Home » Articles » மணவயல்

 
மணவயல்


அனந்தகுமார் இரா
Author:

பசுமரத்தாணி:-

நண்பர்கள் என்றுஒருதிரைப்படத்தில்… நகைச்சுவைநடிகர்வடிவேலுஅவர்கள்… “நீ புடுங்கிற ஆணி எல்லாமே… தேவையில்லாதது தான்”  என்று தன்னிடத்தில்… வீடு… பராமரிப்பு செய்து வர்ணம் பூசும்தொழில் கற்றுக்கொள்ள வந்திருக்கும் பழகுனார்களில் ஒருவரிடம் சொல்தாக ஒருவசனம் அமைந்திருக்கும்.  அதுகூட“பரேடோ கொள்கை” அல்லது“பரேடோதத்துவத்தின்” அடிப்படையில்தான்அமைந்துள்ளதோ? என்கின்றமிகஆழமானஉட்கருத்துஇன்று“டிரேஸி” மூலம்“ட்ரேஸ்” (Trace) செய்யப்பட காண்கின்றோம் நண்பர்களே, அதாவது இன்னும் விளக்கமாக கூறவேண்டும் என்றால்… ஒரு சுவற்றில் வெள்ளைஅடிக்க… அங்கிருக்கிற ஆணிகளை அகற்ற வேண்டும் என்றால்… ஒருசில ஆணிகள் (இருபதுசதவிகிதம்) படங்கள் மாட்ட தேவைப்படலாம்.

பெரும் பான்மையானவை (எண்பது சதவிகிதம்) அகற்றப்பட வேண்டியவை அதுபோல நாம் செய்ய வேண்டிய வேலைகளை, படிக்க வேண்டிய பாடங்களை, பழைய கேள்வித்தாளில் உள்ள கேள்விகளை… அவற்றில் பார்ப்பதற்கு சிரமமாகவும், படித்தால் நன்மை தரக்கூடியதுமாக இருக்கின்ற முக்கியமானவற்றை தேர்ந்தெடுத்து… அதிலும் சிக்கல் நிறைந்த செயலை முதல் வேலையாக செய்து முடிக்க வேண்டும்… அதாவது தேவையான ஆணியை இனங்கண்டு விட்டுவிட வேண்டும் என்று சொல்ல வருகின்றோம்.  ஒரு காமெடி (Comedy) சீனுக்குள் இப்படி ஒரு தத்துவத்தை மறைத்து வைத்துள்ளதை நாம் கண்டறிந்தது போல… கஷ்டமான செயல் என்று நாம் தயங்கி வந்தது உண்மையில் சுலபமானதாக மாறிவிடும்.

இனிமேல் இரண்டு கேள்விகள் அல்லது பாடப்பகுதிகள் படிக்கப்பட வேண்டியவையாக இருந்தால் நீங்கள் அதில் சிரமமானதாக காணப்படுவதை முதலில் தேர்ந்தெடுத்து படித்து முடிப்பீர்கள் என்றுநாம் உறுதியாக நம்பலாம் அல்லவா… இதையே கல்லூரியில் மற்றும் தேர்வுகளுக்கு படிக்கும் காலத்திலும் தெரியாமலேயே… அதாவது தவளையைப் பற்றி அறியாமலேயே… பின்பற்றி வந்திருக்கின்றோம்.

ஹைபர்லூப்: தொழில்நுட்பம்:-

சமீபத்தில் ஹைபர்லூப் எனப்படும் அதிவிரைவாக பயணம் செய்யும் பஸ், இரயில், விமானம் ஆகிய மூன்றும் இணைந்த பயண தொழில் நுட்பம் குறித்து செய்தித்தாளில் படிக்கஇயன்றது.  அமெரிக்காவின் லாஸ்வெகாஸில் உள்ள நெவ்டா பல்கலைக்கழக கட்டிட வடிவமைப்புக்களை (ஆர்க்கிடெக்ட்) மாணவர் பிராண்டஸ் சைப்ரச்ட் இந்த ஹைபர் லூப் கற்பனை தொழில் நுட்பத்தை செயல்வடிவம் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  நாம் சமீபத்தில் படித்து தெரிந்து கொண்ட தத்துவத்தை பயன்படுத்திகூற வேண்டும் என்றால் இந்த மாணவர் பிராண்டஸ் சைப்ரச்ட் தவளையை உண்ணும் முயற்சியில் ஈடுபட்டுஉள்ளார்… அவர் விரைவில் தின்றுவிடுவார் என்றுவாழ்த்துவோமாக.

