Home » Articles » “வாழ நினைத்தால் வாழலாம்” – 24

 
“வாழ நினைத்தால் வாழலாம்” – 24


மித்ரன் ஸ்ரீராம்
Author:

வாக்குவாதம்

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

கடந்த கால புத்தாண்டு தீர்மானங்களை காதில் போட்டு கெட்டவர்களுக்கும், காலில் போட்டு மிதித்தவர்களுக்கும்கருத்தில் போட்டு ஜெயித்தவர்களுக்கும் இறைவன் அளித்திருக்கும் இன்னுமொரு சந்தர்பம் தான் 2019.  ஐயா அப்துல் கலாம் கண்ட கனவை நனவாக்க இன்றைய இளைஞர்களின் முன்னால் இருப்பது இன்னும் 365 நாட்கள் தான். வரலாறு உங்கள் அனைவரின் கனவையும், வெற்றியையும் வரவு வைக்கஎன் வாழ்த்துக்கள்.

பெரும்பாலும் புதுவருட தீர்மானங்கள் நல்ல ஒரு நகைச்சுவை உணர்வை தான் நமக்குள் தூண்டும்.  கேட்பவனை மட்டுமல்ல, எடுப்பவனையுமே ஏளனமாகவே எண்ணத் தோன்றும்.

இந்த வருடம் முதல் புகை பிடிக்கமாட்டேன், இந்த வருடம் முதல் மது அருந்த மாட்டேன், இந்த வருடம் முதல் தினமும் காலை நடை பயிற்சி போவேன்” – என்பன போன்ற தீர்மானங்கள் எல்லாம் நாகேஷை மிஞ்சும் நகைச்சுவை தானே?

நமக்கே நகைச்சுவையாக தோன்றுவதுமற்றவர் நம்மை சொல்லிக் காட்டும்போது மன சங்கடமாக மாறுகின்றது.  சங்கடங்கள் சண்டையாக மாறுவதும் சகஜமே!

சரி!  இந்தப் புத்தாண்டு முதல்சக மனிதர்களோடு சண்டையில்லாமல் ஜீவிப்பதுஎன்பதை தீர்மானமான ஒரு தீர்மானமாக எடுத்துவிடுங்கள்.

சம்பாஷனைகள் தான் சங்கடங்களாகதீர்க்கப்படாத நேரத்தில் சண்டைகளாக, மாறுகின்றது.  ஒருவர் சொல்லுகின்ற விஷயம்சொல்லப்படுகின்ற அர்த்தத்திலேயே அறிந்து கொள்ளப்படுவதே சரியான Communication.  கூட்டியும், குறைத்தும் புரிந்து கொள்ளப்பட்டால்இருவரின் நோக்கமும் பாழ் பட்டுவிடும்.  அதையே Mis-Communication என்கிறோம்.

Communication Techniques சொல்லும் சில நுணுக்கங்களைஇந்தப் புத்தாண்டு முதல் தொடங்குங்கள்.  உங்களை வழி நடத்தசில வழி முறைகள்உங்கள் சிந்தனைக்கு, செயலுக்கு.“வேலை செய்ய பிடிக்கவில்லை” – என்பதற்கும்வேலையே செய்ய பிடிக்கவில்லைஎன்பதற்கும் ஆழமான வித்தியாசம் இருக்கின்றது.“GOD IS  NO WHERE” – என்பது கடவுள் எங்குமே இல்லை என்ற அர்த்தத்தை கொடுக்கின்றது.  ஆனால், சுவாமி விவேகானந்தரின் பார்வையில் “GOD IS NOW HERE” – என்பதுகடவுள் இல்லாத இடம் எங்குமே இல்லைஎன்று ஆனது.

இது Communication Technique ன் ஒரு சமயோசித யுக்தி. இரண்டு பள்ளி மாணவர்களின் சாமர்த்திய யுக்திசிலிர்க்க வைத்தது.  பரீட்சை விடைத்தாளில் ஒருவன் தி.மு.க துணைஎன்று எழுதி இருப்பது கண்டு கோபம் கொண்ட ஆசிரியர் விளக்கம் கேட்க, அவன் சொன்னான்ஐயா!  நான் ஒரு முருக பக்தன்.  திருச்செந்தூர் முருக கடவுள் துணைஎன்பதை தான் சுருக்கி தி.மு.க துணை என்று எழுதினேன்.  இது தவறா? என்று கேட்டான்.

இன்னொருவன் விடைத்தாளில் அ.தி.மு.க துணைஎன்பதை பார்க்கஅவன் சாமர்த்தியமாகநானும் முருக பக்தன் தான் சார். அருள்மிகு திருத்தணி முருக கடவுள் துணை” – என்பதையே அப்படி எழுதி இருக்கின்றேன்என்றான்.

