Home » Articles » நீங்கள் வெளிப்படைத்தன்மை உடையவரா?

 
நீங்கள் வெளிப்படைத்தன்மை உடையவரா?


சுவாமிநாதன்.தி
Author:

முதலில் வெளிப்படைத்தன்மை என்றால் என்ன? என்று பார்ப்போம்.  பிறர் தெளிவாக அறியக்கூடிய  வகையில் நடந்து கொள்வதை வெளிப்படைத்தன்மை எனலாம். அது ஓளிவு மறைவு இல்லாத தன்மையாகும். நமது செயல்பாடு நேரடியாகப் புலனாகும் விதத்தில் இருப்பதாகும். சிலர் எனக்கு எதையும் நேரடியாக பேசித்தான் பழக்கம் என்பர். சுற்றி வளைத்து பேசத் தெரியாது என்பர். ரகசியத்தன்மைக்கு முற்றிலும் எதிரானதுதான் வெளிப்படைத்தன்மையாகும்.

பல உயர் அதிகாரிகள் தங்கள் சொத்து விபரங்களை இணையதளத்தில் வெளியிட்டு வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள்.  நன்கொடையாக பெறும் நிதியை வெளிப்படையாக தெரிவிப்பவர்கள் உள்ளனர்.

வழக்குவிசாரணைவெளிப்படையாகஇருக்கவேண்டும்என்பதற்க்காகநீதிமன்றங்களில்கண்காணிப்புகேமராபொருத்தப்பட்டுள்ளதைப்பார்க்கிறோம்

அரசுப் பணிக்காக நடைபெறும் போட்டித்தேர்வுகள்  வெளிப்படையாக தலையீடு இன்றி தகுதியின் அடிப்படையில் நேர்மையாக நடைபெறுகிறது. திறமையானவர்கள் வாய்ப்பு பெறுகின்றனர்.

அரசுத் துறைகளில் பணியிடமாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்தப்படுவது ஆரோக்கியமான விஷயமாகும். பலர் பலனடைகின்றனர்.

வெளிப்படைத்தன்மையால் ஏற்படும் நன்மைகள்:

ஒரு இனிப்புகடையில் விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளது. இங்கு பலகாரங்கள் சுத்தமான நெய்யினால் தயாரிக்கப்பட்டவை. விலையைப் பொருட்படுத்தாமல், தரத்தை பெரிதும் விரும்புபவர்கள் அந்தக் கடையை தேடிச் சென்று வாங்குகிறார்கள். பிறருக்கும் சொல்கிறார்கள்.

நல்லி சில்க்ஸ் என்கிற பிரபல துணிக்கடையில் தள்ளுபடி என்பதே கிடையாது. ஆனாலும் வாடிக்கையாளர்கள் மனதில் மிகப் பெரிய செல்வாக்கைப் பெற்றதற்கு காரணம் பட்டுப்புடவைகளின் தரத்தில் சமரசமே கிடையாது என்பதுதான்.

சிலர் நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவார்கள். நான் நேர்மையற்றவன் என்றால் என் எதிரிகூட நம்ப மாட்டான். அதுதான் நான் சம்பாதித்தது என்பர். திரு.சகாயம் ஜயா அவர்கள்  “லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்என்ற வாசகத்தை தன் அலுவலக அறையில் வெளிப்படையாக வைத்திருப்பார்.

நகைக்கடையில் பொதுவாகவே ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகள் தரமானவை. 22 காரட் சுத்தமான தங்கம். அது போல மனிதர்களும் தங்கள் வெளிப்படைத்தன்மையால் உலக அரங்கில் நன்மதிப்பை பெற வெளிப்படைத் தன்மை மிகவும் அவசியம்.

வெளிப்படைத்தன்மை உடையவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் இருப்பதில்லை. வாழ்க்கை ஓளி மிகுந்ததாக இருக்கிறது. உடலில் பொலிவு கூடுகிறது. புனிதமானவராக கருதப்படுகிறார். சிறைவாசம், குடும்பப்பிரிவு உள்ளிட்ட துன்பங்களில் சிக்குவதில்லை.

தகவல் அறியும் சட்டம் என்பதே அரசின் செயல்பாடுகளை ஓளிவுமறைவின்றி வெளிப்படைத்தன்மையை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் உருவாக்கப்பட்டது. உன்னதமான சட்டத்தை மற்றவர்களை சிக்க வைப்பதற்க்காக தவறாகப் பயன்படுத்துபவர்களும்  உள்ளனர் என்பது வருந்தத்தக்கது.

நாம் தரவேண்டிய தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தினால் அது மிகவும் வெளல்ப்படையானது. அரசுத்துறையில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய வெளிப்படையாக உரியவரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவது வரவேற்கத்தக்கது.

மாதக்கடைசியில் ஒரு  அலுவலகத்திற்கு சென்று இருந்தேன். கதவில் ஒரு செலவு விபர அறிக்கை ஒட்டப்பட்டு இருந்தது. இன்னாரின் பணி ஒய்வு விழாவிற்கு சங்க உறுப்பினர்களிடம் வசூல் செய்த தொகை இவ்வளவு. சந்தன மாலை, சால்வை, பரிசுப்பொருட்கள் மற்றும் இனிப்பு, கார வகை மற்றும் தேனீர் வாங்கிய செலவு விபரம் மற்றும் மீதத்தொகை தொடர்பான விபரங்கள் இருந்தது. செலவு தொடர்பாக ரசீதுகள் பதிவேட்டில் முறையாக பராமரிக்கப்படுகிறது. இது சங்கப் பொருளாளரின் வெளிப்படைத்தன்மையை நேர்மையை காட்டுகிறது.

