Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி…?

செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பதில்கள்

பள்ளி மாணவர்களிடையே தற்போது கலாச்சாரச் சீரழிவு அதிகளவில் இருக்கிறது, அதற்கான காரணம் என்ன?

அதை எவ்வாறு சீர்திருத்துவது?

மூகாம்பிகை, ஆசிரியர், சேலம்.

இந்தக் கேள்வியில் ஒரு செய்தி புதைந்து கிடக்கிறது. அதாவது, பள்ளி மாணவர்களிடையே கலாச்சாரம் முன்பு நன்றாக இருந்தது, ஆனால் இப்போது சீரழிந்திருக்கிறது, அதுவும் அதிகளவில் சீரழிந்திருக்கிறது என்பது அந்த உண்மை.

இந்த கலாச்சார சீரழிவு என்ற வார்த்தையை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், இளைய தலைமுறை மீது இந்த குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது என்பதாலும், அவர்கள் மீது அக்கரை கொண்டவன் என்ற முறையிலும் இந்தக் கேள்விக்கு பதில் தருவது அவசியம் என்று கருதுகிறேன்.

‘கலாச்சாரசீரழிவு’ என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று விளக்கிச் சொல்லவில்லை, எனவே எனக்கு மனதில் பட்டதை வைத்து அவை எதுவாக இருக்கும் என்று ஊகித்து, பதிலளிக்கிறேன்.

முந்தைய  கலாச்சாரம்:

கலாச்சார சீரழிவு அதிகளவு ஏற்பட்டுவிட்டது என்று நாம் கவலை படுகிறோம் என்றால், போற்றுதலுக்குரிய கலாச்சாரம் ஒன்று முன்காலத்தில் பள்ளி மாணவர்களிடம் இருந்திருக்க வேண்டும். அப்படியொரு உன்னத கலாச்சாரம் உண்மையிலே இங்கு இருந்ததா? இருநூறு ஆண்டுகளுக்கு முன் எத்தனைபேர் பள்ளிகளில் படித்தார்கள்? நூறு பேரில் மூன்று அல்லது நான்கு பேர்களே எழுதப் படிக்க முடியும் அல்லது படிக்க தகுதியுள்ளவர்கள் என்ற நிலை தானே இருந்தது. இப்போது தானே கல்லூரிகளும் பள்ளிக்கூடங்களும் கட்டப்பட்டு பலதரப்பு மக்களும் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். எனவே அன்றைய கலாச்சாரத்தை, நூறு பேருக்கு ஐந்து பேர்கள் மட்டும் படித்த கலாச்சாரத்தை, மாணவர்கள் இல்லாத கலாச்சாரத்தை உயர்ந்த கலாச்சாரம் என்று கூறலாமா?

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை அனைத்து நிலமும், நீரும், மலையும் அரசர்களுக்குத்தான் சொந்தம். சிலர் விவசாயிகள், சிலர் வியாபாரிகள், மற்ற அனைவரும் கூலிவேலை செய்பவர்கள் அல்லது அடிமைகள். வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கூட கிடையாது, அவர்களுக்கு ஆண்டு இறுதியில் விளைந்த பொருளில் ஏதாவது கொடுப்பார்கள். அதை வைத்துக் கொண்டு கொத்தடிமைகள் போல ஜீவணம் செய்ய வேண்டிய நிலைமை இருந்திருக்கிறது.

ஜமீன்தார் கொடுமை:

ஊர்களை ஜமீன்தார்கள் குத்தகைக்கு எடுத்து விடுவார்கள், அவர்கள் உழைக்கும் மக்களை சக்கையாகப் பிழிவார்கள். விளை நிலத்தின் மீது வரி விதிப்போ கொடுமையானது, அது விளைந்தாலும் விளையாத போதும் பாதி அல்லது மூன்றில் ஒரு பங்கு என்று இருந்தது. வரி கொடுக்க தவறிய விவசாயிகளும், நெசவாளர்களும் வன்கொடுமைக்கு ஆளாகி நலிந்து மெலிந்து அல்லல்பட்டு சீரழிந்திருக்கின்றனர். எப்படிபட்ட ஒரு கலாச்சாரம் அப்போது இருந்திருக்கும் என்று நாமே எண்ணிப்பார்க்கலாம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2018

நிதானமும் நீள் ஆயுளும்
“வாழ நினைத்தால் வாழலாம்” -20
வாழ்வை அமைக்கும் நேயம்
திருக்குறள் விழிப்புணர்வு முகாம்
சிந்திக்க வைக்கும் சீனா
மனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்
பக்கவாதம்
மற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…
இயற்கையைப் பாதுகாப்போம்..! இந்திய தேசத்தை வளர்ப்போம்..!
ஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே
கல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்
ஈர்ப்பும் ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில் -57
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
தமிழ் ஒரு பக்தி மொழி
தன்னம்பிக்கை மேடை
ஆசிரியம் என்பது தொழிலல்ல..! அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…!
உள்ளத்தோடு உள்ளம்