் வாழும் உலகம் அசைந்து கொண்டிருப்பது; இன்னும் சொன்னால் சூரியனைச் சுற்றி வெகு வேகமாக, அதாவது ஒருநாளுக்கு சுமார் பதினைந்திரை மைல் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த அசைவிருக்கும் வரை ஆசைகளும் இருக்கும், ஆசைகளைச் சீரமைத்துக் கொண்டால் நம் வாழ்க்கை நம் கையில் இருக்கும்.

விழிப்பு நிலை தவறி, தன்நிலை மறந்து, மற்றவர்களுடன் ஒப்பிட்டு வாழ்ந்தால், வாழ்க்கை இனிக்காது.

இந்தப் பிரபஞ்சமானது சுழன்று கொண்டே இருக்கிறது. அதனால் அலைகள் உருவாகி, கரைந்து கொண்டே இருக்கிறது. இதை காந்தம் என்று சொல்கிறோம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2019

பயணமும் உடையும்
டெக் குவாண்டோ
மழையில் மூழ்கிய மாநகரம்..
ஆசையும் இயக்கமும்
பழிக்குப்பழி பயனற்றது
அதிவிரைவு செயல்திறன் குறைபாடு
தடம் பதித்த மாமனிதர்கள்
நில்! கவனி !! புறப்படு !!! – 6
அறிஞர்களின் அறிவுரைகள்
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 11
பாலியல் வன்கொடுமை… போராடாமல் விடிவில்லை…
மாமரத்தில் கொய்யாப்பழம் – 7
தூண்டுகோள்
ஷூ மந்திரகாளி
வெற்றி உங்கள் கையில்-68
அனைத்தும் ஆனந்தமாகட்டும் அகிலமெங்கும் உன் பெயர் சிறக்கட்டும்…!
சின்னஞ்சிறு சிந்தனைகள்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்