Home » Articles » பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி

 
பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி


admin
Author:

ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டை ஒட்டி சித்திரை 1 முதல் பங்குனி 31 வரை பன்னிரெண்டு மாதங்களுக்கும் தினசரி பஞ்சாங்கம் வெளியிடப்படுகின்றது. திருக்கணித முறை, வாக்கிய பஞ்சாங்கங்கள் என இரண்டு முறையில் பஞ்சாங்கங்கள் அச்சிடப்படுகின்றன. இவைகளில் நட்சத்திரங்கள், திதி சில நாழிகைகள் வேறுபடும். பொதுவாக எல்லா பஞ்சாங்கங்களிலும் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆங்கிலம் தேதிகள் ,மாதங்கள், குறிப்பிட்டிருக்கும். வாரம், திதி, நட்சத்திரம்,யோகம்,கரணம் என ஐந்து அங்கங்களையும் தினசரி பார்த்து வருவது  படிப்பது ஆகும். இவை எவ்வளவு நாழிகை, மணி நிமிஷங்கள் என நட்சத்திர தியாஜ்யம் எவ்வளவு நாழிகை என குறிப்பிட்டிருக்கும். ஒவ்வொரு நாளிலும்  நேத்திரம், ஜீவன் விபரம் இருக்கும். அந்த நாளில் பார்வை, ஜீவன் இருந்தால் நல்லது என அறியலாம். அமிர்தாதி யோகம், ராசி இருப்பு, விவாக சக்கரம்,வார சூலை, யோகினி, திருக்கணித ஸ்ரார்த்த திதி,வாக்கிய சிரார்த்த திதி ஒவ்வொரு நாளுக்கும் குறிப்பிட்டு இருக்கும். அந்த நாளுக்கு வாரத்திற்கு உண்டான விரதாதி முக்கிய விஷேஷங்கள் குறிப்பிட்டிருக்கும். அந்த மாதத்திற்கு உண்டான ராசி சக்கரம், கோள்கள் நிலை, மாற்றம் ஆகும். ராசி தேதி விபரம் இருக்கும். எனவே ஒரு தேதி, நாளில்  தேவைபடும் விபரங்கள் ஒரே பக்கத்தில் இருக்கும். மாதம் தினம் வாரியாக ஒன்பது கோள்கள் இருக்கும் நட்சத்திரம் ஸ்புடம்,பாகை பரலுடன் இதை தொடரும்.

ஒவ்வொரு நாளுக்கும் உண்டான ராசி சக்கரம். கிரக நிலை, லக்கினம் முடிவு நேரம் ,மாத வாரியாக தெரிவித்து இருப்பார்கள். இதை வைத்து குழந்தை பிறந்த நேரத்தை கொண்டு, ஜனன லக்கினம் அல்லது திருமணம், கிரஹப்பிரவேசம் போன்ற விஷேஷங்களுக்கு லக்கினம் நாமே தெரிந்து கொள்ள இயலும். பல ஊர்களுக்கும் உள்ள லக்கினத்தை அறிய கூட்டல், கழித்தல் செய்ய உள்ள நிமிட விபரமும் அட்டவணையில் தரப்பட்டிருக்கும். நட்சத்திர விபரங்கள், செவ்வாய் தோஷம் விபரங்கள், பத்து வித திருமண பொருத்தங்களும் விரிவாக சொல்லி இருப்பார்கள். நமது நட்சத்திரம், அந்த தேதியில் நட்சத்திரம், அதற்கேற்ப வரும் தார பலன் அட்டவணை இருக்கும். 2,4,6,8,9, ல் தார பலம் வந்தால் நல்லது. கடன் கொடுக்க கூடாத,பயணம், அறுவை சிகிச்சை  செய்ய கூடாத நட்சத்திரங்கள். விபரமும் இருக்கும்.

ஒவ்வொரு நட்சத்திரம், திதி,லக்கினம் செய்யக்கூடிய சுப காரியம் இதர விஷயங்கள் பற்றிய அட்டவனை இருக்கும். 27 நட்சத்திரங்களில் செய்யக்கூடிய சுப காரியங்கள் விபரமும் தொகுத்து வழங்கி இருப்பர். இறந்தால் தோஷம் உள்ள நட்ச்த்திரங்கள், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, ரோகிணி, கிருத்திகை, உத்திரம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகும். அந்த நட்சத்திரங்களில் யாரேனும் இறந்தால்,குறிப்பிட்ட காலம் தனிஷ்டாபஞ்சமி ஆகும். இறந்தவர்கள் இருந்த வீடு அறை அல்லது உடைமைகள் குறிப்பிட்ட காலம் மூடி இருக்க வேண்டும்.

