![]() |
Author: சைலேந்திர பாபு செ
|
இளைஞர்களை நீங்கள் பெரிதும் விரும்புவதற்கான காரணங்கள் ஏன்? என்ன சொல்லுங்கள் ?
பவித்ரா, ஆய்வாளர், கோவை.
நீங்கள் ஏன் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்கிறீர்கள் என்று கேட்டார் ஒருவர். இளைஞர்களை வேறு எங்குதான் பார்க்க முடியும் என்று பதிலளித்தேன். அதே பதில் தான் உங்களுக்கும்; அற்புதமான மனிதர்களை வேறு எங்குதான் காண முடியும்?. கள்ளம் கபடமில்லாத, விருப்பு வெறுப்புகள் இல்லாத, சுயமாக சிந்திக்கும் மனிதர்கள் அவர்கள். அவர்களது மனம் ஒரு அப்பழுக்கற்ற வெள்ளை காகிதம். அதில் சில உயரிய தத்துவங்களை எழுத முடியும் என்பதால் அவர்களை சந்திக்கிறேன்.
பாதுகாப்பு :
குழந்தைகள் பலவீனமானவர்கள், அவர்களை அவர்களாகவே பாதுகாத்துக்கொள்ள முடியாது. எனவேதான் கயவர்கள் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தருகிறார்கள். பாலின விஷயங்கள் மறைக்கப்படுவதாலும், மறுக்கப்படுவதாலும், வெறுக்கப்படுவதாலும் அந்த இயற்கை உணர்வுகளால் உந்தப்பட்ட கயவர்கள் குழந்தைகளை தாக்குகிறார்கள். வேறுவிதமான துன்புறுத்துதல்களுக்கும் குழந்தைகள் உள்ளாகிறார்கள். பாதுகாப்பு குறைவான சூழ்நிலையில் அரசாங்கம் பாதுகாப்பாக இருக்கும் என்ற உண்மையை வலியுறுத்தவே குழந்தைகளை சந்திக்கிறேன். எனவேதான், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களை சந்திக்க நான் காவல்துறை சீருடையில் செல்கிறேன்.
பாசம்:
எனது தந்தையாரும், தாயாரும், சகோதரர்களும், சகோதரிகளும் என்னிடம் அன்பு காட்டினார்கள். வெளி உலகில் பாதுகாப்பு இல்லை என்றாலும் எனது வீட்டிற்குள் பாதுகாப்பு முழுமையாக இருந்தது. ஆசிரியர்கள் என்னை அளவுக்கு மீறி நேசித்தார்கள்;. நான் நன்கு படித்தேன் என்பதால் அந்த விஷேச உபசரிப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் அது எனக்கு நல்ல உணர்வையும், நம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தது. அந்த சலுகைகளை நான் இளைஞர்களுக்கு தர விரும்புகிறேன்.
நான் காவல்துறை சீருடை அணிந்து ஜிப்பில் வலம் வந்தபோது பிள்ளைகள் எனக்கு சலியூட் அடிப்பார்கள். நானும் பதிலுக்கு சலியூட் அடிப்பேன், அதைக்கண்டு அவர்களும் ஆரவாரம் செய்வார்கள். எனக்கு குழந்தைகள் என்றாலே பிடிக்கும்.
சந்திப்பு :
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளி ஒன்றில் சுதந்திர தின விழாவில் பேசினன். அந்தப் பேச்சைக்கேட்ட தனியார் பள்ளி தாளாளர் ஒருவர் இதே போல எங்கள் பள்ளியிலும் பேசுங்கள் என்றார். அன்று துடங்கி நான் சுமார் ஆறுலட்சம் மாணவர்களை இன்றுவரை சந்தித்துள்ளேன். நான் பேசுவதை மாணவர்கள் கவனமாக கேட்கிறார்கள், அவர்கள் சொல்வதை நானும் கவனமாக கேட்கிறேன். எங்களுக்குள் ஒரு வேதியல் உண்டு. மாணவர்களிடம் நடத்தும் இந்த உரையாடல் எனக்கு அதிக உற்சாகத்தைத் தருகிறது. மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு தினம்தினம் பெருகி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
கடிதம் :
ஆறுலட்சம் மாணவர்களை சந்தித்துத்துள்ளதாக குறிப்பிட்டேன். அதில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள், எனக்கு கடிதங்கள் எழுதியுள்ளனர். அவைகளைப் படித்து, கழதங்களை அப்படியே பராமரித்தும் வருகிறேன். எனக்கு இருக்கும் சொத்துக்களில் இந்தக் கடிதங்கள் விலைமதிப்பற்றவை.
இந்த இதழை மேலும்

Share

February 2019




















No comments
Be the first one to leave a comment.