Home » Articles » நோபல்பரிசு – 2018

 
நோபல்பரிசு – 2018


முருகார்த்திக்
Author:

நோபல் பரிசு என்பது உன்னத கண்டுபிடிப்புகளை கண்டறியும் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் ஒரு புகழ்மிக்க விருது என்பது பலரும் அறிந்ததே. 2018-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உடலியல் அல்லது மருத்துவம் துறைக்கான 2018-ஆம் ஆண்டு நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் அலிசன் (James P.Allison) மற்றும் ஜப்பான் நாட்டின் கியோத்தோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் தசுகு கொஞ்சொ (TasukuHonjo) இருவரும் கூட்டாகபெறுகின்றனர். அலிசன் மற்றும் கொஞ்சொ புற்றுநோயை (Cancer) குணப்படுத்தும் புதுமையான வழி முறைக்கு வழிவகுத்ததால் இந்தபரிசை பெறுகின்றனர். இவர்களின் கண்டுபிடிப்பின் பின்னணி மற்றும் அதன் மகத்துவத்தை இந்த இதழில் காண்போம் .

புற்றுநோய்களை பற்றிய அறிமுகம் நம்மில் பலருக்கும் தேவை இல்லை. ஏனெனில், நம்சிறுவயதிலிருந்து புற்றுநோய்களை பற்றி பல திரைப்படங்களிலும், நாளிதழ்களிலும் கண்டு புற்றுநோய் என்றாலே அவரின் வாழ்கை முடிந்து விட்டது என்ற எண்ணமே நம்மில் மேலோங்கி நிற்கும்.

புற்றுநோய் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களைக் கொன்று மனித இனத்திற்கு மிகப்பெரும் சவாலாக விளங்குகிறது பொதுவாக, அனைத்து உயிரினங்களும் செல் (Cell) என்றழைக்கப்படும் உயிர் அணுக்களால் கட்டமைக்கப்பட்டது. இந்தசெல்களில் அதன் இயல்புநிலைக்கு அப்பாற்பட்டு (abnormal cells) பெருகி அதுமற்ற உடல் உறுப்புகளுக்கும் (organs),திசுக்களுக்கும் (Tissues)பரவும்திறன் கொண்டவையாக மாறும் நிலையை தான் நாம் புற்றுநோய் என்று சொல்கிறோம். இதுவே பலவகையான நோய்களுக்கு வழிவகுத்து உயிரைபறிக்கிறது.

புற்றுநோயை குணப்படுத்துவதற்கான பலவகையான வழிமுறைகள் தற்கால நடைமுறையில் உள்ளது. உதாரணமாக, ஹார்மோன் (Hormone)சிகிச்சைமூலம்சுரப்பிபுற்றுநோய் (Prostate cancer), கீமோதெரபி (Chemotherapy)மற்றும்எலும்புநஞ்சைமாற்று (bone marrow transplantation)மூலம் ரத்தப்புற்று நோய் (leukemia) போன்றவற்றை குணப்படுத்தலாம். இருந்தாலும் அட்வான் சுடுஸ்டேஜ் (advanced stage) என்று சொல்லப்படும் புற்றுநோய் முற்றிய நிலையில் குணப்படுவது மிகவும் கடினமான ஒன்று.

உயிரினங்கள் அனைத்திலும் நோயை எதிர்த்து தாக்கும் நோய் எதிப்பு அமைப்பு அல்லது மண்டலம் உள்ளது. இதை ஆங்கிலத்தில் இம்யூன்சிஸ்டம் (Immune system) என்றழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த இம்யூன்சிஸ்டத்தை செயலூக்கம் (activation) செய்வதன் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என்னும் கருத்தியல் உருவாகியது. ஆரம்ப காலகட்டத்தில், பாக்டீரியாக்களை உடலில் செலுத்தி இம்யூன்சிஸ்டத்தை செயலூக்கம் செய்தனர். ஆனால் இதனால் மிகப்பெரும்பலன் எதுவும் எட்டப்படவில்லை. எனவே உலகில் உள்ள பல ஆராய்ச்சியாளர்கள் இந்த இம்யூன்சிஸ்டத்தை ஆழமாக ஆராயதொடங்கினர்.

