Home » Online News » தடை அதை உடை

 
தடை அதை உடை


ஆசிரியர் குழு
Author:

ரா. அருள் வளன்அரசு

வானத்தில் நிலாவும், நட்சத்திரங்களும் ஒரு காலத்தில் சந்தோசமாக இருந்தார்கள். இரவின் மடியில் வானத்துடனும், மேகத்துடனும் மனசு பேச முற்படும் போதெல்லாம், நமக்கு முன்னாள் நிலாவும் நட்சத்திரங்களும் கொஞ்சி குலாவி சந்தோசமாகப் பெசி சிரிப்பைக் காணமுடியும். அந்த அழகின் மகிழ்வின், நாம் பேச நினைத்ததை நம்மையும் அறியாமல் மறந்து போவோம். அப்படிபட்ட மகிழ்வில் திடீரென்று ஒரு நாள் பெரிய பூதம் வந்து, நான்கு நட்சத்திரங்களைப் பிடித்து சாப்பிட்டுவிட்டு சென்றுவிட்டது. அடுத்தடுத்த நாட்களில் பூதம் வருவதும், நட்சத்திரங்களை பிடித்து சாப்பிடுவதும் தொடர்கதையானது. என்னை பார்த்த நிலாவுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. மனதுக்குள் வலி வெளியே சொல்ல நாளுக்கு நாள் நட்சத்திரங்கள் வானில் வருவது குறைந்துகொண்டே இருக்கிறதே என்று நிலா ரொம்பவே கவலையானது. முடிவாக, இது தொடர்பாக சூரியனிடம் புகார் கூறியது. தினமும் இரவு நேரத்தில் பூதம் வந்து நட்சத்திரங்களைக் கொன்று தின்று விட்டு செல்கிறது. இது தொடர்ந்தால் வானம் இருட்டாகி விடும் வானம் ஜொலிக்கவே ஜொலிக்காது. இதை இப்படியே விட்டு விட்டால், எதிர்பாராத பேரழிவு ஏற்பட்டு விடும் என்று தன் உள்ளத்து குமுறல்களை எல்லாம் சொல்லி அழுதது நிலா .

சூரியனும், நிலாவை சமாதானப்படுத்தியது. இது அப்படி நடக்காது, நான் பார்த்து கொள்கிறேன் என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தது.

இப்படி ஒரு கதை இருந்தால் இதற்கு என்ன முடிவு தரலாம்.அந்தச் சூரியன் என்ன நடவடிக்கை எடுத்திருந்தால், நட்சத்திங்களைச் சாப்பிடாமல் இருந்திருக்கும் என்பது ஒரு கற்பனை கதை.

இந்தக் கதையில்… நாம் என்னவாக இருக்கிறோம்?  நட்சத்திரங்களாகவா? நிலாவாகவா? சூரியனாகவா? பூதமாகவா? என்று கேள்வி நீள்கிறது. யோசிக்க வேண்டிய தருணம் இது.

நம் ஒவ்வொருத்தருக்குள்ளேயும் நட்சத்திரம் இருக்கிறது. சூரியன்   இருக்கிறது. நிலா இருக்கிறது. பூதமும் இருக்கிறது. நம்மில்  நினைத்துத்தான் நாம் பயந்துகொண்டே இருக்கிறோம். அந்தப் பூதத்திற்கு நாம் என்ன வேண்டுமானாலும் பெயர் வச்சுக்கலாம்.

“சரியா நான் படிக்கவில்லை. சரியாக எனக்கு  எழுத வராது. எனக்கு விளையாட்டுனா பயம். யாராவது ஆங்கிலம் பேசினாலே 10 அடி தள்ளி நிற்பேன்.மேடையில் சில பேரு பேசும் போது, நானும் இது மாதிரி பேசலானு நினைப்பேன்.ஆனால் நான் மேடையேறினால், தொடையெல்லாம் தானா நடுங்கும். அலுவலகத்தில் மேனேஜரைப் பார்த்தால் பயம். அரசியல்வாதிகளைப் பார்த்தால் பயம். அன்றாடம் நடக்கும் சமூக அவலங்களைப் பார்த்தால் பயம். சினிமாவுல, டிவியில பார்க்கிற சண்டை காட்சிகள்  எல்லாம் நம்ம விட்டிலும் நடந்துவிடுமோங்கிற பயம் என்று இப்படி நமக்குள்ள  பலவிதமான பூதங்கள் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

