Home » Articles » தமிழர் வீரத்தின் அடையாளம் கபாடி…

 
தமிழர் வீரத்தின் அடையாளம் கபாடி…


ஆசிரியர் குழு
Author:

அ. தர்மன்,

காபடி பயிற்சியாளர்,

கோவை

கோவை மாவட்ட கபாடி கழகம் தமிழ்நாடு அமெச்சூர் கபாடிக்கழகத்துடன் இணைந்த ஓர் அமைப்பு. இந்த அமைப்பின் முலம் கோவை மாவட்ட கபாடி அணிகளை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக A.. சபியுல்லா, அவர்களும், செயலாளராக  N.. தண்டபாணி அவர்களும் இருக்கிறார்கள். மேலும் நிர்வாகிகளும், மூத்த மற்றும் இளைய நடுவர்கள் 16 பேர் கொண்ட அமைப்பைக் கொண்டது. 100க்கும் மேற்பட்ட ஆண்கள் அணியும் 20க்கும் மேற்பட்ட பெண்கள் அணியும் இருக்கிறது. இந்த அமைப்பின் மூலம் மாநில அமெச்சூர் கபாடிக்கழகம் நடத்தும் மாநில போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தனித்தனிப் பிரிவாகத் தேர்வு செய்யப்பட்டு மாநில போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

பள்ளி மாணவர்கள் கபாடி விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கபாடி விளையாட்டில் சாதனை படைத்து வரும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அரசும் பள்ளி மற்றும் கல்லூரிகளும் இலவச இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இருந்தும் ஆர்வம் காட்டும் கபாடி வீரர்களுக்கு அரசு ஊக்கப்படுத்தும் ஊக்கத்தொகையும், அரசுத்துறையில் வேலை வாய்ப்புகளை வழங்கிட வேண்டும். அவ்வாறு ஊக்கப்படுத்தும் போது மாவட்டம், மாநில அளவில் தொடரும் சாதனை தேசிய அளவிலும் தொடரும் இதுவே எங்களின் ஆசையும் எதிர்பார்பும் ஆகும்.

கபாடி விளையாட்டு என்பது தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று. மண்ணின் மரபைப் போற்றும் இந்த விளையாட்டில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதித்து வருவது நமக்கு கிடைத்த பெருமை. பெண்கள் கபாடி விளையாட்டை விளையாடுவதன் மூலம் அவர்களின் உடல் வலிமை பெறும், உற்சாகம் கூடும், உடலுக்கும், உள்ளத்திற்கும் பலம் சேர்க்கும். விளையாட்டில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு காவல்துறை, இரயில்வே துறை உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாய்ப்புகளை அரசு வழங்கி வருகிறது.

இளம் வீராங்கனைகள் ஆர்வமுடன் இடம் பெற்று வருவதுடன், கலந்து கொள்ளும் போட்டிகளிலும் தனக்கென தனிமுத்திரைப் பதித்து வருகின்றனர். வீராங்கனைகள் தொடர் சாதனைகள் படைத்து வந்தாலும், இனிவரும் காலங்களில் புதிதாக வரும் இளம் வீராங்கனைகளுக்கும் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும். 

கபாடி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை மாவட்டளவில் தேர்வு செய்து, நடுவர்கள் மற்றும் நிர்வாகிகளை வைத்து வீரர்களின் விளையாட்டுத் திறனை கூர்ந்து கவனித்து, அவர்களின் திறமைக்கு ஏற்ப அணியில் இடம்பெறச் செய்வோம். பள்ளி, கல்லூரிகளின் சிறப்பு விடுமுறையுடன், கபாடி வீரர், வீராங்கனைகளுக்கு முகாம் நடத்தி சிறந்த பயிற்சி கொடுக்கிறோம். எங்களின் பயிற்சியும், மாணவ, மாணவியரின் முயற்சியுடன் கூடிய தன்னம்பிக்கையும் அவர்களின் வெற்றிக்கான களத்தை அமைக்கிறது.

