Home » Articles » வீரத்தின் வெற்றி

 
வீரத்தின் வெற்றி


மெர்வின்
Author:

வாழ்க்கையில் நம்மை முன்னேற விடாமல் தடுக்கும் சக்திகளுக்கு அடி பணிந்து விடக் கூடாது. அதனை எதிர்த்து போராட வேண்டும்.

அப்பொழுது தான் வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்க முடியும். இந்தக் கருத்தை கவிஞர் இக்பால் தெளிவு பட விவரிக்கிறார்.

ஊர்க்குருவி போல மேட்டில் கூட்டைக்கட்டாதே. இராஜாளியைப் போல் மலைக்குப் போய் கூடுக்கட்டு.

சிங்கம் வாழும் அதே காட்டில் தானே மானும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறது. இரண்டாம் உலகப் போரில் டாங்க் படை எதிரிகளைத் தாக்கி விரட்டிக்  கொண்டிருந்தது.

அந்தப் படைக்குத் தலைமை ஏற்று இருந்தவர் ரோமல். இவர் சென்ற இடம் எல்லாம்  வெற்றி கொடியை நாட்டினார்.

இவருடைய வீரத்தைக் கண்டு வியப்பு அடையாதவர்களே இல்லை நிருபர்கள் ரோமலைக் காண வேண்டி போர்க்களம் சென்றனர்.

ஓர் உடைந்த டாங்கியைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.  அழுக்கு உடையை அணிந்திருந்தார்.

அவரிடமே சென்று ரோமலின் இருப்பிடத்தைக் கேட்டார்கள் அவர் தூசியைத் தட்டிவிட்டு அவர் இவ்வளவு நேரம் டாங்கின் அடியில் இருந்தார். இப்பொழுது உங்கள் முன் நிற்கிறார்கள் என்றார்.

நிருபர்கள் அவருடைய வெற்றியின் ரகசியத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் பார்த்துப் புரிந்து கொண்டார்கள்.

திலகரை மீண்டும் சிறையில் அடைக்க ஆங்கிலேயே அரசு முயற்சி செய்து வருவதாக தகவல் வந்தது. இதனைக் கேள்விடப்பட்டதும் பலரும் வியந்தனர்.

ஆனால் திலகர் பயப்படவில்லை.  நண்பர் ஒருவர் துயரம் நிறைந்த மனதுடன் தாங்கள் மீண்டும் சிறை செல்ல நேரிட்டால் நாங்கள் என்ன செய்வது என்று கேட்டார்.

தெளிந்த தடாகம் போன்ற சிந்தையுடன் இருந்த திலகர் சிரித்தபடியே கூறினார். அப்பொழுது தான் உண்மையிலேயே ஓய்வு கிடைக்கும். உங்களுக்கும் தீர்க்கமான முடிவுகாண வாய்ப்பு ஏற்படும்.

இதற்குப் போய் ஏன் பயப்படுகிறீர்கீர்களா? இம்முறை சிறைக்குப் போனால் அமைதியாக உட்கார்ந்து இதுவரை நான் செய்தவற்றைச் சீர்தூக்கிப் பார்க்க நேரம் கிடைக்கும்.

இனி மேல் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவும் எடுக்க முடியும் என்று துணிவுடன் கூறிய படியினால் தான் இன்றும் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

உறுதியுடன் இருந்தவர்கள் எல்லாம் வெற்றி பெற்று வாழ்வாங்கு வாழும் வரிசையில் நாமும் இடம் பெற வேண்டாடமா?

பக்தனின் வேடத்தில் வந்த ஒரு துரோகி, மாபெரும் சீக்கிய குரு கோவிந்த சிங்கை கத்தியால் குத்தி விட்டான்.

அடிப்பட்ட வேங்கையாக மாறிய குரு கோவிந்த சிங் மின்னல் வேகத்தில் அவன் மேல்பாய்ந்தார்.

தப்பி ஓடிக் கொண்டிருந்த கொலைக்காரனை ஓங்கிக் கத்தியால் குத்தினார். இது நடந்து நான்கு நாட்கள் ஆனதும் குரு கோவிந் சிங்கின் காயத்தில் இருந்து ரத்தம் கொட்டியது.

கடைசி காலம் நெருங்கி விட்டதை அறிந்த குரு கோவிந்த சிங் தன்னுடைய சீடர்களை எல்லாம் அருகில் அழைத்தார்.

சாவின் அருகில் நெருங்கி விட்டேன். பலமுறை இதை நேருக்கு நேர் சந்திருக்கிறேன். என்னைப் பின்பற்றுகின்ற நீங்கள் தைரியமாக இருங்கள்.

இப்பொழுது நான் மணமகனைப் போல் கம்பீரமாகப் பவனி வந்து மரண தேவனதடைய கரம் பற்றுப் போகிறேன். எனக்காக யாரும் கண்ணீர் விடக்கூடாது என்றார்.

சாகும் நேரத்தில் கூட கம்பீரமாகத்திகழ வேண்டும் என்று கற்பித்த குரு கோவிந்த சிங்கின் வீரம் போற்றத்தக்கது அல்லவா.

எதற்கும் பயப்படாமல் செயலாற்றும் பொழுது தான் உயர்வு பெற முடியும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2019

முடியும் என்று புறப்படு சரித்திரம் போற்றப் பெயரெடு
நினைப்பதே நடக்கும் – 3
வெற்றி உங்கள் கையில்- 62
வெற்றியை பாதையில் பயணம் செய்…!
மாறாத காலம்
உண்மை உன்னை உயர்த்தும்
வாஸ்து சாஸ்திரம்
பயணங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
வலிகள் நம்முடைய நண்பன்
ஆஸ்த்துமா
எல்லோரும் மதிக்கும் தலைவராக மாறுவது எப்படி?
முயற்சியை முதன்மைப்படுத்து
“வாழ நினைத்தால் வாழலாம்” – 25
மாமரத்தில் கொய்யாப் பழம்
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 5
‘அமைதி’ என்னும் மகாசக்தி
மந்திரப் புன்னகை
வீரத்தின் வெற்றி
தன்னம்பிக்கை மேடை நேயர் கேள்வி?
உள்ளத்தோடு உள்ளம்