Home » Articles » வாழ நினைத்தால் வாழலாம் – 18

 
வாழ நினைத்தால் வாழலாம் – 18


மித்ரன் ஸ்ரீராம்
Author:

கடன் (இரண்டாம் பாகம்)

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

கடன் குறித்த எனது கட்டுரை பலரது சிந்தனை காய்களை சிதற விட்டிருக்கிறது.  மற்றும் சிலருக்கு சந்தேகம் சற்றே தூக்கலாக.

“தேவையற்ற கடன்களின் பட்டியலில் பல கடன்கள் இடம் பெறவில்லை” – என்று பலரும் தொலைபேசியில் அழைத்து தொலைத்தெடுத்து விட்டார்கள்.  இன்னொரு நண்பர் – இதை இன்னும் விரிவாக ஒரு பயிற்சி வகுப்பாக நடத்தலாமா? – பலருக்கும் பயன் தருமே! என்று ஆலோசனை சொன்னார்.

இன்னும்  சிலர், பெரிய தாளில் தங்கள் தேவைகளை எழுதிக்கொண்டு – இது தேவையா? இல்லையா? என்று கேள்விகளால் துளைத்துவிட்டார்கள்.  “இது தேவையா” என்று என்னை நானே கேட்டுக்கொள்ள வேண்டிய சூழல் வந்துவிடுமோ என்று அஞ்சுகின்ற அளவுக்கு.

என்னுடைய தேவைகளை “தேவை இல்லை” என்று மற்றவர் எப்படி தீர்ப்பு கூற முடியும்? என்று கோபத்தோடு கொதித்தவர்களும் உண்டு.

நன்றி நண்பர்களே!  என் தொடரின் சில கருத்துகள் உங்களை தொல்லை செய்வதை நினைத்து – மகிழ்கிறேன்.

“தேவையுள்ள, மற்றும் தேவை இல்லாத” என்பது தனிமனித ஆசையை, சந்தர்ப்ப சூழ்நிலைகளை பொறுத்தது.

அலுவலகத்தில் உங்கள் நண்பர் கொஞ்சம் உன் ஆண்ந்ங் ஐ கொடுப்பா, 1 மணிநேரத்தில் வருகிறேன் – என்று வாங்கி போகிறார்.  வீடு வரும் வழியில் நீங்கள் டங்ற்ழ்ர்ப் ஆன்ய்ந் ல்.

Bank ல் கேட்கப்படும் பேனா முதல் விஷேஷங்களுக்கு செல்ல உங்கள் நகைகளை கொஞ்சம் இரவல் கொடுங்கள்” என்று கேட்பது வரை எத்தனையோ பேர் – உங்கள் எதிரில்.

இந்த கடன் அவர்களுக்கும் தேவையில்லை.  உங்களுக்கும் தேவையில்லை.

தினவட்டி, கந்துவட்டி, Meter வட்டி, Speed வட்டி என்று வேறு வேறு பெயரிட்டு அழைத்தாலும் அவையனைத்தும் ஆபத்தின் சின்னங்களே.

“கடன்” உங்கள் உழைப்பை உங்களுக்கே தெரியாமல் உறிஞ்சும் “அட்டை”.  உங்கள் கையிலிருக்கும் “Credit Card” க்கும் தமிழில் பெயர் “அட்டை” தான்.

பகட்டான வாழ்வுக்கு ஆசைப்பட்டு “Personal Loan” எடுத்து பரிதவிக்கும் அன்பர்கள் அநேகம்.

நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கடன் வாங்கி – நட்பையும், மரியாதையும் இழந்தவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

Tax (வரி) கட்டுவதில் ஈன்ங் வைப்பது முட்டாள்தனம்.  முறையாகவும், நேரத்தோடும் வரியை கட்டுவதே நல்லது.  அது பின்னாளில் அதிகாரிகள் Late Fee/Penalty – என்று தொந்தரவு செய்வதை தவிர்க்கும்.

மகளுக்கு திருமணம் போன்ற முக்கிய நிகழ்வு இல்லாமல் LIC Policy மேல் கடன், PF Loan, Retirement Benefit ல் கடன் வாங்குவதும் தவறு.  ஆம்.  ஓய்வுக்காலம் – ஓய்வுக்காலமாக இல்லாமல் இன்னும் ஓடும் காலமாக ஆகிவிடும்.  கவனம்.

0% Interest என்று மயங்கி வீட்டில் தேவைக்கும் அதிகமான Furniture கள் தேங்குவதையும் சில வீடுகளில் காணலாம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2018

போரிடாமல் ஜெயிப்பது எப்படி?
சத்துணவும் நீள் ஆயுளும்
மனம் கூறும் தன்னம்பிக்கை
வாங்களையோ வசவு…
முயற்சியே முன்னேற்றம்!
நேற்று போல் இன்று இல்லை
ஈர்ப்பும்… ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில்- 55
கபாடி விளையாட்டு தமிழகத்தில் புத்துயிர் பெறுமா?
நாளைய பாரதம் நம் கையில்
மகிழ்ச்சிக்கான வழி !
வாழ நினைத்தால் வாழலாம் – 18
மூலை முடக்குவாதம் (Cerebral Palsy)
நன்மை தராத செல்வம்
தனை மறந்ததேன்! தென்றலே!
நம்பிக்கையே வாழ்க்கை
தன்னம்பிக்கை மேடை
விழிப்போடு இரு விண்ணைத் தொடு…
உள்ளத்தோடு உள்ளம்