அடிப்படையில், இம்யூன்சிஸ்டம் உடலில் உருவாகும் செல்களையும் (self),உடலின் மூலம் அல்லாமல் வேறு உயிரினிகளால் (non-self or foreign) உதாரணமாக பாக்டீரியா, வைரஸ் மற்றும் வேறு நுண்ணுயிரிகளால் உருவாகும் ஆபத்தான செல்களை அல்லது மூலக்கூறுகளை பிரித்தறியும் திறன் கொண்டது. இதனாலேயே, இம்யூன்சிஸ்டம் நன்றாக உள்ளவர்களுக்கு எளிதில் காய்ச்சல் போன்ற நோய்கள் அண்டுவதே இல்லை.  இந்த பிரித்தறியும் வேலையை செய்வதில் T-செல்(T Cell) என்றழைக்கப்படும் இரத்த வெள்ளையணு முக்கிய பங்காற்றுகிறது. இந்த T-செல்லில் ரெசெப்டர்ஸ் (Receptors) என்றழைக்கப்படும் உணர்வேற்பி மூலம் உடலுக்கு சொந்தமில்லாத அல்லது இயல்பு நிலைக்கு அப்பாற்பட்ட செல்களை கண்டறிந்து அவைகளுடன் பிணைத்து அதன் செயல்பாட்டை முடக்கும் பணியை செய்வதன் மூலம் மனத உடல் நோய்களின் பிடியிலிருந்து தப்பித்து கொள்ள முடிகிறது.

மேலும், இம்யூன்சிஸ்டம் முழுமையாக செயல்பட T- செல்லை வினையூக்கம் (acceleration) செய்யும் புரத (Protein) மூலக்கூறுகளும் அவசியம். அதேநேரத்தில், அளவுக்கு அதிமாக வினையூக்கம் செய்தால் அது இம்யூன்சிஸ்டத்தை அழிக்கவும் நேரிடும். இதனாலேயே, T-செல்லின் செயலை தடை செய்யும் (Inhibition) புரதமூலக்கூறுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவைகளை பிரேக் (Brake) என்றழைக்கப்படுகிறது. ஆகவே, புற்றுநோயை குணப்படுத்தவேண்டுமெனில்,  T-செல்லை வினையூக்கம் செய்வதிலும், சரியான நேரத்தில் அதன் செயல்பாட்டை தடை அல்லது பிரேக் செய்வதிலும் நுட்பமான சமநிலையை (Balance) பின்பற்றுவதன் மூலம் இம்யூன்சிஸ்டம் மூலம் நம் உடலை சாரதா செல்களை அல்லது நுண்ணுயிரிகளை நம்உடலில் பெருகுவதை கட்டுப்படுத்த முடியும்.

1990-களில், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் அலிசன் அவர்களின் ஆராய்ச்சி குழுமத்தில் CTLA-4 எனும் புரதமூலக்கூற்றை ஆராய தொடங்கினர். இவர்களின் முயற்சியில், இந்த CTLA-4 ஆனது T-செல்லின் செயல்தடைசெய்யும் (brake) பணியை செய்கிறது என்று கண்டறிந்தனர். மேலும், அலிசன் இந்த CTLA-4 செயலை கட்டுப்படுத்தும் anti-CTLA-4 ஆன்டிபாடி (Antibody) எனப்படும் எதிர்ப்புபுரதம் ஒன்றை உருவாக்கினார். பிறகு, இந்த anti-CTLA-4  ஆண்டிபாடி மூலம் CTLA-4 புரதத்தை தடைசெய்து இம்யூன்சிஸ்டம் மூலம் புற்றுநோய் செல்களை தாக்கும் யுத்தியை சோதனை செய்து பார்த்தார். இந்த சோதனையின் முடிவுகள் அனைவராலும் மிகவும் ஈர்க்கப்பட்டது. இந்த சோதனையை ஒருசிகிச்சையாக கொண்டு புற்றுநோயால் தாக்கப்பட்ட எலிகளை உட்படுத்திய போது இதன் வெற்றிஉறுதி செய்யப்பட்டது.

