Home » Articles » ஷூ மந்திரகாளி

 
ஷூ மந்திரகாளி


அனந்தகுமார் இரா
Author:

இன்றைய நாள் காலை…

அதிகாலையில் அன்றைய உடற்பயிற்சியை தொடங்குவதற்காக ஷூக்களையும்… சாக்ஸ்களையும் (தேடிப்பிடித்து, வாசம் பார்த்து) தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தேன்…  ஷூக்கள் குறித்து சில நாட்கள் முன்பு நண்பர் சத்யா சொன்னது நிழலாடியது…  Fore shadowing குறித்து மார்க்வெஸ் புத்தகம் சொன்னதும் ஞாபகம் வந்தது…  ஷூ மந்திரகாளி என்று ஒரு கட்டுரை பிறந்தது!

இந்தத்தலைப்பில் ‘ஷூ மந்தர்’ என்று நண்பர் டாக்டர் விஜய் பிங்களே சென்னை மராத்தி மகாசபாவில் ஒரு மராத்திய நாடகம் போட்டிருந்தார்  பல வருடங்கள் முன்பு…  மந்திரங்கள் சுவாரஸ்யமானவைதான்…  வாருங்கள் படிப்போம்…

சமீபத்தில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இந்திய ஆட்சிப்பணி தேர்வு தயாரிப்பிற்கான போட்டியாளர் ஒருமுகப்படுத்தும் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.  கடந்த 11.11.2017 அன்று நடைபெற்ற நிகழ்வு. இணையத்தில் யு ட்யூப்’ மூலம் வெளியிடப்பட்டு சுமார் 2700 முறை பார்க்கப்பட்ட நிகழ்வாக இன்றளவில் இருக்கிறது. ஆட, Sugar எதுவும் இல்லை என்றாலும் இன்றளவில் ‘யு ட்யூபில்’ எவ்வளவு views இருக்கின்றது? என்று பார்க்கின்ற வியாதி வந்துவிட்டதோ? என்று ஐயப்படும் அளவு அந்த பதிவேற்றத்தை அடிக்கடி மீண்டும் மீண்டும் பார்த்த பின்பு இந்தக் கட்டுரையை எழுதுவதன் மூலம் இனிமேல் எவ்வளவு ‘லைக்’ ‘வியு’ (Like & View) உள்ளது என்று பார்க்க கூடாது என்கின்ற மன உறுதியை வரவழைத்துக் கொள்ள உள்ளோம்.இணையதளம் வாழ்வில் இணைந்துவிட்ட ஒன்றாக மாறிக்கொண்டு இருப்பதை காணலாம்.  இன்டர்நெட் ‘விரதம்’ அத்தியாவசியம் ஆக மாறிக்கொண்டு இருக்கின்றது.  படிக்கின்ற மாணவர்களுக்கு ‘வாட்ஸ் அப்’ எதற்கு? என்கின்ற பதிவிற்கு எண்பதாயிரம் ‘வியு’ வந்ததாகப் பார்த்தோம்.  இதைத்தான் ஐரனி என்கிறோம்.

சமீபத்தில் ‘Irresistable: why we can’t stop checking, scrolling, clicking and watching: By Adam Alter’ என்ற புத்தகம் குறித்து நண்பர் செந்தில்ராஜ் பேசினார். இணையதளம் எப்படி குறைக்கப்படவும், நெருப்பைப் போல தேவையான அளவு மட்டுமே பயன்படுத்தப்படவும் வேண்டும் என்றும் கூறினார்.  கூகுள் ஒரு அறிவுச் சுரங்கம் என்பதில் ஐயம் எதுவும் இல்லை ஆனால் அது அளவாகவும் முறையாகவும் பயன்படுத்தப்பட வேண்டும் ஃபேஸ் புக்கில் முகம்பார்த்து, வாட்ஸ் அப்போடு பல் துலக்கி, ட்விட்டரோடு உணவருந்தி, இன்ஸ்டாகிராமோடு உறங்கப்போகும் சில இளைய தலைமுறையினர் ‘புளூ வேலோடு’ வாழ்க்கையை மூழ்கடிக்க முயல்கின்ற அபாயங்கள் குறித்து அறிந்து கொள்வராக!

நாம் அண்ணா நூலகத்திற்கு மீள செல்வோம்.  மலர்மன்னன் என்றொரு மாணவர் ஐயம் கேட்டார். ஒருமுகப் படுத்துதல் கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடந்தது.  பலமுகங்கள் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. இராமகிருஷ்ணன் என்றோரு புதுமுகம் ஐயம் கேட்டார். அவர் சி.ஏ படித்திருப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் பயனுள்ள வகையில் கழிக்க எண்ணி கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருப்பதாகவும் தகவல் தெரிவித்தார். மொத்தம் சுமார் இருபத்தியிரண்டு பேர்  சந்தேகங்கள் கேட்டனர்.  சில பல உரையாடல்கள் இடையே நிகழ்ந்தன.