இப்படி,  நமக்குள்ளே இருக்கக்கூடிய  இந்தப் பூதத்தை ஜெயிக்காமல் வானத்தில் நட்சத்திரமாய் பிரகாசிக்கவும் முடியாது.நிலாவாய் ஜொலிக்கவும் முடியாது.  சூரியன் மாதிரி ஆற்றலுடன் சுற்றி வரவும் முடியாது. முக்கியமாக அந்த பூதத்தை எப்படி ஜெயிப்பது ,எப்படி எதிர்கொள்வது  என்பதை, நமக்கு நாம் தான் அடையாளம் காண வேண்டும். இதற்கெல்லாம் வானிலிருந்து எந்த வான தேவதையும் இறங்கி வரப்போவதில்லை. ஜெயித்தப் பிறகு அதை விழவாகக் கொண்டாடும் நாம் தான் அதை அடைய வேண்டிய வழியையும் இடையில் உள்ள தடையை உடைக்கும் வலிமையை,   வல்லமையையும் பெற வேண்டும்.

இப்படி நம்மிடம் இருக்கக்கூடிய பெரிய  பூதம்  எதுவென்றால்  அது தயக்கம் மட்டும்தான். ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருப்பார்கள் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்பார். உடனே முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் துடுக்கான மாணவன் சட்டுனு எழுந்து பதில் சொல்வான்.ஆனால் அதே பதில் பின் வரிசையில் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும்  மாணவனுக்கும் தெரிந்திருக்கும். ஆனால் நம்ம சொல்வது தப்பாகிவிடுமோ  அதுதான் சரியான விடையாக இருக்குமோ ஆசிரியர் கோபப்படுவாரோ எல்லோர் முன்னாடியும் அசிங்கமா போயிருமோ அப்படிங்கிற தயக்கத்தின் காரணமாகவே பின் வரிசை மாணவன் வாழ்க்கை முழுவதும் பின்தங்கியே விடுகிறான். அங்கு உடைத்து எறிய வேண்டியது தயக்கத்தை தான். இன்று நாம் எந்த இடத்திற்குப் போனாலும் முதலில் நமக்குத் தடையாக இருப்பது வேறொன்றுமல்ல நமது உடலில் மனதில் சிந்தனையில் இருக்கக்கூடிய தயக்கம் மட்டும் தான்.அதை முதலில் தூக்கி எறிய வேண்டும்.

அலுவலக நேர்காணலுக்கு பொது மேடையில் பேசுவதற்கு நாம் செல்கிறோம் என்றால் நமக்கு என்ன தெரிகிறதோ அதை முதலில் தைரியமாக பேச வேண்டும். நம்முடைய விசய ஞானத்தை விடவும் நாம் அணுகும் மனப்பான்மை அந்த இயல்புகள் தமக்கான வெற்றியை தேடித் தரும்.

ஒரு நீச்சல் வீரன் தண்ணீரில் நீந்துவதற்காகக் குதித்துவிட்டு தயக்கத்துடன் பயத்துடன் கை கால்களை ஆட்டாமல் இருந்தால் அவன் என்னாவன்  அவன் வீரனாக இருந்தாளுமே முழ்கித்தான் இறப்பான்.இதுதான் நமக்கான எச்சரிக்கை.

நம் தயக்கப்படும் ஒவ்வொரு கணமும் நம்மையே  அறியாமல் நம் கைகளை நாம் கட்டிக்கொண்டு வாழ்கை என்னும் கடலில் மூழ்கிவிடுகிறோம்.

இங்கே உடைக்கப்பட வேண்டியது தடைகளை அல்ல, தயக்கத்தை.”

தகர்போம்,

வாழ்க்கையில்

கரை சேர்வோம்!

பிரகாசிப்போம்!

ஜொலிப்போம்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2018

நிதானமும் நீள் ஆயுளும்
“வாழ நினைத்தால் வாழலாம்” -20
வாழ்வை அமைக்கும் நேயம்
திருக்குறள் விழிப்புணர்வு முகாம்
சிந்திக்க வைக்கும் சீனா
மனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்
பக்கவாதம்
மற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…
இயற்கையைப் பாதுகாப்போம்..! இந்திய தேசத்தை வளர்ப்போம்..!
ஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே
கல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்
ஈர்ப்பும் ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில் -57
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
தமிழ் ஒரு பக்தி மொழி
தன்னம்பிக்கை மேடை
ஆசிரியம் என்பது தொழிலல்ல..! அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…!
உள்ளத்தோடு உள்ளம்