Home » Articles » நம்பிக்கையே வாழ்க்கை

 
நம்பிக்கையே வாழ்க்கை


குவலயவல்லி ஜே
Author:

இன்றைய இளைஞர்களே ! வணக்கம்.

நம்பிக்கை என்பது மனிதனின் உறுதியான ஓர் உணர்வு!

உலகின் மிகப்பெரிய சாதனையாளர்கள், தலைவர்கள் நம்பிக்கையே வாழ்க்கை என கடினமான சவால்களை வென்றார்கள்.

நம் பாரதியாரின் காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம், சந்திர மண்டலத்தை கண்டு தெளிவோம் என்ற வரிகள் எத்தனை நம்பிக்கை கொண்டவை.

யானையின் பலம் தும்பிக்கையில், மனிதனின் பலம் நம்பிக்கையில் என்பது உண்மையான கூற்று. இதை மறுக்கவோ ஒதுக்கவோ முடியாது.

தர்மத்தோடு கூடிய ஆசைகளுக்கு உடன்பாடாகவும், செய்யும் வேலைகளுக்கான முயற்சியாகவும் இந்த நம்பிக்கையே ஒளிர்கிறது.

நாம் எந்த நம்பிக்கையோடு வாழ்கிறோம் என்பதை அறிந்த பின் அந்த நம்பிக்கை நிழலில் வாழ்க்கைப் பயணத்தை தைரியமாகத் தொடரலாம்.

வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இல்லாதவன், பந்தயத்தின் ஆரம்பத்திலேயே தோற்று விடுகிறான்.

நம்பிக்கை இரு வகைப்படும். ஒன்று தெய்வ நம்பிக்கை. மற்றது, தன்னம்பிக்கை. இரண்டும் நம்மை, நாம் வளர்த்துக்கொள்ளும் அளவிற்கு காக்கும். நமக்கு உதவும். துணை வரும்.

நம்பிக்கை ஒளியானது நிராசை, தாழ்வு மனப்பான்மை, குறைகளை விரட்டும் தன்மை கொண்டது. There is a light at the end of every tunnel .

” உலகம் உருண்டை” என நிரூபித்த கொலம்பஸ், ரேடியம் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையார் போன்றோர் எத்தனை எதிர்ப்புகள், சச்சரவுகளைத் தாண்டி, நம்பிக்கையோடு உழைத்து வெற்றி பெற்றார்கள்.

மார்ட்டின் லூதர் கிங் கூறியதாவது: ” சிறிய ஏமாற்றங்களைத் தாங்கி கொள்ளத்தான் வேண்டும்; அதற்காக

எல்லையற்ற நம்பிக்கையை இழக்க கூடாது” , என்பது தான்.

ஹென்றி ஃபோர்டு, டெட்ராய்ட் நகரில் மெக்கானிக்காக 1879இல் வாழ்க்கையை துவங்கி, 1891இல் தாமஸ் ஆல்வா எடிசனின் கம்பெனியில் பொறியாளர் ஆனார். பின், 1893இல் என்ஜின் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஆட்டோமொபைல் தயாரிப்பில் இறங்கி  ஃபோர்டு கார்களைத் தயாரித்து, வெற்றி கண்டார்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2018

போரிடாமல் ஜெயிப்பது எப்படி?
சத்துணவும் நீள் ஆயுளும்
மனம் கூறும் தன்னம்பிக்கை
வாங்களையோ வசவு…
முயற்சியே முன்னேற்றம்!
நேற்று போல் இன்று இல்லை
ஈர்ப்பும்… ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில்- 55
கபாடி விளையாட்டு தமிழகத்தில் புத்துயிர் பெறுமா?
நாளைய பாரதம் நம் கையில்
மகிழ்ச்சிக்கான வழி !
வாழ நினைத்தால் வாழலாம் – 18
மூலை முடக்குவாதம் (Cerebral Palsy)
நன்மை தராத செல்வம்
தனை மறந்ததேன்! தென்றலே!
நம்பிக்கையே வாழ்க்கை
தன்னம்பிக்கை மேடை
விழிப்போடு இரு விண்ணைத் தொடு…
உள்ளத்தோடு உள்ளம்