Home » Articles » தோல்வியைத் தொடர விடலாமா?

 
தோல்வியைத் தொடர விடலாமா?


செல்வராஜ் P.S.K
Author:

இலட்சிய இளைஞர்களே வென்று காட்டுவோம் வாருங்கள் களத்திற்கு. தோல்வி பாடம் கற்றுக் கொள்ளுங்கள். இப்பாடம் கசப்பானதாகக்கூட இருக்கலாம். இப்பாடம் கற்ற அனுபவம் உண்டா?

வெற்றியைச் சந்திக்கப் போய் எதிர்பாராமல் தோல்வியைச் சந்தித்திருப்பாய். ஆனால் அதிலுள்ள பாடத்தினையும், படிப்பினைகளையும் படித்திருக்கமாட்டாய்.

வெற்றி எங்கே இருக்கிறது என்றால் இதன் எதிர்ச் சொல்லும், எதிரிச்சொல்லுமான தோல்விக்குள் இருக்கிறது. இது காலம் காலமாக குடியிருக்கின்ற இடம் இதுதான். இதைத் தழுவியவர்கள் தோல்விக்குள் தோல்வி மட்டும் தான் இருக்கிறது என்று எண்ணிவிடக் கூடாது. இதன் எதிர்ச்சொல்லும் இருக்கிறது என்பதை உண்மைபடத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெற்றியடைந்தவனுக்கு எப்படி  வெற்றியடையலாம் என்கிற ஒன்று மட்டும் தான் தெரியும். ஆனால் உனக்கோ எப்படி வெற்றியடையலாம். எப்படித் தோல்வியடையலாம் என்கிற இரண்டும் தெரியும்.

மனிதனுக்கு நிரந்தரமான தொடர் வெற்றி கிடைக்க ஒன்றை எப்படிச் செய்தால் தோல்வியடைவோம் என்பதை முதலில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் என்றும் தொடர் வெற்றியைக் கைப்பற்றலாம். இல்லையேல் வெற்றி ஒன்றுடன் நின்றுவிடும்.

நீ தொடரைக் கைப்பற்றுவதற்கு முன்பு அதில் கற்ற பாடமே பக்க பலமாகத் திகழும். உனக்குக் கிடைத்த இச்சொல் உன்னை மாற்றிக் கொண்டு போராடக் காரணமாயிருக்கும்.

இச்சொல்லில்  கிடைத்தது ஏமாற்றமல்ல, மாற்றம். இம்மாற்றம் உன்னை சாதனையாளனாக மாற்றும். உன்னைத் துவட்டினாலும் அதற்கேற்ப சளைத்துவிடக்கூடாது. பல நேரங்களில் இச்சொல்லை அடைந்தால்தான் இதன் எதிர்ச்சொல்லையும் அடைய முடியும்.

கணக்குப் பாடத்தில் சூத்திரங்கள் சரியாகத் தெரிந்தால் தான் அக்கணக்கைச் சரியாகப் போட்டு முடிக்க முடியும்.

இது எதன் குறியீடு என்று அறிவியல் பாடத்தில் குறியீடுகளைத் தெரிந்திருந்தால் தான் முழு அறிவியலையும் படித்துக் கற்று முடிக்க முடியும்.

உலக வரலாறுகளில் முழு வரலாற்றையும் மிச்சம் மீதி வைக்காமல் முழுவதுமாகக் கற்றிருந்தால் தான் வரலாற்றுக் கல்வி கற்றதற்குச் சான்றாகும்.

தமிழ் இலக்கண இலக்கியங்கள் பாக்கி இல்லாமல்  படித்தறிந்தவனுக்குத்தான் நூறு சதவீத தமிழ் தெரியும்.

இதுபோல தான் வெற்றியும், அவ்வெற்றியை முழுவதுமாக அடையவும், அதன் சூட்சுமங்களையும் நெளிவு சுளிவுகளையும் முழுமையாகத் தெரிந்தறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

நல்லதைத் தழுவப் போய் தீயதைத் தழுவிய அந்தத் தோல்வியைச் சந்தித்துப் பழகிப் பார்க்கத்தான் வேண்டும். இவைகளைக் கடந்தால் தான் வாழ்வில் முழு வெற்றியையும் முழுவதுமாக உணரமுடியும். இல்லையேல் முதல் வெற்றியே பெற்றிருந்தாலும் அவ்வெற்றி அரைவெற்றி என்றாகி அவ்வரை வெற்றியை உணர்வுகளுடன் உணர முடியாமல் வெறும் மூக்குடன் நுகர்ந்ததாக ஆகிவிடும். இந்த அரை குறை வெற்றி அடுத்த முறை வீழ்ச்சியை ஏற்படுத்தக் காரணமாகவும் இருக்கலாம். ஆனால் இந்த முறை அடுத்த முறையும், என்றும் உயர்ச்சியை உண்டாக்கக் காரணமாக இருக்கும்.

இன்று எத்தனையோ விபத்துக்கள் நடக்கின்றன. எப்படி நடந்தது என்று ஆராய்ந்தால், வாகனத்தைச் சரியாக ஓட்டத் தெரியாததனாலும் விபத்து நடந்திருக்கிறது என்றும், நன்றாக ஓட்டத் தெரிந்தவன் ஓட்டுவதை மறந்து விட்டு கவனக் குறைவுடன் வண்டியை ஓட்டியதாலும் விபத்து நடந்துள்ளது என்றும் ஆராய்வின் முடிவில் உண்மையாகத் தெளிவாகத் தெரிகிறது. எனவே,

  1. வாகனத்தை நன்றாக ஓட்ட வேண்டும் என்ற நோக்கம் உள்ளவன் அதில் அமர்ந்து அதை இயக்கிப் பயணித்து பழகித்தான் ஆக வேண்டும்.
  2. பழுகும் போது எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏற்படலாம். ஆனால் இந்த விபத்துக்களைச் சந்தித்தால்தான் அவன் நன்றாகவும் ஓட்டிப் பழக முடியும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2017

எண்ணியதை செய்யுங்கள்
வாழ நினைத்தால் வாழலாம் -11
நிர்வாகம் ஒரு நடைமுறை சார்ந்த அறிவியல்
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
மற்றவர்களைத் தாழ்வாக நினைக்காதீர்கள்
மனமாற்றமும், மகத்தான வெற்றியும்
தீவிர மூச்சுப்பாதை சுவாச மண்டல நோய்கள்
முந்தின கை ஜெயிக்கும்
உங்கள் ஆசைகள் நியாயமானதா? முறையற்றதா?
எண்ணத்தின் மேன்மை கொள்…
தோல்வியைத் தொடர விடலாமா?
டிசம்பர் மாத உலகதினங்கள்
மணவயல்
வெற்றி உங்கள் கையில்
துபாய்க்கு வாங்க!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
மாற்றமே நம் முன்னேற்றம்…
தன்னம்பிக்கை மேடை
நினைத்ததை முடித்திடு… நிலவிலும் கால் பதித்திடு…
உள்ளத்தோடு உள்ளம்