Home » Articles » ஒத்திப் போடும் குணம் நன்மை தருமா? தீமை தருமா?

 
ஒத்திப் போடும் குணம் நன்மை தருமா? தீமை தருமா?


ராமசாமி R.K
Author:

Nothing in life is to be feared

It  is only to be  understood.

 Marie  curie

‘‘ Everyone  should carefully observe   which way his heart draws him  and then choose that way with all his hearts”

— Hasidic saying

ஒவ்வொருவரும்  தன்னுடைய மனம் எந்த வழி காட்டுகிறது என்பதை கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும்,  ஆய்ந்து முடிவெடுத்த பின்னர் அந்த வழியை முழுமனதுடனும் ஏற்று  அதன்படி  செல்ல வேண்டும்.

ஒரு செயலை செய்யத் தொடங்கும் போது, நாளை செய்யலாம், அடுத்து செய்யலாம் என்று ஒத்திப்போடும் பழக்கம் பலருக்கு உண்டு.

ஒத்திப் போடும் பழக்கம் நண்பனா அல்லது எதிரியா என்றால், சில நேரங்களில் அது நண்பனாக செயல்பட்டு நேர்  விளைவுகளை உண்டாக்குகிறது.  சில நேரங்களில் எதிரியாகச் செயல்பட்டு எதிர்மறைப்  பாதிப்புக்களை உண்டாக்குகிறது.

1.  நாம் செய்யப் போகும் செயலின் அளவு, அதனுடைய வலிமை மற்றும் செய்யும் செயலின் சூழல்.

2.  அந்த செயலை செய்யக்கூடிய திறமை நமக்குப் போதாது அல்லது நம்மால் இயலாது என்ற தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை இன்மை.

3. அந்த செயலை செய்வதற்குரிய ஆர்வம் இல்லாமல் இருத்தல், பொதுவாக  ஒத்திப்போடும்  பழக்கம்  மேற்காண்ட  இந்த  3  காரணங்களினால்  ஏற்படுகிறது என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

முதல் இரண்டு காரணிகளின்படி, ஒத்திப்போடும் பழக்கம் நமக்குப் எதிராக அமைகிறது.

ஒரு செயலை நாம் தொடங்கும் போது, சற்றுப் பொறுத்து யோசித்துச் செய்யலாம் என்ற நமது உள்ளுணானவு எச்சரிக்கும் போது நாம் அந்த தொழில்  தொடங்குவதை தயங்கி ஒத்திப் போடுகிறோம். நம் மனக்குரல் நம் கவனத்தை கலைத்துச்  செயலைத்  தொடங்க அனுமதிப்பதில்லை. உடனே முடிவெடுத்து உடனே செயல்படுத்தும் வேகம் சில நேரங்களில் வெற்றியைத் தருவதில்லை.  அதனால் பொறுமையாக தீர்மானித்து செயல்படுவது வெற்றியைத்  தருகிறது.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சில தொழில்களை பற்றிய குறிக்கோள்களோடு இருந்தார். இவர் எண்ணியிருக்கிற தொழில்  ஏற்கனவே இவருடன் பணிபுரிபவர்கள் செய்து கொண்டிருப்பதாகத் தெரிய வந்தது. தன்னுடன் பணிபுரிபவர்கள்  செய்து கொண்டிருப்பதால் தானும்  அத்தொழிலை செய்ய வேண்டுமென விரும்பினார்.  ஆனால் அதை அவர் செயல் படுத்தவில்லை.   காரணம் அது இவருடைய  முழுமையான  ஆர்வமுள்ள தொழிலாக இருக்கவில்லை.  அதில்  முழு ஈடுபாடும் இல்லை. அதனால் தான் அந்த செயலைத் தொடங்காமல் ஒத்தி வைத்துக் கொண்டே இருந்தார்.

பின்னர் தன் உள்ளுணர்வின் தூண்டுதலின்படி,  இன்னொரு தொழிலைத் தேர்ந்தெடுத்து அதை செய்யத் தொடங்கினார். அது இவருக்கு வெற்றிகரமாக அமைந்தது. 

இந்த நிகழ்வு நமக்கும்   பொருந்தும், அந்தத் தொழிலை நம்முடன் இருப்பவர்கள் செய்கிறார்களே, நாமும் செய்தால் என்ன என்று தோன்றக் கூடும், இது அரை மனதான முடிவு. அந்தத் தொழிலில் முழு ஈடுபாடும், ஆர்வமும் இல்லாத போது அந்தத் தொழிலின் தொடக்கத்தை நாம் ஒத்தி வைத்துக் கொண்டே இருப்போம்.

ஒருவர் ஒரு செயலை ஒத்தி வைக்க காரணங்கள் என்னவாக இருக்கும்.

1) பயம்

2) சோம்பல்

3) தாழ்வு மனப்பான்மை

4) தன்னம்பிக்கை குறைவு

 5) வேலைப் பளு

6) பொருளாதார நெருக்கடி

7) ஆலோசனை பெற துணை இல்லாமை

8) மற்றவர்களுடன் போட்டியிட தயக்கம்

9) குடும்பச் சூழல்

10) சிரமத்தில் உதவி செய்ய  ஆள் இல்லாமை

11) வாய்ப்புக்களை பயன்படுத்தாமை

12) ஆர்வமும், ஈடுபாடும் இல்லாது இருத்தல்   

ஆகியவைகள் காரணமாக அமைகின்றன.   

