Home » Articles » வீரத்திர விளையாட்டில் மகுடம் சூட்டிய மங்கை

 
வீரத்திர விளையாட்டில் மகுடம் சூட்டிய மங்கை


ஆசிரியர் குழு
Author:

சு. ஜிவிதா

கபாடி விளையாட்டு வீராங்கனை, கோவை

வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்

பெண்மையினால் உண்டென்று பேச வந்த பெண்ணழகே

நாய் என்ற பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்

தாய் என்று  காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே

மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற

காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே

என்று பெருங்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பெண்ணிற்குச் சூட்டியுள்ள அருமையான புகழாரமாகும். அவ்வகையில் ஆண்களைப் போலவே அத்துனை துறையிலும் சாதித்து வரும் எத்தனையோ பெண்களின் சாதிப்புப் பக்கங்களைப் பார்த்தும் செய்தித்தாள்களில் படித்தும் வருகிறோம்.. அவ்வாறு கபாடி விளையாட்டில் சாதித்து வரும் சு. ஜீவிதா அவர்களின் சாதனைப் பயணத்தைப் பற்றிப் பார்ப்போம்..

நாமக்கல் மாவட்டம்  நத்தமேடு என்னும் கிராமம் தான் நான் பிறந்த ஊர். அப்பா லாரி ஓட்டுநர். அம்மா கூலி வேலை செய்து வருகிறார். சகோதரர் கௌதம். மிகவும் ஏழ்மையான குடும்பம் தான். இந்த ஏழ்மையிலும் என் பெற்றோர்கள் என்னை நன்றாகப் படிக்க வைத்தார்கள். எனக்குப் படிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்தது.  நான் பத்தாம் வகுப்பு வரை கிரிஸ்டி கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நாமக்கலில் தான் படித்தேன். நான் ஆரம்பத்தில் அத்லெட்டிக் 100 மீட்டர் 200 மீட்டர் ஓட்டப்பந்தியத்தில் கலந்து கொண்டு பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றிருக்கிறேன்.

சின்ன வயதிலிருந்தே நமது தமிழர்களின் வீரத்தின் அடையாள விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு மீது எனக்கு தீராத காதல். ஆனால் அதில் பெண்கள் கலந்து கொள்ள முடியாது என்பதால் கபாடி விளையாட்டின் மீது என்னுடைய பார்வை படத் தொடங்கியது. இதனால் கபாடி பற்றிய நுணுக்கங்களையும், அதன் அடிப்படை வழிமுறைகளையும் கற்றுக் கொண்டேன். இதனால் பள்ளி அளவிலேயே நிறைய கபாடிப் போட்டியில் கலந்து கொண்டேன். நாமக்கல்லில் உள்ள Sports Development  Authority of Tamilnadu ( தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்)  விளையாட்டுப் பிரிவில் பி. ஏ ஆங்கிலம் படித்தேன்.

வறுமையிலிருந்தும் என் பெற்றோர்கள் என்னை மிகவும் ஊக்குவித்தார்கள். எனக்கு ஆர்வமிருந்தும் வறுமை என்னை தடைப்படுத்தும் என்று நினைத்தேன். ஆனால் கடவுள் அருளாளும்,  என் பெற்றோர்களின் நம்பிக்கையும் என்னைப் பெரிதும் வளர்ச்சியடைய வைத்தது. இத்தகைய வளர்ச்சியில் என்னுடைய பயிற்சியாளர் புவனேஷ்வரி இவர்களின் பயிற்சி எனக்கு மிகுந்த நம்பிக்னையும், கடின உழைப்பு கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்தது. இந்த மூவரையும் என் வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாது.