கிரிக்கெட் போட்டியை பார்க்கிறோம். விளையாட்டு வீரர் அவுட் ஆகிவிட்டாரா என்பதை துல்லியமாக எலக்ட்ரானிக் மின்திரையில் வெளிப்படையாக காட்டுகிறார்கள். இதில் யாரையும் குறை சொல்ல மடியாது.

ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திரு. கலியமூர்த்தி அவர்கள் சொல்வார்கள். குற்றவாளிகளால் தடயமில்லாமல் தவறு செய்யவே முடியாது. பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். யாருக்கும் தெரியாமல் ஒரு செயலை செய்கிறோம் என்றால், அது தகாத செயலாக இருக்கலாம். ஒரு நாள் சாயம் வெளுக்கும்.

பள்ளி அல்லது கல்லூரி தேர்வு எழுதும் மாணவன் அல்லது மாணவிக்கு விடை தெரியவில்லை. சரியாகப் படிக்கவில்லை. காப்பி அடிப்பது, பிட் அடிப்பது போன்ற தவறான விஷயங்களை வெளிப்படைத்தன்மையோடு செய்ய முடியுமா?

தவறு செய்பவர்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே செய்கிறார்கள்.

திருடன் பூட்டிய வீட்டை உடைத்து நகைகளை திருடுகிறான். ஏன் முகமூடி அணிகிறான். ஏன் ரகசிய காமிரா பொருத்தப்பட்டு இருந்தால் அதை சிதைக்க முற்படுகிறான். சாலையில் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பவர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு தங்கள் முகத்தை மறைத்துக் கொள்வது ஏன்?

பிரபல துணிக்கடையில் ஒரு நாற்பது வயதைக் கடந்த ஒருவர் புடவை மற்றும் வுல்லன் ஸ்வெட்டர் தேர்வு செய்து பில் போடச் சொல்லிவிட்டு தற்செயலாக கண்காணிப்பு கேமரா அந்தக் கடையில் இருப்பதைப் பார்த்துவிட்டு திகைத்துப் போனார். சிப்பந்தியிடம் ஏன்யா, கேமரா எல்லாம் பொருத்தி உயிரை எடுக்கிறீர்கள் எனக் கேட்டு விட்டார். அதற்கு சிப்பந்தியோ, உங்களைப் போல துணி திருடாமல் பணம் செலுத்தி வீட்டிற்கு துணி வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களாகவே எல்லோரும் இருந்து விட்டால் காமிராவோ, காவலாளிகளோ  தேவையில்லை. எங்களுக்கும் செலவு மிச்சம் என்றார். அது சரி நீங்கள் ஏன் திகைக்கிறீர்கள் என்று சிப்பந்தி கேட்டபோது, நான் எனது சின்ன வீட்டிற்கு அல்லவா வாங்கிச் செல்கிறேன் என்றாராம். என் மனைவிக்கு, பிள்ளைகளுக்கு தெரிந்து விட்டால் என் பாடு திண்டாட்டம்தான் என்றாராம். முறை தவறிய உறவுக்கு ஓத்துழைப்பவருக்கு பரிசு தருகிறார். பகிரங்கமாக வெளிப்படைத்தன்மையுடன் தர முடியுமா?

ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் வாங்குவது, பயனாளிகளிடம் லஞ்சம் வாங்குவது, உள்ளிட்ட சட்டத்திற்குப் புறம்பான செயல்களை வெளிப்படைத்தன்மையுடன் ஒரு போதும் செய்ய முடியாது. காவலர்களிடம் சிக்கிய குற்றவாளிகள் தொலைக்காட்சியில் காட்டப்படும் போது, தங்கள் முகத்தை ஏன் மறைத்துக் கொள்கிறார்கள்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2019

சாதனை கண்டுபிடிப்பு…! சரித்திரத்தின் உயர்த்துடிப்பு…!
உண்மை உன்னை உயர்த்தும்
நீங்கள் வெளிப்படைத்தன்மை உடையவரா?
பசுமை பென்சில்
வெற்றி உங்கள் கையில்- 61
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 4
நினைப்பதே நடக்கும் (பாகம் – 2)
மந்திரப் புன்னகை!
தீர்மானித்தல் என்ற திறனின் மகிமை
தன்னம்பிக்கை மேடை
தகுதிகளை மேம்படுத்தித் தலைவராவது எப்படி?
சமயோசித புத்தி
பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி
நாளும் விதையுங்கள் நம்பிக்கையை
பல் பராமரிப்பு
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத்தொழிலாளர்கள்
சிந்திக்க வைக்கும் சீனா – 6
வின்னர்ஸ் அகாடமி மற்றும் அகம் அறக்கட்டளை
“வாழ நினைத்தால் வாழலாம்” – 24
பேச்சும் மூச்சும்
உள்ளத்தோடு உள்ளம்