கோச்சார பலன்கள்  அறியும் விதம் கூறப்பட்டிருக்கும். ஒருவருடைய சாதகத்தில் சந்திரன் இருக்கும் ஜன்ம ராசியில் இருந்து கோச்சார கோள் இருக்கும் ராசி வரை எண்ணி கீழ்க்கண்டவாறு பலன் அறியலாம். சூரியன்-1. நோய்; 2. கவலை; 3. நன்மை; 4. விரோதம்; 5. நோய்; 6. பொருள் வரவு. ;7. அலைச்சல்; 8. சரீர பீடை; 9. அச்சம்; 10.11. சந்தோஷம். 12. விரயம். சந்திரன்-; 1.உடல் பலம் ;2.தன விரயம்; 3.திரவிய லாபம் ;4;வியாதி; 5.காரிய பங்கம்; 6.மகிழ்ச்சி; 7. சுகம்;8.  ரோகம்; 9.காரிய தாமதம் .10.சந்தோஷம் 11.காரிய வெற்றி. 12;தன விரயம்; செவ்வாய், சனி,ராகு,கேது; 1.மந்தம். 2.வியாதி; 3.தன லாபம்; 4.பந்து விரோதம் 5.பல சேதம்; 6.லக்ஷ்மி கடாட்சம்; 7.சிறை பயம், கலகம் 8.மரண பயம்; 9.காரிய நாசம்; 10.பயம், பண விரயம். 11.தன லாபம் 12.வியாதி-சிலவு. புதன்; 1.பயணம்; 2.நன்மை; 3.புத்தி குறைவு .4.பக்தி,சரீர பீடை.5.அவமானம், 6.திரவிய லாபம்.7. சுகம்ஸ்த்ரீ சேர்க்கை. 8.மரணபயம் 9.வஸ்திர லாபம் ;10.பயணம்,வீடு/பதவி மாற்றம். 11.பொன் சேர்க்கை 12.திரவிய நாசம்வியாதி குரு;1,மரண பயம்,பொருள் சேதம்; 2.பண வரவு;3.வியாதி,கஷ்டம். 4.சினேக விரதம்; 5.திரவிய லாபம். 6.துயரம். 7.ஸ்த்ரீ சங்கமம், சுகம் 8.மரண பயம்;9.வஸ்த்திர சம்பத்து ;10.இடப்பெயர்ச்சி ,பயணம். 11.பொன்/வஸ்த்திர லாபம்.12.வியாதி;திரவிய நாசம். சுக்கிரன்;1.தன லாபம்.2.லக்ஷ்மி கடாட்சம்.3.சௌக்கியம்.4,பந்து விஜயம். 5.திரவிய லாபம் ;6.மன கவலை,7.வியாதி.8.பிரியம்,உடல் சுகம் 9.திரவியம் வரவு .10.பொருல் அழிவு. 11.சுக போஜனம் 12.சுகம்.லாபம்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2019

சாதனை கண்டுபிடிப்பு…! சரித்திரத்தின் உயர்த்துடிப்பு…!
உண்மை உன்னை உயர்த்தும்
நீங்கள் வெளிப்படைத்தன்மை உடையவரா?
பசுமை பென்சில்
வெற்றி உங்கள் கையில்- 61
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 4
நினைப்பதே நடக்கும் (பாகம் – 2)
மந்திரப் புன்னகை!
தீர்மானித்தல் என்ற திறனின் மகிமை
தன்னம்பிக்கை மேடை
தகுதிகளை மேம்படுத்தித் தலைவராவது எப்படி?
சமயோசித புத்தி
பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி
நாளும் விதையுங்கள் நம்பிக்கையை
பல் பராமரிப்பு
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத்தொழிலாளர்கள்
சிந்திக்க வைக்கும் சீனா – 6
வின்னர்ஸ் அகாடமி மற்றும் அகம் அறக்கட்டளை
“வாழ நினைத்தால் வாழலாம்” – 24
பேச்சும் மூச்சும்
உள்ளத்தோடு உள்ளம்