இதே மாதிரியான சோதனை பல்வேறு ஆரய்ச்சியாளர்களால் செய்து நம்பகத்தன்மையும் பெற்றது. 2010-ஆம் ஆண்டு இந்த சிகிச்சை முறை முற்றிய நிலையில் உள்ள மெலனோமா (Melanoma) எனப்படும் தோள் புற்றுநோய் கொண்ட ஒரு நோயளிக்கு அளித்தபோது அவர் குணமடைந்தார். அது பலரையும் ஆச்சிரியத்தில் திளைக்கவைத்தது. இத்தகைய நிகழ்வு ஒருவரலாற்று நிகழ்வாகவே அமைந்தது.இதே போல், 1992-இல், அல்லிசனின் கண்டுபிடிப்பிற்கு பிறகு சிலவருடங்களில், தசுகுகொஞ்சொ, ஜப்பானில் கியோத்தோ பல்கலைக்கழக்தில் PD-1 எனும் மற்றோரு புரத மூலக்கூறை கண்டறிந்து அது CTLA-4 போல செல்லை பிரேக் அல்லது தடை செய்யும் செயல் விளக்கத்தை வெளியிட்டார். 2012-ஆம் ஆண்டு இவரது கண்டுபிடிப்பு மெட்டாஸ்டாடிக் (metastatic cancer) எனப்படும் புற்றுநோய் செல்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கு பரப்பும் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரின் கண்டுபிடிப்புக்கும் அங்கிககாரம் கிடைக்கப் பெற்றது. இவர்களின் இத்தகைய சிகிச்சை முறை இம்யூன்செக்பாயிண்ட்தெரபி (Immune checkpoint therapy) என்றழைக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறையிலும் பக்கவிளைவுகள் இருப்பினும் அவைகளை சரிசெய்ய கூடியவைகளே. இது சம்பந்தமாக மேலும்பல ஆராய்ச்சிகள்மேலும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனவே, புற்றுநோயை பற்றிய அச்சம் கூடியவிரைவில் நம்மை விட்டும்மறையு ம்என்பதில் எந்த ஐயப்பாடும் தேவையில்லை. புற்றுநோய்குறைவான அல்லது அற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கான அடிக்கல் நாட்டிய இத்தகைய விஞ்ஞானிகளை நாமும்வாழ்த்துவோம். நன்றி.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2018

நோபல்பரிசு – 2018
சின்ன சின்ன மாற்றங்கள் பெரிய மாறுதல்கள்
வெற்றி உங்கள் கையில்-59
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 2
இலட்சியத்தை நோக்கி
மண்ணின் மகத்துவம் மகாத்மா காந்தியடிகள்
எப்போதோ போட்ட விதை!
முயன்றேன் வென்றேன்…
தன்னம்பிக்கை மேடை
மற்றவர்களை வசீகரிப்பது எப்படி?
அற்ப சுகங்களுக்காக வாழ்வை மலிவு விலைக்கு விற்கலாமா?
காய்ச்சலால் வரும் வலிப்பு (Febrile Fits)
வாழ நினைத்தால் வாழலாம் – 22
வின்னர்ஸ் அகாடமியின்
அலங்கரித்துக் கொள்…
துணிந்தவருக்கில்லை துயர்-நீங்கள் துணிச்சல் மிக்கவரா?
பயணங்கள் வெறுப்பதில்லை
சிந்திக்க வைக்கும் சீனா- 4
எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்… எதிர்காலத்தை நேர்த்தி செய்…
உள்ளத்தோடு உள்ளம்