Home » Articles » தடம் பதித்த மாமனிதர்கள் – 5

 
தடம் பதித்த மாமனிதர்கள் – 5


கிரிஜா இராசாராம்
Author:

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு என்பர். இவற்றில் ஓவியக்கலையும்  ஒன்று. கவிஞன் என்பவன் ஒரு மந்திரவாதி போன்றவன், தன் மந்திரக்கோலால் அவனுடைய கவிதைகளை வாசிப்பவர்கள் மனதில் தான் சொல்ல வந்த விபரங்களை உருவாக்கி விடுவான். ஆனால் ஒரு ஒவியன் அவற்றை தன் தூரிகையால் ஓவியமாய் உருவாக்கி அவை என்றென்றும் அனைவரும் தன் கண்களால் பார்த்து உயிரோவியமாய் இருக்கும் படி செய்து விடுகின்றான். உலகின் மிகச்சிறந்த ஓவியர்களில் ஒருவர் ரவிவர்மா ஆவார்.

ரவிவர்மா அவர்கள் ஏப்ரல் மாதம் 29 ம் தேதி 1848 ம் ஆண்டு கேரளாவின், திருவாங்கூரில் கிளிமானூர் அரண்மனையில் பிறந்தார்.இவரது தந்தை நீலகண்ட பட்ட திரிபட், இவரது தாயார் உமாம்பா தம்புராம்டி ஆவார். இவர் சமஸ்கிருதம், மலையாளம் மொழிகளைக் கற்றதோடு, ஓவியம் வரைவதிலும்  அதிகம் நாட்டம் கொண்டார். அவர், அங்கிருந்த அரண்மனை சுவரில் கரித்துண்டு ஓவியம் வரைவதை கவனித்த அவருடைய ராஜா ராஜா வர்மா, அவரை திருவாங்கூர் அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் அழைத்துச் சென்றார் அவர்,ரவிவர்மாவிற்கு தண்ணீர் ஓவியம் கற்றுத் தந்தார். பின் 1868ல் ரவிவர்மா ஆங்கிலேய ஓவியர் தியோடா ஜென்சன் மூலம் எண்ணெய் ஓவியம் கற்றுக்கொண்டார். இவருக்கு ராஜா என்ற அடைமொழி அப்பொழுது அங்கு வைஷ்ராயாகவும், கவர்னர் ஜெனரலாக இருந்த ஆங்கிலேயர் அளித்த பட்டமாகும். அவர் தனது 18 ம் வயதில் 12 ம் வயது பாகீரதியை மணந்து கொண்டார். இவர் வழித் தோன்றியவர்கள் இன்றும் திருவாங்கூர் அரண்மனையில் வாழ்ந்து வருகின்றனர். மூன்றாம் பலராமவர்மா, மூன்றாம் மார்த்தாண்ட வர்மன், ஏழாம் ராம வர்மா ஆகியோர் ரவிவர்மாவின் வழித்தோன்றியவர்களே.

இவரது ஓவியத்தின் சிறப்பு என்னவென்றால், தம்முடைய பாரம்பரிய முறையுடன் ஐரோப்பிய ஓவியக்கலையையும் கலந்து உருவாக்கியதால் உலக அளவில் பாராட்டப்பட்டது. இவர் தென் இந்தியப் பெண்களை, இந்து மதத் தெய்வங்கள் வடிவில் ஓவியம் வரைந்தார். தன்னுடைய சகோதிரிகளையும் ஓவியமாக வரைந்துள்ளார். மும்பையில் வசித்த மகாராஷ்டிரப் பெண்களையும் ஓவியங்களாக வரைந்துள்ளார். இவர், மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்களில் உள்ள சில முக்கியமான ஓவியங்களாக வரைந்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். அவற்றில் குறிப்பிடத்தக்க ஓவியங்கள் முறையே

பெண் தன் நினைவுகளில் தொலைந்த ஓவியம்

தமயந்தி அன்னப்பட்சியுடன் உறவாடும் ஓவியம்

சகுந்தலாவிற்கு துஷ்யந்தன் கடிதம் எழுதும் ஓவியம்

யசோதா கண்ணனை அலங்காரம் செய்யும் ஓவியம்

கிருஷ்ணன் தூதுவனாகச் செல்லும் ஓவியம்

திரௌபதியின் அபயக்குரலில் மன்றத்தில் இருக்கும் ஓவியம் ஆகும். இவற்றின் மூலம் இவர் வீரஸருங்கலா என்ற பட்டத்தைப் பெற்றார். 1873 ல் சென்னையில் நமந்த ஓவியக்கண்காட்சியில் இவரது ஓவியம் முதல்பரிசைப் பெற்றது. 1873 ல் வியன்னாவில் நடந்த ஓவிய கண்காட்சியில் இவரது ஓவியம் சிறந்த ஓவியமாகக் கருதப்பட்டதால் இவரது புகழ் உலகமெங்கும் பரவும் படியானது.

கேரள அரசாங்கம் கலைகளில் சிறந்தவர்களை ஒவ்வொரு ஆண்டும் ராஜாரவிவர்மா புரஸ்காரம் என்று அவர் பெயரில் விருதை வழங்கி அவரை நினைவு கொள்கின்றது. மவேளிகராவில், ரவிவர்மா அவர்களின் பெயரில் கலைக்கூடம் உள்ளது. பலகலாச்சார அமைப்புகளும், பள்ளிகளும் இவரது பெயரில் இன்றும் இயங்கி வருகின்றது. இவரது 65 வது நினைவு நாள் அன்று இந்தியாவின் தபால் துறை இவருடைய உருவத்தையும் அவர் தீட்டிய தமயந்தியும் அன்னப்பறவையும் ஓவியத்தையும் தபால் தலையாக வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியது. 1904 ம் ஆண்டு வைஷ்ராய் ஹர்சன் ஆங்கிலேய பேரரசரின் பெயரில் கெய்சர் ஹிண்ட் தங்க பதக்கத்தை வழங்கிப் பெருமை படுத்தினார். வர்மா அவர்கள் அக்டோபர் 2, 1906 ல் தனது 58 வது வயதில் இயற்கை எய்தினார்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment