Home » Articles » குழந்தைகளுக்கான கண் சிகிச்சை

 
குழந்தைகளுக்கான கண் சிகிச்சை


இராஜேந்திரன் க
Author:

தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சி யாகவும் இருக்கிறார்களா? என்பதை உறுதி செய்து கொள்வதே பெற்றோருக்கு முழு நேர வேலையாக இருக்கிறது. பெற்றோர்கள் தமது குழந்தைகளை வெற்று உடம்புடன் எந்தப் பாதுகாப்பும்  இல்லாமல் வெயிலில் திரிய அனுமதிப்பது இல்லை.

ஆனால் “கண்” என்று வரும் போது மட்டும் அவர்கள் கோட்டை விட்டு விடுகிறார்கள். குழந்தைகளின் கண்களுக்குப் பாதுகாப்பு அவசியம் என்பதை அவர்கள் ஏனோ உணர்வதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே குழந்தைகளின் கண்களைப் புற ஊதாக்கதிரியக்கம் (UV rays) பாதிக்கும் என்ற உண்மை தெரிந்திருக்கிறது.

குழந்தைகள் வீட்டுக்கு வெளியே நிறைய நேரத்தைச் செலவழிக்கிறார்கள். அவர்கள் கண்கள் தொடர்ந்து புற ஊதாக்கதிர்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம், பெரியோரை விட மூன்று மடங்கு அதிக கதிர்வீச்சில் 80 சதவீதம் கதிர் வீச்சை அவர்கள் 18 வயதுக்கு முன்ன தாகவே சந்தித்து விடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சூரிய ஓளியில் அதிகமாகத் திரிவதால், குழந்தைகளுக்கு கண்புரை, மாகுலர் டிஜெனரேசன் (Macular degeneration) ஆகிய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. உலகம் முழுவதும் ஓர் ஆண்டுக்கு கண்புரையால் பார்வை இழப்போர் 1.6 கோடி என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. (இதில் 20 சதவீதம் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் ஏற்படுபவை)

கண்களைக் கூசச் செய்யும் பிரகாசமான ஓளி பார்வையைப் பாதிக்கும், கண்களில் அசதி, அசவுகரியம் ஆகியவை ஏற்படும். ஒரு குழந்தையின் பார்வை சிறப்பாக அமைய, இந்த கண்களைக் கூசும் பிரகாசமான ஓளியில் இருந்து காப்பது அவசியம். அப்போது தான் தினசரி வேலைகளை வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் சிறப்பாகச் செய்ய முடியும்.

பிரகாசமான ஓளி வகைகளையும், அதில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் இங்கே பார்க்கலாம்.

கண்ணைக் கூசச் செய்யும் ஒளி வகையில் சிதறடிக்கும் ஓளிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த வகையானது கண்ணின் லென்சில் பிரதிபலிக்கிறது. கணினியைப் பயன்படுத்தும்போது லென்சுக்கு முன், பின் பிரதிபலிக்கும் ஓளி கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதில் லென்சின் வெளிப்பரப்பில் வெளிச்சம் பிரதிபலிப்பது மங்கலான பார்வைக்கு வழி வகுத்துவிடும். இரவில் “ஹெட்லைட்” அல்லது தெரு விளக்குகள் மூலம் கண்ணின் லென்சுக்குள்ளேயே இரட்டை பிரதிபலிப்பு ஏற்படக்கூடும். இந்த பாதிப்பில் பார்க்கும் பொருட்கள் இரண்டாகத் தெரியும்.

அனுதினமும் பிரகாசமான வெளிச்சத்தை கண்கள் சந்திக்கும் போது அது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்து விடுகிறது. பைக்கில் செல்லும் போது, பள்ளியில் விளையாடும் போது, விளையாடு வதைக் கவனிக்கும் போது மிகவும் வெளிச்சமான சூழலைக் கண்கள் எதிர்கொள்ள வேண்டியதாகிறது. இதனால் கண்கள் அதை இயல்பாக ஏற்றுக் கொள்ளாத நிலைக்குள்ளாகிறது.

மதிய வேளையில் பள்ளிக்கு குழந்தைகள் வீட்டுக்கு நடந்து வரும்போது, உச்சியில் இருக்கும் சூரியனின் கடுமையான வெப்பக் கதிர்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும்.

கடற்கரை அல்லது குளத்தில் விளையாடுதல், பனியில் விளையாடுதல் போன்ற சூழ்நிலையில் கண்களைக் கூச வைக்கும் அளவுக்கு ஓளியின் ஆக்கிரமிப்பு ஊடுருவுகிறது. இந்த நிலை முடிவில் கண்ணில் பார்வையிழப்பு என்ற விபரீத நிலையில் கொண்டு விட்டு விடும்.

வெளிச்சம் மூலம் நேரும் பாதிப்புக்கேற்ற விதத்தில் அதற்கான லென்ஸ்கள் அணிந்து கண்களைப் பாதுகாத்துக் கொள்ள முன் வர வேண்டும். பாலிகார்பனேட் கொண்டு தயாரிக்கப்படும் போட்டோ குரோமிக் லென்ஸ்கள் (PhotoChromic Lens) குழந்தைகளுக்கு ஏற்றவை. இவை எடை குறைவானது. எந்த பிரேமுக்கும் இதைப் பொருத்த முடியும். புற ஊதாக் கதிர்களின் அளவுக்கு ஏற்ப போட்டோ குரோமிக் லென்ஸ் சாதாரணக் கண்ணாடியாகவும், குளிர் கண்ணாடியாகவும் தம்மை மாற்றிக் கொண்டு சிறப்பாகச் செயல்படும். மிக மிக இருட்டான பகுதிக்குப் போகும் போது சாதாரண கண்ணாடியாகவும், கண்ணைக் கூசும் பிரகாசமான ஓளியில் குளிர் கண்ணாடியாகவும் மாறி, ஒளியின் பாதிப்பைக் குறைத்துத் தெளிவாகப் பார்க்க இவ்வகை போட்டோ குரோமிக லென்ஸ்கள் உதவுகின்றன.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment