Home » Articles » தீர்மானித்தல் என்ற திறனின் மகிமை

 
தீர்மானித்தல் என்ற திறனின் மகிமை


கிரிஜா இராசாராம்
Author:

நோக்கம் என்பதை முதலில் தீர்மானி

அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள்

கையில் பணமில்லையே, உடம்பில் வலுவில்லையே

உதவி செய்ய நண்பர்கள் இல்லையே என்றெல்லாம்

யோசித்து நேரத்தை வீணாக்காதே. எதற்கும்

பயப்படாதேதயங்காதே. இலக்கை நோக்கி

அடியெடுத்துவை. தொடர்ந்து முன்னேறு சோதனைகள்

விலகும். பாதை தெளிவாகும் நோக்கத்தை அடைந்தே

தீருவாய் அதை யாராலும் தடுக்க முடியாது

என்ற வரிகள் சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் தீர்மானித்தல் என்ற திறன் பற்றி எடுத்துக் காட்டுகின்றது. இத்தகைய தீர்மானங்கள் எடுக்க மனோபலம் எவ்வளவு முக்கியமானது என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் பல கருத்துக்களும் அதன் மகிமை பற்றி தெளிவு அடையும் வகையில் உண்மை நிகழ்வு பற்றியும் இக்கட்டுரை விவரிக்கின்றது.

மனிதர்கள் என்ற கடவுளின் படைப்பில் ஆண், பெண் என்ற இரு பிரிவு உள்ளது. வாழ்க்கை  என்ற ஒன்றை ஏற்படுத்த இந்த இருபாலர்களே காரணம் ஒவ்வொருவருக்கும் தனி கடமை உள்ளது. ஒரு நாள் என்பது 24 மணிநேரம், இந்த நேரத்தை சரியாக தங்களுது கடின உழைப்பாலும், மனோ பலத்தாலும் பயன்படுத்தி வரும் ஒவ்வொருவரும் வாழ்க்கை என்ற விளையாட்டில் வெற்றி பெற்று சாதனையாயர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர். அரிய பெரிய காரியங்களைச் செய்ய அவர்கள் தங்கள் உடல்பலத்தையும், அறிவுத்திறனையும் பயன்படுத்தினாலும் அச்செயலைச் செய்ய ஒருவரை ஊக்கப்படுத்துவது, நம் கண்களுக்கு அகப்படாத மனோபலன்  தான் காரணம்.

நீ எந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறாய் என்று தெரிந்து கொள்ளாவிட்டாலும் ஏதோ ஒரு பாதை உன்னை சரியான இடத்தை அடையச் செய்யும். இந்த அறிவுரைக்கு எடுத்துக்காட்டாக விளக்குவார்கள். மேலும் இவர்கள் பேர் அறிஞர் சாக்ரடீஸின் உன்னையே நீ அறிவாய் என்ற தாரக மந்திரம் அறிந்தவர்களாகவும் இருப்பர். யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே என்ற கண்ணதாசனின் வரிகள் இந்த வெற்றியாளருக்கு பொருந்தும் இப்படிப்பட்டவர்கள், எந்த வேலைக் கொடுத்தாலும் மறுக்காமல் செயல்படுவார்கள். தீர்மானித்த செயலை முடிக்கும் வரை வேறு எதிலும் தங்களை ஈடுபடுத்தமாட்டார்கள். ஆராய்ச்சியாளர்கள், தங்களுடைய ஆராய்ச்சிக்காக முடிவுகள் தெரியும் வரை வேறு எதிலும் சிந்தனையைச் சிதற விடமாட்டார்கள் இத்தகையோரது போக்கைப் புரட்சி கவிஞர் பாரதியாரின்

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.. என்ற வழிகாட்டும் வரிகளில் உள்ளது போல் இருக்கும். இவர்களிடம் ஒரு தனித்திறமையும் இருக்கும். அதே சமயம் அவர்களிடம் ஒரு பலவீனமும் இருக்கும். ஆனால் இவர்கள் பலவீனமும் முறியடிக்கப்பட்டுவிடும் இவர்களது தீர்மானித்தல் என்ற திறனால் வாழ்க்கை என்பது ஒரு முறை வருவது. அதனை சரியாகப் பயன்படுத்துவார்கள் சாதனையாளர்கள் ஆவார்கள். இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் சில சம்பவங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.

