Home » Articles » வெற்றி உங்கள் கையில்- 55

 
வெற்றி உங்கள் கையில்- 55


கவிநேசன் நெல்லை
Author:

எங்கே நிம்மதி…?

வாழ்க்கையில் வெற்றிபெற்று முன்னேற விரும்புபவர்கள், தங்களின் வாழ்க்கைக் குறிக்கோளை நோக்கி நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். மன நிம்மதியும், மன மகிழ்ச்சியும் ஒருவரின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைவதால், நிம்மதி தரும் செயல்களில் ஈடுபடுவது மிகவும் நல்லது.

“ஒரு மனிதரின் வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் அடிப்படையாக அமைதி, பொறுமை, நேர்மை, நீதி, உழைப்பு, புதுமையான சிந்தனை ஆகியவை அமைந்துவிடுகிறது” என்பது பெஞ்சமின் பிராங்ளின் தரும் ‘நம்பிக்கை விதைகள்’ ஆகும்.

எந்தச்சூழலிலும் நிம்மதி இழக்காமல் இயங்கக் கற்றுக்கொண்டவர்கள் பொறுமையின் வடிவமாக காட்சித்தருகிறார்கள்.

“எனக்குப் படுத்தால் தூக்கமே வரவில்லை. ஏதேதோ நினைவுகள் வருகின்றன. வாழ்க்கையை நினைத்தால் பயமாக இருக்கிறது” – என்று கவலையோடு தனது நண்பனிடம் பிரச்சினையை பகிர்ந்துகொண்டான் ராஜேஸ்.

“நீ ஒன்றும் கவலைப்படாதே. நிம்மதியாக இருந்தாலே போதும். எல்லா கவலையும் மறைந்துபோய்விடும்” – என்று நம்பிக்கையூட்டினான் நண்பன் சங்கர்.

“அந்த நிம்மதியைத் தேடித்தானே நான் அழைகின்றேன்” – என்று ராஜேஸ்; சொன்னபோது, “நீ ஒன்றும் கவலைப்படாதே. நமது பக்கத்து ஊரில் குரு ஒருவரின் ஆசிரமம் உள்ளது. அவரைப்போய் பார். உன் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிடும்” என்றான் சங்கர்.

நண்பனின் அறிவுரைப்படி பக்கத்து ஊரிலுள்ள குருவின் ஆசிரமத்திற்கு வந்தான் ராஜேஸ் குருவை வணங்கினான்.

“குருவே எங்கள் வீட்டில் வசதியுள்ள பெற்றோர்கள் இருக்கிறார்கள். நல்ல நண்பர்கள் எனக்கு உண்டு. எங்கள் ஊர் பிரச்சினையில்லாத கிராமம். உறவுக்காரர்களெல்லாம் எங்களிடம் மிகவும் அன்பானவர்கள். இருந்தாலும், எனக்கு மனதில் நிம்மதி இல்லை. ஒரு பிரச்சினை எப்போதும் என்னைச் சுற்றிக்கொண்டு இருப்பதுபோலவே தோன்றுகிறது” என்றான் ராஜேஸ்.

குருவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“தம்பி நீ கவலைப்படாதே. உன் பிரச்சினையை நான் தீர்த்துவைக்கிறேன். முதலில் உன் மனதுக்கு சில ரகசியங்களை தெரியாமல் வைத்துக்கொள்ள வேண்டும். அதைமீறி உனக்கு ரகசியங்கள் தெரிந்தால், உன் நிம்மதி காணாமல் போய்விடும்” – என்றார் குரு.

“குருவே ரகசியமான தகவல்கள் எதுவுமே மனதிற்குள் போட்டுவைக்காமல் எப்படி வாழ முடியும்?” –  என்று கேட்டான் ராஜேஸ்.

“ரகசியங்கள் மனதில் இல்லாமல் வாழ்வது சிரமம்தான். இருந்தபோதும், தேவையில்லாத நேரங்களில் தேவையில்லாத பிரச்சினைகளை மனதிற்குள்போட்டு சுமந்துகொண்டிருப்பதால் நமது நிம்மதி போய்விடுமல்லவா?” – எனக் கேட்டார் குரு.

“குருவே நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே” – என்றான் ராஜேஸ்

“உனக்கு இப்போது புரியாது. முதலில் நம் ஆசிரமத்தில் போய் விருந்தை சாப்பிட்டுவிட்டு வா. பிறகு புரியவைக்கிறேன்” என்றார் குரு.

ஆசிரமத்தில் நல்ல விருந்து அவனுக்கு வழங்கப்பட்டது. “வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு வந்தவனிடம் கொஞ்சநேரம் படுத்துக்கொள்” என்று சொன்ன குரு அவனுக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்.

அந்தக் கதை இதுதான்.

ஒரு இரயில் புறப்பட தயார்நிலையில் இருந்தது. அப்போது ஒருவர் தனது தலையில் ஒரு மூட்டையை வைத்துக்கொண்டு வேகமாக ஓடிவந்து இரயிலில் இடம்பிடித்தார். இரயில் புறப்பட ஆரம்பித்தது. ஆனால், மூட்டையைக் கொண்டுவந்தவர் தனது மூட்டையை கீழே இறக்கிவைக்காமல் தலையிலே வைத்து சுமந்து கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த ஒருவர், நீங்கள் ஏன் இந்த மூட்டையை வீணாக சுமந்துகொண்டு வருகிறீர்கள்? அதனை நீங்கள் இறக்கி வைத்துவிடலாமே? என்று கேட்டார்.

“வேண்டாங்க… இந்த இரயில் என்னை மட்டும் சுமந்து சென்றால்போதும். எனது சுமையை நான் சுமந்துகொள்கிறேன் என்று சொன்னான்” – அந்த மூட்டையை சுமந்தவன். “இதுதான் இரயில் கதை” என்றார் குரு.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2018

போரிடாமல் ஜெயிப்பது எப்படி?
சத்துணவும் நீள் ஆயுளும்
மனம் கூறும் தன்னம்பிக்கை
வாங்களையோ வசவு…
முயற்சியே முன்னேற்றம்!
நேற்று போல் இன்று இல்லை
ஈர்ப்பும்… ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில்- 55
கபாடி விளையாட்டு தமிழகத்தில் புத்துயிர் பெறுமா?
நாளைய பாரதம் நம் கையில்
மகிழ்ச்சிக்கான வழி !
வாழ நினைத்தால் வாழலாம் – 18
மூலை முடக்குவாதம் (Cerebral Palsy)
நன்மை தராத செல்வம்
தனை மறந்ததேன்! தென்றலே!
நம்பிக்கையே வாழ்க்கை
தன்னம்பிக்கை மேடை
விழிப்போடு இரு விண்ணைத் தொடு…
உள்ளத்தோடு உள்ளம்