உடலை வருத்தி விளையாடும் எந்த விளையாட்டும் உடம்பிற்கு தீமையை ஏற்படுத்தாது. அதே வகையில் நம்மையும், உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.  சாதிக்க நினைக்கின்ற அனைவரும் சோதனைகளை கடந்து தான் சொல்ல வேண்டும். அந்த சோதனைகள் கடல் அளவாகவும் இருக்கலாம், மலை அளவாகவும் இருக்கலாம், அல்லது சிறு குட்டை அளவாகவும் இருக்கலாம். ஆனால் சோதனை என்பது ஒன்று தான். அச்சோதனை கடந்து எப்படி சாதனை கொள்கிறோமோ அதில் தான் மனித வாழ்க்கையின் வெற்றி அடங்கியுள்ளது.  நான் கடினமாக உழைத்து இந்தத் தேசத்திற்காக விளையாடிப் பெருமை சேர்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே இலட்சியம் கனவு எல்லாமே.  எனக்குப் பயிற்சியளித்த பயிற்சியாளர்கள், துணையாக நின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும், என்னை ஈன்றெடுத்த பெற்றோருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக இருக்க வேண்டும். என்னுடைய பெரிய பலம் என்னவென்றால் விளையாடும் போது எதிர் அணியில் பாடிச்செல்லும் போது இடது புறம் தொடும் ஆட்டத்தை சிறப்பாக செய்வேன்.  இம்முறையைப் பார்த்த நிறைய பேர் என்னை பாராட்டியிருக்கிறார்கள்.

2014-2015 ஆம் ஆண்டு Sub junior National பீகாரில் நடைபெற்றது அதில் மூன்றாமிடம் பெற்றோம்.

2015-2016 junior National மத்தியபிரதேசத்தில் நடைபெற்றது அதில் ரன்னர் பட்டத்தை வென்றோம்.

2016- 2017 Senior National bihar, South Zone, திருநெல்வேலியில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றேன்.

2017-2018 Senior National Telugana , junior National ஒடிஸாவில் கலந்து கொண்டேன்.

இந்த ஆண்டு ஆசியப்  பெண்கள் கபாடிப் போட்டிக்கான( இந்திய அணிக்கான) தேர்வு, குஜராத்தில் நடைபெற்றது. அதில் இறுதி வரை சென்று தேர்வாகாமல் வெளியேறினேன். ஆனால் அடுத்த ஆண்டு இத்தேர்வில் நிச்சயம் வெற்றி பெற்று சாதிப்பேன்.

தற்போது விளையாடும் கபாடி வீரர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த கபாடி விளையாட்டு நம் மண்ணின் பாரம்பரியமான விளையாட்டு. அப்படியிருக்கும் போது சாதிக்குனும் என்று விளையாடுங்கள். எதையும் வெல்ல முடியும் என்ற தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

கடின உழைப்பும், விடாமுயற்சியும் எப்பொழுதும் வீண் போகாது.  நம்முடைய பெயரும் வரலாற்றுப் பக்கத்தில் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள்..

எனது ஓடுகின்ற கால்கள் ஓய்வெடுக்கும் பொழுது நான் எடுத்துக்கொண்ட பயணம் முடித்திருக்க வேண்டும்.

இந்திய அணிக்காக விளையாட வேண்டும். அதில் நான் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிபடுத்த வேண்டும். அதனால் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். என்பது மட்டும் நான் கொண்ட இலட்சியம். இதை முடித்துக் காட்டுவேன் நிச்சயம்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2018

புதியதோர் கண்டுபிடிப்பு புற்றுநோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு
வெற்றி உங்கள் கையில் – 58
வாசியுங்கள்! வாகை சூடலாம்
உன்னால் முடியும் போராடு உலகை வென்று பூச்சூடு….
பெண்ணீயமே பெருமை கொள் உன்னை எண்ணி கர்வம் கொள்
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
வீர தீர பண்புகளில் நீங்கள் எந்த வகை?
தன்னம்பிக்கை மேடை
காய்ச்சல்
மற்றவர்களோடு நெருங்கிப் பழக உதவும் யுக்திகள்
உடம்பும் – இலக்கும்
சிந்திக்க வைக்கும் சீனா
வீரத்திர விளையாட்டில் மகுடம் சூட்டிய மங்கை
தலைவலி
“வாழ நினைத்தால் வாழலாம்” – 21
முதுமையா? முதிர்ச்சியா?
உள்ளத்தோடு உள்ளம்