Home » Articles » மாமரத்தில் கொய்யாப் பழம்

 
மாமரத்தில் கொய்யாப் பழம்


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

இனிய வாசகர்களே !

வாழ்க வளமுடன். உலகிலேயே இளைஞர் சக்தி அதிகமுள்ள நாடு நம் இந்திய நாடு. ஆனால் நம்மை விட இயற்கை வளங்களும் இளைஞர்  ஆற்றலும் குறைந்துள்ள பல சிறிய, பெரிய நாடுகளின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் நாம் பின்தங்கிய நிலையில் தான் உள்ளோம்.

காரணம்: உள்ளங்கை நெல்லிக்கனி தான். நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் பாலைவனச் சோலை போலாகி விட்டன.

மக்களும் சத்தியமே வெல்லும் என்ற தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் வார்த்தைகளை மறந்து குறுகிய ஆதாயத்துக்காக எதையும் செய்யும் மன நிலையில் வாழ்கின்றனர்.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற மந்திரச் சொல்லின் பிறப்பிடமே நம் நாடு என்ற வகையில் பல மொழிகள், கலாச்சாரங்கள், உணவுப்பழக்கங்கள், தட்ப வெட்ப நிலை என்றிருந்த போதும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் நம் முன்னோர்கள் வாழ்ந்தனர்.

நிர்வாக வசதிக்காக உலகின் மிகப்பெரும்பாலான நாடுகளில் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் எனப் பிரித்தே ஆட்சி நடைபெற்றாலும் அவர்களுக்குள்ள சிறப்பு ஒரே மொழி.

ஆனால், நமக்கு மொழிவாரி மாநிலங்கள் என்பதால், பிரச்னைகள் ஏராளம். இயற்கை வளம், வேலைவாய்ப்பு, வாழ்க்கை முறையும் கூட மாறுபடுகின்றன.

தொழிலுக்காக மாநிலம் விட்டு மாநிலம் குடிபெயர்தல் அதிகரித்து வருகிறது. முன்பு வசதி மிகுந்தோர் வியாபாரம் செய்வதற்காக வந்த நிலை இன்று மாறி, எல்லாவிதப் பணிகளையும் (கட்டுமானம் ஓட்டல் போன்றவை)  செய்வதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய லட்சக்கணக்கில் இளைஞர் படை குடிபெயரும் நிலையில் வாழ்ந்து வருகிறோம்.

முன்பு சொந்த இடத்தில் தங்கள் வாழ்க்கை முறை, வந்த இடத்தில் மக்களின் வாழ்க்கை முறை இரண்டுக்கும் இடைவெளி அதிகம், இன்று விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக மக்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது.

சுமார் 50 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையை இன்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அன்றிருந்த வெள்ளந்தி மனம், இன்றைய நம் இளைஞர் பெருமக்களிடம் இல்லை.

நேர்மை, நாணயம், உதவுதல் போன்ற நல்ல பண்புகள் இன்றைய குழந்தை வளர்ப்பில் விடுபட்டு விட்டன. காரணங்களில் மிக முக்கியமான ஒன்று T.V. எனப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்றால் அது மிகையாகாது.

இப்படி வளர்ந்த, வளரும் குழந்தைகள் இளைஞர்களான பின்னர், இங்கு நிலவும் புறச் சூழலால், முன்பே குறுகிய வட்டத்துக்குள் சிக்கிக் கொண்ட அகச்சூழலும் இணைந்து இயலாத, முடியாத ஒன்றை எதிர்பார்க்கும் மனநிலைக்குத் தள்ளி விட்டுள்ளது.

மாமரத்தில் இயற்கையாக என்ன காய்க்கும் என்றால், குழந்தைகளும் சொல்லும் மாங்காய் காய்க்கும் என்று.

ஆனால், விஞ்ஞான முன்னேற்றத்தால், கொய்யாச் செடியை ஒட்டு நாற்றாக்கி செயற்கை முறையில் மாமரத்தில் கொய்யாய்பழமும் காய்க்கும் என்ற காலக்கட்டத்தில் நாம் இன்று வாழ்ந்து வருகிறோம்.

சிங்கம்(Lion) புலி(Tiger) இரண்டின் கருவையும் செயற்கை முறையில் இணைத்து வளரச் செய்து புதிய மிருக இனமான(Liger) லைகர் என்ற உயிரினத்தை நம் அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

அந்த வகையில் இன்று குளோனிங் என்ற முறை, வீரிய ஒட்டு விதைகள், விதையின்றி கிடைக்கும் காய்கள், கனிகள் என விஞ்ஞானம் இயற்கையை சிதைத்து வருவதால் மனித மனங்களும் சிதைவுக்கு ஆளாகி விட்டது.

இன்று குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மனதில் மாமரத்தில் கொய்யாப் பழத்தை எதிர் பார்க்கும் எண்ணம் மேலோங்கியுள்ளது.

இது சாத்தியமா என்றால், இயற்கையில் சாத்தியமில்லை. இதன் அடிப்படையில் நாம் சிந்திப்போம்.

இப்படி எதிர்ப்பவர்களுக்குத் தெரியாதா எப்படி மா மரம் கொய்யாப் பழம் தரும் என்று? தெரியும். ஆனாலும் மாமரத்தின் கீழ் நின்று கொண்டு, அந்த மாமரத்தில் கொய்யாப்பழம் வேண்டுமென்றே நினைக்கின்றனர்.

காரணம் இன்றைய சமுதாயச் சூழல், இதை புறச்சூழல் என்றும் சொல்லலாம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் நம் முன்னோரின் முத்தான சொற்கள் இவை.

குறையுள்ளவனே மனிதன் என்றாலும், எங்கோ ஒரு சில இடங்களில் நடக்கும் குறைகளை கட்டம் கட்டி, தலைப்புச் செய்திகளாக்கி விலாவாரியாக பலரையும் விவாதிக்கச் செய்து மக்கள் மனதை மடைமாற்றும் செயலை மிகவும் கவனமாக ஆர்வமாகச் செய்து வரும் நாளிதழ்கள் உள்ளிட்ட பத்திரிகைகள், ஊடகங்கள் இவற்றால் கொய்யாப்பழ மனநிலை உருவாக்கப்பட்டு, உரமிட்டு வளர்க்கப்படுவது வேதனையாக உள்ளது.

இஸ்ரேல் போன்ற நாடுகளில் நல்ல செயல்கள், வெற்றிகள், நேர்மையான சாதனைகள் என தேடிப்பிடித்து பத்திரிகைகளும், ஊடகங்களும் செய்திகளாகத் தருகின்றன.

தொடரும்…

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment