Home » Articles » வெற்றி உங்கள் கையில்

 
வெற்றி உங்கள் கையில்


கவிநேசன் நெல்லை
Author:

மகிழ்ச்சியும் மனநிறைவும்

“வாழ்க்கையில் வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் எதற்காகவும் ‘மனத்தளர்வு’ அடைவதில்லை. மனத்தளர்வு அடைபவர்கள் வெற்றியாளராக மாறுவதில்லை” – என்பது மேலைநாட்டு அறிஞரின் பொன்மொழி ஆகும்.

வாழ்க்கையில் பல நேரங்களில் முயற்சி செய்யாமலும், நம்பிக்கை இல்லாமலும் செயல்படுபவர்களால் வாழ்வில் வெற்றியடைய முடிவதில்லை.

வெற்றி பெற விரும்புபவர்கள் தங்களுடைய அறிவைப் பயன்படுத்தி, தங்களுக்குரிய பாதைகளைப் புதிதாக அமைத்துக்கொள்ள வேண்டும். துணிச்சலோடு செயல்களில் ஈடுபடவும் வேண்டும்.

சிந்தனை, முயற்சி, நம்பிக்கை, செயல்பாடு ஆகியவற்றை சிதைக்கும் வண்ணமாக அதிகமாய் மன அழுத்தம் ஒவ்வொருவருடைய மனதிலும் அவ்வப்போது தோன்றிவிடுகிறது. இந்த அதிக மன அழுத்தம்தான் ஒருவருடைய நம்பிக்கையை சிதைத்து, முயற்சிக்கு முட்டுக்கட்டைப்போட்டுவிடுகிறது. இதனால், மலையில் ஏறுபவன் மடியைப் பிடித்து இழுப்பதைப்போல, இந்த மன அழுத்தம் பல்வேறு வடிவங்களில் உருவாகி, ஒருவரின் நிம்மதியை சீர்குலைக்கிறது. மகிழ்ச்சிக்கு விடை கொடுக்கிறது.

இதயத் துடிப்பை அதிகரிப்பது, தலைவலியை உருவாக்குவது, உடலில் அதிக வேர்வையை ஏற்படுத்துவது, அதிக பசியையும், களைப்பையும் உருவாக்கி உடல்நலத்தைக் கெடுப்பது, உறவுகளை சிதைப்பது, தொழிலை அழிப்பது, வேலையில் சிக்கலை ஏற்படுத்துவது போன்றவைகளெல்லாம் அதிக மன அழுத்தம் ஏற்படுத்தும் பிரச்சினைகள் ஆகும். மொத்தத்தில், ஒரு மனிதனின் வெற்றியை நிறுத்துவதும், வளர்ச்சிக்கு தடைபோடுவதும், மன நிம்மதியைக் கெடுப்பதும், அதிகமான மன அழுத்தம் அரங்கேற்றும் தேவையற்ற செயல்கள் ஆகும்.

மன அழுத்தம் அதிகமாக இருக்கும் மனதில் வெற்றி பற்றிய சிந்தனைகள் எழுவதில்லை.

ஒரு நாட்டை மன்னன் மிகச்சிறப்பாக ஆண்டு வந்தான். அவனது ஆட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால், நாட்டை ஆண்ட மன்னனுக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை.

பல கோயில்களைக் கட்டினான். பல்வேறு தான தர்மங்களில் ஈடுபட்டான். மக்களின் முன்னேற்றத்திற்கு பலவித தொண்டுகளைச் செய்து, ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வந்தான். இருந்தபோதும், அந்த மன்னனின் மனதில் மகிழ்ச்சி இல்லை.

“மகிழ்ச்சி எங்கே கிடைக்கும்?” என்று மன்னன் தேடி அலைந்தான்.

முடிவில் ஒரு ஞானியிடம் வந்து, தனது மனக்குறையை முறையிட்டான்.

“மக்களுக்காக எவ்வளவோ நல்ல காரியங்களை செய்த பின்பும், என் மனதில் மகிழ்ச்சி இல்லை. என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை” என்றுசொல்லி தனது மனதிலுள்ள கவலையை ஞானியிடம் இறக்கி வைத்தான்.

மன்னனின் வருத்தத்தை கவனித்த ஞானி – “மன்னா நீங்கள் உங்கள் கடமையை ஒழுங்காக செய்து வருகிறீர்களா?” என்று ஞானி கேட்டார். அதற்கு மன்னர் பெருமையாகப் பதில் தந்தார்.

“எனது மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு நான் கொடுத்து வருகிறேன். வரிச் சுமைகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறேன். நெறிமுறை தவறாமல் அவர்களுக்கு நீதி வழங்குகிறேன். வறுமை இல்லாமல் அவர்கள் எல்லோரும் செல்வச் செழிப்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். இதனால், என் மக்களுக்கு வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் அத்தனை வசதிகளையும் அவர்களுக்கு செய்து கொடுக்கிறேன்” – என்றார் மன்னர்.

இதைக்கேட்ட ஞானி சிரித்தார்.

“உங்கள் மனம் மகிழ்ச்சி அடைவதற்கும், மனநிறைவு பெறுவதற்கும் நான் ஒரு வழி சொல்கிறேன். நீங்கள் அதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். உங்கள் நாட்டை என்னிடம் கொடுத்துவிடுங்கள்” – என்றார் ஞானி.

“எனக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைத்தால் போதும். நீங்கள் சொல்வதை அப்படியே செய்கிறேன். எனது நாட்டை நீங்கள் இப்போதே எடுத்துக்கொள்ளுங்கள்” – என்றார் மன்னர்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2017

எண்ணியதை செய்யுங்கள்
வாழ நினைத்தால் வாழலாம் -11
நிர்வாகம் ஒரு நடைமுறை சார்ந்த அறிவியல்
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
மற்றவர்களைத் தாழ்வாக நினைக்காதீர்கள்
மனமாற்றமும், மகத்தான வெற்றியும்
தீவிர மூச்சுப்பாதை சுவாச மண்டல நோய்கள்
முந்தின கை ஜெயிக்கும்
உங்கள் ஆசைகள் நியாயமானதா? முறையற்றதா?
எண்ணத்தின் மேன்மை கொள்…
தோல்வியைத் தொடர விடலாமா?
டிசம்பர் மாத உலகதினங்கள்
மணவயல்
வெற்றி உங்கள் கையில்
துபாய்க்கு வாங்க!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
மாற்றமே நம் முன்னேற்றம்…
தன்னம்பிக்கை மேடை
நினைத்ததை முடித்திடு… நிலவிலும் கால் பதித்திடு…
உள்ளத்தோடு உள்ளம்