ஜான் ரோபிலிங் என்பவர் நீயுயார்க்கிற்கும் லாங்தீவிற்கும் இடையே ஒரு பாலம் கட்ட வேண்டும் என்பது  அவரது கனவு. தன் மகன் வாஷிங்டனில் ஒரு பொறியாளர் என்பதால் தன் விருப்பத்தைக் கூறினார். மற்றவர்கள் இந்தச் செய்தியை கேலி செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தங்களது விருப்பத்துடன் இவர்கள் உடன் சிலர் நேர்ந்து அப்பணியை செய்ய உதவியாக இருந்தனர். அது சமயம் ஒரு விபத்தில் ரோபிலிங் இறந்து விட்டார். வாஷிங்க்டன் உயிரோடு இருந்தார். ஆனால் அவரால் தன்னுடைய ஆட்காட்டி விரலைத்தவிர வேறு எந்த உடல்உறுப்பும் அசைவு இன்றி இருந்தது. ஆனால் தந்தை எடுத்த தீர்மானத்தை செயல்படுத்த விரும்பினார்.  அதன்படி தன் ஒருவிரல் அசைவால் தன்னுடைய மனைவியின் தோள்பட்டையில் ஒரு குறியீடு செய்து அந்தக் குறீயிட்டிற்கான விபரத்தை அவர்களுடன் பணியாற்றிய பொறியாளர்களிடம் கூறி வர 13 ஆண்டுகளில் இப்பொழுது பிரமாண்டமாகக் கட்சியளிக்கும் பூருக்ளின் பாலம் உருவானது.

தன் குறிக்கோளில் மட்டும் அவர் மாறவில்லை. நாம் அறியாமல் நடக்கும் சில விரும்பத் தகாத சூழ்நிலைகள் பற்றி அவர் கவலைப்படவில்லை.

அவரைப் போலவே கிளன் கன்னிங்காம் என்ற தடகள வீரர், தன்னுடைய 8 ம் வயதில் அவனது பள்ளியில் நடந்த விபத்தால் பாதிக்கப்பட்டான். அவன் உயிர் பிழைக்கமாட்டான் என்று மருத்துவர் கூறினாலும் அவர் தன்னுடைய மனோபலத்தால் சக்கர நாற்காலியில் இருந்து கொண்டு, தன் அசைவில்லாத கால்களை முதலில் நடக்கும் அளவிற்கு கொண்டு வந்து பின் ஓடும் நிலைக்குக் கொண்டு வந்து சிறந்த உலகப்புகழ் பெற்ற தடகள ஓட்டபந்தய வீரர் ஆக மாறினார். அதனோடு தன் இறுதி காலத்தில் தன்னுடைய பெயரில் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை ஆதரிக்கும் வகையில் ஒரு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி அதில் 9000 குழந்தைகள் தங்கி வளர பாடுபட்டு 1988 ல் இறந்தார்.

இத்தகைய தீர்மானித்தல் என்ற சிறப்பு தன்மை எத்தகைய காரியங்களை செயல்படுத்த உதவுகின்றது என்பதை அறிந்து நாமும் செயல்பட, மற்றவர்களையும் ஊக்குவிக்க முன் வருவோமாக….

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2019

சாதனை கண்டுபிடிப்பு…! சரித்திரத்தின் உயர்த்துடிப்பு…!
உண்மை உன்னை உயர்த்தும்
நீங்கள் வெளிப்படைத்தன்மை உடையவரா?
பசுமை பென்சில்
வெற்றி உங்கள் கையில்- 61
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 4
நினைப்பதே நடக்கும் (பாகம் – 2)
மந்திரப் புன்னகை!
தீர்மானித்தல் என்ற திறனின் மகிமை
தன்னம்பிக்கை மேடை
தகுதிகளை மேம்படுத்தித் தலைவராவது எப்படி?
சமயோசித புத்தி
பஞ்சாங்கம் பார்ப்பது எப்படி
நாளும் விதையுங்கள் நம்பிக்கையை
பல் பராமரிப்பு
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத்தொழிலாளர்கள்
சிந்திக்க வைக்கும் சீனா – 6
வின்னர்ஸ் அகாடமி மற்றும் அகம் அறக்கட்டளை
“வாழ நினைத்தால் வாழலாம்” – 24
பேச்சும் மூச்சும்
உள்ளத்தோடு உள்ளம்