 எந்த சூழ்நிலையில் எந்த காரியத்திற்காக ஒத்திப் போட்டோம் என்று சற்று உன்னிப்பாக எண்ணிப்பாருங்கள், பயம்தான் ஒத்திவைப்புக் காரணம் என்றால் அந்த பயத்தை முழுமையாக விட்டொழிக்க வேண்டும்.  பயம் தவிர  வேறு காரணங்கள் இருந்தால் அந்தக் காரணங்களை தவிர்க்க முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனால்தான் வள்ளுவான சொன்னார்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

ஒரு செயலை ஆராய்ந்து தொடங்கிய பின்பு  அதைப்பற்றி  யோசிப்பது அழகல்ல.

நமக்குப் பொருத்தமான தொழிலில் வெற்றிப்  வாய்ப்பை அடையக்கூடிய சூழல் இருந்தும் கூட   நம்முடைய  ஒத்திப் போடுகிற பழக்கத்தால் நாம் வெற்றியை இழக்கிறோம். ஆகவே  இது நமது முன்னேற்றத்திற்கு தடையான பழக்கமாக அமைகிறது.  இடைவிடாத முயற்சிகள் வெற்றி  வாய்ப்புக்களை நமக்கு   கொண்டு வந்து  சேர்க்கும். ஒத்தி வைக்கும் பழக்கத்தை முற்றிலும்  அறவே நீக்கிவிட்டால்  வெற்றிக்கு அது முதல் படியாக  அமையும்,

ஷேக்ஸ்பியர், ஆங்கில நாடக ஆசிரியர் அவர்கள் HAMLET என்ற நாடக கதையை எழுதினர்.  ஒத்தி வைக்கும் குணம் கொண்ட Hamlet ஒரு பேரரசரின் மகன், இளவரசன் வெளியூரில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறான், தந்தை இறந்து விட்டதாக செய்தி வருகிறது. நாட்டுக்குத் திரும்புகிறான், தன்னுடைய தாய், தனது சிறிய தந்தையை மணந்து கொண்டதாக அறிகிறான்,   சிறிய தந்தை நாட்டினுடைய அரசனாகிறான்.  

ஒரு நாள்  Hamlet  நடு இரவில்  கோட்டையின் தளத்திலே உலாவுகிறான். அப்போது இறந்து போன தந்தை   ஆவியாய்  வந்து, தன் தம்பி தன் காதில் விஷம் ஊற்றி தன்னைக் கொலை செய்து விட்ட  தகவலைச்   சொல்கிறார்.

தந்தையைக் கொன்ற தன் சிறிய தந்தையை உடனே  பழிவாங்க எண்ணுகிறான்.  உருவிய வாளோடு  அரண்மனையை  நோக்கி புறப்பட்டு போகிறான். அப்போது அவன் சிறிய தந்தை பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்.   பிரார்த்தனை நேரத்தில் கொல்லத் தயங்கி  அந்த வேலையை ஒத்திப் போடுகிறான். கொல்லும் வாய்ப்பைத் தொடர்ந்து இழக்கிறான், கதாநாயகனுடைய ஒத்திப் போடும் குணத்தால்  பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.  கதாசிரியான Hamlet என்ற கதாபாத்திரத்தை ஒத்திப் போடும் பழக்கத்தின் மாதிரியாகவே காட்சிப்படுத்துகிறார்.  Hamlet தனது  ஒத்திப் போடும் பழக்கத்தின் விளைவாக அனைத்தும் இழக்கிறான். 

அது போல ஒத்திப் போடும் பழக்கம் சில நேரங்களில் அது  நன்மையாக அமைந்தாலும் கூட அது செயலைத்  தாமதப்படுத்தும், வெற்றியைத் தடுக்கும்.  இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுபவர்கள் வெற்றிப் பயணத்தைத் தொடங்குவார்கள்.

ஆதலின் ஒத்துப் போடும் பழக்கம் நன்மையைத் தராது என்பதை உணர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும், வெற்றி  நிச்சயம்.

ஒன்றே செய், நன்றே செய், அதையும் இன்றே செய்

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2018

மனமே நலம்! மாற்றமே வளம்!!
ஆறும் நீரும்
ஒன்பது வயதிற்குள் முதல் நூல் வெளியிட்ட முதல் சிறுவன்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
உள்ளத்தோடு உள்ளம்
“வாழ நினைத்தால் வாழலாம்” – 12
புதிய வருடமே புகழைச் சேர்…
தன்னம்பிக்கை மேடை
நம்பிக்கைக்கு… உயிர் கொடுப்போம்!
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
நவீனஜீனோமிக்ஸ் (பகுதி -9)
திருவள்ளுவர் தினமும் உழவர் திருநாளும்…
தமிழர் வீரத்தின் அடையாளம் கபாடி…
மேம்படட்டும் மனிதவளம்
அறிவுப்பூர்வமான வீரமே அவசியம் தேவை…!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
கோபப்படுவதில் நீங்கள் எந்த வகை?
வெற்றி உங்கள் கையில் – 49
ஒத்திப் போடும் குணம் நன்மை தருமா? தீமை தருமா?
துபாய் வாங்க!