பூபதி என்றொரு பூகோளம் சொல்லித்தரும் தவளை:-

ச.பூபதி என்றொரு பெயரை செய்தித்தாளில் (23.08.17 ஆங்கிலஇந்துமுதல்பக்கம்) பார்த்தால் அது ஒருமனிதனின் பெயர்என்றேநினைப்போம்.  தவறில்லை. பூபதிஎன்பார் 2014-ல் எதிர்பாராத விபத்தில் காலமானஹெர்படாலஜிஸ்ட் (Herpetologist) ஆம்.  தவளைகளின் குடும்பங்களை பற்றி ஆராய்கின்ற அறிவியலறிஞர்களை இப்படி அழைக்கின்றனார்.  அவர் நினைவாக பெயரிடப்பட்ட Nasikabatrachusbhupathi என்ற பன்றி முகதவளை அன்றைய செய்தித்தாளின் முதல்பக்கத்தில்’வராக’ அவதாரம் போல்வந்திருந்தது.  பட்ட தவளையே படும்… என்று உடனே பூபதியை இங்கே நுழைத்தாயிற்று.  இத்தவளையின் நெருங்கிய உறவினர்’ ஊதாதவளை’ ஷெஷெய்ல்ய் தீவில் இருக்கின்றாராம்.  அதனால் ஒருகாலத்தில்”  கோண்ட்வானா” என்ற ஒரேதீவாக இந்தியாவும்,  ஆப்பிரிக்காவும் இணைந்து இருந்து… கண்ட நகர்வு (Continental drift)காரணமாக இடையே கடல் வந்தது என்ற புவியியல் கொள்கைக்கு கூடுதல் சாட்சியமாக இந்தவராக-முகபூபதிஇருக்கின்றாராம்…. தவளை அடுத்த முறை நாம் பார்க்கையில் புவியியல் வாத்தியாராக தெரிந்தால்… நாம்பொறுப்பல்ல… அதுவும் தவறல்ல…

பாலாடைக் கட்டி தத்துவம்:-

இப்படியாக பல்வேறு தவளை உண்ணும் செயல்கள் எல்லாம் தெரிந்த பின்னர்… திருஞானம்சார் அதற்கு முன்பே கூறியதவளையை போலன்றி சாதாரண ஆனால் முக்கிய புத்தகமான“Who morel my cheese?”புத்தகத்தை குறித்தும் நாம் கொஞ்சமேனும் தெரிந்து கொள்வது படிப்பதற்கும் வாழ்க்கைக்கும் உதவிகரமாகத்தான் இருக்கும்.  அடியேன், அதனை படித்து குழந்தைகளுக்கான மாத இதழில் ஒருகட்டுரை எழுதியிருந்தேன்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2017

எண்ணியதை செய்யுங்கள்
வாழ நினைத்தால் வாழலாம் -11
நிர்வாகம் ஒரு நடைமுறை சார்ந்த அறிவியல்
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
மற்றவர்களைத் தாழ்வாக நினைக்காதீர்கள்
மனமாற்றமும், மகத்தான வெற்றியும்
தீவிர மூச்சுப்பாதை சுவாச மண்டல நோய்கள்
முந்தின கை ஜெயிக்கும்
உங்கள் ஆசைகள் நியாயமானதா? முறையற்றதா?
எண்ணத்தின் மேன்மை கொள்…
தோல்வியைத் தொடர விடலாமா?
டிசம்பர் மாத உலகதினங்கள்
மணவயல்
வெற்றி உங்கள் கையில்
துபாய்க்கு வாங்க!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
மாற்றமே நம் முன்னேற்றம்…
தன்னம்பிக்கை மேடை
நினைத்ததை முடித்திடு… நிலவிலும் கால் பதித்திடு…
உள்ளத்தோடு உள்ளம்