மனம் நொந்த ஆசிரியர் உங்களை கேள்வி கேட்டது என் தவறு தான்.  இனி எனக்கு ம.தி.மு.க தான் துணை என்றார்.  இது என்ன சார் புதுசா? என்று மாணவர்கள் கேட்கமனம் திருந்திய எனக்கு முருகனே கடைசிவரை துணை” – என்றார்.

இந்தக் கதையின் நகைச்சுவை ஒருபுறம் இருக்கட்டும்.  எந்தவொரு சம்பாஷனைகளையும் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்ல COMMUNICATION மிகவும் முக்கியம்.  அதற்கு மிகவும் தேவை வாதமும், பிரதி வாதமும்.  தேவையற்றவை விதண்டா வாதமும், வாக்கு வாதமும்.

வாழ்வின் வெற்றியை நோக்கிய பயணத்தில் நீங்கள் அன்றாடம் பல பேரிடம் பேச வேண்டி இருக்கின்றது.  அவர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு தரப்பட்ட கல்வி, மொழி, சூழ்நிழலை, தரம், தராதரம் கொண்டவர்களாக இருக்கக் காணலாம்.  உங்கள் கருத்துக்களை சரியான விதத்தில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் புரியும் விதத்தில் நீங்கள் சொல்வதில் தான் உங்களின் வெற்றியும், சாதனையும் இருக்கின்றது.

உங்களை எப்படி மற்றவருக்கு புரிய வைப்பது முக்கியமோஅதே போல் மற்றவர்களை நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.  புதிய மனிதர்களை நீங்கள் பார்க்கும்போதுநினைவு கொள்ளுங்கள்உங்கள் கேள்விகள்யார், எது, எப்போது, எங்கு, ஏன்? – என்று இருக்க வேண்டும்.

அதாவது, அவர்கள் ஒற்றை வார்த்தையில் அல்லாமல்உங்களுக்கு விரிவான பதிலையே தரும்படி இருக்க வேண்டும்.  அப்போது அவர்கள் சொல்லும் பதில்களை, செய்திகளை, உண்மையான அக்கறையோடு கேளுங்கள்.  அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.  உங்கள்மீது ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்பட உதவும்.  உங்களது நட்பை அவர்கள் விரும்புவார்கள்.

பலரும் செய்யும் தவறு என்னவென்றால்ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரை ஒரு கோர்வையாக பேச விடாமல் குறுக்கே பேசி, திசை திருப்பி, அவர்கள் பேசி முடிக்கும் முன்பே அந்த இடத்தினின்று நகர்ந்து சென்று மற்றவருடன் பேசுதல் போன்ற செய்கைகள் செய்யும்போது, அந்த COMMUNICATION முழுமை அடையாமல் முடங்கிவிடும்.  இது தவறு!

Smart Phone யுகத்தில் இப்போதுள்ள எதார்த்தம் நீளமான Text Message களை பெரும்பாலும் யாரும் படிப்பதில்லை.  நல்ல COMMUNICATION க்கு ஒரு Emotional Attachment இருக்க வேண்டும்.  எனவே, MESSAGE அனுப்புவதை விட்டு நேரில் பேசுங்கள்.  உங்கள் அன்பும், பரிவும் வெளிப்படும் விதத்தில் அது இருக்கட்டும்

மற்றுமொரு முக்கியமான யுக்திபாராட்டுதல்”.  மற்றவர்களின் செயல்களை, வெற்றிகளை, சாதனைகளை மனம் திறந்து பாராட்டுங்கள்.  பாராட்டின் பெரும் சக்தி என்னவெனில்உங்கள் நட்பை அது ஈர்க்கும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2019

சாதனை கண்டுபிடிப்பு…! சரித்திரத்தின் உயர்த்துடிப்பு…!
உண்மை உன்னை உயர்த்தும்
நீங்கள் வெளிப்படைத்தன்மை உடையவரா?
பசுமை பென்சில்
வெற்றி உங்கள் கையில்- 61
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 4
நினைப்பதே நடக்கும் (பாகம் – 2)
மந்திரப் புன்னகை!
தீர்மானித்தல் என்ற திறனின் மகிமை
தன்னம்பிக்கை மேடை
தகுதிகளை மேம்படுத்தித் தலைவராவது எப்படி?
சமயோசித புத்தி
பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி
நாளும் விதையுங்கள் நம்பிக்கையை
பல் பராமரிப்பு
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத்தொழிலாளர்கள்
சிந்திக்க வைக்கும் சீனா – 6
வின்னர்ஸ் அகாடமி மற்றும் அகம் அறக்கட்டளை
“வாழ நினைத்தால் வாழலாம்” – 24
பேச்சும் மூச்சும்
உள்ளத்தோடு உள்ளம்