Home » Articles » ஏற்றுக்கொள்ளுதல்

 
ஏற்றுக்கொள்ளுதல்


சுவாமிநாதன்.தி
Author:

நமது வாழ்வில் ஏதோ ஒரு எதிர்பாராத சங்கடமான விஷயம் நடந்து விட்டது. அதை மனம் சகித்துக் கொள்ளாத போது, ஏற்க மறுக்கும் போது கோபம் ஏற்படுகிறது. ஏதோ ஒன்றை உங்களால் அடைய முடியவில்லை. மற்றவர் அடைந்து விட்டார். அவரை அங்கீகரிக்க மறுத்தால் அது பொறாமையாகி விடுகிறது. அவரது  வெற்றியை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போது உங்களுக்கு ஓரு உத்வேகம் பிறக்கிறது. அவரை முன்மாதிரியாக நினைத்து மறுபடியும் நீங்கள் முயற்சிக்கும் போது ஓரு நாள் நீங்கள் அந்த இலக்கை நிச்சயம் அடைவீர்கள். உங்களை ஒருவர் காயப்படுத்துகிறார். அதை நீங்கள் ஏற்க மறுக்கும் போது வெறுப்புணர்வு ஏற்படுகிறது. எதிர்மறைஉணர்வுகள் ஏற்படுகிறது. அதை சகித்துக் கொள்ளும்போது நேர்மறை உணர்வுகள் ஏற்படுகிறது.

நாம் விரும்பாத ஒன்று நடந்து விட்டது. அல்லது நடக்கப் போகிறது. அதை சகித்துக் கொள்ள, ஏற்க மறுக்கும் போது அங்கு கோபமும் கலகமும் ஏற்படுகிறது. நிலைமை மேலும், மோசமாகிறது.

சிலர் பனிச்சாரலில் மலைச்சிகரத்தில் ஏறுகிறார்கள். நிச்சயமற்றதன்மை நிறையவே உள்ளது. அதை “சாகசம்” என்கிறோம். இதுவே தயங்கினால் “பயம்” என்கிறோம். கஷ்டமான சூழ்நிலையை சகித்துக் கொண்டு கடப்பது மனஉறுதி. வலியும், எதிர்ப்பும் பெருகும் போது மிகுந்த துன்பம் அடைகிறோம். வலியை ஏற்றுக் கொள்ளும்போது, அதற்கு எதிராக போராடாத போது குறைந்த துன்பமே அடைகிறோம். மனம் விரும்பி ஏற்றுக்கொள்வது அல்ல. மாற்ற முடியாததை எதிர்த்து போராடுவதை விட அதை ஏற்றுக் கொள்ளுதல் சிறந்தது.

டி.வி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறார். அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறி அழும் காட்சிகளை காண்கிறோம். ரசிக்கிறோம்.

உங்களுக்கு என்ன நிகழ்ந்தாலும் நீங்கள் அதை உங்கள் இருப்பின் ஒரு பாகமாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஏற்றுக் கொள்ள பழகுங்கள் எல்லாமே இனிமையாய் மாறிவிடும். எதையும் புறந்தள்ளாதீர்கள்.

பெரிய விஷயம் சிறிய பொருளில் ஒத்துப் போகாததால் கெட்டுப் போவதுண்டு. சில நபர்களுக்கு பொதுவாக ஒரு வேலையை கெடுப்பதில் ஏக சந்தோஷம்.

வாழ்க்கை நம்மை சோதனை செய்யத் தவறுவதில்லை. பெற்றத் தாயை தெய்வமாக ஏற்றுக் கொள்ளுதல் நம்மை நிறைவாழ்வு பெறச் செய்கிறது. ஒருவன் தன் சகோதரர் சகோதரிகளின் தவறை மனமாற மன்னித்து ஏற்றுக் கொள்ளுதல் பிரிவைத் தடுக்கிறது.

மனிதன் வந்த சூழ்நிலையைப் பொறுத்து அவர்களுடைய எண்ணங்களும் வாழ்க்கை கண்ணோட்டமும் செயல்களும் அமைந்திருக்கின்றன. எனவே, மற்றவர்களை குற்றம் சாட்டும் கண்களுடன் பாராமல் அவர்களை புரிந்து கொள்ளுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். இவை உறவுகளுக்குள் பிளவு ஏற்படாமல் தடுக்கும்.

ஏற்றுக்கொள்ளுதல் என்பது அவர்களை சகித்து போதல் அல்ல. அவர்களை புரிந்துக் கொண்டு ஓதுங்கிப்போதல், மன்னித்துப் போதல் என்பதாகும். அவர்கள் மீது வெறுப்போ, பகைமையோ மனதில் கொள்ளாமல் இவர்கள் இப்படித்தான் என விட்டுப் பிடிப்பதாகும்.

நீங்கள் மாறவும் வளரவும் விரும்பினால், உங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உள்ளது உள்ளபடியே உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் துளிர்க்க முடியும். நீங்கள் வளர முடியும்;.

சமநிலையில் இல்லாதவர்களிடம்; தனக்கு ஏற்படும் தோல்வியை ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைக்கல்லாகும். ஏற்றுக்கொள்வது என்பது அதிக கடினமாகத் தோன்றுகிறது. சில சமயங்களில் சில நிமிடங்கள் காது கொடுத்து கேட்பதே போதுமானது. மற்றவரது பார்வைக் கோணத்திலிருந்து பார்க்க முயன்றாலே போதும். நீண்ட கால அடிப்படையில் இதுவே குறைந்த எதிர்ப்புகள் உள்ள பாதை. இதுவே ஆன்மீக ரீதியாக சரியானதும் கூட. பழிபோடுபவர்களிடம் எரிச்சலையும், சகிப்பற்றதன்மையையும் காட்டுவது குறுகிய கால அடிப்படையில் எளிதாக இருக்கலாம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2019

முடியும் வரை முயற்சி…! தினந்தோறும்  தரும்  மகிழ்ச்சி…!
சாதிப்பின் சங்கமம் சேரன் விளையாட்டுக் குழு
புறப்பட ஆயத்தமாகுங்கள்
பெண்ணிய உரிமைகள்
தடுப்பணை
உயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு
தடம் பதித்துச் சென்ற மாமனிதர்கள்- 4
குழந்தை வளர்ச்சி
நான் ஏன் வாயே திறப்பதில்லை?
நில்! கவனி !! புறப்படு !!!  4
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 9
நம்பிக்கை நாயகர்கள்
சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்க
ஏற்றுக்கொள்ளுதல்
மாமரத்தில் கொய்யாப்பழம் – 5
வெற்றி உங்கள் கையில் – 66
இன்பமயமான வாழ்வு
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்