“எட்டு வருடங்களாக 1995 முதல் 2003 வரை ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்கின்ற நம்பிக்கை நாற்றை தளரவிடாமல் எப்படீங்க காப்பாத்துனீங்க!  நானும் படிக்கலாம்னு நினைக்கிறேன். அப்பப்போ கொஞ்ச நாள் கழித்து அந்த ‘சூடு’ ‘கொறைஞ்சி’ போயிடுது. நீங்க ‘அவ்ளோ’ நாள் எப்படீங்க நெருப்ப அணையாம பார்த்துக்கிட்டீங்க?” என்று மலர்மன்னன் கேட்டார்… “பெயர்… மலர் போல மென்மையாக இருந்தாலும், உங்களுக்குள்ள இப்படி ஒரு ‘எரிமலை’ பொங்கிக்கொண்டு இருக்கிறதே…  என்று பதில் சொல்ல தொடங்கினோம்”  நம்பிக்கை நாற்றை தளரவிடாமல் காப்பாற்றுவதற்கு நண்பர்களும் சூழ்நிலையும் தான் உயிர் நீர் ஆவார்கள்.  அதற்கான இன்ஸ்பிரேஷனை நமது சூழ்நிலையில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பேசினோம்.  “வெற்றி நிச்சயம்” என்னும் ‘அண்ணாமலை’ திரைப்படப் பாடல் அந்தக் காலத்திலும், ‘ஒருதுளி மழையினில்’ என்று தொடங்கும் ‘ஈட்டி’ திரைப்படப்பாடல் இந்தக்காலத்திலும் எவ்வாறு ‘மோட்டிவேஷன்’ மருந்தாக பயன்பட்டது, படுகின்றது என்று தெளிவாக! (நாம் நினைக்கின்றோம்) பேசப்பட்டது.

சமீபத்தில் நூலகத்தில் நாள்தோறும் செய்யத்தக்க எண்ணச் சுத்திகரிப்பு சுவாசக் காற்றை சேகரிக்கச் சென்றிருந்த பொழுது வரலாற்று அடுக்கில் தடுக்கி நின்ற சமயம் ‘அக்பர்’ குறித்து சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது.  ‘அக்பர்’, ஆப்கானிஸ்தான் பாலைவனங்களில் ஹøமாயூன்… அலைக் கழிக்கப்பட்ட சமயம் பிறந்தவராம்.  எழுதப்படிக்க கால அவகாசம் இல்லாமல் கவலைகள் புடைசூழ வளர்ந்தவராம்.  இளம் வயதில் வேறு போட்டியாளர் இல்லாததால் அரியாசனத்தில் அமர்ந்தவராம்.  இப்படி…  இளமை தன்னிடத்தில் வைத்த சவால்களை வெற்றிகரமாக சமாளித்ததால்தான்… திறமை அவருக்குள் புடம் போட்ட தங்கம்போல் பரிமளிக்கத் தொடங்கியிருக்கின்றது.  தாங்கள் இந்த வரிகளைப் படித்து உணர்ந்து அனுபவிப்பதுபோலும், எழுத்தாளர் நான்கு மணிக்கு எழுந்து எழுதி மகிழ்வது போலும்…  படிக்கவும் எழுதவும் தெரியாத பேரரசர் அவர்.  (பொறாமையாக இருந்தால் நாம் பொறுப்பல்ல) அவர் கற்றறிந்தோர் படித்துச் சொல்ல பாடம் கேட்டே உணர்ந்து கொண்டு இரசிப்பாராம்.  மிக அதிக நூல்களை அரண்மனை நூலகத்தில் சேகரித்தும்… புலவர்களை ஆதரித்தும் தீர்க்கமான நுண்ணறிவோடு வாழ்ந்தவர் என்பது வரலாறு பதிய வைத்திருக்கின்ற ஆச்சரியமான உண்மை.  இவ்வளவு முறை மொகலாயர் வரலாற்றை படித்தும் (வந்தார்கள் – வென்றார்கள்  மதன் – சாருடையதை மீண்டும் ஒருமுறை எடுத்துப் படிக்க வேண்டும்) அக்பருடைய இந்தமுகத்தை இழந்திருந்தோம்! என்று நம்மில் பலருக்கு தோன்றுவதுபோல… அன்றும் இன்றும் தோன்றுகின்றது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2019

பயணமும் உடையும்
டெக் குவாண்டோ
மழையில் மூழ்கிய மாநகரம்..
ஆசையும் இயக்கமும்
பழிக்குப்பழி பயனற்றது
அதிவிரைவு செயல்திறன் குறைபாடு
தடம் பதித்த மாமனிதர்கள்
நில்! கவனி !! புறப்படு !!! – 6
அறிஞர்களின் அறிவுரைகள்
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 11
பாலியல் வன்கொடுமை… போராடாமல் விடிவில்லை…
மாமரத்தில் கொய்யாப்பழம் – 7
தூண்டுகோள்
ஷூ மந்திரகாளி
வெற்றி உங்கள் கையில்-68
அனைத்தும் ஆனந்தமாகட்டும் அகிலமெங்கும் உன் பெயர் சிறக்கட்டும்…!
சின்னஞ்சிறு சிந்தனைகள்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்