Home » Articles » இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்

 
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்


இராஜேந்திரன் க
Author:

இளம்பருவ நிலை என்பது குழந்தையின் மனநிலைக்கும், சுதந்திரமாக செயல்படும் முதிர் பருவத்திற்கும் இடைப்பட்டது. ஹார்மோன் சுரப்பியினால் பருவநிலை அடையும் போது இந்த இடைப்பட்ட நிலை ஏற்படுகிறது. இந்த காலத்தில் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. சூழ்நிலையினைப் பொறுத்து சந்தோஷம், கவலை நிலைமை ஏற்படுகிறது. சில சூழ்நிலைகள் மனநிலை பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

முன் இளம்பருவத்தில் குழந்தைகள் பெற்றோர்களைச் சார்ந்தும் பின் இளம் பருவத்தில் அதிகமாக நண்பர்களிடமும்  நேரம் செலவிடுவார்கள். நண்பர்களிடம் வெளிப்படையாகப் பேசுவதின் மூலம் திருப்தி யடைவார்கள்.

இளம்பருவத்தில் ஏற்படும் மனநிலை மாற்றம் சாதாரணமாக அனைவருக்கும் ஏற்படும். இதைப்பற்றி சமூகத்தில் அவ்வளவாக அக்கறைகாட்டுவது இல்லை. இந்நிலையில் ஏற்படும் மனநிலைக்கு ஆதரவு கண்டிப்பாக அவசியம்.

இந்நிலையில் இளம்பருவத்தினர் அடுத்தவரிடம் உதவிகளை ஏற்கமாட்டார்கள். அதேசமயம் தனிமையாக ரகசியமாக, நம்பிக்கை இருக்கும் போது அவர்களுடைய மனநிலையை வெளிப்படுத்துவார்கள்.

முதல்நிலை உதவியாளர்கள் அவர்களுடைய கடமை, மனநிலையை ஆராய்ந்து அதற்கான தேவைகளை நிறைவேற்றவேண்டும்.

மனஅழுத்தம் இளம்பருவத்தில் ஏற்படும்போது அவர்கள் புகைபிடிப்பது, குடிப்பது, சத்தான உணவு சரியான நேரத்தில் எடுக்காமல் மற்றும் அடிக்கடி உடற்பயிற்சி, இதனால் நோய்வாய்ப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. அதனால் சரியான நேரத்தில் ஆராய்ந்து, சிகிச்சை அளிப்பதினால் இதைத் தவிர்க்கலாம்.

குழந்தை மருத்துவர், சூழ்நிலையின் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் (குடும்பத்தில் படிப்பு, வேலை, நண்பர்களின் பழக்கத்தில், மருந்து, உடலுறவு, தற்கொலை, மன அழுத்தம்) ஆராய வேண்டும். குழந்தை மருத்துவர் குழந்தையின் உணர்ச்சி கட்டுபாட்டு நிலையை ஆராய்ந்து அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும்.

பொதுவாக இளைஞர்களுக்கு உருவாகும் மனநோய்

இளைஞர்களுக்கு உருவாகும் மனநோயின் வரையறை

ï சிறுவயதில் தெரியாத மனநோய் இளமை பருவத்தில் தெரியவரும்.

(எ.கா) சுபாவத்தில் ஏற்படும் குறைபாடு, அதிவேக திறன் கொண்ட எண்ணச்சிதைவு நோய் பொதுவாக இளைஞர்களுக்கு ஏற்படும் மனநோய்

ï இளமைப் பருவத்தில் தோன்றும் சில குறைபாடுகள் நோயாளியை முழு நோயாளியாகவும், மேலும் இறப்புக்கும் இட்டுச் செல்லும். மனஅழுத்தம், கோபம், எண்ண சுழற்சி, மன அளவில் உடலில் நோய் இருப்பதாகக் கருதுதல் போன்றவை சரியான முறையில் கண்டுபிடித்துக் குணப்படுத்தலாம்.

ï இளமைப் பருவத்தின் தொடக்கத்திலேயே மனநோயின் அறிகுறிகள் தெரியவரும். அவை மனச்சிதைவு, மனமாற்றநோய். இந்த வகையான நோய்கள் இங்கே ஏதும் கூறப்படவில்லை.

ï மேலோட்டமாகக் காணப்படும் இரண்டாம் வகை மனநோயை நோயாளியின் தோற்றம், மருத்துவக் கண்டுபிடிப்புகளின் மூலம் குழந்தை மன நல மருத்துவர் கண்டுபிடிக்கலாம்.

ï நோயாளியின் குறைபாட்டை பெற்றோர் மூலமாகவோ அல்லது இளம் பருவத்தினரின் நடைமுறையிலோ கண்டறியலாம்.

ï பெற்றோர், சக நண்பர்கள், ஆசிரியர் மூலமாகவோ நோயாளியின் மன நலக் குறைபாடு அதிகபட்சம் சமூகத்திற்குத் தெரியவரும்.

ï மேலும் இந்த அறிகுறிகள், மனநலக் கண்டுபிடிப்பு ஆகியவற்றைக் கொண்டு மனநோயைச் சரிசெய்வதே நோக்கமாகும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2018

மனமே நலம்! மாற்றமே வளம்!!
ஆறும் நீரும்
ஒன்பது வயதிற்குள் முதல் நூல் வெளியிட்ட முதல் சிறுவன்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
உள்ளத்தோடு உள்ளம்
“வாழ நினைத்தால் வாழலாம்” – 12
புதிய வருடமே புகழைச் சேர்…
தன்னம்பிக்கை மேடை
நம்பிக்கைக்கு… உயிர் கொடுப்போம்!
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
நவீனஜீனோமிக்ஸ் (பகுதி -9)
திருவள்ளுவர் தினமும் உழவர் திருநாளும்…
தமிழர் வீரத்தின் அடையாளம் கபாடி…
மேம்படட்டும் மனிதவளம்
அறிவுப்பூர்வமான வீரமே அவசியம் தேவை…!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
கோபப்படுவதில் நீங்கள் எந்த வகை?
வெற்றி உங்கள் கையில் – 49
ஒத்திப் போடும் குணம் நன்மை தருமா? தீமை தருமா?
துபாய் வாங்க!