கபாடி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான வேலைவாய்ப்பு என்பது தற்பொழுது வெறும் கனவாகவே உள்ளது. அனைத்து தரப்பு கபாடி வீரர், வீராங்கனைகளுக்கும் வேலைவாய்ப்பு கிட்டுவதில்லை. அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளித்தால், இனிவரும் இளம் கபாடி வீரர்களுக்கு உற்சாகத்துடன், ஆர்வமும் கூடும்.

தற்போது புரோ கபாடி என்ற பெயரில், கபாடி விளையாட்டு களைகட்டி வருவதை நாம் காண முடியும். அந்த அணியில் வாய்ப்பு கிட்டும் வீரர்களுக்கு இந்திய கபாடி அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்கான முயற்சிகளை மாநில கபாடிக்கழகத் தலைவர், செயலாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

நமது அரசானது விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல துறைகளில் விளையாட்டுக்குத் தனி இடஒதுக்கீடு கொடுத்து திறமையான அணிகளை உருவாக்க வேண்டும். மேலும், மாவட்டந்தோறும் கபாடி விளையாட்டுக்கு, பள்ளிகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் பயிற்சி அளித்து கபாடி விளையாட்டு வீரர்களுக்கு இலவச கல்வி கொடுக்க வேண்டும். அவர்களை கல்வியுடன், சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளாக உருவாக்க வேண்டும்

நமது பெண்கள் அணி 17.11.2017 முதல் 19.11.2017 வரை வேலூர் மாவட்டம் நாட்ரம் பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு சாம்பியன் போட்டியில், மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். திறமையான விளையாட்டு வீராங்கனைகள் உள்ள அணிகளில் மாநிலத்தில் உள்ள 8 பெண்கள் அணிகளில் கோவை மாவட்ட அணியும் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.

அகில இந்திய கபாடிக்கழகத்தின் விதிமுறைகளை தான், அனைத்து அணிகளும் பின்பற்றுகின்றன. கபாடி விதிமுறைகளை அகில இந்திய கபாடிக்கழகம் வகுத்து அதன் மூலம் புரோ கபாடி மற்றும் மாநில கபாடிக்கழகங்கள் பின்பற்றப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் அதை எவ்வித மாற்றமின்றி கடைப்பிடிக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் வீரர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவர இயலும். ஆனால், தற்போது விளையாட்டு வீரர்களின்  ஒத்துழைப்பு குறைவாக உள்ளதால், அதை செயல்படுத்த கால தாமதம்  ஏற்படுகிறது. இதுபோன்ற சில குறைகளை சீர்செய்து, அணிகளுக்கு சிறப்பான பயிற்சியுடன், அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்க வழிவகை செய்யப்படும். இனி  வர இருக்கும் மாநில அளவிலும், அகில இந்திய அளவிலும் பங்கேற்க கோவை மாவட்டத்தில் இருந்து சிறந்த வீரர்களைத் தயார் செய்து, சிறப்பு பயிற்சிகளுடன் அனுப்புவோம். அவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும் என்ற கனவை நனவாக்குவோம், என்ற நம்பிக்கை இருக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள அணிகள் தங்களின் பயிற்சியை சரியான முறையில் செய்து கொண்டு இருப்பாதால் வீரர்களை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல எங்களுக்கு உறுதுணையாக உள்ளது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2018

மனமே நலம்! மாற்றமே வளம்!!
ஆறும் நீரும்
ஒன்பது வயதிற்குள் முதல் நூல் வெளியிட்ட முதல் சிறுவன்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
உள்ளத்தோடு உள்ளம்
“வாழ நினைத்தால் வாழலாம்” – 12
புதிய வருடமே புகழைச் சேர்…
தன்னம்பிக்கை மேடை
நம்பிக்கைக்கு… உயிர் கொடுப்போம்!
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
நவீனஜீனோமிக்ஸ் (பகுதி -9)
திருவள்ளுவர் தினமும் உழவர் திருநாளும்…
தமிழர் வீரத்தின் அடையாளம் கபாடி…
மேம்படட்டும் மனிதவளம்
அறிவுப்பூர்வமான வீரமே அவசியம் தேவை…!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
கோபப்படுவதில் நீங்கள் எந்த வகை?
வெற்றி உங்கள் கையில் – 49
ஒத்திப் போடும் குணம் நன்மை தருமா? தீமை தருமா?
துபாய் வாங்க!